எது நேர்வழி?

in 2022 ஜுலை

எது நேர்வழி?

கே.எம்.எச்.

பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி:

சென்ற ரமழான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி இமாம் பேசும்போது “”நாங்கள் ஆயிரம் வருடங்களாக நான்கு மத்ஹபுகளில் மட்டுமே உறுதியாக இருந்து வருகிறோம். ஆனால் மத்ஹபுகளை நிராகரித்து குர்ஆன், ஹதீஃத்படி நடக்கிறோம் என்று கூறித் திரியும் தெளஹீத்வாதிகள் இன்று 40 மத்ஹபினர்களாக ஆகிவிட்டார்கள். இது ஒன்றே அவர்கள் வழிகேட் டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். எனவே முஸ்லிம்களே அவர்களது பேச்சில் மயங்கி அவர்கள் பின்னால் சென்று வழிகெட்டு விடாதீர்கள். நீங்கள் இருக்கும் மத்ஹபுகளி லேயே உறுதியாக இருந்து கொள்ளுங்கள்” என்று உபதேசித்ததாக சில சகோதரர்கள் தொலைபேசியில் விளக்கம் கேட்டார்கள். எனவே அந்த விளக்கத்தை மற்ற சகோதரர் களுக்கும் விளக்குவது கடமை என்ற நோக்கில் இங்கு எடுத்து எழுதப்படுகிறது.

நேர்வழி நடக்கும் கூட்டம் ஒரேயயாரு கூட்டம்தான் என்று நபி(ஸல்) அவர் கள் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி கூறிச் சென்றிருக்கிறார்கள். எனவே அவர் கூறும் நான்கும் நேர்வழி இல்லைதான். எழும் நேர்வழி இல்லைதான். அதாவது “”ஒரே சமுதாயம்” என்று அல் லாஹ்வும் அவனது இறுதித் தூதரும் அறுதி யிட்டுக் கூறியுள்ளதற்கு மாறாக சமு தாயத்தை யார் பிளவுபடுத்துகிறார்களோ அவர்கள் அனைவரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் என்பதில் அணுவளவும் சந் தேகமே இல்லை. ஆயினும் அவர்களை காஃபிர் என்று கூறுவதோ, அவர்கள் பின் னால் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதற்கோ அல்லாஹ் அல்லாத யாருக்கும் இவ்வுலகிலும் அதிகாரமில்லை. நாளை மறுமையிலும் அதிகாரமில்லை. அப்படி இவ்வுலகில் ஃபத்வா கொடுப்பதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதேயாகும்.

எனவே மத்ஹபுகளின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்தினாலும், இயக் கங்கள், அமைப்புகள், குழுக்கள் பெயரால் பிளவுபடுத்தினாலும் குற்றச் செயலில் இரண்டும் ஒன்றுதான். 1980களில் மத்ஹபு களின் பெயரால் சமுதாயத்தைப் பிளவு படுத்துவது பெருங்குற்றம். பெருத்த வழி கேடு என்று குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களு டன் தெளிவுபடுத்தும்போது, இந்த மத்ஹபு வாதிகள் அந்த உண்மையை ஏற்று தெளபா செய்து திருந்தி ஒரே உம்மத்தாக ஆகி இருந்தால், பின்னால் இவர்கள் ஏழு பிரி வாகப் பிரிந்து செல்லும் வாய்ப்பே ஏற்பட் டிருக்காது. மத்ஹபுவாதிகள் தங்களின் தவறான குர்ஆன் ஹதீதுக்கு முரணான போக்கை தங்களின் சொத்தை வாதங் களைக் கொண்டு நியாயப்படுத்திக் கொண் டிருந்தார்கள். சத்தியத்தை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. எனவே சமுதாய ஒற் றுமை ஏற்படும் என்ற நம்பிக்கை இழந்து அல்லாஹ் மீதும், மறுமை மீதும் உறுதியான, முழுமையான நம்பிக்கை இல்லாதவர்கள், மறு உலகை விட இவ்வுலகை அதிகமாக நேசித்தவர்கள், நாளை கிடைக்கும் பலாக் காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் மேல் என்று எண்ணியவர்கள், தங்களின் சொந்த நலனிற்காக ஒன்றுபட்டிருந்த ஜமா அத்தைப் பிளவுபடுத்தினார்கள். மத்ஹபில் நிலைத்திருந்தால் பிரிவு ஏற்பட்டிருக்காது என்று கூறி குர்ஆன், ஹதீதைக் குற்றப்படுத் தியிருப்பது தவறு; சொந்த விருப்பு வெறுப்பு மற்றும் சுயநலம், லோகாதாய மேலெண்ணம் ஆகியவையே பிரிவுக்குக் காரணம் என்பதைத் தெளிவு படுத்தத்தான். அவர்கள் நம்மை விட்டு வெளியேறியதும் அவசர அவசரமாக ஒரு புரோகித மதர ஸாவை ஆரம்பித்ததும், வாலிப உள்ளங் களில் உணர்வைத் தூண்டி பள்ளிகளில் ரகளை செய்ய வைத்து அதைக் காரணம் காட்டியே தனித்தனிப் போட்டிப் பள்ளி கள் கட்டி சமுதாயத்தைப் பிளவுபடுத்திய தும் அதை உண்மைப்படுத்தும், நம்மோடு பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருந்தால், புரோகித மதரஸா மற்றும் தனிப் போட்டிப் பள்ளிக் கட்டி ஆதிக்கம் பெற, அதிகாரம் செலுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை விளங்கியே நம்மை விட்டு வெளி யேறினார்கள் என்ற உண்மையும் இப் போது நன்கு புலப்படும்.

மற்றபடி அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் ஒரு வாதத்திற் காக நூறு கோடி ரூபாய் மோசடி செய் யப்பட்டிருந்தாலும் உள்ளே இருந்து அதற் குப் பரிகாரம் தேட முற்பட்டிருப்பார்களே அல்லாமல் ஜமாஅத்தைப் பிளவுபடுத்தும் கொடிய செயலை செய்யத் துணிந்திருக்க மாட்டார்கள். அவர்களின் ஆதிக்க வெறி யும், தலைமைப் பித்துமே அவர்கள் ஒன்று பட்டிருந்த ஜமாஅத்தை பிளவுபடுத்தத் தூண்டிற்று என்பதற்கு இப்போது 1987லி லிருந்து ஒன்றுபட்டிருந்தவர்கள் அதை விட்டுப் பிரிந்து அந்த ஜமாஅத்தையும் பிளவுபடுத்தி அதே பொருளாதார மோசடி என்று குற்றம் கூறித்திரிவதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் அறிய முடியும்.

எனவே குர்ஆன், ஹதீஃத் என்று கூறி மத்ஹபுகளை நிராகரித்தவர்கள் இன்று ஏழு மத்ஹபுகள் ஆகிவிட்டார்கள் என்று குர்ஆன், ஹதீதின்மீது குற்றம் சுமத்தி கண் மூடிப் பின்பற்றலை தக்லீதை-மத்ஹபுகளை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை. பெருங்குற்றமாகும். குர்ஆன், ஹதீஃதை முறைப்படி விளங்குபவர்கள், உண்மையிலேயே உள்ளச்சம் உடையவர் கள். ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்கள், அல்லாஹ்வும், ரசூலும் ஒரே ஜமாஅத் என்று முத்திரையிட்ட ஜமா அத்தைப் பிளவுபடுத்தும் கொடிய செயலை செய்ய ஒருபோதும் முற்படமாட்டர்கள். குர்ஆன், ஹதீஃத் என்று கூறிக் கொண்டு தங்களின் மனோ விருப்பங்களை நிறை வேற்றத் துணிபவர்களே சொந்த யூகங் களைக் கூறி சமுதாயத்தைப் பிளவு படுத்த முடியும்.

ஆயினும் அப்படி இயக்கம், கழகம், குழு என்றெல்லாம் பிளவுபட்டவர்களுக்கு வழிகாட்டி இந்த மத்ஹபினர்தான். நதி மூலம், ரி´ மூலம் என்று சொல்வார்களே அது போல் அவர்கள் ஏழு பிரிவினர்களாகப் பிரிந்து போவதற்கு மத்ஹபினர் நான்கு பிரி வினராக இருந்து கொண்டு அவற்றை நியா யப்படுத்திக் கொண்டிருப்பதுதான் மூல காரணம் என்பதை மக்கா பள்ளி இமாமும் மற்றும் முகல்லிது மவ்லவிகளும் உணர வேண்டும். நீங்கள் நான்காக இருப்பதற்கு உரிமை உண்டு, அது குர்ஆன், ஹதீஃத்படி நேர்வழி என்று நீங்கள் கூறும் போது அவர்கள் ஏழாக இருந்துகொண்டு அதுவும் குர்ஆன், ஹதீஃத் வழி, நேர்வழி என்று சொல் வதை உங்களால் எப்படி ஆட்சேபிக்க முடிகிறது?

“மலத்தை உச்சந்தலையிலிருந்து வால் வரை முதுகில் சுமந்து கொண்டிருக் கும் இரால் மீன் மற்ற மீன்கள் வயிற்றில் மலத்தைச் சுமப்பதை ஏளனம் செய்ததாம்” அதுபோல் தான் மக்கா பள்ளி இமாமின் கூற்று இருக்கிறது.

நாலும் தவறு; 40ம் தவறு; முஸ்லிம் உம்மத் ஒன்றாகத்தான இருக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தால் அவரைப் பாராட்டி இருக்கலாம். கிறித்தவர்கள் மூன் றும் ஒன்று என்று கூறுவதற்கும் மத்ஹபினர் நாலும் ஒன்று என்று கூறுவதற்கும் தெளஹீத் வாதிகள் ஏழும் ஒன்று என்று கூறுவதற்கும் ஏதும் வித்தியாசம் இருக்க முடியுமா?

நபி(ஸல்) அவர்கள் “எனது உம்மத் 73 பிரிவினராகப் பிரிவார்கள். 72 பிரிவுகள் நரகையடையும். ஒரு கூட்டம் மட்டுமே சுவர்க்கம் செல்லும் என்று கூறியபோது, அந்த ஒரு கூட்டம் எது? என்று நபிதோழர் கள் கேட்டதற்கு “”நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு இருப்பவர்கள்” என்று குன்றிலிட்ட தீபம் போல் உள்ளங் களை நெல்லிக்கனி போல் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

அன்று நபி(ஸல்) அவர்களின் தலைமை யில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே உம்மத் தாகத்தான் இருந்தார்கள். ஆயினும் அவர் கள் அனைவரும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களாகவா இருந்தார்கள்? இல் லையே! நரகின் அடித்தட்டில் போய் விழப் போகும் பச்சை முனாஃபிக்குகள் இருந்தார் கள். இங்கு வந்து தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு தொழுது கொண்டு அதேபோல் அங்கு போய் இல்லை நாங்கள் முஸ்லிம்களை கிண்டல் செய்கிறோம். உங் களோடுதான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவர்கள் செய்த ´ர்க்கான கா ரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளத்தில் அல்லாஹ்வையும், அவனது ரசூலையும் குர்ஆனையும், இஸ்லாத்தை யும், முஸ்லிம்களையும் கடுமையாக வெறுத்துக் கொண்டு நாவினால் தங்களை முஸ்லிம் கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்களும் அன்றைய முஸ்லிம்களில் அடங்குவர். உள் ளத்தில் ஈமான் நுழையாத நிலையில் தங் களை முஃமின்கள் என்று கூறியவர்களாக அல்லாஹ் “நீங்கள் உங்களை முஃமின்கள் என்று சொல்லவேண்டாம்; முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள்” என்று அனுமதித்த விஷயத்தை அல்குர்ஆன் 49:14 வசனம் அப்பட்டமாக அறிவிக்கிறது.

அன்றைய முஸ்லிம்களில் கடைந்தெடுத்த கயவர்கள் பலர் இருந்தும் நபி(ஸல்) அவர்கள், அவர்கள் முஸ்லிம் இல்லை காஃபிர்கள் என்றும் ஃபத்வா கொடுத்தார்களா? இல்லையே? அவர்களையும் முஸ்லிம்களாகத் தானே ஏற்றிருந்தார்கள். அல்லது குறைந்தபட்சம் அந்த நயவஞ்சக முஸ்லிம்களிடமிருந்து நேர்வழி நடந்த உண்மை முஸ்லிம்களை (இவர்களது அகராதியில் பியோர் முஸ்லிம்) பிரித்துக் காட்டும் வகையில், அதாவது ஒரே உம்மத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிதொரு பெயரைத் தேர்ந்தெடுத்தார்களா? இல்லையே? இப்படி சமுதாயத்தைப் பிளவு படுத்த மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதென்றால் அன்றே நபி(ஸல்) அவர்கள் பிரித்துக்காட்டி நமக்கொரு அழகிய முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்க மாட்டார்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த நிலையிலும் எப்படிப்பட்ட கொடூர நிலையிலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை; குறிப்பாக நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கு நிச்சமாக இல்லை என்பது தெளிவாக விளங்கவில்லையா? நேர்வழியில் இருக்கிறோம்; பியோர் முஸ்லிம்கள்; குர்ஆன், ஹதீத்படி நடக்கிறோம் என்று கூறிக்கொண்டாலும் முஸ்லிம் சமு தாயத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம் இவர்களும் வழிகேட்டிலாகி விடுகிறார்கள் என்பது புரியவில்லையா?

இங்கு நியாயமாகச் சிந்திக்கக் கட மைப்பட்டிருக்கிறோம். இன்றைய முஸ் லிம் சமுதாயத்திலுள்ள ஆக மோசமான கொள்கையுடைய (அதைவிட மோசமான கொள்கையே இல்லை என்று வைத்துக் கொள்வோம்) ஒரு கூட்டத்தையே எடுத்துக் கொள்வோம். அவர்கள் அல்லாஹ்வை யும், அவனது தூதரையும், குர்ஆனையும், இஸ்லாத்தையும் உள்ளத்தால் வெறுத்துக் கொண்டு உதட்டளவில் முஸ்லிம் என்று கூறக் கூடியவர்களாக இருப்பார்களா? நிச்ச யமாக அப்படி எந்த ஒரு கூட்டத்தாரையும் பார்க்க முடியாது. உள்ளத்தால் வெறுத்துக் கொண்டு உதட்டளவில் முஸ்லிம் என்று அன்று சொன்னவர்களையே நபி(ஸல்) அவர்கள் “”நீங்கள் முஸ்லிம் இல்லை; காஃபிர்” என்று ஃபத்வா கொடுக்கவில்லையே; அல்லது அவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் அல்லாத பிரிதொரு பெயரைத் தேர்ந்தெடுக்கவில் லையே? இந்த நிலையில் அந்த ஒரே சமுதாயத்தை இன்று பிளவுபடுத்திக் கொண்டிருப்பவர் எந்த முகத்தோடு நாங்கள் நேர் வழியில் இருக்கிறோம் என்று கூற முடியும்?

எனவே நான்கு பிரிவினராக இருக்கும் மத்ஹபினரும் நேர்வழியில் இல்லை; ஏழு பிரிவினராக இருக்கும் இயக்க, கழக, குழுவின ரும் நேர்வழியில் இல்லை என்பதே உண் மையாகும். ஆயினும் நேர்வழி நடப்பவர்கள் அவர்களையும் முஸ்லிம்களாகவே ஏற்று சமுதாய ஒற்றுமையைப் பேண வேண்டும். அதாவது தங்களை எவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்களோ, அல்லாஹ்வையும், ரசூலையும், குர்ஆனையும் ஏற்றிருக்கி றோம் என்று வாயினால் கூறுகிறார்களோ அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந் தாலும் அவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்காமலும், அவர்கள் பின்னால் தொழும் தொழுகை நிறைவேறாது என்று கூறாமலும், அப்படிப்பட்டவர்கள் பின் னால் தொழுவதை தவிர்க்காதவர்களாக வும், ´ர்க் செய்யும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்று இவர்களாக ஃபத்வா கூறி வாலிப உள்ளங்களை உணர்வுக்கு அடிமைப்படுத்தி அதன் மூலம் மஹல்லாக் களில் குழப்பத்தை ஏற்படுத்தி அதைக் காரணம் காட்டி தனிப் போட்டிப் பள்ளி கட்டி ஊரை இரண்டாக்காமலும், அவர் களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் அல்லாத வேறு பெயரைத் தேர்ந் தெடுக்காமலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரே உம்மத், ஒரே சமுதாயம் என்று கூறியுள்ளதை அப்படியே ஏற்று முழுச் சமுதாயத்தையம் அரவணைத்துச் செல்லும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்களாக இருக்க முடியும்.

முஸ்லிம்கள் அனைவரையும் அரவ ணத்துச் செல்லும் அதே வேளை, நாளை அவர்கள் தங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, தகப் பன் மகனுக்கு உபதேசம் செய்வது போல், சகோதரன் தனது கூடப்பிறந்த சகோதர னுக்கு உபதேசம் செய்வது போல் அவர் களைக் கேவலமாக இழிவாகக் கருதாமல், அவர்கள் குர்ஆன், ஹதீஃதின் போத னைக்கு முரணாகச் செயல்படுவதைச் சுட் டிக்காட்டி நையாண்டி செய்து அவர்களது உணர்வுகளைத் தூண்டாமல், அன்புடன் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஃத் போதனைகளை ஒளிவு மறைவின்றி நேரடியாக அவர் களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்க வேண்டும். (பார்க்க 9:71, 33:70)

இன்று இந்திய முஸ்லிம்கள் பெரும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய நிலை உணர்ந்து தங்களின் நிலையை மாற் றிக் கொள்ளாதவரை அல்லாஹ் முஸ்லிம்களின் நிலையை மாற்றப் போவதில்லை. அவர்களை பிடித்துள்ள துன்பங்களும், பீடைகளும் மேலும் அதிகரிக்கவே செய் யும். முஸ்லிம்கள் பிளவுபட்டு சிதறிய காரணத்தால் 800 ஆண்டுகள் முஸ்லிம்களே ஆண்ட ஸ்பெயின் நாட்டில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலை ஏற்பட்டது போல், 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்திய நாட்டிலும் ஒரு முஸ்லிமும் இல்லாத நிலை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை இவர்கள் குற் றப்படுத்த முடியாது. இவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளும், விரோத, குரோத போக்குகளும் போட்டி பொறாமைகளும், அதிகார தலைமைப் பித்து தலைக்கேரி தடுமாறுவதும் காரணங்களே அல்லாமல் அலலாஹ்வோ, குர்ஆன், ஹதீஃதோ கார ணமில்லை என்பதை உணர்ந்து கொள்வார் களாக, அல்லாஹ்வின் அச்சங் கொண்டு நேர்வழிக்குத் திரும்புவார்களாக.

Previous post:

Next post: