எது பெண்ணுரிமை?

in 2022 நவம்பர்

எது பெண்ணுரிமை?

ப.அ. இம்தியாஸ் அஹ்மத்

ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை!

ஆணும் பெண்ணும் சமம்! என்று கோ­ங்களை எழுப்பும் இந்த நூற்றாண்டில் பெண்ணுரிமை என்னவென்றால்:

     ஆண் உடம்பை மறைக்கும் ஆடை அணிவதும், பெண்; தன் உடம்பை எள்ளளவு; மறைக்காத உடையை!! மிகச் சிறியதாக அணிவதும்!

     அழகிப் போட்டி என்னும் பெயரில் பெண்களை, அரை நிர்வாணம் ஆக்கி, அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக்கி தம் காமப் பசியை, கலையயன்ற போர்வையில் பெண்களை கேவலப்படுத்துவதும்;

     சோப்பு, ஷாம்பு போன்ற விளம்பரங்களில் பெண்களை மிகக் கண்ணியமாக(?) சிறப்பிப்பது தான் பெண்ணுரிமை யயனில் இந்த கேடுகெட்ட பெண் உரிமை!!! தேவைதானா? இந்த நாகரீக உலகில் பெண்கள் அடைந்த முன்னேற்றம் இதுதான்;

திருமணம் ஆகாத தாய்கள்!

தந்தையை அறியாத குழந்தைகள்!

தகர்ந்து போன குடும்பங்கள்!

தற்கொலைகள்!

பாலியல் குற்றங்கள்!

பாதிக்கப்பட்ட மனோ நிலைகள்!

மக்களை மதியற்ற மாக்களாக்கும் “இந்த’ நவநாகரீகம் பெண்களுக்குத் தேவையா? சிந்திப்பீர்!!

இந்த நெறிகெட்ட “நாகரீக’ சமுதாயம் இஸ்லாத்தின் மீது சுமத்தும் ஆதாரமற்ற பழி. “இஸ்லாம் பெண்ணுரிமையை மறுக்கிறது’ என்பதே! இது உண்மையா?

இஸ்லாத்தில் பெண் உரிமை!

இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள வானளாவிய உரிமையைப் போல் இதுவரை மட்டும் அல்ல, இனிமேலும், எந்த சமூகத்தாலும், அளிக்க முடியவே முடியாது!

பெண் குழந்தையே பேறு!

இன்றைய “நவநாகரீக’ உலகில் பெண் பிறந்தால் பாரம் எனக் கருதி பிறக்கும் முன்னும், பிறந்த பின்னும் படுகொலை செய்யும் பாதகம் பரவலாக இருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில்…

“எவருக்கேனும் ஒரு பெண் பிள்ளை இருந்து அந்தப் பெண் குழந்தையை அவர் உயிருடன் புதைக்காமலும், அவளை இழிவுபடுத்தாமலும், அவளைவிட தன் ஆண் பிள்ளையை உயர்வாக கருதாமல் இருக்கின்றாறோ, அவரை, அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். அல்ஹதீத்:அஹ்மத், ஹதீத் எண்:1957

இஸ்லாம் பெண் குழந்தை பிறந்தால் அதை பாக்கியமாக கருதவேண்டும் என வலியுறுத்துகிறது. பெண் குழந்தை, பிறந்தால் அதை பாக்கியமென வலியுறுத்துவது பெண் உரிமையா? அல்லது அவசியமற்ற நிலையில் “அபார்ஷன்’ என்ற பெயரில் பெண் சிசுக்களை கொலை செய்வது பெண்ணுரிமையா? அறிவுடையோரே! சிந்திப்பீர்!

இஸ்லாத்தில் கல்வி உரிமை!

இன்றைய “நாகரீக உலகில், ஆண் பிள்ளையை படிக்கவைக்க பணம் சேருங்கள், பெண் பிள்ளையை கல்யாணம் செய்து வைக்க பணம் சேருங்கள்! என்று அரசாங்க வங்கிகளே அழைப்பு விடுக்கின்றன.

ஆனால் உண்மை நாகரீகமாகிய இஸ்லாம், கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் (ஆண்,பெண்) கடமையாகும். ஹதீத் : பைஹகீ
என கல்வியை இருபாலாருக்கும் பொதுவாக்கி கடமையாகவும் வைத்திருக்கிறது.

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை :

பெண்களை யாரும் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது இல்லை!

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு முறை ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் தந்தை, தன்னுடைய விருப்பமின்றி திருமணம் செய்துவிட்டதாக முறையிட்டார்கள். அதற்கு இறைத் தூதர் அந்த பெண்ணுக்கு அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது, நிராகரித்திடவோ வாய்ப்பை அளித்தார்கள். அல்ஹதீத், அஹ்மத், ஹதீத் எண்: 2469

ஆணே வரதட்சணை கொடுக்க வேண்டும்!

இஸ்லாம், பிற சமுதாயத்தினர் செய்வது போல் பெண்ணிடம் வரதட்சணை வாங்குவதை உறுதியாக தடை செய்துள்ளது. அதற்கு மாறாக, ஆண்தான் “மஹர்’ எனும் வரதட்சணை தந்து மணக்க வேண்டும். அந்த “மஹர்’ பணத்தை அவள் ஒருபோதும் தன் கணவனுக்கோ, மகனுக்கோ கொடுக்க வேண்டியதில்லை.

“மேலும் பெண்களுக்கு அவர்களுக்கு உரிய மஹரை (கடமை எனக் கருதி) மனம் உவந்து அளித்து விடுங்கள்!’ அல்குர்ஆன் 4:4

கணவன்-மனைவி இடையே பாகுபாடு இல்லை !

“அவர்கள் (உங்கள் மனைவியர்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’. அல்குர்ஆன் 2:187

ஆடை எவ்வாறு மானத்தை மறைத்து அணிபவருக்கு கண்ணியத்தையும் அளிக்கிறதோ அதேபோன்று மனைவியும், கணவனும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பும் கண்ணியமும் அளிப்பவர்களாக இருக்கின்றனர்.

இஸ்லாம் எவ்வாறு ஒரு ஆண். பெண்ணை விவாகரத்து செய்யும் உரிமையைத் தந்துள்ளதோ, அதேபோல் ஒரு பெண் தன் கணவனை “குலாஃ’ எனும் விவாகரத்து செய்யவும் இஸ்லாம் உரிமை அளிக்கிறது.

பெண்களுக்கு சொத்துரிமை :

“நாகரீக’ ஐரோப்பாவில் இருநூறு வருடங்களுக்கு முன்பு வரை பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்னரே பெண்களுக்கு சொத்துரிமையைக் கொடுத்து சிறப்பித்த சீரிய மார்க்கம் இஸ்லாம்!

பெண்களுக்கு சம்பாதிக்க உரிமை அளித்து அவர்களுடைய பணத்தின் உரிமை, அவர்களுக்கே என பொருளாதார சுதந்தி ரம் அளித்த முதல் மார்க்கம் இஸ்லாம்.

மேற்கண்டவற்றில் இருந்து இஸ்லாம் பெண்களின் நிலையை பெண் உரிமையை மிகவும் சிறந்த முறையில் மேம்படுத்தி பெண்களுக்கு சமுதாயத்தில் மரியாதையையும் நீதியையும், பாதுகாப்பையும் அளித்திருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை அறிவுடையோர் யாரும் மறுக்கவே முடியாது!

மேல்நாடுகளாகிய ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்குக் காரணம் இஸ்லாம் அளிக்கும் பெண்ணுரிமையே!

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை அளிப்பதில்லை என்பது போன்ற ஆதாரமற்ற பொய்ப்பிரச்சாரங்களை இனியும் நாம் எதிர்கொண்டு முறியடிப்பதில் ஆண்களை விட பெண்களாகிய நீங்கள் பங்கேற்பது உங்களுடைய தலையாய கடமை மட்டுமின்றி உங்கள் உரிமையும் ஆகும்.

உண்மையான பெண்ணுரிமை காக்க உறுதியுடன் முன்வாருங்கள்!

“சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்’ d அல்குர்ஆன் 17:81

Previous post:

Next post: