பெரும் வழிகேடுகள் மூன்று!

in 2022 செப்டம்பர்

பெரும் வழிகேடுகள் மூன்று!

தஜ்முல் ஹயாத் கான்

இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு சந்தேகம் வரும். வழிகேடுகள் மூன்று தானா? இத்தனை வழிகேடுகளைத்தான் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளானா? ஆனால் இதை படித்து முடிக்கும்போது இன்ஷா அல்லாஹ் ஓர் தெளிவு கிடைக்கும்.

நாம் அன்றாடம் தொழுகையில் ஓர் அற் புதமான வேண்டுகோளை-பிரார்த்த னையை-ஓர் துஆவை அல்லாஹ்விடத்தில் வைக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அதை கேட்கிறோம். ஏன் ஒவ்வொரு ரகா அத்திலும் கேட்கிறோம். ஓர் நாளைக்கு 20 ரகாஅத்துகள் தொழுதால், 20தடவை கேட் கிறோம். என்ன துஆ அது.

“யா அல்லாஹ் எங்களை நேரான வழி யில் நடத்துவாயாக; எவர்கள் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையவரின் வழி(யில் நடத்துவாயாக) (அது உன்) கோபத்திற்குள் ளானவர்களின் வழியல்ல; அன்றியும் வழி கேடர்களின் வழியல்ல”. அல்குர்ஆன் 1:6-7

மேற்கண்ட இந்த அற்புதமான பிரார்த் தனையை நாம் அல்லாஹ்விடத்தில் கேட்கி றோம். மேலும் இந்த பிரார்த்தனை அடங் கிய சூராவை ஓதாமல் தொழுகை கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட துஆ அது! அறிவிப்பவர்: உபாதா இப்னு சாமித்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

ஆனால் இந்த பிரார்த்தனை அல்லாஹ் வால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் இந்த சமுதாயம் ஏன் இந்த அளவிற்கு இழி வுக்கு உள்ளாகியுள்ளது.

என் அருமை சகோதர, சகோதரிகளே மிகவும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய வி­ யமாக உள்ளது. ஏனென்றால் நாம் கேட்பது மகத்தான ஒரு துஆ. எப்படிப்பட்ட துஆ என்றால் அல்லாஹ் யார் மீது அருள் புரிந் தானோ அத்தகையவர்களின் வழியில் நம்மை நடத்துமாறு கேட்கிறோம். அந்த வல்லோன் அல்லாஹ்வின் அருள் பெற்ற சமுதாயம் எப்படிப்பட்ட சமுதாயமாக இருந்திருக்கும்? அப்படிப்பட்ட வழியில் நாம் நடத்தப்பட்டிருந்தால் நம்முடைய நிலைமை இவ்வளவு மோசமாக இருக்காது. இன்று நம் சமுதாயத்தின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரிய-அனுதாபத்திற்குரிய இழிந்த நிலைமையில் உள்ளது. அல்லாஹ் இந்த துஆவிற்கு பதில் கொடுக்கின்றானா? ஓர் வி­யத்தை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். பிரார்த்தனைக்குப் பதில் கொடுப்பது அல்லாஹ்வின் சுன்னத் ஒழுக் கம். அல்லாஹ்வின் பதில் மூன்று வடிவங் களில் வெளிப்படும்.

1. வஹியின் மூலம்
2. உதிப்புக்களின் மூலம்
3. கனவுகள் மூலம்

1. வஹியின் மூலம் :

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபித்து வம் கிடையாது. எனவே இதை உரசிப் பார்ப்பதற்கு ஓர் உரைகல் கிடையாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “”எனது உம்மத்தில் பொய்யர்கள் தோன்று வார்கள். அனைவரும் தன்னை நபி என்றே வாதிப்பார்கள். இந்நிலை ஏற்படும் வரை மறுமை வராது. நான் தான் இறுதி நபி. எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது.” அறிவிப்பவர் : சஃபான்(ரழி), நூல்: திர்மிதி.
எனவே வஹியின் மூலம் சாத்திய மில்லை.

2. உதிப்புக்களின் மூலம் :

எவ்வாறு அல்லாஹ் மனதில் உதிப்புக் களை ஏற்படுத்துகின்றானோ அவ்வாறே ஷைத்தானும் மனதில் உதிப்புக்களை ஏற்படுத்துவான். எனவே இதையும் உரசிப் பார்ப்பதற்கு உரைகல் கிடையாது.

3. கனவுகள் மூலம் :

கனவும் அவ்வாறே, ஷைத்தானுடைய சூழ்ச்சியாலும் கனவுகள் ஏற்படும். பெரும் பாலானவர்கள் தர்ஹாவிற்கு செல்வது, நேர்ச்சை செய்வது, கந்தூரி விழா எடுப்பது எல்லாம் அந்த பெரியார் கனவில் வந்து இதைக் கூறினார், இந்தப் பெரியார் வந்து அதைக் கூறினார், நேர்ச்சை செய்ய சொன் னார், பாத்திஹா ஓதி கந்தூரி விழா எடுக்கச் சொன்னார் என்று கூறுவதெல்லாம் ஷைத் தானின் வேலைகள், இலகுவாக மக்களை வழிகெடுத்து விடுகின்றான். “”முஹம்மது (ஸல்) அவர்கள் உருவில் ஷைத்தான் வர முடியாது”. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்.

அப்படி என்றால் இதற்குப் பதில் எங்கே உள்ளது? எப்படி நம் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு நாம் அருள்பெற்ற அந்த சிறந்த சமுதாயத்தின் வழியில் செல்வது? அல்லாஹ் அதை அவனுடைய திருவேத மாம் குர்ஆனிலேயே குறிப்பிடுகின்றான்.

மூன்று வி­யங்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறுகின்றான். அந்த மூன்று வி­யங்கள் வழிகேட்டில் இட்டுச் செல் லும். எனவே அதை பின்பற்றி வழிகேட்டில் இருந்து கொண்டு நேர்வழியை தேடினால் எப்படி கிடைக்கும்? அந்த வழிகேடுகள் யாவை?

\1. முதலாவது வழிகேடு மனோ இச்சைகள்:

அல்லாஹ் கூறுகின்றான்.

உமக்கவர்கள் பதில் கூறவில்லையா னால், நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவ தெல்லாம் தங்களின் மனோ இச்சைகளைத் தான் என்று நீர் அறிந்து கொள்வீராக! அல் லாஹ்விடமிருந்துள்ள நேர் வழியை அன்றி தன்னுடைய மனோ இச்சையைப் பின்பற் றியவனை விடவும் மிக வழிகெட்டவன் யார்? நிச்சயமாக அல் லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத் தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். அல்குர்ஆன் 28:50

அல்லாஹ் வகுத்த வழிமுறைகளை விட்டு, அல்லது கண்டதே காட்சி கொண் டதே கோலம் எனத் திரிவது வழிகேட்டை தரும். அவ்வாறு இருப்பவர்களை விட வழி கெட்டவன் யார் என்று அல்லாஹ் கேட் கின்றான். மேலும் அவர்களை நேர்வழியில் செலுத்தமாட்டேன் என்றும் கூறுகின்றான். ஒரு வி­யத்தில் அல்லாஹ் ஒன்றைக் கூற, நம் மனம் அதற்கு முரணானதை அல்லது அதல்லாததைக் கூறும்போது, நாம் அல் லாஹ்வின் கட்டளைகள் அது நம் எண்ணத் திற்கு முரணாக அல்லது நஷ்டத்தை தருவது போல் இருந்தாலும் அதைத்தான் செய்ய வேண்டும். அது நேர்வழியை கொடுக்கும். அதுவே இல்லாமல் நம் மனம் கூறியபடி நாம் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக நடந்தோமேயா னால் அது வழிகேட்டைத்தான் பெற்றுத் தரும் என்பது சந்தேகமற உறுதியானது. இதை நடைமுறையில் உள்ள பல செயல் களின் மூலமாக விளக்கலாம். ஒருசில செயல்களை மட்டும் கூறக் கடமைப்பட் டுள்ளேன். உதாரணமாக வரதட்சணை; அல்லாஹ்வும் ரசூலும் மஹர் கொடுத்து திருமணம் செய்யச் சொல்லியிருக்க தன் மனோ இச்சைப்படி தன் பெற்றோர்கள் கூறினார்கள் எனக்கூறி அல்லாஹ்வின் ரசூலின் கட்டளைகளுக்கு மாறு செய்வது, பெற்றோர் வற்புறுத்துகிறார்கள் என்பதெல் லாம் பொய். அவர்கள் சொல்லுகின்ற எல் லாவற்றையும் ஒத்துக் கொள்வதில்லை. எவ் வளவோ நல்லது சொல்கின்றார்கள். அதை யயல்லாம் கேட்பதில்லை. என்னவோ தாய், தந்தை சொல்லை தட்டாத மகனைப் போல் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறாக வரதட்சணை வாங்கி தன் பெற்றோ ரின் மேல் பழி போடுவது, இவன் உள்ளத் தில் அந்த ஆசை (மனோ இச்சை) இல்லாமல் நடைபெறாது என்பது தெளிவு.

2. இரண்டாவது வழிகேடு :

பெரும்பான்மையை பின்பற்றுவது:

வல்ல அல்லாஹ் தன் திருமறையில் மேலும் இப்புவியிலிருப்போரில் பெரும் பாலோருக்கு (அவர்களின் கூற்றை ஒத்து) நீர் கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகத் தைத் தவிர (வேறெதையும்) அவர்கள் பின் பற்றுவதில்லை; மேலும் அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர (வேறு) இல்லை.

(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தன் வழியை விட்டும் தவறியவன் யார் என் பதை அவன் மிக்க அறிந்தவன். மேலும் நேர் வழியைப் பெற்று விட்டவர்களையும் அவன் மிக்க அறிந்தவன்” (அல்குர்ஆன் 6:116,117)

என்று பெரும்பான்மையினரை பின்பற்றுவது “வழிகேடு; அவர்கள் வழி கெடுத்து நரகில் புகச் செய்வார்கள் எனக் கூறுகின் றான். எனவே ஒரு செயல் நல்லதா, கெட் டதா அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் ஏற்றதா என உரசிப் பார்க்க பெரும்பான்மை நிச்சயமாக உரைகல் கிடையாது. அவ்வாறு பெரும்பான்மையை உரைகல்லாக எடுத்து உரசிப் பார்த்து பின்பற்றினால் அது வழிகேட்டைத்தான் தரும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தற்போது இந்த குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளையும், மட்டும் மார்க்கமாக்கிக் கொண்டு நேர்வழி பெறுங்கள் என்று கூறினால், உலகில் பெரும்பான்மையானவர்கள் இதைத் தானே செய்கிறார்கள். அதைத்தானே செய்கின்றார்கள் என்று கூறுகின்றனர். மேலும் பெரும்பான்மைக்கு மாற்றமாக நடந்தால் எங்கே நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்ற நினைப்பும் அதை விட்டு விலகாமல் இருப்பதற்கு ஒரு காரணம், அவர்களிடம் கேட்டால் அவர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வாழவேண்டும். நமக்குள் சண்டை சச்சரவு வந்துவிடும்; பிரச்சனைகள் தோன்றும் என்று கூறி பெரும்பான்மையை ஆதரிக்கின்றார்கள். இத்தனை பேர் இதனை பின்பற்றுகின்றனர்களே. அனைவருமா ஆராயாமல் போலித்தனமாக பின்பற்றுகின் றார்கள் என்ற எண்ணமே பெரும்பான்மை யினரைப் பின்பற்ற தூண்டுகிறது. ஆனால் அது அளவுகோல் அல்ல. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் ஆரம்பித்தபோது மிகச் சிறுபான்மையினரே மிகச் சொற்ப மானவர்களே அவர்களைப் பின்பற்றினர். அப்போது அவர்கள் பெரும்பான்மையை கணக்கில் கொள்ளவில்லை. எது உண்மையோ, அல்லாஹ்வினால் போதிக்கப்பட்டதோ அதுவே அளவுகோலாக இருந்தது. எனவே அல்லாஹ்வின் அருள்பெற்ற சமுதாயமாக திகழ்ந்தது. ஆனால் நம் நிலைமையோ தலைகீழ், பரிதாபம் பெரும் பான்மையை அளவுகோலாகக் கொண்டு வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறோம்.

ஆனால் மறுமை நெருங்கும் சமயத்தில் மக்கள் கூட்டங் கூட்டமாக இஸ்லாத்திற்கு வருவார்கள் என சொல்லப்படுகிறது. அப் படியானால் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராகி விடுவார்கள். இப்போது பெரும் பான்மையைப் பின்பற்றாமல் இருப்பதா? இது குர்ஆனுடைய சொல்லுக்கு முரணா? என்று ஆராய முற்படும்போது வல்ல அல்லாஹ் அந்த பெரும்பான்மையினரை நம்மை வழிகெடுக்கும் பெரும்பான்மை யினரைப் பற்றி குறிப்பிடும்போது அவர் களோ வெறும் யூகங்களையே பின்பற்று கிறார்கள். மேலும் கற்பனைகளிலே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்று கூறுகின்றான். எனவே அந்த பெரும்பான்மையினர் செய் கின்ற செயல்களை அல்லாஹ்வின், ரசூலின் கட்டளைகளோடு உரசிப் பார்த்து, தீர்மா னிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் செய்வது சுன்னத், பெரும்பான்மையினர் அதைப் பின்பற்றுகின்றார்கள் அதனால் நாம் கூடாது என்று ஒதுக்க முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை பெரும் பான்மையினர் செய்தாலும் நாமும் எடுத்து நடக்கலாம். அதற்கு மாறாக குர்ஆனுக்கு முரணாக, ஹதீதுக்கு முரணாகப் பெரும் பான்மையினர் செய்வதால் அதைச் சரி கண்டு ஏற்பது கூடாது என்பதே 6:116 வசனம் கூறும் கட்டளையாகும்.

3. மூன்றாவது வழிகேடு முன்னோர் களைப் பின்பற்றுவது :

வல்லோன் அல்லாஹ் தன் திருமறையில்:

அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப் பில் புரட்டப்படும் நாளில், நாங்கள் அல் லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! அல்லாஹ்வின் தூதருக்கும் வழிப்பட் டிருக்க வேண்டுமே! என்று கதறுவார்கள். மேலும் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கம் கீழ்ப்படிந் தோம். அவர்கள் எங்களை வழி தவறச் செய்துவிட்டார்கள். ஆகவே எங்கள் இரட் சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இரு மடங்கைக் கொடுப்பாயாக! என்றும் பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக! (என்றும் கதறுவார்கள்) அல்குர்ஆன் 33:66,67,68

கருணைக் கடலான இரட்சகன் அல் லாஹ் நாளை “மறுமையில் நடக்கவிருக்கும் ஒரு சம்பவத்தை தனது திருவேதத்தின் மூல மாக தன் அடியார்களுக்கு அறிவித்து அதன் மூலம் இம்மையிலே நல்லுணர்ச்சி பெறு மாறு கூறுகின்றான். ஆனால் கைசேதம் அதையும் கூட அறியாத நிலைமையில், புரிந்து கொள்ளாமல் அந்த பாவத்தை விட் டும் நீங்காமல் இருக்கிறோமென்றால், இதை விட நஷ்டம் என்ன இருக்கிறது?

எனவே பெரியார் சொன்னார், மகான் சொன்னார் என்று மார்க்கத்தை கூறு போட்டு அல்லாஹ்வின் கட்டளைகளை யும் அவனது தூதர் முஹம்மது(ஸல்) அவர் களின் வழிகாட்டுதலையும் விட்டு, இந்த பெரியார்களின், மகான்களின், தலைவர் களின் பேச்சையும் அவர்களின் செயல் களையும் நாம் பின்பற்றினால் நிச்சயமாக நம் முகங்கள் நரகத்தில் போட்டு புரட்டி எடுக்கப்படுவது சர்வ நிச்சயமாகும்.

நாம் கண்கூடாக இதை நம் சமுதாயத் தில் பார்க்கின்றோம். முரீது என்றும், தரீகா என்றும் பலர், கண்மூடித்தனமாக சில மகான்களை, தலைவர்களைப் போல் நடிப் பவர்கள் கையில் மார்க்கத்தை விற்றுவிட்டு, அவர்கள் சொல் செயல்களை மார்க்கமாக்கி கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் மத்ஹபுகள் என்று இமாம்களின் பெயரால் யார் யாராலோ கற்பனை செய்து வரையப்பட்ட வழிமுறையைக் கொண்டு மார்க்கத்தை கூறுபோட்டு அல்லாஹ்வுக் கும், ரசூலுக்கும் மாற்றமான கருத்துக்களை முன்னோர் செய்து வந்த ஒரே காரணத்தால் அதற்கு அங்கீகாரம் கொடுப்பவர்களே! சிறிது சிந்தித்துப் பாருங்கள். இம்மையிலும் அல்லாஹ்வின் அருளை இழந்து, நேர்வழி காட்டுதலை இழந்து மறுமையிலும் கடுமை யான வேதனைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் உங்கள் உள்ளத்தை ஆட்கொள்ள வில்லையா? நடுநிலையோடு சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுங்கள்.

இப்போது ஓர் சந்தேகம் வரலாம். முன் னோர்களைப் பின்பற்றக்கூடாது என்று சொன்னால் நபி(ஸல்) அவர்களை அவரு டைய மூதாதையர் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகின்றான், ஏன்? மூதாதையர்கள் விளக் கத்தை அல்லாஹ்வே கூறுகின்றான் கேளுங்கள்.

மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இல்லை நாங்கள் எங்களு டைய மூதாதையர்களை எதன் மீது கண் டோமோ அதையே நாங்கள் பின்பற்று வோம் எனக் கூறுகின்றனர். அவர்களு டைய மூதாதையர்கள் எதையுமே விளங்கா தவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களா கவும் இருந்தாலுமா? அல்குர்ஆன் 2:170 மேலும் காண்க 5:104

எனவே மூதாதையர்கள் கூறிய மார்க் கம் என்ற பெயரால் செய்த செயல்களை திருக்குர்ஆனைக் கொண்டும், ஹதீத்களை கொண்டும் உரசிப்பாருங்கள். எவ்வளவு முரண்பட்டு இருக்கிறது என்று கண்டு கொள்வீர்கள். முரண்படுமேயானால் அந்த செயல்கள், சொற்களை தூக்கி எறிந்துவிட்டு குர்ஆன் பக்கமும், அல்லாஹ்வின் தூதர் பக்கமும் வாருங்கள் நேர்வழி நிச்சயமாகக் கிடைக்கும்.

எனது அன்பார்ந்த அருமைச் சகோதர, சகோதரிகளே! சற்றே சிந்தித்துப் பாருங்கள்! நம் சமுதாயம் படும் அவல நிலையை நினைத்துப் பாருங்கள், இம்மையிலும் நேர் வழி கிடைக்காமல் அல்லாஹ்வின் அருள் கிடைக்காமல் மறுமையிலும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தை மேற்கொண்டு இந்த பெரும் வழிகேடுகளி லிருந்து விலகிக் கொள்ளுங்கள். அல்லாஹ் வும் அவன் தூதரும் காட்டிய சமுதாயத்தினராக ஒரு அமைப்பாக ஒரு குடையின் கீழ் வாருங்கள். அல்லாஹ்வின் அருள் பொழியும், அப்போது தான் எந்த அருள் பெற்ற சமுதாயத்தின் வழியில் நம்மை நடத்தச் சொல்லி அந்த வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகின் றோமோ அத்தகை நேர்வழியில் இன்ஷா அல்லாஹ் நாம் வழிநடத்தப்படுவோம். நிச்சயமாக அது அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்களின் வழியாக இருக் காது. வழிதவறியவர்களின் வழியாகவும் இருக்காது.

Previous post:

Next post: