இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாதா? ஏன்?

in 2022 ஜுலை

இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாதா? ஏன்?

அபூ ஹனிபா,  புளியங்குடி

30 வருடங்களாக காஃபிர் ஃபத்வா :

கடந்த 1988ல் இருந்து இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஃபத்வா கொடுத்து வருகிறார்கள். அவருடைய கொள்கையை பின்பற்றும் கொள்கை சொந்தங்களும் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்கள். சகோதரர் பீ.ஜை. அவர்கள் முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க காரணம் என்னவென்று தனது விளக்கத்தில் குறிப்பிடுவதாவது காஃபிர் களை பின்பற்றி தொழ மார்க்கத்தில் அனு மதி இல்லை என்பதுதான்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் களாக இருந்தாலும் அல்லாஹ்விற்கு இணைவைத்து விட்டார்கள் என்று சொன்னால் அவர்களும் காஃபிர்கள் வரிசையில் வந்து விடுவார்கள்.

ஏன் என்றால் இன்றைக்கு மோடி, அமித்ஷா போன்றோர் பின்னால் நின்று தொழ முடியுமா? அவர்கள் பின்னால் நின்று தொழுதால் நமது தொழுகை கூடுமா? எனவே காஃபிர் பின்னால் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. அதனால் இன்றைக்கு இருக்கக்கூடிய ´ர்க் வைக்கும் முஸ்லிம்கள் பின்னால் தொழ மார்க்கத்தில் அனுமதி இல்லை. குறிப்பாக மவ்லீது ஓதுபவர்கள். தர்க்காவில் போய் கையேந்துபவர்கள். தாயத்திற்கு சக்தி இருக்கிறது என்று நம்புபவர்கள் இன்னும் பிற மத கோவில் களுக்கு சென்று சிலைகளை வணங்கக் கூடி யவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்விற்கு ஷ´ர்க் வைத்துவிட்டார்கள். இவர்கள் காஃபிராகி விட்டார்கள். ஆகையால் இவர்கள் பின்னால் தொழக்கூடாது. இவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது. இவர்களில் யாராவது இறந்துவிட்டால் இவர்களுக்காக துஆ கேட்கக்கூடாது. இதுதான் இஸ்லாத் தின் நிலைப்பாடு என்று கூறுகிறார்.

பீ.ஜை அவர்களின் இந்த நிலைப்பாடு சரிதானா? இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழுவதற்கு இஸ்லாமிய மார்க் கத்தில் அனுமதி இருக்கிறதா? இல்லையா? இந்த பிரச்சனை நபி(ஸல்) அவர்கள் காலத் தில் ஏற்பட்டதா? ஏற்படவில்லையா? என்பதை பற்றி பார்ப்போம்.

பீ.ஜை. அவர்களின் விளக்கம் :

முதலில் சகோதரர் பீ.ஜை. அவர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ´ர்க் வைக்கும் இமாம்கள் பின்னால் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கிறார் என்பதை பார்ப்போம்.

நிராகரிப்பின் மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை நிர்வாகம் செய்ய உரிமையில்லை. அவர் களுடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். (அல்குர்ஆன் : 9:17)

இந்த வசனத்தை ஆதாரமாக காட்டி ´ர்க் வைக்கக்கூடிய முஸ்லிம்கள் அவர்கள் இணைவைப்புக்கு அவர்களுடைய செயல் களே வெளிப்படையான சாட்சியாக இருக் கிறது. மவ்லீது ஓதுவது, தர்காவில் போய் கையேந்துவது, தாயத்து கட்டுவது பிற மத சிலைகளை வணங்குவது போன்றவை வெளிப்படையாக தெரியக் கூடிய இணை வைக்கக்கூடிய செயல்கள் ஆகும். அதனை அவர்கள் செய்கிறார்கள். எனவே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க அவர்க ளுக்கு தகுதி இல்லை என்று குறிப்பிடு கிறார். மேலும் இமாம் என்பது தொழுகைக்கு இமாமத் செய்வதை மட்டும் குறிப்பிடவில்லை மாறாக நிர்வாகம் செய்யும் தலைவரையும் சேர்த்தே தான் குறிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எப்படி அல்லாஹ்வின் பள்ளிவாசலை நிர்வாகம் செய்ய தகுதி இல்லையோ அதுபோல பள்ளியில் இமா மாக நின்று தொழ வைக்கவும் தகுதி யில்லை. எனவே ஷ´ர்க் வைக்கும் இமாம்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் தொழவைக்க தகுதி இல்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். மேலும் சில வசனங்கள் ஆதாரமாக காட்டுகிறார் அது என்ன என்பதையும் பார்ப்போம்.

முஃமின்கள் முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவார்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வ தற்காக அன்றி எவரேனும் அப்படிச் செய் தால், அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே மீள வேண்டிய திருக்கிறது. (அல்குர்ஆன் 3:28)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களா னால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர் களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர் களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 9:23)

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ் வுக்கே உரியது. (அல்குர்ஆன் 4:139)

முஷ்ரிக்குகள் தம் நெருங்கிய உறவினர் இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், தகுதியானதல்ல. (அல்குர்ஆன் 9:113)

ஆகிய இந்த வசனங்களை ஆதாரமாக காட்டி இணைவைக்கும் முஸ்லிம்கள் உங்கள் பெற்றோராக, உறவினராக, நண்பர்களாக, யாராக இருந்தாலும் அவர்களை உங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது. அவர்களை அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகிக்கும் நிர்வாகிகளாக ஆக்கக்கூடாது. அவர்களை இமாம்களாக ஆக்கி அவர்கள் பின்னால் தொழக் கூடாது. அவர்களுக்காக அல்லாஹ்விடத் தில் துஆவும் கேட்கக்கூடாது என்று விளக்கம் கொடுக்கிறார் சகோதரர் பீ.ஜை. அவர்கள்.

பீ.ஜை. அவர்களின் இந்த விளக்கம் சரிதானா? மேலே குறிப்பிட்ட வசனங்கள் இன்றைய இணைவைக்கும் முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறதா? அல்லது இந்த விளக்கம் பீ.ஜை. அவர்களின் சுய விளக்கமாக இல்லையா? என்பதை பார்ப்போம்.

அல்லாஹ் குறிப்பிடும் காஃபிர் யார்?

முதலில் 9:17, 3:28, 9:23, 4:139, 9:113 ஆகிய வசனங்கள் யாரை குறிப்பிடுகிறது என்பதை கவனியுங்கள். அன்றைய மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் தூதரை நிராகரிக்கக்கூடிய நிலையில் கஅபாவை நிர்வாகம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் அவர்களை பற்றி அல்லாஹ் சொல்லும்போது, ஹாஜி களுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் சமமாக மாட்டார்கள். அநியாயக்காரர் களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9:19)

இந்த வசனத்தில் கஅபத்துல்லாஹ்வை நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்டு அறப்போர் செய்தவர்களையும் சமமாக ஆக்கிவிட்டீர்களா என்று கேட்கிறான்.

இதில் இருந்து அன்றைக்கு கஅபாவை நிர்வாகம் செய்தவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்களாக இருக்கிறார்கள். எனவே தான் மக்கா வெற்றிக்கு பின்னர் கஅபத்துல்லாஹ்வை நிர்வாகிக்க கஃபிர்களுக்கு தகுதி இல்லை என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் மக்கத்து காஃபிரைப் போன்று அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பாதவர்களா? நிச்சயமாக இல்லை.

இன்றைக்கு எந்த ஒரு முஸ்லிமையும் கேட்டுப்பாருங்கள். அல்லாஹ்வையும், அவனுடைய துதரையும் நிராகரிக்கிறீர்களா என்று குடித்துவிட்டு தெருவில் கிடக்கும் ஒரு முஸ்லிமை கேட்டால் கூட அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரிக் கக்கூடிய முஸ்லிமாக நாம் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் நிலையில் மக்கத்து காஃபிர்களையும், இன்றைய முஸ்லிம்களையும், ஒப்பிட்டு ஃபத்வா கொடுக்கிறார் என் றால் இவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை நீங்களே விளங்கிக் கொள்ளுங்கள்.

மேலும் 9:17 வசனத்தில் சுட்டிக்காட்டப்படும் காஃபிர் யார் என்பதை 9:19 வசனத்தில் அல்லாஹ் தெளிவாக விளக்கிவிட்டான். அவர்கள் அல்லாஹ்வையும் அவனு டைய தூதரையும் ஏற்காத மக்கத்து காஃபிர்கள் என்று இன்றைக்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்காத ஒரு முஸ்லிமை இவர்களால் காட்டமுடியுமா? ஒரு காலமும் முடியாது. அப்படி இருந்தும் 9:17 வசனம் இன்றைய இணைவைக்கும் முஸ் லிம்களை குறிப்பதைப் போன்று விளக்கம் கொடுக்கிறார் என்றால் இவர் தெரிந்தே தான் சத்தியத்தை மறைத்து அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை வழிகெடுத்து தனது பின்னால் வரவைத்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்குகிறது.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகிக்க தகுதி இல்லாதவர்கள் யாரென்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாத குறைந்தபட்சம் வாயளவில் கூட கலிமாவை சொல்ல மறுக்கும் காஃபிர்களே ஆவார்கள்.

இன்றைக்கு மோடியும், அமித்ஷாவும் கலிமா சொல்லாமல் ஒரு பள்ளிவாசலை கட்டி அதில் நிர்வாகிகளாக இருந்து கொண்டு இமாமத் செய்தால் அவர்களை பின்பற்றி தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லைதாம். அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் அதேசமயம் மோடியும், அமித்ஷாவும் கலிமா சொல்லி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை பின்பற்றி இமா மாக நின்று தொழுகை நடத்தினார்கள் என்று சொன்னால் அவர்களை பின்பற்றி தொழுவதை யாரால் தடுக்கமுடியும், தடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

அதுபோல அதே மோடியும், அமித்ஷாவும் கலிமா சொல்லி நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றி தொழுகைக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஷ´ர்க் வைக்கக்கூடிய செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று சொல்ல யாருக்கு தகுதி இருக்கிறது?

ஏன் என்றால் அன்றைய முனாஃபிக்கு கள் முஸ்லிம்களாக இருந்த நிலையில் அல் லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டார்கள். அப்படிப்பட்ட நிலையிலும் அவர்களை முஸ்லிம்களாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அங்கீ கரித்திருக்கிறார்கள். இன்னும் அந்த முனாஃபிக்குகள் தொழுகைக்கு இமாமத்தும் செய் திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எந்த ஒரு ஃபத்வாவும் கொடுக்காத நிலையில் இன்றைக்கு அதே முனாஃபிகள் வேலையை செய்யும் முஸ்லிம்களுக்கு சகோதரர் பீ.ஜை. அவர்கள் காஃபிர் ஃபத்வா கொடுக்கிறார் என்றால் இவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரா? இல்லையா? அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் அவர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளை யிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய முனாஃபிக்குகளை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முஸ்லிமாக ஏற்றுக் கொண் டிருக்கக்கூடிய நிலையில் முனாஃபிக்குகள் செய்யக்கூடிய அதே வேலையை இன் றைக்கு இருக்கக்கூடிய முஸ்லிம்களும் செய்கிறார்கள். அப்படி என்றால் இவர்களும் முஸ்லிம்கள் தான். இதை சரியாக விளங் கியோ அல்லது விளங்காமலோ சகோதரர் பீ.ஜை. அவர்கள் இன்றைய ஷ´ர்க் வைக்கும் முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்து அவர்கள் பின்னால் தொழக்கூடாது என்று விளக்கம் கொடுக்கிறார். இந்த நிலைப்பாட்டை சகோதரர் பீ.ஜை அவர்களும் பீ.ஜையின் கொள்கையை பின்பற்றக்கூடிய கொள்கை சகோதரர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் உண்மை மார்க்கத்தை தெரிந்தே முஸ்லிம்களுக்கு காஃபிர் பத்வா கொடுத்து வந்தால் உங்களின் நிலை என்ன தெரியுமா?

அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணைகள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 42:21)

42:21ல் அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையா ளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? என்று கேட்கிறான்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்த ஒன்றை சகோதரர் பீ.ஜை. அவர்கள் செய்வார் என்றால் அவர் அல்லாஹ்விற்கு நிகராக தன்னை ஆக்கிக் கொண்டார் என்பது தான் பொருள்.

மேலும், பீ.ஜை. அவர்களின் ஃபத்வாக் களை மார்க்கமாக நம்பி அவர் பின்னால் செல்லக்கூடிய கொள்கை சொந்தங்களின் நிலை என்ன தெரியுமா?

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும் தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர வணங்கக் கூடாதென்றே கட்டளை யிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரிய வன் அவனன்றி வேறு இறைவன் இல்லை. அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.  (அல்குர்ஆன் 9:31)

யூத கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாதிரி களையும், சந்நியாசிகளையும் வணக்கத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். காரணம் பாதிரிமார்கள் ஒன்றை மார்க்கம் என்று சொன்னால் அதனை அப்படியே கண்மூடி பின்பற்றுபவர்களாக யூத கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் யூத கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாதிரிகளை வணக்கத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று அல்லாஹ் சொல்கி றான். அதேபோல இன்றைக்கு தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லக்கூடிய முஸ்லிம் களும் பீ.ஜை. அவர்களின் சுய விளக்கத்தை கண்மூடி பின்பற்றக் கூடியவர்களாக இருக் கிறார்கள். ஒருவேலை அது உண்மை என்றால் அவர்கள் பீ.ஜையை தங்களுடைய வணக்கத்திற்கு உரியவராக ஆக்கி இருக்கிறார்கள் என்பது தான் பொருள். எனவே தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் பீ.ஜை. அவர்களை ரப்பாக ஆக்கியிருக்கிறீர்களா? அல்லது ஆக்க வில்லையா? என்பதை உங்கள் மனதை கேட்டுக் கொள்ளுங்கள்.

இதுவரை நீங்கள் பீ.ஜை. அவர்களை ரப்பாக ஆக்கி மற்ற முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்திருந்தீர்கள் என்றால் இத்தோடு அதை நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். அவனுடைய அதிகாரத்தில் யாரேனும் கைவைக்க முற்பட்டால் மொத்தமாக அழித்துவிடுவான். இன்றைக்கு தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக் கூடிய பெரும்பான்மை முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவைப்பவர் களாகவே இருக்கிறார்கள்.

எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யாமல் அல்லாஹ் விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாகவும், மேலும் இஸ்லாத்தை ஏற்ற யாவரும் முஸ்லிம்களே. அவர்கள் இணைவைக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டாலும் சரியே. அவர்களுக்கு ஃபத்வா கொடுப்பது நமது கடமை அல்ல. உபதேசம் செய்வது மட்டுமே நமது கடமை என்பதை மார்க்க நிலைப்பாடாக ஏற்று முஸ்லிம்களிடையே பிரிவுகள் உருவாக்காமல் ஒன்று பட்ட ஒரே முஸ்லிம் சமுதாயமாக வாழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும். எனவே அப்படிப்பட்ட உறுதி கொண்ட மக்களாக நாம் இருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக.

Previous post:

Next post: