முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கலாமா?

in 2022 ஜுன்

முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கலாமா?

கொடுத்தால் கொடுத்தவர் நிலை என்ன?

அபூஹனிபா, புளியங்குடி

அல்லாஹ்வையும், அவனுடைய தூத ரையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? இல் லையா? காஃபிர் ஃபத்வா கொடுத்தால் அவரின் நிலை என்ன? என்பதை பற்றி தான் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம்.

அதாவது இன்றைக்கு அல்லாஹ்வை யும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பகிரங்கமாக அல் லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய செயல்களை செய்கிறார்கள். தர்காவில் போய் கையேந்துவது, தாயத்து கட்டுவது, சகுனம் பார்ப்பது, மவ்லீது ஓதுவது போன்ற ´ர்க்கான செயல்களில் ஈடுபடு கிறார்கள். அப்படி ´ர்க்கான செயல் களில் ஈடுபடும் முஸ்லிம்களை அல்லாஹ் விற்கு இணை வைத்து விட்டார்கள். ´ர் கான செயல்களை செய்து விட்டார்கள் என்ற காரணத்தை காட்டி முஸ்லிமாக வாழுகின்ற மக்களை காஃபிர், முஸ்ரிக்கீன் என்று ஃபத்வா கொடுத்து அவர்கள் பின் னால் தொழக்கூடாது. அவர்களுக்கு ஜனஷா தொழுகை நடத்தக்கூடாது, அவர்களுக்கு பெண் கொடுக்கக் கூடாது, அவர்கள் வீட்டில் பெண் எடுக்கக் கூடாது அவர்கள் நடத்தும் திருமணங்களில், கலந்து கொள்ளக்கூடாது என்று தவ்ஹீத் இயக்கங்களை சார்ந்த பல மவ்லவிகள் பத்வா கொடுத்து வருகிறார்கள். குறிப் பாக சகோதரர் பீ.ஜை. அவர்களும், பீ.ஜை. அவர்கள் உருவாக்கிய கொள் கையை பின்பற்றும் கொள்கை சகோதரர் களும் இதுபோன்ற பத்வாக்களை கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இணைவைக்கும் முஸ்லிம்கள் தங்கள் உடன் பிறந்தவர்களாக இருந்தா லும் அவர்கள் பின்னால் தொழுவது இல்லை. அவர்கள் நடத்தும் திருமணங் களில் கலந்து கொள்வது இல்லை. அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்காக ஜனாஷா தொழுவதும் இல்லை. இன்னும் அவர்களை நேரில் சந்தித்தால் ஸலாம் கூட சொல்வது இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அல்லாஹ்விற்கு ´ர்க் வைத்து விட்டார் கள் என்பது தான்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த தவ்ஹீத் மவ்லவி பீ.ஜை. அவர்களும், பீ.ஜை. அவர்கள் உருவாக்கிய கொள்கையை பின்பற்றும் கொள்கை சொந்தங் களும் எடுத்த இந்த நிலைபாடு சரிதானா? அல்லாஹ்விற்கு இணை வைக்கும் முஸ் லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்து அவர்களை முஸ்லிம் சமூகத்தை விட்டு வெளியேற்ற இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? இல்லையா? என் பதை பற்றி இன்ஷா அல்லாஹ் இன் றைக்கு பார்ப்போம்.

முதலில் இஸ்லாம் என்பது அல்லாஹ் விற்கு இணைவைக்கும் சமூகத்தின் மீது தான் புத்துயிர் பெற்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாம் வருவதற்கு முன்பு யாரும் ஈமான்தாரியாக அல்லாஹ்வை மட்டுமே வணங்கக் கூடிய மக்களாக இருக்கவில்லை. நபி(ஸல்) அவர் கள் உட்பட யாரும் முஃமின்களாக முஸ் லிம்களாக இருக்கவில்லை.

அதுபோல இன்றைக்கு தவ்ஹீத்வாதி கள் என்று பீற்றிக்கொள்ளும் ஒவ்வொரு வரும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்விற்கு இணைவைத்தவர்கள் தான். இணைவைக்கும் செயல்களில் ஈடு பட்டவர்கள்தான். யாரும் வானத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்தவர்கள் இல்லை. அல்லாஹ்வின் கிருபையால் சத்தியத்தை விளங்கி வழிகேட்டை விட்டு விலகி இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இப்படி இருக்கும் நிலையில் பிறருக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கும் முன் தன்னு டைய நிலை எப்படி இருந்தது என்பதை ஒவ்வொருத்தரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி சிந்தித்துப் பார்த்திருந் தார்கள் என்றால் இந்த தவ்ஹீது மவ்லவி கள் இதுபோன்ற நிலைபாட்டை எடுத் திருக்கமாட்டார்கள்.

இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் நிலை பாடுகள் மற்றும் அவர்களின் செயல்பாடு கள் ஒருபுறம் இருக்கட்டும். இவர்கள் எடுத்த இந்த நிலைபாட்டிற்கு இஸ்லாத் தில் ஆதாரம் இருக்கிறதா? இவர்கள் எந்த அடிப்படையை வைத்து இந்த முடிவை எடுத்தார்கள் இவர்களின் இந்த முடிவுக் கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றி தான் இன்றைக்கு பார்க்க இருக்கிறோம்.

முதலில் ஒரு மனிதர் காஃபிராக, முஷ் ரிக்காக இருக்கும் நிலையில் அவரை முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். அதை தெரிந்து கொண்டால் ஒருவர் முஸ்லிமாக இருக்கின்ற நிலையில் அவருக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பதை நாம் எளிதாக விளங் கிக் கொள்ளலாம்.

நம்முடைய தொழுகையைத் தொழுது நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப் பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு வி­யத்தில் அல்லாஹ்வின் ஒப் பந்தத்தை முறிக்காதீர்கள் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார். புகாரி : 391

மேலும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்று மக்கள் கூறும் வரை அவர் களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி தம்முடைய தொழுகையை தொழுது, நம்முடைய கிப்லாவை முன் நோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர் பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள் ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ் வின் நாட்டத்தைப் பொறுத்ததாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள் என அனஸ்(ரழி) அறிவித்தார். புகாரி : 392
ஆக ஒருவர் காஃபிராக, முஷ்ரிக்காக இருக்கின்ற நிலையில் நான்கு செயல் களை செய்துவிட்டால் அவர் முஸ்லிம் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார் கள். 1. கலிமா, 2. தொழுகை, 3.கிப்லா வான கஃபாவை முன்னோக்குவது, 4.பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது ஆகிய நான்கு செயல்களை செய்தால் அவர் முஸ்லிம் அவர் அல்லாஹ்வின் பொறுப் பில் இருக்கிறார். அவருடைய விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்ததா கும் என்று நபி கூறுகிறார்கள்.

ஆக ஒரு மனிதர் எந்த நிலையில் இருந் தாலும் அவரை முஸ்லிமாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்றால் அவர் இந்த நான்கு செயல்களை செய்தால் போதும் அவர் முஸ்லிம்.

மேலும் அவர் மற்ற முஸ்லிம்களுக்கு மார்க்க சகோதரர், ஒரு முஸ்லிமுக்கு மற் றொரு முஸ்லிம் மீது என்ன என்ன கடமை கள் இருக்கிறதோ அந்த கடமைகள் அனைத்தும் இவர் மீது இருக்கிறது. அந்த கடமைகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.

ஆக ஒரு காஃபிரை, முஷ்ரிக்கை முஸ் லிமாக அங்கீகரிக்க நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரும் அழகிய நடைமுறை இதுதான்.

இப்படி தான் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பிற மத மக்கள் இஸ் லாத்திற்கு வந்தால் இந்த நடைமுறைகளை பின்பற்றி முஸ்லிம்களாக அங்கீகரிக் கிறார்கள். தங்களுடைய முஸ்லிம் கூட்ட மைப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுக்கிறார்கள், அவர்களிடம் இருந்து பெண் எடுக்கிறார் கள். அவர்களுக்கு ஸலாம் சொல்கிறார் கள். அவர்களில் யாரும் இறந்துவிட்டால் ஜனாஷா தொழுகை நடத்துகிறார்கள்.

இதுதான் ஒருவரை முஸ்லிமாக அங்கீ கரிக்க இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் ஆகும்.

மேலும் முஸ்லிமாக இருக்கக்கூடிய ஒருவரை அல்லாஹ்விற்கு இணைவைக் கக்கூடிய செயல்களை பகிரங்கமாக செய் தால் அவர் சம்மந்தமாக நாம் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வாழும் முஸ்லிம்கள் தெரிந்தோ, தெரியாமலோ தாங்கள் பின்பற்றும் ஆலிம்கள், உலமாக் கள், தலைவர்களின் சுயவிளக்கத்தை நம்பி தர்காக்களை வணங்கக் கூடியவர்களாக வும், மவ்லீது ஓதக்கூடியவர்களாகவும், தாயத்துக்களுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பக்கூடியவர்களாகவும் அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய செயல்களை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் விசயத்தில் நாம் எவ் வாறு நடந்து கொள்ள வேண்டும்? இவர் களை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்து ´ர்க் வைக்கும் முஸ்லிம், தவ்ஹீத்தை பின்பற்றும் முஸ்லிம் என்று ஒன்றுபட்ட முஸ்லிம் உம்மத்தில் பிரிவை உண்டாக்க வேண்டுமா? அல்லது இவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்க வேண்டுமா? இது சம்மந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கிறதா? அல்லாஹ் இவர் கள் சம்மந்தமாக ஏதாவது சொல்லியிருக் கிறானா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

“நாங்களும் ஈமான் கொண்டோம்’ என்று நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகி றார்கள். “”நீங்கள் ஈமான் கொள்ளவில்லை எனினும் “”நாங்கள் வழிப்பட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று கூறுங்கள். (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “”ஏனெனில் உங்களுடைய இதயங்களில் ஈமான் நுழையவில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர் களாயின் அவன் உங்களுடைய நற்செயல் களில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 49:14)

இந்த வசனத்தில் நாட்டுப்புறத்து அரபி களான முனாஃபிக்குகளை பற்றி அல் லாஹ் குறிப்பிடுகிறான். அதாவது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களோடு மக்களாக முனா பிக்குகள் கலந்து வாழ்ந்து வந்தார் கள். தொழுகையில் ஈடுபடுவார்கள், ஜகாத் கொடுப்பார்கள், ஹஜ் செய்தார் கள். இன்னும் இஸ்லாத்திற்காக போர்களி லும் கலந்து கொண்டார்கள். மேலும் இப் படிப்பட்ட நிலையில் பகிரங்கமாக இணை வைக்கும் செயல்களிலும் ஈடுபட் டார்கள். லாத், உஸ்ஸா, மனாத் என்னும் சிலைகளையும் வணங்கி வந்தார்கள். மேலும் இஸ்லாத்தின் மீதும் நபியின் மீதும் வெறுப்பில் இருந்த அவர்கள் வாய்ப்பு கிடைத்தால் நபி(ஸல்) அவர்களையும் கொலை செய்யும் எண்ணத்தோடு வலம் வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் அவர்களைப் பற்றி குறிப்பிடுகிறான்.

இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “”நாங்கள் ஈமான் கொண்டிருக் கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள்(தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, “”நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களா கவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 2:14)

முஃமின்களிடம் வரும்போது நாங்க ளும் முஃமின்களாக இருக்கிறோம் என் றும் காபிர்களிடம் செல்லும்போது நாங் கள் காஃபிராகத்தான் இருக்கிறோம் என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் தான் முனாஃபிக் குகள். இவர்களை பார்த்து தான் அல் லாஹ் சொல்கிறான். அவர்களுடைய தானங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று(அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் கார ணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வை யும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள். மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.(அல்குர்ஆன் 9:54)

ஆக இந்த வசனங்கள் மூலமாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் வாய் அளவில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக தன்னை மக்க ளுக்கு காட்டிக்கொள்ளும் நிலையில் பகிரங்கமாக இணை வைக்கக்கூடிய செயல்களை செய்தாலும் அவரை முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறை யாகும். ஏன் என்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக்கொண்டோம் என்று வாயளவில் கூறிவிட்டு பகிரங்கமான இணைவைக்கும் செயல் களில் ஈடுபட்டார்கள் முனாஃபிக்குகள். அப்படிப்பட்டவர்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமாக அங்கீகரித்து அவர்களையும் தங்களுடனே வைத்திருந்தார்கள். ஒரு முஸ்லிமுக்கு மற் றொரு முஸ்லிம் மீது என்ன என்ன கடமை கள் இருக்கிறதோ அனைத்தையும் செய் தார்கள். ஸலாம் சொல்வது, நலம் விசாரிப் பது, ஜகாத் கொடுப்பது, போரில் கிடைத்த பொருட்களில் பங்கு கொடுப் பது போன்ற அனைத்து காரியங்களையும் செய்தார்கள். அதற்கு காரணம் என்ன வென்றால் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திட மாக அளிப்பான். அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய் வான். அல்லது அவர்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்ப வன். மிக்க கிருபையுடையவன். (33:24)

முனாஃபிக்குகள் நரகத்தின் அடித்தட் டில் இருப்பார்கள் என்று சொன்ன அல் லாஹ் தான் நாடினால் அவர்களை மன் னிப்பதாகவும் சொல்கிறான். மேலும் அவன் நாடினால் அவர்களை வேதனை யும் செய்வான். இந்த விசயத்தில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது ஏன் என்றால் அல்லாஹ் சொல்கிறான்.

எனினும் (நபியே!) அவர்கள் புறக் கணித்துவிட்டால், நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை. (தூதுச் செய்தியை எடுத்துக்கூறுவது) தான் உம்மீது கடமையாகும். (அல்குர்ஆன் 42:48)

நபிக்கே சத்தியத்தை எடுத்துக் கூறுவது மட்டுமே கடமை என்று அல்லாஹ் சொல் லும்போது ஒரு முஸ்லிமாக நமது கடமை என்ன? அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த பணியை செய்தார்களோ அந்த பணியை மட்டும் செய்வதுதான் நம் மீது கடமை. அதை விட்டுவிட்டு இணை வைத்து விட்டார்கள் என்று சொல்லி முஸ்லிமான நமது உடன் பிறந்த பிறவாத சகோதரர்களை காஃபிர் என்றும் முஷ்ரிக் கீன் என்றும் ஃபத்வா கொடுத்தால் அது வரம்பு மீறிய செயலாகும். வரம்பு மீறும் முஸ்லிம்களுடைய நிலையைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை “இறை மறுப்பாளர்” (காஃபிர்) என்று கூறி னால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதர ரைப் பார்த்து “”இறை மறுப்பாளனே!” (காஃபிரே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச் சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந் தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது.

இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர் கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீத் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம் :111.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட யாராக இருந்தாலும் அவர்கள் நமது மார்க்க சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை நாம் காஃபிர் என்று சொன்னாலோ அல் லது முஷ்ரிக் என்று ஃபத்வா கொடுத் தாலோ ஒன்று அவர்கள் இறை நிராகரிப் பிலே இறந்துவிட்டால் நமக்கு பிரச்சனை இல்லை. ஒரு வேளை அவர்கள் அவர்களு டைய மரணத்திற்கு முன்னால் அல்லாஹ் விடத்தில் தவ்பா செய்து மீண்டுவிட்டார் கள் என்று சொன்னால் காஃபிர் ஃபத்வா கொடுத்த நம்முடைய நிலை என்ன? கொஞ்சமாவது இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் காஃபிர் ஃபத்வா கொடுத்த ஒருவர் அவரின் மரணத்திற்கு முன்னால் அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் சொன்ன வாக்குப்படி ஃபத்வா கொடுத்த நபர் காஃபிரான நிலையில் மரணிப்பார்.

இந்த நிலை நமக்கு வேண்டுமா? ஐந்து நேரம் தொழுது நோன்பு வைத்து ஜகாத் கொடுத்து ஹஜ் செய்து, மார்க்க பிரச்சாரம் செய்து இறுதியில் நரகத்தில் கிடந்து வேகவேண்டுமா? அந்த நிலை நமக்கு தேவையா?

பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. குர்ஆன் 6:164

6:164 வசனத்தில் ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படி இருக்கையில் ஒருவர் இணை வைத்தல் அதற்கான கூலியை அவர்தான் பெறப் போகிறார் அப்படி இருக்க அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தராத வழிமுறையை பின்பற்றி நாம் ஏன் அவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க வேண்டும்? தேவை இல்லாமல் நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ள வேண்டும்.

எனவே இதுவரை தங்களை தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொண்டு முஸ் லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்து வந்த அனைவரும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து தாங்கள் கொடுத்த ஃபத்வாக்களை திரும்ப பெறவேண்டும். நாங்கள் கொடுத் தது தவறான ஃபத்வா நாங்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் அதுபோன்ற ஃபத்வாக்களை கொடுத்துவிட்டோம் என்று முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால் நீங்கள் கொடுத்த ஃபத்வாக்களில் அல் லாஹ்வின் நாட்டப்படி ஒருவர் தவ்பா செய்து மீண்டுவிட்டார் என்று சொன் னால் ஃபத்வா கொடுத்த நீங்கள் நாளை நரகத்தில் கிடந்து கதறுவது உறுதி.

எனவே சகோதரர் பீ.ஜை. அவர்களும் அவருடைய கொள்கையை பின்பற்றக் கூடிய கொள்கை சொந்தங்களும் அல் லாஹ்விடம் தவ்பா செய்து மீள வேண் டும். மேலும் இனிவரும் காலங்களில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றி நாம் வாழவேண்டும். நமது மனோ இச்சைகளை பின்பற்றக் கூடாது. அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.

Previous post:

Next post: