ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : உலகம் தோன்றியதிலிருந்து முடிவு வரை கணக்கிடலடங்காத மனிதர்கள் வாழ்ந்து மறைவதுண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து விடுகிறார்கள். ஒரே பெயரில் பல மனிதர்களும் உலகெங்கும் இருப்பதும் உண்டு. ஒவ்வொரு மனிதனின் பெயரையும் கடவுளால் அறிந்து கொள்வது முடியக்கூடிய காரியமா? நவீன காலத்தில் பயன்படும் கம்யூட்டரிலிருந்து அறிந்து கொள்வதற்கே முறையாக பதிவு செய்திருக்க வேண்டுமே. பதிவு செய்திருந் தாலும் தெரிந்து கொள்வதற்கு சில மணித் துளிகளை செலவு செய்ய வேண்டும். கடவுள் எப்படி பெயர்களை அறிந்து கொள்கிறான்? ராகவன்
தெளிவு : தங்களது கேள்விகளும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயமும் தங்களுக்கு இறைவ னைப் பற்றிய ஞானம் இல்லாமலிருப்பதையே காட்டுகிறது. மேலும் தாங்கள் சிறு வயதின ராகக் கூட இருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. உலக மக்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய திருகுர்ஆன் தங்களுக்குத் தெளி வைத் தந்து கொண்டிருக்கிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
தாங்கள் நினைப்பது போல இறைவன் சாதாரணமானவன் அல்ல. இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே. மனைவி மக்கள் போன்ற பிற ரின் உதவிகள் எதுவும் அவனுக்குத் தேவை யில்லை. வேறெதுவும் கூட அவனுக்குத் தேவையில்லை. அவன் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து கொண்டிருப்பவனும் அல்ல. ஏனெ னில் அவனை எவரும் பெறவில்லை. அவனும் எவரையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவனுக்கு நிகராக எவருமே உலகம் தோன்றியதிலிருந்து அதன் முடிவு வரை ஏற்பட்டது மில்லை, ஏற்படப் போவதுமில்லை என்ற கருத்துக்களை திருகுர்ஆன் 112வது அத்தியாயத் தின் 4 வசனங்கள் விவரிக்கின்றன.
அல்லாஹ்வாகிய அவன் மனிதர்களின் அரசன், மனிதர்களின் இறைவன் என்று 114வது அத்தியாயத்தில் விவரிக்கின்றான்.
இறைவன் உலகில் படைத்த உயிரினங்கள், உயிரற்றவைகள் அனைத்தின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கிலிருந்தும், மந்திரித்து ஊதும் தீங்குகளிலிருந்தும், பொறாமைக்காரன் பொறாமைப்படும் போது உண்டாகும் தீங்குகளிலிருந்தும் அவனிடமே பாதுகாவல் தேடு மாறு 113வது அத்தியாயத்திலும், தேவையான அனைத்தையுமே அவனிடமே கேட்டுப் பெற்றுக் கொள்ளும்படி 2:186 வசனத்திலும் தெரிவித்துள்ளான்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அவன் தனக்குத்தானே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவன். அழியாமல் என் றும் நிலைத்திருப்பவன், அவன் இறந்துவிடக் கூடியவன் அல்ல. அவனுக்கு உறக்கமோ, அசதியோ, களைப்போ ஏற்படுவதில்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவைகள், அவனுக்கு உரியன. உலகம் அழிக்கப்பட்டு மரித்தவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு விசாரணைக்காக கொண்டு வரப்படும் நாளில் அவனது அனுமதியின்றி அவனிடம் எவரும் பரிந்துரை செய்து விடமுடியாது.
உலகம் படைக்கப்படுவதற்கு முன்னுள்ள நிலையை யும், படைக்கப்பட்ட பின் உள்ள நிலையை யும் அவன்தான் நன்கறிந்தவன், அத்தனை நவீன கண்டுபிடிப்புகளும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து அவன் விரும்பும் மனிதர் களுக்குக் கொடுத்தே வெளிப்படுத்துகிறான், அவன் விரும்பாதிருந்தால் எவராலும் எதையுமே தெரிந்து கொள்ள முடியாது. அவனது அரசாட்சி வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவ னுக்கு சிரமமே இல்லை என்றும் திருகுர்ஆனின் 2வது அத்தியாயத்தின் 255வது வசனத்தில் விவரிக்கிறான்.
(மனிதர்கள் ஜின்களின் நன்மை தீமைக் கேற்ப சரியான தீர்ப்பளிப்பவன் அவன்) தீர்ப்பளிபோர்களிலெல்லாம், அல்லாஹ் மிக்க மேலான நீதிபதி என்றும் 95ம் அத்தியாயத்தின் இறுதி வசனத்தில் குறிப்பிடுகிறான்.
மேலும் மறைவான விஷயங்களை மலக்குகளும், ஜின்களும், நபிமார்களும் எவரும் அறிந்து கொள்ளமுடியாது என்பதை 2:32, 34:12, 27:15, 6:50, 79:42,43 ஆகிய வசனங்களில் தெளிவுபடுத்துகிறான். மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருப்பதாகவும், அவற்றை அவனைத்தவிர எவருமே அறியமுடியாது என்றும், கடலிலும் கரையிலும் உள்ள வற்றை அவன் மட்டுமே அறிவதாகவும், அவனுக்குத் தெரியாமல் எந்த ஒரு மரத்திலிருந்தும் எந்த ஒரு இலையும் உதிர்வதில்லை என்றும், பூமியின் ஆழத்தில் அடர்ந்த இருளில் கிடக்கும் சிறிய விதை, அந்த விதை காய்ந்ததா, பசுமையானதா என்றும் அவனது பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருகுர்ஆனின் 6வது அத்தியாயத்தின் 59வது வசனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எதை ஓதினாலும், எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், பூமியிலோ, வானங்களிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் இறைவனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை என்பதையும் சிறியதானாலும் அல்லது பெரியதானாலும் விளக்கமான அவனது புத்தகத்தில் பதிவு செய் யப்பட்டிருப்பதாகவும் 10வது அத்தியாயத்தில் 61வது வசனத்தில் விவரிக்கின்றான்.
அல்லாஹ் தான் விரும்புபவர்களுக்கு சம் பத்தை விசாலாக்குகின்றான். அளவிட்டுக் கொடுக்கின்றான் என்று 13ம் அத்தியாயத்தின் 26வது வசனத்தில் தெரிவித்துள்ளான்.
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப் பதையும் அல்லாஹ் நன்கறிவான். (சுருங்கிக் குறைவது, விரிந்து அதிகரிப்பது போன்ற) ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது என்றும், ரகசியத்தையும், பரம ரகசியத்தையும் அவன் அறிந்தவன் என்று 13வது அத்தியாயத்தின் 8,9 ஆகிய வசனங்களில் அறிவிக்கிறான். இதன் தொடர்ச்சியாக 10வது வசனத்தில், “உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது வெளிப்படையாகக் கூறினாலும் அவனுக்கு சமமே ஆகும். இரவில் ஒளிந்து கொண்டிருப்பவனும், பகலில் பகிரங்க மாக நடப்பவனும் இறைவனுக்கு சமமே என்று தெளிவுபடுத்தியுள்ளான்.
அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்பவன் எவரும் மறைவாய் இருப் பதை அறியமாட்டான். இறந்து விட்டவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள் என்றும் இறைவன் 27:65 வசனத்தில் கூறுகின்றான்.
மறுமை நாள் எப்போது வரும் என்பதை முடிவெல்லாம் இறைவனிடமே இருப்பதாக 79:42-44 வசனங்களில் அறிவிக்கின்றான்.
இறைவனுக்கு உள்ள பண்புகள் தனித் தன்மைகள் மனிதர்களுக்கும் இருப்பதாக இஸ் லாம் அல்லாத பிற மதங்கள் கருதுவதால்தான், மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை இறைவனாலும் செய்ய முடியாது என்று தங்களைப் போன்றவர்கள் எண்ணுகின்றனர். அதன் விளைவாகத்தான் தங்களுக்கு இப்படிப்பட்ட ஐயங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறாக எண்ணி செயல்படும் செயல்கள் அனைத்தையும் அதா வது இறைவனுக்கு இணையாக மற்றவைகளை உயர்த்துவதை இறைவன் மன்னிப்பதில்லை என்றும், இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மறுமையில் நரகத்தில் தள்ளப்பட்டு, அவர்கள் நரகின் எரிபொருளாக நரக நெருப்பின் வேதனைகளை நிரந்தரமாக சுவைத்துக் கொண் டிருக்கத்தான் வேண்டும் என்பதை இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் அருளிய நெறி நூலாகிய திருகுர்ஆனில் அறிவிக்கின்றான்.
இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ள அற்ப அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்ட நீங்கள் குறிப்பிடும் கம்யூட்டரின் செயல்பாடுகளைக் கண்டு அதிசயிக்கிறீர்கள். அப்படியானால் நிறைவான ஆற்றலையும், அறிவையும் பெற்ற இறைவனின் வல்லமை எந்த அளவு இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். உலகில் பிறந்து மடிந்த, இப்போது இருக்கும், பிறந்து வளரும் ஒவ்வொருவரது கைவிரல் ரேகையும் வித்தியாசப்படுகிறது. அதனால்தான் ஆட்களை அடையாளம் காண கைவிரல் ரேகையை பெரிய ஆதாரமாகக் கொள்கிறார்கள். இப்படி அதிசயிக்கத்தக்க முறையில் மனிதர்களைப் படைக்கும் இறைவனுக்கு அவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது முடியாத காரியமா என்று சிந்தியுங்கள். இறைவனின் இணையே இல்லா தனிப் பெரும் ஆற்றலை உணர்வீர்கள்.