மத்ஹப்கள் மாநபி வழியா? மனுதர்ம வழியா?

in 2022 ஜுன்

மத்ஹப்கள் மாநபி வழியா? மனுதர்ம வழியா?

திருச்சி ராசிக்

மத்ஹப் எனும் மாயவலை :

மத்ஹப் எனும் மாயவலையில் மாட்டிக் கொண்டு ஈமானை (இறை விசுவாசம்) இழக்கும் முஸ்லிம்கள் பலர், இதில் அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக் கொள் பவர்களும் உண்டு, ஆலிம்களும் உண்டு, உதாரணமாக, சிறந்த சிந்தனையாளர், மார்க்க மேதை என்று அனைவராலும் போற்றப்படும் மெளதூதி சாஹிப் அவர் களே மத்ஹப்களை சரிகண்டு நியாயப் படுத்தியதை பார்க்க முடிகிறது. ஆயினும், குர்ஆன், ஹதீஃதுக்கு எதிரான கருத்தை எவ்வளவு பெரிய அறிஞர் அல்லது ஆலிம் கூறினாலும் குப்பையில் தூக்கியயறி யப்படவேண்டியவை தான். இந்த அறிஞர் களும், ஆலிம்சாக்களும் பின்பற்றும் மத்ஹபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித மான சம்பந்தமும் இல்லை. ஆனால், இந்து மத சட்டமான மனுதர்மத்துக்கும் சுன்னத் வல் ஜமாஅத் சட்டமான மத்ஹப்களுக்கும் அனேக ஒற்றுமைகள் உண்டு.

மனு தர்மம்

 1. இந்து மதத்தில் பிராமணன், சத்திரி யன், வைசியன், சூத்திரன் என நான்கு பிரிவுகள், ரிக், யஜூர், சாம, அதர்வனா என நான்கு வேதங்கள், நான்கு பிரிவுக்கும் நான்கு விதமான சட்டங்கள்.
 2. இந்து மதத்தில் தாய், தந்தையர் சாதியே பிள்ளைகளுக்குத் தொற்றி கொள்கிறது, ஒரு சாதிப் பிரிவில் உள்ளவன் மற்ற சாதி பிரிவில் சேர மு2டியாது.
 3. பிறப்பின் அடிப்படையில் தன்னு டைய சாதிதான் உயர்ந்தது என்று குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்வாக பேச வைக்கிறது மனுதர்மம்.
 4. அவதார புரு­ர்களெல்லாம் எங்க சாதிப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று பெருமையடிக்கிறது மனுதர்மம்.
 5. அரசனுக்கு ஒரு சட்டம், ஆண்டிக்கு ஒரு சட்டம், குருமார்களுக்கு ஒரு சட்டம், சாதா ரண குடியானவனுக்கு ஒரு சட்டம் என பாரபட்சம் காட்டுகிறது மனுதர்மம்.
 6. உயர் சாதி பிரிவு அல்லாதவர்களை கீழ்த் தரமாக ஏசுகிறது மனுதர்மம்.
 7. நான்கு வர்ணங்களை நானே (இறை வன்) படைத்தேன் என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வு கற்பிக்கிறது மனுதர்மம்.
 8. ஒரு பிராமணன், சத்திரியனை தொட் டாலோ, வைசியவனை தொட் டாலோ தீட்டு இல்லை. ஆனால் சூத் திரனை தொட்டால் தீட்டு, குளித்து தீட்டு கழிக்க வேண்டும்.
 9. குருகுல பாடசாலையில் சமஸ்கிருதத் தில் மனுதர்ம கல்வி போதித்து புரோ கிதர்களை சப்ளை செய்கிறது. இவர்க ளின் தலைமையகம் சங்கரமடம்.
 10. மனுதர்ம புரோகிதர்கள் குழந்தை பிறந்ததிலிருந்து காதுகுத்து, கல்யா ணம், கருமாதி, திதி, தெவசம் என்று மந்திரம் ஓதி, யாகம் வளர்த்து மக் களை மூட நம்பிக்கையிலும், அனாச் சாரத்திலும் ஆழ்த்தி அதன்மூலம் வரும் வருமானத்தில் வயிறு வளர்க்கி றார்கள்.

மத்ஹப்கள்
1. சுன்னத் வல் ஜமாஅத்தில் ஷாபி, ஹனபி, மாலிக்கி, ஹம்பலி என நான்கு பிரிவுகள். நான்கு பிரிவுகளுக்கும் நான்கு ஃபிக்ஹு கிதாப்புகள், நான்கு பிரிவுக்கும் நான்கு விதமான சட்டங் கள்.

 1. சுன்னத் வல் ஜமாஅத்தில் தாய், தந்தையர் மத்ஹப் பிள்ளைகளையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு மத்ஹபிலி ருந்து மற்றொரு மத்ஹபுக்குத் தாவ முடியாது.
  ஹனபி கிதாப் கூறுகிறது: ஹனபி மத் ஹபை சேர்ந்தவர்கள் ஷாபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். ஆதாரம்:துர்ருல் முக்தார், பாகம் 1, பக்.18
 2. பிறப்பின் அடிப்படையில் ஹனபி மத்ஹபை உயர்வாக பேசுவதைப் பாருங்கள்.
 3. ஹனபி மத்ஹப்தான் சரியானது மற்றவர்கள் மத்ஹப் தவறானது. ஆதாரம்:துர்ருல் முக்தார், பாகம் 1, பக்.28
  ஹனபி மத்ஹப் ஈஸா நபியும் எங்க ளுடைய மத்ஹப்தான் என்கிறது. ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் பூமிக்கு மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபி மத்ஹபிற்காகவே செயல்படுவார். ஆதாரம் : துர்ருல் முக்தார், பாகம் 1, பக்.52
  கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப் பத்தில் அனுப்பப்படுகிறார் என்று வைத்து கொண்டால் அப்போது அவர் ஹனபி மத்ஹப் பிரகாரமே செயல்படுவார். ஆதாரம் : புஸிலே ஸித்தா
 4. இதோ ஷாஃபி மத்ஹப் சட்டத்தை பாருங்கள், இமாமோ, கலீஃபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு “ஹத்’ (தண்டனை) கிடையாது. ஆதாரம்: ஹிதாயா, பாகம் 2, பக். 520
 5. ஹனபி மத்ஹபினர் ஷாஃபி, இமாமை திட்டுவதை கேளுங்கள்.

எனது உம்மத்தில் ஒரு மனிதர் வருவார், அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரிஸ் (இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் இயற் பெயர்) இவர் என்னுடைய உம்மத்தை வழி கெடுப்பதில் இப்லீஸை விட மிகவும் மோசமா னவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக ஹதீஃத்களை ஹனஃபிகள் இட்டுக்கட்டி ஷாபி மத்ஹப்பை தாக்கியுள்ளனர்.

 1. மத்ஹப் தர்மம் வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவதைப் பாருங்கள். புதிதாக இஸ்லாத்தை தழுவும் ஒருவன் ஒரு தலைமுறை இரண்டு தலைமுறை முஸ்லி மாக இருப்பவருக்கு நிகராக இருக்க முடி யாது. இரண்டு தலைமுறை முஸ்லிமாக உள்ள வன் மூன்று தலைமுறையாக முஸ்லிமாக இருப்பவனுக்கு சமமாக முடியாது.
  நூல் : பதஹுல் முமீன்
 2. ஒரு பெண்ணை ஹனபி மத்ஹப்பி னர் அல்லது ஹம்பளி மத்ஹப்பினர் தொட்டால் உளு முறியாது. ஷாபி மத் ஹப்பினர் தொட்டால் உளு முறிந்து விடும். மீண்டும் உளு செய்யவேண்டும்.
 3. மதரஸாவில் அரபியில் மத்ஹப் கல்வி போதித்து புரோகித மவ்லவிகளை சப்ளை செய்கிறது. இவர்களின் தலைமையகம் ஜமாஅத்துல் உலமா சபை.
 4. மவ்லவி புரோகிதர்கள், ஒருவர் பிறந்ததி லிருந்து இறக்கும் வரை பெயர் வைக்க ஆரம்பித்து கல்யாணம், மெளத் என்று அனைத்து காரியங்களையும் பாத்தியா ஓதி பணம் சம்பாதிக்கிறார்கள். அவன் இறந்த பின்பும் விடாமல் 3ம் நாள், 7ம்நாள், 10ம் நாள், 40ம் நாள், வருட பாத்திஹா என்று பிண மானாலும், பணம் பண்ணும் கும்பல் தான் இந்த மதரஸா புரோகிதர்கள்.

மனிதக் கற்பனையில் உருவாக்கப் பட்ட இந்த சட்டங்களை, இது இறைவனி டமிருந்து வந்தது என்று கூறி மக்களை வழி கெடுத்து அதன்மூலம் வரும் வருமானத்தில் வயிறு வளர்க்கும் இந்த புரோகிதர்களை திருகுர்ஆன் கடுமையாகச் சாடுகிறது.

அற்ப கிரயத்தை பெறுவதற்காக தம் கரங்களாலேயே நூலை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமி ருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அவர்க ளுக்குக் கேடுதான். அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக் குக் கேடுதான், அதிலிருந்து அவர்கள் ஈட் டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக் குக் கேடுதான். அல்குர்ஆன்: 2:79

முஸ்லிம்கள் சிந்தனைக்கு :

இஸ்லாத்தில் நான்கு பிரிவுகள் உண்டு என்று கூறும் மத்ஹப்வாதிகளே அல்லாஹ் சொல்வதை பாருங்கள்.

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை, நிச்ச யமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம் பந்தமுமில்லை, அவர்களுடைய வி­ய மெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறி விப்பான். அல்குர்ஆன் 6: 159

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரி வினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளா கப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகி விட வேண்டாம், அவ்வாறு பிரிந்த) ஒவ் வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்ப தைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.   அல்குர்ஆன் 30:32

முஸ்லிம் சமுதாயம் வேற்றுமையில்லா ஒரே சமுதாயம். நிச்சயமாக உங்கள் (உம் மத்து) சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான், மேலும் நானே உங்கள் இறைவன், ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். அல்குர்ஆன் 21:92

குர்ஆன், ஹதீஃதை தவிர வேறு எதை யும் பின்பற்றக் கூடாது என்பது நபி(ஸல்) அவர்களின் அறிவுறுத்தல்.

நான் உங்களிடம் இரண்டு வி­யங் களை விட்டுச் செல்கிறேன். இந்த இரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்துக்கொள்ளும் வரை வழிதவற மாட்டீர்கள், அவை அல் லாஹ்வின் நெறிநூல் மற்றொன்று என் வழி முறையாகும். ஆதாரம்: முஅத்தா,ஹாகிம்

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே சமுதாயம், ஒரே சட்டம், இது குர்ஆன் கூறும் மாநபிவழி.

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே சமு தாயத்தில் நான்கு பிரிவுகள், நான்கு பிரிவுக் கும் நான்கு விதமான சட்டங்கள், இது சுன் னத்வல் ஜமாஅத் கூறும் மத்ஹப்கள் வழி, முஸ்லிம்களே நீங்கள் எதைப் பின்பற்றப் போகிறீர்கள்? குர்ஆனாகவே வாழ்ந்த மாநபி வழியா? மனுதர்மத்தை ஒத்திருக்கும் மத்ஹப் வழியா?

(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம், நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக, (அது) நீ எவர் களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. அல்குர்ஆன் 14:5,6,7

Previous post:

Next post: