ஓதுவோம் வழிகாட்டும் இறைநூலை! நாமறிந்த மொழிகளில்!

in 2022 டிசம்பர்

ஓதுவோம் வழிகாட்டும் இறைநூலை! நாமறிந்த மொழிகளில்!

அமீத் அலி, சேலம்.

எதை எதையோ வேதமென (நெறி நூலான) சுமந்து திரியும் மானுட உறவுகள் மத்தியில் சத்திய நெறிநூல் அல்குர்ஆன் பொக்கி­மாய் உன்னிடம் இருந்தும், ஓதத் தெரியாதே, நேரமில்லையே என தன்னையே ஏமாற்றிக் கொண்டு, அடுத்த நொடி அல்லாஹ் நாடிவிட்டால், உன் மரணம் கரணம் தப்பாத விதியாகி விடும் என்பதையும் எண்ணி அஞ்சாமல் தைரியமாய், மார்க்கத்தில் சில அறிந்ததே போதுமே! நான் முஸ்லிம் என மார்தட்டி வீதிகளில் திரியும் மானுடமே! அல்குர்ஆன் நம் வாழ் வில் வழிகாட்டி! நம்மை ஈடேற்றும் அல்லாஹ்வின் ஒளி! என விழிப்புறும் நாள் எப்போது?

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும், நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிகளுக்கு! ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது’ என்று கூறுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறும். “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே! (அல்குர்ஆன் : 4:78)
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற் பட்டால் அது உன்னால்தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:79)

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார். யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருத்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 4:80)

அல்லாஹ் வாழ்வின் நெழிவு, சுழிவு அழிவுகளை முடிந்தவரை தெளிவாக எச்ச ரித்துவிட்டான். (4:78,79,80) தன் உன்னத இறுதி நெறிநூல் அல்குர்ஆன் மூலமாக வழிகாட்டி (ஸல்) வாழ்வியல் வழியாக, தெளிவாக, ஈருலக வெற்றியின் முடிவின் வாய்ப்பை நமது கையிலாக்கி தீர்ப்பின் ரகசியம் அல்லாஹ் அவன் மட்டுமே அறிந்த முடிவிலாக்கி.

ஓதுவோம் நம் வழிகாட்டி நெறி நூலை நாமறிந்த மொழிகளில் மறவாமல் நாமும் நம் உற்ற சுற்றமும் தெளிவுற சுற்றி வளைத்து குழப்பமிலா அல்லாஹ்வின் நேரடி விளக்கமாக அல்லாஹ் அவனது நேரடி அளவலின் பாக்கியம் பெற்ற உணர்வோடு. இன்ஷா அவ்லாஹ்.

Previous post:

Next post: