தொழுகையை நிலைநிறுத்துங்கள்!

in 2022 ஆகஸ்ட்

தொழுகையை நிலைநிறுத்துங்கள்!

ஷரஹ் அலி

பொங்கு கருணையாளன் தொடர் கிருபையாளன் இறைவனின் பெயரால்!

தொழுகையை காத்துக் கொள்ளுங்கள், சிறப்பாக நடுத்தொழுகையை தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னால் முழு அடிபணிதலோடு நில்லுங்கள்! (இறைநூல்: 2:238)

யார் அஸர் தொழுகையை தொழாமல் விட்டுவிடுகிறாரோ அவருடைய குடும்பம் அவருடைய சொத்து எல்லாம் நஷ்டமடையட்டும். அதில் தரித்திரம் பிடிக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

இப்னு உமர்(ரழி), முஸ்லிம்: 1102

ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முகம்மஸ்’ என்னுமிடத்தில் எங்களுக்கு அஸர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இந்தத் தொழு கையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கி விட்டார்கள். எனவே, யார் இத் தொழு கையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸருக்குப் பின்னாலிருந்து நட்சத்திரம் தோன்றும் வரை எந்தத் தொழு கையும் இல்லை என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அபுபஸ்ரா அல் கிஃபாரி(ரழி), முஸ்லிம்: 1510.

இறைநெறிநூலில் உங்களுக்கு அருளப்பட்டது போல் ஓதி வாருங்கள்! வெட்கங்கெட்ட செயல்களை விட்டு, தடுக்கப்பட்ட தீமைகளை விட்டு காக்கத்தான் செய்கிறது தொழுகை! இறைவனை நினைவு கூறுவதோ மிக உயர்ந்தது. நீங்கள் செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்குத் தெரியும். (இறைநூல் : 29:45)

அறத்தையும், பொய்யையும் ஒன்றோடொன்று கலக்காதீர்கள். நன்றாகத் தெரிந்து கொண்டே அறத்தை மறைக்கா தீர்கள். தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத்தை வழங்குங்கள், ருகூஃ செய்பவர்களோடு இணைந்து ருகூஃ செய்யுங்கள். மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்கள். உங்கள் சொந்த விஷயத்திலோ அதனை மறந்து விடுகிறீர்கள்! இறைநூலை வாசிப்பவர்களாக இருந்து கொண்டே சிந்தித்தே பார்க்க மாட்டீர் களா?

பொறுமையின் மூலமாகவும், தொழுகையின் மூலமாகவும் உதவி தேடுங்கள். உள்ளச்சம் உடையவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் சுமையாகத் தான் இருக்கும் இது! தங்கள் இறைவனை கட்டாயம் சந்திப்போம் என்பதையும் அவனிடமே மீண்டும் செல்வோம் என்பதையும் உறுதியாக நம்புவோர் யார்? (இறை நூல்: 2:42-46)

 

Previous post:

Next post: