கடவுள்!

in 2022 செப்டம்பர்

கடவுள்!

N. அலி, கல்லிடைக்குறிச்சி

கடவுள் என்றாலே கட+வுள்=கடவுள். அதாவது இங்குள்ள அமைப்பை கடந்த வன். இவ்வுலகத்திலுள்ள யாதொன் றோடும் ஒப்பிட முடியாதவன். இவ்வுலகத் தின் அமைப்பை கடந்தவன். இவ்வுலகத் தின் அமைப்பையும் அதற்கான விதிமுறை களையும் வகுத்தவன் வழிகாட்டியவன். ஆனால் நாம் நடைமுறையில் கண்டு வருவது என்ன? கத்தரிக்காய் விலையில் “கறார்’ பேசும் நம்மவர்கள் கடவுள் வி­யத்தில் ரொம்பவும் தாராளமாக நடந்து கொள் கிறார்கள். இவ்வுலகத்தில் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ அதிக உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதிகபட்ச மதிப்பு கொடுக்க வேண்டுமானால் இந்த மனிதர்களுக்கு ஆக மலிவாக கிடைப்பது கடவுள் பட்டமே! கடவுள் என்றால் இந்த மனிதர்களுக்கு அவர்களுடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் முளைக்கும் கிள்ளுக்கீரைகள் போலும். யாருக்கு வேண் டுமானாலும் அள்ளிக் கொடுக்கிறார்கள். கடவுளின் வி­யத்தில் மனிதர்கள் கடவுளின் தகுதியையும் மதிப்பையும் சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இதற்கு இன்றைய மனிதர்களின் கடவுள் கொள்கையே போதுமான சான்றாகும். அன்றா டம் பெருகி வரும் மனிதர்களால் உருவாக் கப்படும் கடவுள்களும், மனிதர்களால் கடவுள் பட்டம் கொடுக்கப்பட்ட மனிதக் கடவுள்களும் இதற்கு சாட்சி. கடவுள் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிட் டனர். ஆன்மீகத்திற்கும், ஆன்மீகவாதிக ளுக்கும் கண்ணியம் கொடுக்கிறோம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக மனிதர்கள் தங்களின் அறிவுக் கண்ணை குருடாக்கி கொள்கின்றனர். மனிதர்களின் கண் “”கண்டதெல்லாம்” கடவுள். அவர்களின் மனம் கொண்டதெல்லாம் கடவுள் கொள்கை மனிதர்களின் இந்த நிலைப்பாடே நாத்தீ கம் உருவாக காரணமாயிற்று. கடவுளை நம்புகிறோம் என்ற பெயரில் கண் “”கண்ட தெல்லாம்” கடவுள் என்றார்கள். நாத்திகர் கள் இவர்கள் காட்டிய கடவுளையயல்லாம் பார்த்துவிட்டு இதுவெல்லாம் மனிதர்களை விட ஆக மட்டமாக இருக்கிறது. இதுவா மனிதர்களைப் படைத்தது? இல்லை. இது வெல்லாம் கடவுள் இல்லை என்பதோடு நின்றுவிடாமல் ஒரேயடியாக கடவுளே இல்லை என்று சொல்லி இவர்களும் தங்க ளின் அறிவுக் கண்ணை குருடாக்கி கொள்கின்றனர்.

கடவுளை நம்புகிறோம் என்ற பெயரில் கண் கண்டதையயல்லாம் கடவுள் என்றனர் ஆத்திகர்கள், கடவுளை கண் ணால் கண்டால் ஏற்பேன் என்கிறார்கள் நாத்திகர்கள், இரு சாராருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இரு சாராரும் ஒரே மூட நம்பிக்கையில் ஒன்றுபடுகின்ற னர். அது இதுதான் இவ்வுலகத்தில் மனித கண்களால் கடவுளைக் காணமுடியும் என்ற நம்பிக்கையே அது. இந்த நம்பிக்கையே கடவுள் இல்லாததை கடவுள் ஆக்கியது இந்த நம்பிக்கையே கடவுளே இல்லை என்று சொல்ல வைத்து இந்த நம்பிக்கை யைத்தான் அல்குர்ஆன் அடியோடு மறுக் கின்றது பாருங்கள்.

பார்வைகள் அவனை அடைய முடி யாது. அவனோ பார்வைகள் அனைத்தை யும் அறிந்து கொள்கிறான். அவன் மிக நுட்பமானவன், மிக்க அறிந்தவன். (6:103)

மனிதனை படைத்த கடவுள் என்பவன் மனிதனை விட பெரு மடங்கு பேராற்றல் கொண்டவன். அவனை மனிதன் பார்க்க முற்பட்டால் கடவுளும் தன்னை வெளிப்படுத்த நினைத்தால் என்ன நடக்கும் என் பதை அல்குர்ஆன் பதிவு செய்கிறது. குறிப் பிட்ட நேரத்தில் மூஸா(அலை) வந்த பொழுது அவருடைய இறைவன் அவரு டன் பேசினான். மூஸா(அலை) என் இறை வனே நான் உன்னை பார்க்க வேண்டும். நீ உன்னை எனக்கு காண்பி! என்று கூறினார். (அதற்கு இறைவன்) என்னைப் பார்க்க உம்மால் முடியாது எனினும் இம்மலையை நீங்கள் பாருங்கள்! அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் என்னைக் காண்பீர்கள்! என்று கூறினான். இறைவன் அம்மலை மீது வெளிப்படவே மலை தூளாகிவிட்டது. மூஸா(அலை) திடுக் கிட்டு மூச்சையாகி விழுந்தார். மயக்கம் தெளிந்த மூஸா(அலை) இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்! நான் உன்னிடம் மன்னிப்பு கோருகின்றேன். உன்னை நம் பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மை யானவன் என்று கூறினார். (அல்குர்ஆன் 7:143)

மனிதன் கடவுளை பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் கடவுள் இவன் முன்னால் வந்து நிற்க வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள் போலும். மனிதர்களின் இந்த மனப்பான்மையை அல்குர்ஆன் அன்றைக்கே அடையாளம் காட்டுகிறது.

எங்கள் இறைவனைப் பார்க்க வேண் டாமா? என்று கூறுகின்றனர். இவர்கள் தங் களை மிகமிகப் பெரிதாக எண்ணிக் கொண்டு அளவு கடந்து (வரம்பு மீறி) விட்டனர். (அல்குர்ஆன் 25:21)

உண்மையிலேயே மனிதனுக்கு கடவுள் குறித்து அறிய ஆவலும், ஆர்வமும் இருந் தால் அவன் என்ன செய்யவேண்டும் என் பதை மனித கண்களால் கடவுளைக் காண முடியாது என்று கூறும் அல்குர்ஆனின் 6:103 வது வசனத்திற்கு அடுத்த வசனம் தெளி வாக கூறுகிறது.

உங்கள் இறைவனிடமிருந்து (அவனை அறிந்து கொள்வதற்கான) அத்தாட்சிகள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அதைக் கவனித்து) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அதை விட் டும்) கண்ணை மூடிக் கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். நான் உங்க ளைக் காப்பவன் அல்ல(என்று நபியே கூறு வீராக) (அல்குர்ஆன் 6:104)

மனித கண்களால் கடவுளைக் காண முடியாவிட்டாலும் கடவுளின் அத்தாட்சி களைப் பார்க்க முடியும். அதன் மூலம் அறி வுக் கண் கொண்டு கடவுளைக் காண முடி யும் என்று அழைப்பு விடுக்கிறது. இந்த அல் குர்ஆன் வசனம். மனிதன் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கடவு ளின் அத்தாட்சிகளை விட்டும் தன் கண் களை மூடிக் கொண்டதன் விளைவு இன் றைக்கு மனித சமூகத்தில் கடவுள் இல்லா ததை கடவுள் ஆக்கும் பழக்கம், கடவுளே இல்லை என்று சொல்லும் வழக்கம் இது போன்ற அறியாமைக் கேடுகள் ஏற்பட்டு விட்டன. மனிதன் கடவுளின் அத்தாட்சி யின்பால் திரும்பினால் தான் இதுபோன்ற அறியாமைக் கேடுகள் நீங்கும். கடவுளின் அத்தாட்சிகளில் மனிதன் முதலானதாக தன்னைத் தானே நன்றாக உற்றுநோக்கிப் பார்க்கட்டும். இதோ அல்குர்ஆன் பேசுகிறது.

மனிதன் யாதொரு பொருளாகவும் இல் லாத ஒரு காலகட்டம் அவனுக்கு இருக்க வில்லையா? கலப்பு விந்துத் துளியிலிருந்து மனிதனை படைத்தோம், அவனைச் சோதிக்கும் பொருட்டு செவிப்புலனையும் பார்வைப் புலனையும் அமைத்தோம். (அல்குர்ஆன் 76:1,2)

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? (கடவுள் குறித்து) அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் தன்னுடைய படைப்பை மறந்துவிட்டு தமக்கு உதார ணம் கூறுகிறான். (அல்குர்ஆன் 36:77,78)

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப் பதற்கு முன்பாக இல்லாமை என்ற ஒரு கால கட்டம் இருக்கிறது. இல்லாமையிலிருந்து வந்த இந்த மனிதன் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிட்டு கடவுளே இல்லை என்று பகிரங்கமாக தர்க்கம் செய்கிறான். (பார்க்க 16:4)

அதனால்தான் அல்குர்ஆன் கடவுளுக்கு இல்லாமை என்பது இல்லை (பார்க்க 57:3) மனிதனே உன்மீது தான் இல்லாமை என்ற ஒரு காலம் கடந்திருக்கிறது. அதன் பிறகு நீ எப்படி படைக்கப்பட்டிருக்கிறாய் என்பது குறித்து சிந்தித்துப் பார்! உனக்கு செவிப்புலனும், பார்வைப் புலனும் கொடுக்கப்பட்டி ருப்பது பற்றி சிந்தித்துப் பார் என்று அல்குர் ஆன் நினைவூட்டுகிறது. அது மட்டுமல்ல மனிதன் மரணத்தின் மூலம் மீண்டும் இல்லாமை என்ற நிலையை அடையவிருக்கி றான். அதற்கு முன் அல்குர்ஆனின் பக்கம் உன் கண்களைத் திருப்பி பெரும் கேட்டிலிருந்து உன்னை பாதுகாத்துக் கொள் என்று அல்குர்ஆன் அழைக்கிறது. (6:104)

அடுத்து மனிதன் வாழும் பூமியைப் பற் றியும் அதற்கு மேல் உள்ள வானத்தைப் பற் றியும் அல்குர்ஆன் சிந்திக்க சொல்கிறது. வானங்களையும், பூமியையும் படைத் திருப்பதிலும், இரவு, பகல் மாறி, மாறி வரு வதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களிலும், பூமியிலும் எவ்வ ளவோ சான்றுகள் உள்ளன. அவற்றை புறக் கணித்தவர்களாகவே கடந்து செல்கின்ற னர். (12:105)

வானம், பூமி, நேர்த்தியாக படைக்கப் பட்டிருப்பதிலும், அதில் இரவு, பகல் மாறி மாறி வரும் விதமாக அமைக்கப்பட்டிருப்ப திலும் அறிவுடைய மக்களுக்கு கடவுளை அறிந்து கொள்ள தக்க சான்றுகள் உள்ளன என்று அல்குர்ஆன் கூறுகிறது.

கடவுள் வி­யத்தில் கண்ணால் கண் டால் தான் கடவுளை ஏற்பேன் என்று அடம் பிடிக்கும் நாத்திகர்கள் அறிவியல் வி­யத்தில் கண்ணை நம்பாமல் அறிவை ஏற்கிறார்கள். நாத்திகர்கள் பெரிதும் நம்பும் அறிவியலை, அதை கண்டுபிடித்தவர்களை இவர்கள் கண்ணால் பார்த்ததில்லை, அவர்கள் கண்டுபிடிக்கும் போது நாத்திகர்கள் அவர்களின் பக்கத்திலிருந்து கண் கொண்டு பார்க்கவில்லை இந்நிலையில் அறிவியலாளர்கள் குறித்தும் அவர்கள் கண்டுபிடித்தவைகள் குறித்தும் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அதை ஏற்கிறார்கள் அறிவியல் வி­யத்தில் கண்ணால் பார்த்தால் தான் ஏற்பேன் என்று சொன்னால் நாத்திகர்களின் உண்மையான பகுத் தறிவு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும். அதனால் இங்கு எல்லாம் கண்ணை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் விஞ்ஞானம் என்று சொல்லி வியக்க வைப்பார்கள். ஆகாயத்தில் பல பால் வெளிகள் இருப்பதாக அறிவியல் சொல்கின்றது. ஆனால் யாரும் பார்த்ததில்லை, வானத்தில் பல கோள்கள் சுற்று கின்றன என்று அறிவியல் சொல்கிறது. ஆனால் கண்ணால் யாரும் பார்த்ததில்லை. அவ் வளவு ஏன்? பூமி சுற்றுகிறது என்று அறிவியல் சொல்கிறது. அதில் வாழும் நம்மால் கண்ணால் பார்த்து உறுதி செய்ய முடியவில்லை.

அறிவியல் கூறும் பெருங்கொண்ட உண்மைகள் கண்ணால் பார்த்து உறுதி செய்ய முடியாதவை அறிவின் துணை கொண்டும் சில கருவிகளின் துணை கொண்டு மட்டுமே உறுதி செய்ய முடியும். இங்கு எல்லாம் கண்ணால் பார்த்து தான் ஏற்பேன் என்று சொன்னால் நாத்திகர்கள் முதலாவதாக அறிவியலைத்தான் இல்லை என்று மறுக்கவேண்டும். ஆனால் இவர்களோ கடவுளின் அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுகின்ற அறிவியலை ஏற்றுக் கொண்டு அதற்குச் சொந்தக்காரனான கட வுளை இல்லை என்கிறார்கள். என்னே பகுத்தறிவு! வானத்திலும், பூமியிலும் மறைந்திருக்கும் அறிவியல் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆறறிவு மனிதர் களை விஞ்ஞானிகள் என்று வியக்குக்கிறார்கள். ஆனால் அந்த விஞ்ஞானத்தின் பின்னால் எந்த பேரறிவும், பேராற்றலும் இல்லை அவை எல்லாம் “தானாக’ அப்படி அமைந்துவிட்டது என்று சொல்வதின் மூலம் விஞ்ஞானத்தை “வெற்று’ ஞானமாக்கி நம்மை வியக்க வைக்கிறார்கள். இவர்களிடம் போய் ஒரு குண்டூசியைக் காண்பித்து இது “தானாக’ வந்துவிட்டது என்று கூறினால் நம்புவார்களா? ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காரணம்! அந்த குண்டூசிக்குப் பின்னால் மனித அறிவும், ஆற்றலும் இருக்கிறது. அப்படியானால் மிக பிரமாண்டமான வியக்க வைக்கும் இவ்வுலக அமைப்புகளுக் குப் பின்னால் எந்த பேரறிவும் பேராற்றலும் இல்லை. அவை “தானாக’ அமைந்துவிட்டது என்பதை இவர்களின் பகுத்தறிவு எப்படி ஏற்றுக்கொள்கிறது? இது அவர்களுக்கே வெளிச்சம். இறுதியாக ஒரு வி­யம் நீங்கள் கண்டதையும் கடவுள் என்று நம்பும் ஆத்தி கராக இருந்தாலும் சரி! அல்லது கடவுளே இல்லை என்று மறுக்கும் நாத்திகராக இருந்தாலும் சரி! உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் அல்குர்ஆனின் பக்கம் உங் கள் கண்களைத் திருப்புங்கள்.

அந்த அல்குர்ஆன் கடவுள் குறித்து சரி யான சிந்தனையை ஏற்படுத்தும். கடவுளின் தகுதியையும், கண்ணியத்தையும் சரியான முறையில் அடையாளம் காட்டும். இதற்கு ஒரு உதாரணம். பெரியார்தாசன் மிக தீவிர நாத்திகர் என்பதால் பெரியாரின் அடிமை என்று பெயர் மாற்றிக் கொண்டவர் தன்னு டைய சொந்த முயற்சியில் அல்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பைப் பெற்று சில ஆண்டு காலம் தீவிர ஆராய்ச்சி செய்து இறுதியாக கடவுளை அறிந்துகொண்டு கடவுளின் அடிமையாக (அப்துல்லாஹ்) தன்னை மாற்றிக் கொண்டார். அதுபோல் உங்கள் வாழ்விலும் மாற்றம் வரலாம். கடவுள் அருள் புரியட்டும். அல்லாஹ் ஒருவன் என நபியே கூறுவீராக! அவன் எவரிடத்திலும் தேவையற்றவன், அவன் (யாரையும்) பெறவுமில்லை. (யாராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை (எதுவுமில்லை) (112:1-4)

அல்லாஹ்வுடைய (கடவுளின்) தகுதி தக்கவாறு அவனை அவர்கள் (மனிதர்கள்) கண்ணியப்படுத்தவில்லை. மறுமையில் பூமி முழுவதும் ஒரு கைப்பிடியில் இருக்கும் வானங்கள் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் (மனிதர் கள்) கடவுள் என்று கற்பனை செய்து இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன் மிகப் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன் 39:67)

Previous post:

Next post: