மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

in 2022 ஆகஸ்ட்

தலையங்கம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

அமைதிப் பூங்காவாக இருக்கும் நமது தமிழ்நாடு தொடர்ந்து அதே அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்.

மதவாத கட்சியான பயங்காரவாத பாஜக சுயசிந்தனையாளர்கள் அதிகமுள்ள நமது தமிழகத்தில் இந்த அளவுக்கு காலூன்றக் காரணம் முஸ்லிம் மதவாத இயக்கங்களின் தலைவர்களேயாவர். இவர்கள் அல்குர்ஆனின் கட்டளையான 6:108 வசனத்திற்கு கட்டுப்படாமல் இந்துமதத் தலைவர்களையும் அவர்களின் தெய்வங்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும் நையாண்டிகள் செய்வதுமாய் உள்ளனர்.

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள். (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம். பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர் களுக்கு அவன் அறிவிப்பான்.  (அல்குர்ஆன்: 6:108)

இதன் காரணமாக நடுநிலையான இந்துக்கள் பயங்கரவாத பாஜகவை தீவிர மாக ஆதரிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதற்கு ஆதாரம் பாஜக நடத்தும் பொதுக் கூட்டங்களில் முன்பெல்லாம் நான்கைந்து பேர்களே காணப்படுவர்.

ஆனால் தற்போது அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரும்பான்மை இந்துக்கள் ஜாதி பாகுபாடின்றி பெருங்கூட்டமாக கூடுவதை நாம் காணலாம்.

இதற்கு முழு மூலக்காரணம் முஸ்லிம் மதவாதிகளின் ஆவேச மற்றும் வரம்பு மீறிய மேடைப் பேச்சுக்களே காரணம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வீஹிவீமூ தலைவர்களுள் ஒருவரான ரஹ்மத் துல்லாஹ்வின் வரம்பு மீறிய பேச்சின் காரணமாக சில மாதங்களுக்கு முன் தங்களின் காவல்துறை ரஹ்மத்துல்லாஹ்வை கைது செய்தது. இதன் விளைவாக இதுநாள் வரை முஸ்லிம் மதவாதத் தலைவர்கள் தங்கள் நாவுகளை கட்டுப்படுத்தத் துவங்கியுள்ள னர். அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இதேபோன்று சதாவும் பொதுமக்களிடையே வெறுப்பு அரசியலை தூண்டிக் கொண்டிருக்கும் பயங்கரவாத பாஜக தலைவர்களின் வரம்பு மீறிய பேச்சுக்களின் காரணமாகத்தான் கலவரமே உருவாகின்றது. நடுநிலையோடு ஆட்சி நடத்தும் தங்களின் அரசு அத்தகைய மதவெறுப்பு அரசியல் நடத்தும் பாஜக காரர்களின் மீதும் தங்களின் காவல்துறை நடவடிக்கை பாய்ந்தால் அவர்களும் தங்களின் நாவை அடக்கிக் கொள்வர். எப்படி இருப்பினும் (முஸ்லிம்) மதவாதிகளின் பேச்சை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனெனில் இவர்கள் தங்களின் இயக்கங்களை வளர்ப்பதற்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களிடம் இயக்க வெறியூட்டு வதற்கு எத்தகையப் பேச்சுக்களையும் மார்க்கத்தின் வரம்பை மீறி பேசத்தான் செய்வார்கள். அதைக்கொண்டு தங்கள் இயக்கங்களைத் தீவிரமாக வளர்ப்பார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை விட இயக்க வெறி மேலோங்கி இருப்பதை நாம் காண லாம். அடிக்கடி குர்ஆன், ஹதீஃத் பற்றி பேசுவார்கள். ஆனால் குர்ஆனுக்கும், நபி மொழிகளுக்கும் எதிராகத்தான் செயல்படு வார்கள். உதாரணமாக சாலை மறியலை அல்குர்ஆன் 29:29 வசனம் தடை செய்கிறது.

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறிக்கவும் செய்கின்றீர்கள், உங்களுடைய சபையிலும் வெறுக்கத் தக்கவற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேத னையைக் கொண்டு வருவீராக! என்பது தவிர வேறு எதுவுமில்லை.  (அல்குர்ஆன் 29:29)

ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.  ஆதாரம்: புகாரி:7052, நபிமொழி. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சாரி களான) எங்களிடம் எனக்குப் பிறகு (ஆட்சி யதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில வி­யங்களையும், பார்ப்பீர் கள் என்றார்கள். மக்கள், அப்போது நாங் கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே? என்று கேட்க, நபி(ஸல்) அவர் கள், (ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள், உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். புகாரி: 7052, அத்தி யாயம்: 92, குழப்பங்கள் (சோதனைகள்).

ஆனால் எங்களின் இஸ்லாமிய பெயர் தாங்கிய இயக்கவாதிகள் எதற்கெடுத்தா லும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங் கள் செய்து பொதுமக்களுக்கும், நடை பாதை பாதசாரிகளுக்கும் பெருந் தொந் தரவு செய்வதையே தங்கள் கொள்கை யாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

எனவே தமிழகத்தில் இந்துத்துவா தீவிர வாதம் ஒழிக்கப்பட்டு இந்து முஸ்லிம் சகோதரத்துவம் நிலைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெயர் தாங்கிய பிரிவு இயக் கங்களின் தலைவர்கள் தங்கள் மேடையில் வரம்பு மீறிப் பேசும்போது வீஹிவீமூ ரஹ்மத் துல்லாஹ் மீது நடவடிக்கை எடுத்தது போல் தொடர்ந்து தங்களின் காவல்துறை நட வடிக்கை எடுத்தால் மட்டுமே முஸ்லிம் மத வாத இயக்கங்களின் தலைவர்கள் கட்டுப் படுவார்கள். இந்துத்துவா தீவிரமும் கட்டுப் படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பயங்கரவாத பாஜகவின் வளர்ச்சி தானாகவே அடியோடு தடைபட்டுவிடும்!

ஏனெனில் எங்களுக்கு நாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அநீதியாக வும், அடாவடித்தனத்துடன் நடந்துகொள் ளும் மதவெறியர்களோடு எப்படி நடந்து கொள்ளவேண்டும். எப்படி வாழவேண்டும் என்பதை அல்குர்ஆன் கீழ்க்கண்ட உபதேசத்தின்படி எங்களை வழி நடத்து கின்றது. அதோடு இணக்கமாக வாழும்படி யும் கட்டளையிடுகின்றது.

இதோ அந்த அல்குர்ஆன் வசனம் :

நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்கு வோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களி லும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத் துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் 3:186)

எங்களின் எல்லாக் காரியங்களிலும் நன்மை தேடித் தரும் தீர்மானத்திற்குரிய செயலாக; அதாவது பொறுமையை மேற்கொள்ளுமாறு அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிடுகின்றான். ஆனால் எங்களின் பிரிவு இயக்கங்களின் தலைவர்கள் எங்க ளின் அப்பாவி இளைஞர்களை தூண்டி விட்டு எங்களுக்கு அல்லாஹ்வின் உதவிகள் வருவதைத் தடுக்கப்பார்க்கின்றனர். எனவே தங்கள் ஆட்சியின் மதவாத எதிர்ப்பு நட வடிக்கைகளை வரவேற்கின்றோம்! தங்க ளின் மதவாத எதிர்ப்பு ஆட்சி தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Previous post:

Next post: