அறியாமைக் கால அழைப்பு!

in 2022 ஜுலை

அறியாமைக் கால அழைப்பு!

ஷரஹ் அலி, உடன்குடி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும்.

அந்த ஒரே இறைவனின் பெயரால்…

இறை நம்பிக்கை கொண்டோரே! இன் னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சி செய்ய வேண்டிய முறையில் முயற்சி செய்யுங்கள்! அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளான். இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. உங்களுடைய தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தை கடைபிடியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு “முஸ்லிம்கள்’ என்று தான் இதற்கு முன்பும் பெயர் சூட்டியிருந்தான். (இறைநூல்: 22:78)

முஸ்லிம்கள் என்ற பெயரைத் தவிர வேறு பெயர்களைக் கொண்டு அழைப் பதையும் அதைக் கொண்டு ஒருவருக்கொரு வர் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வ தையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள். மதினாவில் நபித் தோழர்களுக்கு இடையே சிறு கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்ட போது, “முஹாஜிர்களே!’ வாருங்கள் என்று ஒருவர் கூறினார். மற்றவர் “அன்சாரிகளே!’ வாருங்கள் என்று அழைத்தார். இதை கேட்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நான் உங்கள் மத்தியில் உயிருடன் இருக்கும் போதே அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்துக் கொள்ள உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கோபத்துடன் கேட்டார்கள். முஹாஜிரின்கள், அன்சாரி கள் என்பது ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு பெயர்கள், அப்பெயர் களைக் கொண்டு தங்களை பிரிவினைப் படுத்திக் கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். எனக்கு அல்லாஹ் கட் டளை இட்டு இருக்கும் ஐந்து காரியங்க ளைக் கொண்டு நான் உங்களுக்கு கட் டளை இடுகிறேன்.

ஒரே கூட்டமைப்பு, ஒரே தலைமை ஹிஜ்ரத்:

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தல், முஸ்லிமீன் ஜமாஅத்தை விட்டு ஒரு சாண் அளவிற்குயார் விலகுகிறாரோ அவர் தனது தலையிலிருந்து இஸ்லாத்தின் வளையத்தை கழற்றியவர் ஆவார். அவர் மீண்டும் கூட்டமைப்போடு சேர்ந்தாலே தவிர, எவர் அறியாமைக்கால அழைப்பை கொண்டு மக்களை அழைக்கின்றாரோ, அவர் நரகத்தில் தனித்தவர் ஆவார். உடனே ஒரு தோழர் அவர் நபிவழியில் தொழுது நோன்பு வைத்தாலுமா? என்று கேட்டதற்கு ஆம்! அவர் தொழுது நோன்பு வைத்திருந்தாலும் சரியே! அவர் நரகத்திற்கு உரியவராவார். எனவே அல்லாஹ்வின் அழைப்பைக் கொண்டு ஒருவர் மற்றவரை அழையுங்கள். அல்லாஹ் உங்களுக்கு முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் ரஹ்மானின் அடியார் என்றும் பெயர் வைத்தவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன் னார்கள். நபிமொழி:முஸ்னத் அஹ்மத் 130, 202, திர்மிதி : 2864

நான் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று நம்மை நாமே பிரிவை ஏற்படுத்திக் கொள்ளலாமா? சுயமாக சிந்தியுங்கள்! பிரிவினை ஒழிந்து மனிதர்களிடத்தில் சகோதரத்துவத் தையும் நிலைநாட்டிய இஸ்லாமியர்கள் இடத்திலேயே இயக்கங்கள் என்ற பெயரால் பிரிவினைகள் ஏற்பட்டிருப்பது இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள துர்பாக்கியமே! பிரிவினைகளை தங்களின் சுய இலா பத்திற்காக சமுதாயத்தை துண்டாட நினைப்பவர்களை சிறிதும் தயங்காமல் தூக்கி எறிவோம். நாம் அனைவரும் ஒரே ஜமாஅத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு உலக அரங்கில் இஸ்லாமியர்களின் சகோ தரத்துவ பிணைப்பின் வலிமையை பறை சாற்றுவோம். இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந் தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவன் அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்பு குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள். அதிலிருந்து அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ் வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளி வாக்குகின்றான். (இறைநூல்: 3:103)

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்துவீட்டார் களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை நிச்சயம் உண்டு. (இறைநூல் : 3:105)

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க் கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து பல பிரிவினர்களாகி விட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்குச் சம்பந்தமில்லை. அவர்களுடைய வி­யமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (முடிவில்) அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான். (இறைநூல்: 6:159)

“எவர் தங்கள் மார்க்கத்தில் பிரிவினை களை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.  (இறைநூல் : 30:32)

Previous post:

Next post: