இஸ்லாமிய  சமுதாயத்தின் உடனடித் தேவை!

in 2022 அக்டோபர்

இஸ்லாமிய  சமுதாயத்தின் உடனடித் தேவை!

முஸ்லிம்களாகிய நாம் எத்தகைய பயங்கரவாத பாஜக சங்கிகளானாலும் சரி! அவர்களது உண்மை சொரூபத்தை உலகறியச் செய்யும்போது அது நியாயமாக இருந்தாலும் நாம் முஸ்லிமாக இருந்துகொண்டு அதை விமர்சிக்கும்போது இயல்பாகவே முஸ்லிம்கள் மீது பகை இருக்கின்ற காரணத்தினால் அதன் விளைவு பயங்கரவாத பாஜகவுக்கே அப்பாவி இந்துக்களின் ஆதரவு அமோகமாகப் பெருகத்தான் செய்யும். அந்த அளவுக்கு ஊடகங்கள் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாமிய வெறுப்பு சங்கி களால் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

எனவே நாம் உடனடியாகக் கவனம் செலுத்தக்கூடிய வி­யம் என்னவென்றால், நான்கு மத்ஹபுகள் மற்றும் தவ்ஹீத் பிரிவு இயக்கங்களால் நமது சமுதாயம் மிகமிக பலவீனப்பட்டுப் போயிருக்கும் காரணத்தி னால் தற்போது அவசரப் பிரிவு வார்டில் சேர்க்கப்பட்டிருக்கும் நமது சமுதாயத்திற் குத் தேவையான அவசரச் சிகிச்சை இரண்டு.

அது என்னவென்றால் முதலில் நாம் கைவிட வேண்டியது பயங்கரவாத பாஜக வினரை விமர்சிப்பது அல்லது வசை பாடுவது.

நடந்துமுடிந்த தேசிய கணக்கெடுப்புக்கெதிரான போராட்டம் ஷாஹின்பாக் போராட்டம் என்ற பெயரில் நமது சமுதாய ஆண்களும், பெண்களும் மார்க்கத்தின் வரம்பை மீறி மேடைகளில் பேசிய பேச்சுக்களின் விளைவாக சகோதர அரசியல் கட்சிகளும் சகோதர மதத்தினரும் இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்குரியது! நமக்குரியதல்ல என்றெண்ணி நம்மை தனிமைப்படுத்தி விட்டுச் சென்று விட்டனர். பின்பு கொரனா நோய் வரும் வரை போராட்டங்கள் அனைத்தும் நம்மவர்களை கொண்டே மட்டும் நடந்தது.

இந்தப் போராட்டங்கள் நடக்கும் மேடையில் நமது சமுதாயத் தலைவர்களின் வீரியமான வீம்பான சவால்கள் நிறைந்த வெறும் பேச்சால் முஸ்லிம் சமுதாயம் அப்பாவி இந்துக்களின் கோபத்திற்கு ஆளானதும் மோடிக்கு ஆதரவு அதிகமானதும் மட்டும்தான் மிச்சம். இவ்வாறான மேடைப் பேச்சு அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் தடுத்த ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நாம் பொறுமையை மேற்கொள்வது மிக மிக அவசியம்!

இதோ அல்குர்ஆனின் ஆதாரம் :

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடிதரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன் : 3:186)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவித்தார் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அன்சா ரிகளான) எங்களிடம் “எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விசயங்களையும், பார்ப்பீர்கள்’ என்றார்கள். மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள். இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கி விடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ் ிடம் கேளுங்கள்’ என்றார்கள். புகாரி: 7052

அத்தியாயம்:92, குழப்பங்கள் (சோதனைகள்)

இரண்டாவது அவசரச் சிகிச்சை: நமது சமுதாயத்தைச் சேர்ந்த பாழாய்ப்போன தவ்ஹீது இயக்கங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களிடம் அல்குர்ஆன் கூறும் ஒற் றுமை பற்றிய வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் மணி மொழிகளையும் எடுத்துக் கூறுவதும் ஆகும்.

அதோடு ஒற்றுமை சம்பந்தமான அல்குர்ஆன் வசனங்களுக்கும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் உண்மையான மணி மொழிகளுக்கும் எதிராக தங்களது சுய கருத்துக்களைப் புகுத்தி திரித்துக் கூறி அப்பாவி இளைஞர்களை வழிகெடுக்கும் அல் லாஹ்வின் எதிரிகளான மத்ஹபு மற்றும் தவ் ஹீத் இயக்கங்களின் தலைவர்களும் புரோ கிதர்களுமான மவ்லவிகளை அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழி களின் ஒளியில் அவர்களை தோலுரித்து அடையாளம் காட்டு வதும்தான் நமது அவ சரம் மற்றும் அத்தியா வசிய சிகிச்சையும், பணியுமாகும்.

எனவே நமது சமுதாயக் கண்மணிகளான இளைஞர்களை நான்கு மத்ஹபுகள் மற்றும் தவ்ஹீத் பிரிவு இயக்கங்கள் போன்ற பிரிவுகளல்லாத தூய ஏகத்துவ இஸ்லாமிய மார்க்கத்தின் பால் அழைக்கும் அழைப்புப் பணியை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

நமது சமுதாய இளைஞர்கள் அனை வரும் அல்லாஹ்வின் கட்டளைப்படியும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படியும் அமைக்கப் பெற்ற அல்முஸ்லிமீன் ஜமாஅத்(ஆதாரம் : அல்குர்ஆன் 22:78, புகாரி: 3606) என்ற அடிப்படையில் பிரிவுகளற்ற ஒரே சமுதாயமாக (அல்குர்ஆன் 21:92, 3:103, 3:105) ஒன்றிணைய வேண்டும். இதுதான் தற்போதைய அவசரத் தேவையாகும்.

அடுத்து நமது சமுதாயம் கண்டிப்பாகக் கைவிட வேண்டிய விசயங்கள் இரண்டு:

ஒன்று : ஜனநாயக ரீதியான போராட்டம் என்ற பெயரில் இஸ்லாம் தடுத்த வரம்பு மீறிய மேடைப் பேச்சு!

அடுத்து சாலை மறியல்:

மேற்கண்ட இரண்டு கேடுகெட்ட செயல்களும் அல்குர்ஆனுக்கு நேர்எதிரா னது! நாம் எப்போது மேடைப் பேச்சு பேசினாலும் நளினமாகவே பேசவேண் டும்! இதுவே அல்குர்ஆனின் கட்டளையாகும். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உப தேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம் என்றும் கூறினோம். (அல்குர்ஆன் 20:44)

அடுத்து மாற்றார்களைப் போன்று கேடுகெட்ட சாலை மறியல் மற்றும் பந்த் என்ற பெயரில் கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளை நிர்ப்பந்தம் செய் வது இதுபோன்ற கேடுகெட்ட அரசிய லைக் கண்டிப்பாகக் கைவிட வேண்டும்.

இதோ அல்குர்ஆன் கட்டளை :

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? நடைபாதையை மறிக்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒரு வராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ் வின் வேதனையைக் கொண்டு வருவீராக’! என்பது தவிர வேறு எதுவுமில்லை.  (அல்குர்ஆன் 29:29)

நபி லூத்(அலை) அவர்களின் கூட்டத்தினர் மேற்கண்ட மூன்று வரம்பு மீறிய பாவங்களைச் செய்த காரணத்தினால் அந்தச் சமுதாயம் நரகத்தின் கற்களைக் கொண்டு அழிக்கப்பட்டதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்! அதே செயல் களை நாம் செய்தால் அல்லாஹ்வின் தண்டனை இஸ்லாத் தின் எதிரிகள் வடிவில் நம்மை வந்தடையவே செய்யும்! இதை யாரும் தடுக்க முடியாது.

இத்தகைய கேடுகெட்ட கலாச்சாரங்களை விட்டும் நமது சமுதாயம் விலகிக் கொண்டால் நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி நமது சமுதாயத்திற்கு கண்டிப்பாக வந்தடைவது உறுதியாகும்! எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சமுதா யத்தை ஒரே அமீரின் கீழ் இயங்கக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள் வானாக! ஆமீன்!

Previous post:

Next post: