யாருக்கும் எதுவும் சொந்தமில்லை!

in 2022 ஆகஸ்ட்

யாருக்கும் எதுவும் சொந்தமில்லை!

இறைப்பிரியன்

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு நாய்க்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு சாமியாரின் வேண்டுகோளுக்கிணங்க இச்சம்பவம் நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந் தது தினத்தந்தி. (பகுத்தறிவுக்கு நிரந்தர சொந்தக்காரர்கள் என்று தங்களை பீற்றிக் கொள்ளும்) கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்திலேயே இது போன்ற சம் பவங்கள் நடைபெறுகிறதென்றால் சங்பரிவாரங்கள் மற்றும் அதன் கூட்டணிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒட்டுமொத்த மனித சமுதாயம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிர்பந்தத்திற்கு தொடர்ந்து ஆளாக்கப்பட் டதற்கு காரணம் சில மதவாத சக்திகளின் மூட பழக்கவழக்கங்கள். அவைகள் உருவாக காரணம் புரோகிதம்தான். ஆம் புரோகிதர்கள் எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் எல்லா மனிதரிலும் இரண்டறக் கலந்துவிட்டனர்.

இப்போது இந்தியாவில் இதுபோன்ற ஒரு விசயத்தை ஒரு முஸ்லிம் சொல்வதை முஸ்லிம் அல்லாத வேறு சமூகத்தால் அது ஜீரணிக்கப்படுவதில்லை. காரணம் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்று பரம்பரை யாக கதை அமைத்து உண்மை வரலாற்றை மறைத்து விட்டு இருக்கிறார்கள். அவர்களை கண்மூடி பின்பற்றும் அவர்களுடைய வாரிசுகள் அதே நிலையைத் தான் கையாளு கிறார்கள். நாமும் ஒரு வேளை அந்த வம்சா வழிகளில் பிறந்து இருந்தால் அப்படித்தான் இருந்திருப்போம் என்று சொல்லலாம். வல்ல இறைவனின் அளப்பெரும் கிருபையால் நாம் அவனால் கண்ணியப்படுத்தப் பட்ட இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்து விட்டோம். ஆனால் பிறந்த சமுதாயத்திற்கு நன்றி மறந்து வாழ்பவர்களாக நாம் உள்ள தால் இங்கு சிறுபான்மையினர் என்ற அவல முத்திரையோடு பறைசாற்றப்பட்டு நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளோம். இந்த நிலையில் இருந்து நமக்கு மாற்றம் தேவையாயின் முதலில் இறைவனின் அன்புக்கும், அருளுக்கும் நாம் சொந்தக்காரர்கள் ஆகவேண்டும். பிறகு இந் திய நாட்டின் உண்மை மக்கள் என்று பீற்றிக் கொள்ளும் சமூகத்தாரின் ஒரு கருத் திற்கு விளக்கம் கேட்கவேண்டும். அதாவது நம்மை வந்தேறிகள் என்று முத்திரையிட் டவர்களிடம் சுருக்கமான ஒரு கேள்வியை முன்வைப்போம்.

இந்தியாவில் இந்து மதம் தோன்றி இருக்கவேண்டும் என்று நம்புவதற்கு எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லை. ஆனால் அந்த இந்தியாவில் இதுபோன்ற சாணக்கியங்களை ஏற்று வாழ்பவர்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற உரிமையை இறைவன் இவர்களுக்கு மட்டும் வழங்கி விட்டனவா? என்பதுதான் அக்கேள்வி, அதை ஏற்காதவர்கள் வந்தேறிகள் என்று கூறுபவர்களை விட நம் சமுதாயத்தில் உள்ள சிலரும் (மார்க்க அறிஞர்கள் உட்பட இது போன்ற கருத்தில் உள்ளதையும் காண முடிகிறது. ஆம் நமது தாத்தாவுக்கு தாத்தா, பாட்டிக்குப் பாட்டி கூட ஒரு காலத்தில் இந்துவாகத் தான் இருந்திருப்பார்கள். நாம் தான் இன்று மாறி உள்ளோம் என்கிறார்கள். மற்றபடி ஆதி மனிதன் ஆதம் முஸ்லிம். அதாவது இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்த அவரது மக்களும் முஸ்லிமாகத்தான் பிறந்தார்கள். ஒரே தெய்வ வழிபாட்டையுடையவர்களா கத்தான் இருந்தார்கள். இறைவனால் சபிக்கப்பட்ட ஷைத்தான் ஆதத்தின் மக்களை நரகில் கொண்டு சேர்ப்பதற்காக, ஒரே தெய் வத்தை வணங்கிக் கொண்டிருந்த அவர்க ளுக்கு ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்து பல தெய்வங்களை வணங்கி இறை வனுக்கு இணை வைக்கும் கொடிய பாவத் தைச் செய்ய வைத்துள்ளான். இப்படி இவர் களே சொல்லும்போது மாற்று மதத்தார் என்ன நினைப்பார்கள்? இந்து மதம்தான் பூர்வீக மதம் போல என்று அங்கலாய்த்துக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடு கிறார்கள்.

உலகத்தைப் படைத்த இறைவன் முதன் முதலில் மனிதனை படைக்கும் போது மண்ணால் படைத்ததாக அவனு டைய இறுதி நெறிநூலில் பல இடங்களில் சாட்சி பகர்கிறான். ஆனால் இந்த மதவாத கொள்கைகளுக்கு சொந்தக்காரர் இந்துமத தர்மம் நெற்றியிலிருந்தும் மார்பிலிருந்தும் வயிற்றிலிருந்தும், கால்களில் இருந்தும் பிறந்தார்கள் என்று சொல்லிக்கொண்டு மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் என்கிறார்கள். பூமியைத் தாய் என்கிறார் கள். இன்னும் கொஞ்சம் மேலே போய் மாட்டையும் தெய்வமாக வணங்க வேண் டும் என்கிறார்கள். ஏக தெய்வ கொள் கைக்கு இடமின்றி எண்ணற்ற தெய்வங் களை வழிபடுகின்றனர். கொஞ்ச காலத்திற்கு முன் மனிதன் குரங்கிலிருந்து பிறக்க வில்லை என்று விஞ்ஞான ஆராய்ச்சி செய்து, விண் கற்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை ஒன்று உரசி வெளிவந்த துகள்களால் தான் மனிதன் தோன்றியிருக்கலாம் என்றும் உளறியிருக்கிறார்கள். இன்று ஒவ்வொரு கருத்துடையோராய் வாழ்ந்து வருவோரையும் பிறப்பிலேயே பிரிவினை செய்து விட்டிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன சொல்லி சந்தோஷமடையப் போகிறார்கள் என்று உலகம் அழியும் வரைப் பார்க்கலாம்.

ஆக இதுபோன்ற நிலையில்லாத, நிரந்தரமில்லாத, நித்தம் நித்தம் ஒரு காரணங்களைக் கூறி வரும் இந்து(மத) சமய சந்தர்ப்ப மதவாதிகள் இதுபோன்ற ஐயங் களுக்கு என்ன தெளிவைக் கொண்டுள்ளார்கள்? தினம் தினம் ஒரு சாமியார் தோன்றிக் கொண்டிருக்கிறார். அவர்களின் அதிசயங்கள் ஒரு புறமிருக்க, தினம் தினம் ஒரு சாமி யார் உள்ளே போய் சிறைவாசம் அனுபவிப்பது போன்ற ஆச்சரியங்கள் இன்னொரு புறம் அரங்கேறி வருவதையும் பார்க்க முடிகிறது. மனிதனைப் புனிதனாக நினைக் கலாம். ஆனால் தெய்வமாக ஆக்கி விடக் கூடாது. அப்படி ஆக்கிவிட்டால் அவரும் தெய்வப் பட்டியலில் இடம் பெற்று விடுகிறார். இப்போது இந்து சமய சந்தர்ப்ப மத வாதிகளின் தெய்வங்கள் எத்தனை இருக் கிறது? இன்னும் எத்தனை எண்ணிக்கை வரப் போகிறது? என்று கடவுளை ஏற்கும் ஆத்திகனும் சொல்ல முடியாது. கடவுளை மறுக்கும் நாத்திகனும் சொல்ல முடியாது. அவர்களுடைய வேதத்திலும் சொல்ல முடி யாது. ஏன் அந்தத் தெய்வங்களாலும் சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனி தனை மனிதனாக நினைத்து மனித நேயத்தின்படி அந்தக் கடவுளின் புனிதத் தன்மையை நாட அறைக்கூவல் விடுத்து, எல்லா மக்களும் எல்லா நன்மைகளையும் அடைய அழைக்கும் இஸ்லாத்தை நடுநிலையோடு அணுகிப் பாருங்கள்.

“(மேலும்) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது” அல்குர்ஆன் 7:56

எனவே இஸ்லாத்தை தெரிந்துக் கொண்டால், உலகம் எப்படிப்பட்டது? உலகம் யாருக்குச் சொந்தமானது? அதில் உள்ள ஒவ்வொரு நாடுகள் யாருக்குச்சொந்தமானது? இஸ்லாமிய சமுதாயம் தோன்றி 1444 ஆண்டுகள் தான் ஆகிறதா? இல்லை 2000 ஆண்டுகள் தான் ஆகிறதா? அதற்கு முன்னர் எத் தனை ஆண்டுகள் சுமாராக இருந்திருக்கும்? எத்தனை சமூகங்கள் அழிக்கப்பட்டன? எப்போது உலகம் அழியும்? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். ஏன் இப்படி எல்லாம் ஆக வெண்டும்? முதற்கண் ஏன் நாம் படைக்கப்பட வேண்டும்? என்ற தலையாய கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

அந்தக் கேள்வியே சரியில்லை, கடவுள் என்று யாரும் இல்லை என்று சொல்பவன் நாத்திகன். ஆனால் அந்தக் கேள்வியையும் ஏற்று அதன் பதிலையும் ஏற்று கடவுளை பல வாறாக கற்பனைச் செய்து பல மாதிரியாக வணங்குபவன் ஆத்திகனாகி விடுகிறான். ஆனால் அக்கடவுள் தன்னை ஏற்பவனுக் கும், ஏற்றுக் கொள்ளாதவனுக்கும் உண வளிக்கிறான். அவன் படைத்த உலகத்தில் வாழ இடம் கொடுக்கிறான்; மழை தருகி றான்; காய்ந்துக் கொள்ள வெயில் தருகி றான்; அவனுக்கும் எல்லாப் புலன்களையும் கொடுக்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்து கிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற் றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ். எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?”

“அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவை யாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பா டாகும்.

“அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். (அல்குர்ஆன் 6:95-97)

இறைவனின் தன்மை என்றால் இப்படி யல்லவா இருக்கவேண்டும். அவனது ஆட்சி அதிகாரம் என்றால் அது இப்படியல்லவா இருக்கவேண்டும். மனிதன் என்னதான் நினைத்தாலும் கடவுளின் எந்தச் சக்தியையும் அணுவளவும் அடைய முடியாது. அடைந்து விட்டதாகக் கூறுவதும் வெறும் மாயைதான். அப்படிக் கூறும் ஒருவர் சில நாட்களில் உள்ளே போகக் கூடியவராகவே இருப்பார்.

எனவே அனைத்து மத சகோதர நண்பர்களே, இந்தியா மட்டுமல்ல எந்த நாடும் யாருக்கும் சொந்தமில்லை. மனிதன் இளைப்பாற தங்கி விட்டுப்போகும் ஒரு யாசகச் சாலைதான் இந்த உலகம். அதனை கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம் என்றெல்லாம் தனது அதிகார தேவைகளுக்காகத்தான் மனிதன் ஆக்கிக் கொண்டான். பல்லாண்டுகளாக வாழ்ந்து அரசாட்சிப் புரிந்த மன்னர்கள், ஆங்காங்கே படையயடுத்ததின் காரணமாக அவனைச் சார்ந்த பேரரசு, சிற்றரசு போன்ற பிரிவுகள் அந்தக் காலத்தில் தோன்றின.

“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷ´ன் மீது தன் ஆட்சியை அமைத்தான். அவனே இரவைக்கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை விரைவாகப் பின்தொடர் கின்றது; இன்னும் சூரியனையும், சந்திர னையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமில்லையா? அகிலங்களுக் கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுள்ள வன்”. (அல்குர்ஆன் 7:54)

நிலம், நீர் இருபெரும் பிரிவுகள் என் றுள்ள பூமியில் 79% நீர்ப்பரப்பு, 21% தான் நிலப்பரப்பாகும். அதில் தான் எல்லா மக்களும் வாழ்ந்து வருகிறோம். இந்த 21%ல் இருக்கும் மக்கள் எல்லை மீறி அநியாயங் கள் புரியும்போது 79% தண்ணீரிலிருந்து கொஞ்சம் வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற அபாயங்களை எழுப்பித்தான் ஒருவன் சகலத்தையும் பார்த்துக் கொண்டி ருப்பதாக ஞாபகமூட்டுகிறான் இறைவன். இவற்றால் கெட்டவனும் சாகிறான், நல்ல வனும் சாகிறான். அதனால் கெட்டவனுக் குத்தான் சாவு, நல்லவனுக்கு இல்லை என்று கூட சொல்லமுடியாது.

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச் சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர் கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனாலும் பொறு மையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!”    அல்குர்ஆன் 2:155

மனிதன் தான் கண்டுபிடித்துக் கொண்டதாகப் பீற்றிக் கொள்ளும் விஞ்ஞானம் கூட இறைவனது செயல்பாடுதான். இறைவன் தந்த அறிவுப் பொக்கிஷத்தை மறுத்து தன் சுய அறிவாலேயே தானே கண்டுபிடித்ததாக வைத்துக் கொண்டாலும் அவற்றால் வரும் ஆபத்துக்களிலிருந்து மனிதனால் தப்பிக்க முடியுமா? முடியாது. சாவிலிருந்து தப்பிக்க எந்த விஞ்ஞானம் வந்துள்ளது? அது வராது. வாகனங்களைக் கண்டுபிடித்தான். அவற்றின் விபத்துகள் ஏராளம், ஏராளம். துரிதமாகப் போக விமானம் கண்டுபிடித்தான் அதன் விபத்துக்களும் ஏராளம், ஏராளம், அடுப்பை எடுத்துக்கொண்டால் மண்ணெண்ணை ஸ்டவ் அபாயகரமாக உள்ளது. அதன்பின் கேஸ் வந்தது. அது அதனை விட அபாயகரமாக உள்ளது. அதன் பின் எலக்ட்ரிக் ஸ்டவ் வந்தது; அது அதனை விடவும் அபாயகரமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றையும் மனிதன் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறான். அதனால் ஆபத்து வரும் என்று தெரிந்தே தான் உபயோகிக்கிறோம். உடனே செத்துப் போய் விடுவதுமில்லை. இப்படி நிலையில்லாத உலக வாழ்க்கையில் நிரந்தர மற்ற சூழ்நிலையைப் பார்க்க முடிகிறது.

புயல், வெள்ளம், நிலநடுக்கத்தை எந்த நாட்டில் எந்த ஊரியில் தடுத்துள்ளார்கள்? தடுக்க முடியாது. எல்லாம் முடிந்தவுடன் அதற்கான நிவாரணம்தான் செய்ய முடி யும். எல்லா மக்களும் எதோ ஒரு நாளில் “அழிக்கப்பட போகிறோம். எனவே புழு பூச்சிகளின் வம்சம் எப்படி பெருகி விட்டதோ, விலங்கினங்கள், பறவைகள், தாவர இனங்கள் போன்ற எல்லா உயிரினங்களின் வளர்ச்சி எப்படி பெருகுகிறதோ அப்படித் தான் இனப்பெருக்கம் முறையால் மனித இனமும் பெருகிக் கொண்டு வருகிறது. பெருகிக் கொண்டு வரும். எப்படி இறப்பைத் தடுக்க யாராலும் முடியாதோ, அது போல் பிறப்பைத் தடுக்க யாராலும் முடியாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் என்று முயற்சி எடுத்தால், அது வீணாகிப் போகும்.

ஆம். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் தொகை எண் ணிக்கையும் அதனைத் தடுக்க அவர்கள் எடுத்த முயற்சிகளும், நம் கண் முன் தெரிகிறது. எய்ட்ஸ் தடுக்க வேண்டிய ஒன்று என்று அதனைக் கட்டுப்படுத்த முயற்சி செய்த பிறகுதான் எய்ட்ஸ் நோயாளிகள் பெருகி உள்ளனர். கொலைக் கொள்ளையைத் தடுக்க எத்தனையோ கடும் தண்டனைகள் வந்த பிறகுதான் அனைத்தும் பெருகி ஊழலும் மலிந்து கிடக்கிறது. அதேபோன்று குறிப்பிட்ட சமுதாய மக்களை அவர்களின் நேரிய மார்க்கத்திலிருந்து தவறச் செய்ய யார் எந்த முயற்சி எடுத்தாலும் அது வீணா கித்தான் போகும்.

எனவே இறைவனின் திருப்பொருத் தத்தை அடைய அவன் கூறும் வழிமுறைப்படி அவனை வணங்கி நமது சக்திக்கு மிகவும் அப்பாற்பட்ட அவனது சட்டத் திட்டங்களுக்கு இடம் கொடுத்து அவன் தடுத்துள்ளதை விட்டு விலகி ஆகுமானதாக்கியுள்ளதை மட்டும் ஏற்று, அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் அடிபணிந்து (ஒருதாய்) மக்களாகி விட எல்லா நாட்டு மக்களும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இறைவனின் அன்பைப் பெற அன்பைப் பெற்ற தூய மக்களாக நாம் அனைவரும் ஆகமுடியும். இல்லையேல் ஒருவரை யயாருவர் அடித்துக் கொண்டு கலவரங்களில் பழி தீர்க்கப்படுபவர்களாய் நாம் ஆக வேண்டியது தான். இறைவன் யாவரையும் பாதுகாக்க போதுமானவன்.

“மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும், நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை. அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான். பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதார மற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” அல்குர்ஆன் 6:115,116

“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட் டான். (இறை) நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை யயன்பதை அறிவார்கள்; ஆனால்(இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “”இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகி றார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப்படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர(வேறு யாரை யும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்கு வதில்லை” . அல்குர்ஆன் 2:26

Previous post:

Next post: