சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

in 2022 செப்டம்பர்

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும்

அபூஅஸீம்,
இலங்கை

ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…

அப்போது இப்ராஹீம்(அலை) அவர் களோ இமாலய பொறுமையை மேற் கொண்டவர்களாக “”ஹஸ்பியல்லாஹு வநிஃஅமல் வகீல்” எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். பொறுப்பாளர்களில் அவன் மிக்க நல்லவன் என்று சொன்னார் கள். அவர்கள் தீக்குழியினுள் வீசியயறி யப்பட்டபோது, மழைக்குப் பொறுப்பாள ரான வானவர் மழை பொழிய வேண்டு மென எனக்கு உத்தரவிடப்பட்டால், நான் உடனே மழையை அனுப்பிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா லும் அவரது கட்டளையை விட அல்லாஹ் வின் கட்டளை மிக விரைவாக இருந்தது. “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளிச்சியாக வும், இதமாகவும் ஆகிவிடு’ என்று அல்லாஹ் உத்தரவிட்டான். (அல்குர்ஆன் 21:69) அந்த நேரத்தில் பூமியில் இருந்த எந்த நெருப்பும் அணையாமல் இருக்கவில்லை. அந்த நெருப் பானது இப்ராஹிம்(அலை) அவர்களைக் கட்டியிருந்த கயிற்றை மாத்திரமே எரித்தது. (இப்னு அப்பாஸ்(ரழி) அபூஹுரைரா(ரழி) கஅபுல் அஹ்பார்(ரஹ்) சுத்தீ(ரஹ்) 21:68,89, தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 5, பக்கம் 883-887)

இன்னும் இஸ்மாயீலையும், இத்ரீஸை யும், துல்கிஃப்லையும், (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமை யாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
(அல்குர்ஆன் 21:85)

பின்னர்(அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய(வயதை அடைந்த)போது அவர் கூறி னார். “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!’ (மகன்) கூறினான். “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட் டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள். (37:102) என்றார்கள்.

எனினும் முன் சென்றவர்களில் சிலர்; எங்கள் இறைவா! எங்களுடைய பிரயா ண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக! என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். ஆகவே அவர் களை (பழங்) கதைகளாக ஆக்கிவிட்டோம். இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப் போகும்படியாய் சிதற வைத்தோம். நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத் தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்34:19)

அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகின்றான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக் கும், நிச்சயமாக இதில் பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத் தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்42:33)

புண்ணியம் என்பது உங்கள் முகங் களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுதல்தான். மேலும், பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும், செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறை யாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்று வோரும், (வறுமை இழப்பு போன்ற) துன் பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள். (அல்குர்ஆன் 2:177)

(இன்னும் அவர்கள்) பொறுமையுடை யோர்களாகவும், உண்மையாளர்களாகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோர்களாகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோர்களாகவும் இருப்பர். (அல்குர்ஆன் 3:17

நிச்சயமாக, நாம் மூஸாவை நம்மு டைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பி வைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத் தின்பால் கொண்டு வரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினை வூட்டுவீராக’ என்று கட்டளையிட்டோம். நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்14:5)

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை. பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்க ளையே நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:146)

எனவே, (நபியே!) எவர்(கள்) தமது இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையி லும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உமது இரு கண்களையும் திருப்பி விடாதீர். இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிப் படாதீர். ஏனெனில் அவன் தனது இச்சை யைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகிவிட்டது. (அல்குர்ஆன் 18:28)

இழப்பின் போது முதல் கட்டத்திலேயே பொறுமை வேண்டும் :

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அவர்கள் தமது வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், “இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம்!’ (தெரியும்) என்று கூறினார், அனஸ் (ரழி) கூறினார். அவள் ஒரு மண்ணறை அருகே தனது மகனுக்காக அழுதுகொண்டி ருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அல்லாஹ் வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு! என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், “என்னைவிட்டு விலகிச் செல் வீராக! எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற் படவில்லை. (எனவேதான் இப்படிப் பேசு கிறீர்!)என்று சொன்னாள். நபி(ஸல்) அவர் கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றார் கள். அப்போது ஒருவர் அவ்வழியே சென் றார். அவர் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார். அப்பெண், “எனக்கு அவர் யாரென்றும் தெரியாது’ எனக் கூறினாள். அம்மனிதர், “அவர்கள்தாம் இறைத்தூதர் (ஸல்) என்று சொல்ல அவள், நபி(ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. எனவே அவள் “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை’ என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள், “பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக் கொள்வதேயாகும்’ என்றார்கள். (அனஸ் இப்னு மாலிக்(ரழி) ஸாபித் அல்புனானீ (ரஹ்), புகாரி:7154,1283, 1302, முஸ்லிம்:926, ரியாளுஸ் ஸாலிஹீன்: 31)

நோயின் போதும் பொறுமை வேண்டும் :

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறி னார். இப்னு அப்பாஸ்(ரழி) என்னிடம் சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட் டார்கள். நான், “ஆம்! (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர்(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப் படுகிறேன். அப்போது எனது (உடலிலி ருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள் கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். நபி(ஸல்) அவர் கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக் கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க் கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந் தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) எனது உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ் வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக் காகப் பிரார்த்தனை செய்தார்கள். (அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்.) அப் போது நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன் அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார் என்றார்கள். (புகாரி: 5652, முஸ்லிம்: 2576, ரியாளுஸ்ஸாலிஹீன்:35)

நாணல் செடி போன்ற பொறுமை வேண்டும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். இறை நம்பிக்கையாளரின் நிலை (நாணல் போன்ற) இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று ஒருமுறை சாய்த்துவிடும், காற்று நின்றுவிட்டாலோ மறுமுறை நிமிர்ந்து நிற்கும். நயவஞ்சகர்களின் நிலையோ உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும். அல்லாஹ் தான் நாடும் போது (பலத்த காற்றடித் தாலோ முறிந்து (ஒரேயடியாக) இல்லா மலாகிவிடும். (கஅப் இப்னு மாலிக் (ரழி) அபூஹுரைரா(ரழி) புகாரி: 5643)

அழைப்புப் பணியின்போது பொறுமை கொள்ள வேண்டும் :

எனது அருமை மகனே! நீ தொழு கையை நிலைநாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. (அதனால்) உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 31:17)

மேலும், காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின் றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,சத்தி யத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக் கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை. (அல்குர்ஆன் 103:1-3)

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. (எனினும்) பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர் களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். (அல்குர்ஆன் 90:11,17)
சோதனைகளின்போது வீரமுள்ள பொறுமை வேண்டும் :

எனது அருமை மகனே! நீ தொழு கையை நிலைநாட்டுவாயாக; நன்மையை ஏவி தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; (அதனால்) உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வா யாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன்31:17)

Previous post:

Next post: