வெளியில் உள்ள ஒலிபெருக்கி பயன்பாட்டை குறையுங்கள்!

in 2022 மே

வெளியில் உள்ள ஒலிபெருக்கி பயன்பாட்டை குறையுங்கள்!

அபூ ஹனிபா, புளியங்குடி

ஒலியால் காற்று மாசுபடுகிறது என்ற பெய ரில் கடந்த சில காலங்களில் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு சத்தத்தால் எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்கள் எழுப்பும் அதிக ஒலியால் காற்று மாசு படுகிறது என்று காரணம் காட்டி பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் போன்ற இடங்களில் பிரார்த்தனை நேரங்களில் ஒலியின் அளவை குறைத்து பயன் படுத்த வேண்டும் குழாய் போன்ற ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றங்களை நாடி அதை சட்டமாக ஆக்கி நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர்.

பல காரணங்களால் காற்று மாசுபடுகிறது. அது எல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. ஆனால் பள்ளிவாசலில் பாங்கு சொல்வது மட் டும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரியும். இருக் கட்டும். மேலும் இதனால் இதுவரை ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லி வந்த முஸ்லிம்கள் அதை நிறுத்துவதற்கு மனம் இல்லாமல் பிரச் சனை வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று பாங்கும் சொல்லியும் வருகிறார்கள்.

அத்துமீறி தாக்குதல்கள் :

மேலும் இந்த நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி சமூக விரோதிகள் வட மாநி லங்களில் உள்ள பள்ளிவாசல்களில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசல்களில் உள்ள ஒலி பெருக்கிகளை அடித்து நொருக்குவதும், பள்ளி வாசல்களை சூறையாடுவதும் என்று பல சம்ப வங்கள் நடந்தேறி வருகின்றன. காற்று மாசு படுகிறது என்ற அக்கறையில் இதுபோன்ற வன் முறை செயல்களில் ஈடுபடுகிறார்களா? என் றால் நிச்சயமாக இல்லை. காரணம் அவர்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் அதை சட்ட ரீதியாக அணுகி பள்ளிவாசல்கள் மீது நட வடிக்கை எடுக்க வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அது தேவை இல்லை. அதை கார ணம் காட்டி பள்ளிவாசல்களை அடித்து நொறுக்க வேண்டும். சமூகத்தில் கலவரங்களை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற் காக தான் ஒலி பெருக்கியையும், மாசுவையும் காரணம் காட்டி வன்முறை செயல்களில் ஈடு படுகிறார்கள். இந்த நிலை மாறுமா? என்றால் நிச்சயமாக மாறாது. காரணம், கலவரங்களை உருவாக்க துடிக்கும் சமூக விரோதிகள் அதற்கு காரணங்களை தேடுவார்களே அல்லாமல் அதற்கு தீர்வை தேடமாட்டார்கள். மேலும் வேறு ஏதாவது காரணம் கிடைக்குமா? என்று தான் பார்ப்பார்கள்.

இஸ்லாத்தில் தீர்வு :

இன்றைக்கு ஒலி பெருக்கியினால் ஏற்பட் டுள்ள பிரச்சனைக்கு இஸ்லாத்தில் தீர்வு இருக் கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது.

நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழை யுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு அழகிய திருநாமங் கள் இருக்கின்றன என்று (நபியே!) கூறுவீராக. இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர், மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக. (அல்குர்ஆன் 17:110)

அல்குர்ஆன் 17:110 வசனத்தில் தொழுகை யில் அதிக சத்தமிட்டு ஓதாதீர். மிக மெதுவாக வும் ஓதாதீர். இரண்டிற்கும் மத்தியமான வழியை கடைப்பிடிக்குமாறு அல்லாஹ் சொல்கிறான்.

இன்றைக்கு ஒலி பெருக்கியை பயன்படுத்தி பள்ளிவாசல்களில் அதிக சத்தத்தில் தொழுகை நடத்தப்படுகிறது. இப்படி தொழுகை நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. தொழுகையில் ஓதக்கூடிய சத்தத்தை நடுநிலையாக கடைபிடிக்க அல்லாஹ் சொல்கிறான்.

ஆனால் இன்று தொழுகையில் அதிக சத்தம் பயன்படுத்தப்படுகிறது. தொழுகையில் பள்ளிவாசலில் ஒலிபெருக்கி அருகில் நிற்பவருக்கு ஓதுவதால் ஏற்படும் சத்தத்தினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அதை அனுப வித்தவர்களுக்கு தான் தெரியும்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆமீன் என்று சொன்னால் பின் உள்ள வரிசையினருக் குத்தான் கேட்கும் என்று சொல்லக்கூடிய ஹதீத்கள் இருக்கிறது. இப்படி இருக்கையில் ஸ்பீக்கர் பொருத்தி அதிக சத்தத்தில் தொழுகை நடத்துவது ஏன் எதற்காக? இது வரம்பு மீறும் செயலா? இல்லையா? முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். தொழுகையாளியின் நலன் கருதி ஸ்பீக்கரின் ஒலி அளவை மிக மிக குறைக்க வேண்டும். ஸ்பீக்கர் இல்லாமல் இமாம் ஓதுவது எப்படி மற்றவர்களுக்கு கேட்குமோ அதில் இருந்து சிறிது கூடிக்கொண்டாலே போதுமானது.

பிரச்சனை உருவாக கராணம்:

மேலும் பள்ளிவாசல்களின் உள்ளே தொழுகை நடைபெறுகிறது. அதை வெளியில் உள்ளவர்களுக்கு எதற்காக தெரியப்படுத்த வேண்டும்? தொழுகையில் ஓதப்படுவது தொழுகையாளிக்கு மட்டும் கேட்டால் போதாதா? இன்றைக்கு தொழுகை நடத்தப் படுவதும், பயான் செய்யப்படுவதும் வெளியில் உள்ள மக்களுக்கு கேட்கும்படியாக ஒலி பெருக்கி பயன்படுத்தப்படுகிறது. இதை காரணம் காட்டியே சமூகவிரோதிகள் பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

பிரிவு பள்ளிகளின் அட்டூழியங்கள் :

இன்னும் பிரிவு இயக்க பள்ளிவாசல்களை பக்கத்தில் பக்கத்தில் கட்டிவைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாங்கு சொல்லி வருகின்றனர். பயான் என்ற பெயரில் அதிக சத்தம் வைக்கிறார் கள். அதனால் முஸ்லிம் வீடுகளில் உள்ள குழந்தைகள் கூட பயப்படுவதும், பிறந்த குழந்தைகள் அழுவதும் என்று நமக்குள்ளேயே சண்டை சச்சரவுகள் உருவாக காரணமாகவும் இருக்கிறார்கள்.

இரவு தொழுகை :

ரமழான் மாதத்தில் இரவு தொழுகை என்ற பெயரில் இரவு 11 மணி வரை தொழுகையும் அதற்கு மேல் பயானும், இன்னும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் பள்ளிவாசல்களில் வெளி ஸ்பீக்கரை போட்டு தொழுகை நடத்துவதும் பயான் செய்வதுமாக இஸ்லாம் காட்டித்தராத நடை முறைகளை செய்து முஸ்லிம்களுக்கு தொந் தரவு தருவதும், அதுபோல பள்ளிவாசல்களின் அருகே இருக்கும் மாற்று மதத்தவர்களின் தூக் கத்தையும், அமைதியையும் கெடுக்கும் விதமாக வும் முஸ்லிம்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால்தான் இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் பாங்கு சொல்வதையும், வெளி ஸ்பீக்கர் பயன்படுத்துவதையும் முற்றிலும் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்.

தவறை நம்மீது வைத்துக் கொண்டு பிரச் சனை என்று வரும்போது தடை செய்கிறார் கள். எங்களை அடிமைப்படுத்த முடியாது என்று வீரவசனம் பேசினால் ஒன்றுக்கும் உத வாது. நீங்கள் இஸ்லாம் காட்டித்தரும் வழி முறைகளை பின்பற்றினால் எதற்காக தடை வரப் போகிறது.

நபி வழி :

நபி(ஸல்) அவர்கள் தொழுத முறையையும், பாங்கு சொன்ன நடைமுறைகளையும் பின் பற்றினாலே போதும் ஒலி பெருக்கி சம்மந்த மான எந்த பிரச்சனையும் வராது. இருந்த போதும் நமது தேவைக்காக உலக பிரச்சனை களுக்காக குறைந்த சத்தங்களை எழுப்பும் ஒலி பெருக்கியை பயன்படுத்தி இபாதத்துக்களில் ஈடுபட்டால் அதனால் எந்த பிரச்சனைகளும் வராது. தொழுகையாளிக்கும் பாதிப்பு ஏற்படாது. மேலும் வேண்டும் என்றே பிரச்ச னைக்கு வருவார்கள் என்றால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வது எளிது. ஆக வரக்கூடிய பிரச்சனைகளை அறிவுப்பூர்வமாக மார்க்க அடிப்படையில் அணுகி தீர்வை காணவேண்டி யது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமையாகும். அந்த அடிப்படையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள ஒலி பெருக்கிக்கான தீர்வு குர்ஆன் மற் றும் ஹதீத்களில் இருக்கிறது. அதை பின்பற்றி பிரச்சனைகளுக்கான தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமே அல்லாமல் மேலும் பிரச்சனைகளை உருவாக்க கூடாது. அல்லாஹ் நம்மை குர்ஆன், ஹதீத் அடிப்படையில் செயல் படும் நன்மக்களாக ஆக்கி அருள்புரிவானாக.

Previous post:

Next post: