முஸ்லிம்கள் பின்பற்றும் மூன்று வழி! மத்ஹப், தரீக்கா, இயக்கம்

in 2022 மே

முஸ்லிம்கள் பின்பற்றும் மூன்று வழி! மத்ஹப், தரீக்கா, இயக்கம்

நுபார் முஹம்மது ஃபரூக், இலங்கை

இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கு இஸ்லாம் கூறும் எளிய வழி, திருகுர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகளையும் பின்பற்று வது மட்டுமே. ஆனாலும் இன்றைய பெரும் பான்மை முஸ்லிம்கள் வேறு மூன்று வழி முறைகளில் இஸ்லாத்தைப் பின்பற்று வதைக் காணலாம். அவை.

  1. ஒரு இமாமின் வழிமுறை, இதை மத்ஹப் எனலாம்.
    2. ஒரு ஷேக்கின் வழிமுறை. இதை தரீக்கா எனலாம்.
    3. ஒரு ஜமாஅத், ஒரு இயக்கத்தின் வழிமுறை கட்சி எனலாம்.

“மத்ஹப்”

நான்கு மத்ஹப்களும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட வஹியாகவே இந்த நூற்றாண்டு வரை முஸ்லிம்களால் நம் பப்பட்டு வருகிறது. இந்த மத்ஹபுகளைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் நாம் அனைவரும் அதில் உருண்டு புரண்டு மூழ்கி எழுந்தவர்கள். இந்த மத்ஹபுகள் 5ம், 6ம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டவை. 7ம் நூற்றாண் டில் மத்ஹபுகளைக் கண்டிப்பாக பின்பற் றித்தான் ஆகவேண்டும் என வழியுறுத்தப் பட்டது. இஸ்லாத்திற்கும் இன்றைய மத்ஹபுகளுக்கும் ஏராளமான முரண்பாடு கள் தாராளமாக உள்ளன. ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

முஸ்லிம்களில் ஒருவர் இமாமாகத் தொழவைக்கிறார். இரண்டாம் ரகாஅத்தில் அமராமல் மறதியாக எழுந்து விட்டார். பின்பு கடைசி ரகாஅத்தில் இருப்பில் அமர்ந்து “ஸஜ்தா ஸஹ்வு’ செய்து ஸலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்கி றார். ஆனாலும் ஒருசிலர் தனியாக அந்த தொழுகையை மீண்டும் தொழுகின்றனர். ஏன்? இந்த ஜமாஅத்தின் தொழுகை யபாத்திலாகி விட்டது. இமாம் முதலாவது இருப்பில் அமரவில்லை என்றால் ஹனஃபி களுக்கு தொழுகை யபாத்திலாகி விட்டது. ஹனஃபி மத்ஹபுப்படி இங்கு “ஸஜ்தா ஸஹ்வு’ செய்து தொழுகையை பூர்த்தி செய்ய முடியாது. ஆகவே தனியாக தொழுது மீட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் இமாமிற்குப் பின்னால் தொழுதவர்களில் ஒரு சிலருக்கு அத் தொழுகை கூடும். ஆனால் வேறு சில ருக்கோ அது கூடாது. இது உண்மையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் இருக்க முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. மத்ஹபு அறிஞர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்பட்டால், அவைகள் இஸ்லாமிய தீர்ப்பாக இருப்பதில்லை. தாங்கள் விரும் பிய மத்ஹபு தீர்ப்பையே தருகின்றனர். உதாரணமாக….

ஸ ஒருவர் ஒரு பெண்ணை தொட்டு விடுவதாலோ அல்லது தன் இன வுறுப்பை தொட்டு விடுவதாலோ “ஒளு’ முறிந்து விடுமா? என்று கேட்கப்பட் டால் “ஹனஃபி மத்ஹபு’ பிரகாரம் “ஒளு’ முறியாது என்றே பதிலளிக்கிறார்கள். (மற்ற மூன்று மத்ஹபுப்படி “ஒளு’ முறிந்துவிடும்)

ஸ செஸ் விளையாடுவது, குதிரை மாமிசம் உண்ணுவது கூடுமா? என்ற கேள்விக்கு “ஷாஃபி’ மத்ஹபு பிரகாரம் இவை இரண்டும் கூடும் – ஹலால் (மற்ற மூன்று மத்ஹபுபடி இவைகள் ஹராம்) என்று பதில் வருகின்றது.

ஸ அவதூறு கூறியதற்காக ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையை ஒரு நீதி பதி தன் விருப்பப்படி அதிகப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு மாலிகி மத் ஹபுப்படி இந்த நடைமுறை கூடும் என்று பதில் வருகிறது.

ஸ அல்லாஹ்வுக்காக “வக்ப்’ செய்யப்பட்ட பொது சொத்துக்கள் பராமரிப்பு இல்லா மல் சிதிலமாகிப் போனால் அச்சொத்துக் களை விற்பது கூடுமா? என்ற கேள்விக்கு ஹம்பலி மத்ஹபு பிரகாரம் “வக்ப்’ செய் யப்பட்ட சொத்துக்களை விற்கலாம் என்று மார்க்கத் தீர்ப்பு அளிக்கிறார்கள்.
ஸாகிப் அர்ஸ்லான் “அல் இர்திஸமாத் அல் லித்தாப்”

இதுபோன்ற சுயநல தீர்ப்புகளினால் முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை சில வருடங்களிலேயே தனியார்கள் விழுங்கி விட்டனர். இவைதான் மத்ஹபுகள்.
தரீக்காக்கள் :

இஸ்லாத்தில் குர்ஆனையும், ஹதீதை யும் உள்ளடக்கிய “”­ரீஅத்”தை மட்டும் பின்பற்றி இறைவனின் அருளை அடைய முடியாது. கூடுதலாக மூன்று தகுதிகளான “தரீக்கத், ஹகீகத், மஃரிஃபத்” தேவை. இந்த வழிமுறைக்கு தரீக்கா என்று பெயர். இந்த நான்கு படித்தரங்களை அடையாதோர் முஸ்லிம்களே அல்ல என்பது இவர்களின் கொள்கை. தரீக்கா என்ற மெய்ஞான வழி முறையை எவரும் தானாக அடைய முடி யாது. ஷேக், பீர்மார்களின் காலைத் தொட்டு முத்தமிட்டு அவர்கள் கை பிடித்து “பைஅத்’ செய்து “முரீதாக’ (சீடராக) மாறி னால் மட்டுமே முடியும்.

இறைவனோடு இரண்டறக் கலக்கும் கிரேக்க, இந்துமத அத்வைத கொள்கையே தரீக்காவாகும். இந்தியாவில் அத்வைதக் கொள்கையை அறிமுகப்படுத்திய சங்கரருக் காக காஞ்சி, காசி, துவாரகை, மதுரா நான்கு பீடங்களை நிறுவி சங்கராச்சாரிகள் பீடாதிபதிகள் ஆனார்கள். தரீக்கா ஷேக் மார்களான ஷாதுலியா, காதிரியா (அப்துல் காதிர் ஜீலானி கி.பி. 1166, ஈராக்), சிஷ்தியா (சிஷ்தி 1236 ஆப்கானிஸ்தான், நக்­ பந்தியா (பஹாவுத்தீன் கி.பி. 1388 தூக்கிஸ் தான்) பெயரால் தரீக்காக்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன.

அப்துல் காதிர் ஜீலானி, இமாம் ஷாதுலி போன்றவர்களிடம் சில மாணவர்கள் சேர்ந்து கொண்டனர். அந்த ஷேக் இறந்த தும் அவர் மீது அன்பு தீனாய், மார்க்கமாய், இஸ்லாமாய் மாற்றப்பட்டது. ஷேக் மீதுள்ள அன்பை வரம்பு மீறி “தஹத்துஸ்’ புனிதமாக மாற்றினார்கள். இது எங்கள் ஷேக்கின் வழிமுறை என்று முஸ்லிம்களி டம் பிரகடனப்படுத்தினர்.

“முரீது” உயிருள்ள மையத்து :

எல்லா தரீக்காவிலும எதை ஷேக், பீர் சொல்லிக் கொடுக்கின்றாரோ அதை ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது பாவமாகக் கருதப்படுகிறது. பீர், முரீது உறவு எப்படி இருக்க வேண்டுமென் றால், இறந்தவரை குளிப்பாட்டுபவரின் கையில் சடலம் எப்படி இருக்குமோ, அப்படி இருக்க வேண்டுமாம். ஷேக்கை பின்பற்றுகிறவரை சுவனத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு ஷேக்குடை யது. ஷேக் சொல்வதற்கு அப்படியே கட்டுப்பட வேண்டிய பொறுப்பு முரீதுக ளுக்கு, இந்த தரீக்கா வழிமுறையை பின் பற்றியே தர்ஹா வழிபாடும் முஸ்லிம்களி டம் ஊடுருவியுள்ளது. இன்று முஸ்லிம் களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை உடனடி யாக நீக்கும் வல்லமையுள்ளவர்களாக முகைதீன் ஆண்டவரும், நாகூர் ஆண்ட வரும் காட்சியளிப்பதே போதிய சான் றாகும்.

இயக்கம் – ஜமாஅத் – கட்சி :

ஒரு ஆலிம், நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளர் தன்னுடைய கருத்தை முன் வைக்கிறார். உருவாக்குகிறார், அவருக்கு ஆசை வருகிறது. என்ன ஆசை? இஸ்லாத் திற்கு சேவை செய்ய வேண்டும். அந்த ஆசைக்காக மக்களைக் கூட்டுகிறார். என்ன செய்கிறார்? இஸ்லாம் எதைச் செய்ய சொல் கிறதோ அதை அவர் செய்வதாக நினைத் துக் கொண்டு, அல்லாஹ்வும் அவனது தூத ரும் எதைச் செய்ய சொல்லி இருக்கிறார் களோ அதை அந்த ஆலிம் வேறொரு உருவத்தில் தனது அறிவை முன்னிருத்தி தான் விரும்பிய அமைப்பை முஸ்லிம் சமுதாயத்தின் முன் வைக்கிறார்.

இன்று உலகத்தில் ஒரு இயக்கம், ஒரு ஜமாஅத் உருவாக்குவது கவர்ச்சிகரமான தாகி விட்டது. சந்தோ­மாக இளைஞர் களை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஒரு முஸ் லிம் ஏதேனுமொரு இயக்கத்தில் இல்லை யயன்றால் அது வியப்புக்குரிய செய்தியாக பேசப்படுகிறது.

பைபிளை பின்பற்றும் இயக்கங்கள் :

ஜனநாயகத்தை இஸ்லாம் அறிமுகப் படுத்தவில்லை. மேற்கத்திய கிருஸ்துவ நாடு களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு காலத்தில் நில பிரபுக்கள் ஆட்சி செய்தனர். பின்பு மன்னர்கள் ஆட்சி, மன்னர்கள் விரும்பியவாறு ஆளலாம். அதில் வேதம் தலையிடாது, பைபிள் இதைத்தான் கூறுகிறது.

“சீஸருடையதை சீஸருக்கும், தேவனுக் குடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” மத்தேயூ 22:21

இதன்படி பைபிளை பின்பற்றி விரும்பி யவாறு மன்னர்கள் ஆண்டனர். பின்பு ஜன நாயகம் என்ற பெயரில் மக்களுக்காக, மக்க ளால், மக்களைக் கொண்டு ஆளப்படும் ஆட்சி முறையை ஏற்படுத்தினர். ய்லிr மிஜுe ஸ்ரீeலிஸ்ரீயிe, ணுதீ மிஜுe ஸ்ரீeலிஸ்ரீயிe, லிக்ஷூ மிஜுe ஸ்ரீeலிஸ்ரீயிe என்று பெருமையுடன் பேசினர். ஆனால் உண்மை யில் இன்று ஜனநாயகம் க்ஷூலிr மிஜுe ஸ்ரீழிrமிதீ, ணுதீ மிஜுe ஸ்ரீழிrமிதீ, லிக்ஷூ மிஜுe ஸ்ரீழிrமிதீ கட்சிக்காக, கட்சியால், கட்சியைக் கொண்டு ஆளப்படும் ஆட்சி யாகவே உள்ளது.

ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் பெயரால் இயக்கங்கள், கழகங்கள், கட்சி கள் வைத்துள்ளனர். முஸ்லிம்களாகிய நமக் கும் வேண்டும் ஒரு இயக்கம் என்ற ஆசை யால் விளைந்த விபத்தே இன்றைய முஸ் லிம்கள் இயக்கம். இந்த இயக்கங்களை, ஜமாஅத்துக்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

பேசும் மையத்து-தப்லீக் அதிசயம் :

ஒரு பிரிவு கூறுகிறது; முஸ்லிம்கள் ஒன்றா கச் சேர வேண்டும். யார் என்ன செய்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. செய்யும் தீமை யைச் சுட்டிக்காட்டக் கூடாது. தொடர்ந்து நன்மையை ஏவிக் கொண்டே இருந்தால் தீமை தானாகவே ஓடி விடும். இவர்கள் கவலையயல்லாம் வானத்திற்கு மேலே உள் ளதைப் பற்றியதும், பூமிக்கு கீழே உள்ளது பற்றியும் தான் இருக்கும். இரண்டிற்கும் நடுவில் இருப்பவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள மாட்டார்கள். எல்லாவற் றையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்! புறப்படு நாற்பது நாள்! இதுதான் இவர் களின் கோ­ம்! இந்த தப்லீக்கை ஆரம்பித்த இல்யாஸ்(ரஹ்) அவர்கள் மருமகன் ஜக் கரியா மெளலானா பல பளாயில்கள் எழுதி யுள்ளார். இவருக்கு சூஃபிஸ தஸஷ்வுப் அடிப்படையில் இல்ஹாம்-வஹி வருவ தாக நினைத்துக் கொண்டிருந்தார். இவர் கூறுகிறார்.

இல்யாஸ்(ரஹ்) அவர்கள் இறந்த பிறகு அந்த மையத்து கூறியதாம் “”எனக்கு வெட்கமாக இருக்கிறது! என்னை சீக்கிரம் எடுத்துச் சென்று அடக்கம் செய்யுங்கள். ஏனென்றால் எனது கபுரடியில் நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

மையத்தின் பேச்சைக் கேட்கும் சக்தி இவருக்கு இருப்பதை எண்ணி ஆச்சரியப் பட்டால் பாவங்களைக் கண்ணால் காணும் “கஷ்ப்ய்’ சக்தியும் உள்ளது அதைவிட அதிசயம், மெளலானா ஜக்கரியாஹ் சாஹிப் கூறுகிறார்கள். “”கஷ்ப்ய் என்னும் அகப் பார் வையுடைய பெரியோர்களுக்கு உறுப்புக் களிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படு கிறது. உளுச் செய்யும் போது அதன் மூலம் எந்தப் பாவம் கழுவப்படுகிறது என்பதை யும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.”

தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 27.

இந்த இயக்கத்தின் வழிமுறையை லட் சக்கணக்கில் மக்கள் பின்பற்றுகிறார்கள்.

ஜனநாயக(ர்) அமீர் :

மற்றொரு பிரிவு இயக்கம், ஜமாஅத் கூறுகிறது. “”நீங்கள் எல்லாம் நம்மிடம் சேர்ந்து கொள்ள வேண்டும். இல்லை யயனில் வழிகேட்டில் சென்று விடுவீர்கள்” இந்த இயக்கத்திற்கு தனிச் சட்ட திட்டங் கள் உண்டு. 34 வருட பதவிப் பொறுப்பில் (இஸ்லாம் காட்டிய) அமீரை ஜனநாயக முறைப்படி அமர்த்துவார்கள். வருடங்கள் முடிந்ததும் அமீரும் தகுதி இழப்பார். அது எப்படி? தெரியாது. இந்த பிரிவுக்கு உதார ணமாக இக்வான் முஸ்லிமீன் மற்றும் ஜமாஅத் இஸ்லாமியைக் குறிப்பிடலாம்.

(இக்கட்டுரை ஆசிரியர், மெளலானா அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களி டம் பாகிஸ்தானில் பாடம் பயின்ற மாண வர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னால் துணைத்தலைவர்)

தவ்ஹீது இயக்கம் :

மூன்றாவது பிரிவான ஒரு இயக்கத்தின் பெயர் தவ்ஹீது ஜமாஅத்-ஏகத்துவ இயக்கம். இவர்கள் குர்ஆன், சுன்னா என்று சொல்லியே குர்ஆன் சுன்னாவுக்குள்ளேயே வேறொரு குர்ஆன் சுன்னாவை உருவாக்கி யிருக்கிறார்கள். ஒரு அரசாங்கம் அமைத் துள்ளார்கள். இன்று ஏராளமான இளைஞர் கள் இவ்வியக்கங்களில் ஈர்க்கப்பட்டுள் ளார்கள்.

முஸைலமாவின் இயக்கம் :

முஸைலமா திஹாமாவில் தோன்றி, தன்னை ரசூல் என்றான். அவனை அவனு டைய மக்கள் பின்பற்றினார்கள். அப் பொழுது அம்ருப்னு அல்ஆஸ்(ரழி) அவர் கள் அம்மக்களிடம் கேட்டார்கள். “”நீங்கள் ஏன் முஸைலமாவைப் பின்பற்றுகிறீர்கள்?” அதற்கு அம்மக்கள் கூறிய பதில் “”எங்களில் உள்ள ஒரு பொய்யன் எங்களல்லாத ஒரு நல்லவனை விடச் சிறந்தவன் என்றே நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் அவர் எங்களைச் சேர்ந்தவர்.

முஸைலமாவை நேசித்த மக்களைப் போலவே இன்றைய முஸ்லிம்கள் உள்ள னர். எங்களது இயக்கம், எங்கள் ஜமாஅத், எங்கள் அமீர், எங்கள் தலைவர், எங்களது இயக்கத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும், பரப்ப வேண்டும் என்றே விரும்புகின்றார்கள்.

“அல் ரிஸாலா”வில் இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். “”யாரையும் அழைத்து யாருக்கும் கட்டுப்பாடு விதித்து அவர்களுக்கு தலைவராக இருக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை”

இந்தக் கருத்தையே இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர் களும் தங்களது “”மஜ்முவா அல் பதாவா” வில் கூறுகிறார்கள்.

“யாரையும் அழைத்து தங்களுக்குக் கட்டுப்படச் சொல்லி தலைவராக இந்த உம்மத்தில் எவருக்கும் அதிகாரமில்லை.

இன்றுள்ள இயக்கம் ஜமாஅத்து தலைவர்களுக்கு, தங்களைத் தலைவர் என அழைத்துக் கொள்ள என்ன தகுதியுள்ளது? என்பதை சிந்தியுங்கள். இமாம் ஷாஃபி, இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)வை விட இவர்கள் சிறந்தவர்களா?

ஒருவன் சாராயத்தை எடுத்துக்கொண்டு சாராயம் என்றே கூவி விற்கின்றான் என் றால் அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதே சமயம் ஒருவன் சாராயத்தை “”ஸம்ஸம்” என்று சொல்லி விற்கின்றான் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கலாமா? அது “”ஸம்ஸம்” அல்ல சாராயம் என்று தெரிந்த பின்பும் சும்மா இருப்பவன் அயோக்கியன். ஈமானில் கடைசித் தரம் கூட அவனிடம் இல்லை.

“அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளை களை எடுத்துரைத்தே தீருவார்கள். அவன் ஒருவனுக்கே பயப்படுவார்கள். அல்லாஹ் வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள்.” அல்குர்ஆன் 33:39

அன்புச் சகோதரர்களே! இஸ்லாத்திற்கு புறம்பான நூதனமான வழிமுறைகளான மத்ஹப், தரீக்கா, இயக்கங்களை விட்டு விலகி விடுங்கள். 1400 வருடங்களுக்கு முன் எப்படி ஸஹாபாக்கள் இந்த தீனை பின்பற்றினார்களோ, அப்படி நீங்கள் பின் பற்றாதவரை இந்த தீன் உங்களால் பின்பற்றப்படமாட்டாது. இந்த நபிதோழர் களை அல்லாஹ் “குன்தும் கைர உம்மா’ நீங்களே மேலான சமுதாயம் என்று புகழ்ந்து கூறுகின்றான். அவர்கள் மத்தி யிலேதான் அல்குர்ஆனும் இறங்கியது.

இந்த ஸஹாபா பெருமக்களிடம் நான்கு மத்ஹபுகள் இருக்கவில்லை. தரீக்காக் களைத் தேடி அவர்கள் தஞ்சமடைய வில்லை. நேர்வழி நடந்த நான்கு கலீஃபாக் களும் நான்கு இயக்கத்தை உருவாக்கி மக்களைக் கூறு போடவில்லை. “”இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயம்தான். இதில் எத்தகைய வேற்றுமையும் கிடையாது” 23:51 என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்தனர்.

பிரிவினை செய்வது ஷைத்தானின் யுக்தி :

ஒன்றுபட்ட சமுதாயத்தில் பிரிவினை ஏற்படக் கூடிய எல்லா வாசல்களையும் நபி (ஸல்) அவர்கள் அடைத்து விட்டே சென் றுள்ளனர். அதனால்தான் “”நான் உங்களை வெள்ளை வெளேர் எனும் வெளிச்சத்தில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும், பகலைப் போன்றது” என்று கூறினார்கள். எந்த வகையிலும் இந்தச் சமுதாயம் பிரிந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். எந்தளவு என்றால், பள்ளியில் ஒரு இமாமைப் பின்பற்றி ஜமாஅத்தாக தொழவரும் தோழர்கள் பல பிரிவுகளாக பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு” “”உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவு களாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணு கிறேன்” என்று கண்டித்தார்கள். அறிவிப் பாளர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரழி), நூல்: முஸ்லிம், அபூதாவூத்.

]அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய் வதற்காக ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்ட சஹாபாக்கள், ஓய்வு நேரத்தில் தனித் தனியாக தங்கியிருப்பதைக் கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

அபூ சா அல்பா(ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள் “”ஜிஹாதில் கலந்து கொண்ட ஸஹாபாக்கள் முகாமிட்ட போதெல்லாம் தங்கள் வசதிக்காகத் தனித்தனியாகத் தங்கு வார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “”நீங்கள் இவ்வாறு பிரிந்திருப்பது ஷைத் தானின் யுக்திகளில் ஒன்றாகும்” என்று எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைக்குப் பின் னர் முஸ்லிம்கள் எங்கே முகாமிட்டாலும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்து நெருங்கிப் படுத்தே ஓய்வெடுப்பார்கள். எந்த அள விற்கு நெருங்கிப் படுத்திருப்பார்களென் றால் ஒரே போர்வையைக் கொண்டே அவர்களைப் போர்த்தி விடலாம்”. அறிவிப்பாளர்: அபூதாவூத்

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் எந்தக் காரணத்திற்காகவும் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று பலமான தடுப் புச் சுவரை கட்டி வைத்து விட்டே நபி (ஸல்) சென்றுள்ளார்கள். ஆனால், இன்றைய முஸ்லிம்கள் மத்ஹபு, தரீக்கா, இயக்க சம்மட்டிகளைக் கொண்டு சுவரை உடைப்பதில் உற்சாகமாக உள்ளனர்.

அன்புச் சகோதரர்களே! இப்போது உங்கள் முன் உள்ள கேள்வி, எவ்வழியை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? ஹிஜிரி 1,2,3ம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லவர்களான ஸஹாபாக்கள், தாபியீன் கள், தபவு தாபியீன்கள், இமாம்கள் பின்பற் றிய நேர்வழியா? அல்லது 7,8ம் நூற்றாண் டிற்குப் பின் யூத கிருஸ்தவர்களால் ஊடு ருவி விடப்பட்ட மற்ற மூன்று சாபத்திற் குரிய வழிமுறையா? சிந்தித்துச் செயல்படுங்கள்.

“என்னால் இயன்ற மட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவி யின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் வி­ யத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் நிற்கின்றேன். அல்குர்ஆன் 11:88

Previous post:

Next post: