மெளலூது ஓதுவது சரியா?

in 2022 டிசம்பர்

மெளலூது ஓதுவது சரியா?

ஸ்.எம்.ரா´தா பின்த் ஹமீது

நம்முடைய சமுதாயத்தில் யாருக்கும் அரபி மாதங்கள் தெரிகின்றதோ இல்லையோ. ஆனால் கண்டிப்பாக இந்த மாதங்கள் தெரிகிறது. அதாவது முஹியித்தீன் ஆண்டவர் மாதம், நாகூர் ஆண்டவர் மாதம், மெளலிது மாதம் இப்படி வகைவகையாக தங்களுக்குத் தாங்களே இவ்வாறு பிரித்துக்கொண்டு இஸ்லாத்தில் இல்லாத காரியத்தை செய்து வருகின்றனர். பொதுவாகவே ஒரு காரியம் ஒரு வணக்கமாக கருதப்பட வேண்டுமானால் அந்த காரியம் அல்லாஹ்வாலோ அல்லது நபி(ஸல்) அவர்களாலோ கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நபியின் முன்னி லையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எக்காரியமும் வணக்கமாக கருதமுடியாது. அவ்வாறு அதை நாம் செய்தாலும் அந்த காரியத்திற்கு மறுமையில் எந்த நன்மையும் கிடையாது. இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த அடிப்படை விதிக்கு எந்த ஒரு பெரிய ஆராய்ச்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அல்லாஹுதாலா முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக தேர்வு செய்தான். அவர்கள் வழியாக ஏகத்துவ மார்க்கத்தைப் பரப்பினான். அவர்களுக்கு எதனை இறைவன் அறிவித்தானோ அதில் எந்த ஒரு மாற்றமோ, திருத்தமோ இல்லாமல் அப்படியே எத்தி வைத்தார்கள். மேலும் இறைவன் முஹம்மது தான் இறுதி தூதர்; அவருக்குப் பின்னர் தூதரோ அல்லது தூதுத்துவ இறைச் செய்தியோ (வஹி) வரமுடியாது என்று தெளி வாகக் கூறிவிட்டான். இதனை யார் தெளிவாக புரிந்துக் கொண்டார்களோ அவர்கள் இவ்விதியை புரிந்து கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை யாரும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் அல்லது செய்தால் நபி(ஸல்) அவர்கள் வணக்கங்களை முழு மையாக கற்றுத்தரவில்லை என்றும் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் இறைச் செய்தி வரக்கூடும் என்றும் அவர் கருதியவராக ஆகிவிடுவார்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் மூலம் இந்த மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன் என்று இறைவன் கூறிவிட்டான்.

இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன் 5:3)

இவ்வவசனத்தின் மூலம் இறைவன் அவனுடைய மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டதாகக் கூறுகிறான். மேலும் இவ்வச னம் இறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரையின் போது மக்களிடம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைப் பூர்த்தி செய்து விட்டேனா? என்று கேட்டார்கள்; மக்கள் “ஆம்’ என்றனர். இவ்வாறே மூன்று முறைக் கேட்டுவிட்டுப் பின்பு இறைவா இதற்கு நீயே சாட்சி என்று கூறினார்கள்.

அது மட்டுமல்லாமல் நபி(ஸல்) அவர் கள் கூறியதாக ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நமது உத்திரவின்றி யாரேனும் ஒரு அமலை செய்தால் அது நிராகரிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: புஹாரி, முஸ்லிம்.

மேற்காணும் இந்த நபி மொழியில் இஸ்லாத்தில் இல்லாத ஒரு காரியத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்றே கூறியுள்ளார்கள். மேலும் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மெளலூதுகள் என்பது இருந்தனவா என் றால் நிச்சயமாக இல்லை. நபி(ஸல்) அவர் களின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே இந்த மெளலூதுகள் இயற்றப்பட் டன. இந்த மெளலிதுகள் நபியைப் புகழ்கிறோம் என்ற நோக்கில் இஸ்லாத்தின் எல்லையைக் கடந்துள்ளனர்.
பொதுவாகவே இதைவிட்டு வெளி யேறி சிந்தித்தால் இந்த மெளலூது என்பது அல்லாஹ்வோ, நபியோ கற்றுத்தராத ஒன்றே; இட்டுக்கட்டிச் சொல்லி மக்களை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும்.

முதலாவதாக நாம் அவர்களுடைய வாதங்களைப் பார்ப்போம்.

நாங்கள் நபியைத்தானே புகழந்துப் பாடுகிறோம்!

சுப்ஹான மெளலிது என்பது நபி(ஸல்) அவர்களைப் புகழந்து பாராட்டுவதற்காகத் தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். மேலும் சில நபி தோழர்கள் புகழ்ந்து கவிபாடும்போது நபி(ஸல்) அவர்கள் அதனைத் தடுக்க வில்லை! என்றும் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் நபியைப் புகழ்வதற்குத் தடை சொல்லமாட்டான் என்றே கூறி தாங்கள் செய்யும் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார் கள்.

இன்னும் நபி(ஸல்) அவர்கள் மக்காவி லிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோதும் கூட அங்குள்ள மதீனத்து சிறுவர், சிறுமிகள் கொட்டடித்து பாடியபோதும் கூட நபியவர்கள் தடுக்கவில்லையே! என்று கூறுகிறார்கள்.

இவர்கள் கூறுவது சரியா?

இவர்கள் நபியைப் புகழ்கிறோம் என்ற நோக்கில் அளவு கடந்து செல்லுகிறார்கள். இந்த நிலமை வந்துவிடுமோ என்று அஞ்சிதான் என்னவோ நபி(ஸல்) அவர்கள் முன்னரே இவ்வாறு கூறிவிட்டுச் சென்றுள் ளார்கள்.

கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் மஸீஹ் ஈஸாவை வரம்புமீறி புகழ்ந்தது போல் என்னை நீங்கள் புகழாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் என்றும் அவனது அடியார் என்றும் என்னை நீங்கள் கூறுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல் : புகாரி.

  1. ஈஸா நபியை எந்த அளவிற்கு கிறிஸ் தவர்கள் புகழ்கிறார்களோ அந்த அளவிற்கு நபியைப் புகழ்ந்து மெளலூதில் பாடி வைத்துள்ளனர்.
  2. நபிதோழர்கள் நபியை வர்ணித்து கவி பாடியது உண்மைதான். ஆனால் அந்த வார்த்தைகளில் ஒரு வரம்பு இருந்தது.அதை அவர்கள் கடக்கவில்லை? மேலும் அவர்கள் பாடிய கவிதைகளை வருடா வருடம் பாடிக் கொண்டும் இருக்கவில்லை. அவர் கள் பாடியது குர்ஆன், ஹதீதுக்கு முரணாக வும் இருக்கவில்லை.

மெளலூதுகளில் உள்ள வார்த்தை களைப் பார்க்கும்போது அவை குர்ஆன், ஹதீதுக்கு மாற்றமாகவே உள்ளது. அதில் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம்.

நீங்களே பாவங்களை மன்னிப்பவர்.

அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.

தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீரே!

இப்படியாக மெளலூதுகளின் வரிகளில் இது இடம்பெறுகிறது. இறைவன் தன் திருமறையில் நானே உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன். என்னிடமே நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று கூறுகிறான். இப்படி இறைவன் கூறும்போது தனக்குத் தான் மன்னிக்கும் அதிகாரம் உள்ளது என்று மறைமுகமாக கூறுகிறான். அந்த உயர் அதிகாரத்தை எவ்வாறு இறைவன் நபிக்கு அளித்திருப்பான் என இவர்கள் சிந்திக்க வேண்டாமா? மேலும் தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீரே! என்று வரும் இவ்வரிகள் இறைவனுக்கே தவறுகளை மறைத்து விடுவதாகவும் அமைகிறது. ஆனால் இறைவன் தனது இறுதி மறையில் நீங்கள் பகிரங்கமாகச் செய்பவற்றையும் மறைவாக உள்ளத்தில் இருப்பவற்றையும் (அவன்) நான் அறிபவனாக இருக்கிறேன் என்று கூறுகிறான். அப்போது கூறுவது என்னவெனில் அல்லாஹ்விடம் மறைத்துவிடலாம் என்றால் அவனுடைய ஆற்றலையே சந்தேகிக்கும் அளவிற்கு இந்த வரிகள் எல்லையைக் கடந்துள்ளன. இவற்றையயல்லாம் இம்மக்கள் சற்று சிந்தித்து பார்க்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இன்னும் மெளலூதின் மற்றொரு வரியில்,

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்.

மேற்காணும் இந்த வரிகள் அல்லாஹ் வுக்கு இருக்கும் தன்மையை நபி(ஸல்) அவர் களுக்கு இருப்பதாக வர்ணித்துக் காட்டு வதாக அமைத்துள்ளனர். நாம் பாவமன் னிப்பை இறைவனிடத்திலேயே நாட வேண்டும். வேறு யாரிடத்திலும் பாவமன் னிப்புக் கேட்கவோ அல்லது நன்மைகளாக மாற்றுங்கள் என்றோ கூறக்கூடாது. அப்படி நாம் கூறினால் இறைவனுடைய அந்தஸ் திற்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்து விடும். இந்த அளவிற்கு மக்கள் பொருள் அறியாமல் பாமரர்களாய் ஓதி வருகின்றனர்.

மெளலூதுகளால் விளைவது நன்மையா? தீமையா?

மெளலூது பிரியர்கள் தங்கள் வீட்டில் மெளலூது ஓதிவிடவேண்டும். அப்படி ஓதி னால் பரக்கத் உண்டாகும் என்றும் மய்யித் வீட்டில், புதுமனை புகுவிழா என்று எல்லா விசே­ங்களுக்கும் ஓதி வருகிறோம் என்றும் இதற்கென ஒரு மாதத்தையே ஒதுக்கி வீடுவீடாக ஓதி வருகின்றோம் என்று கூறுகி றார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் மஸ்ஜிதுகளிலும் இதனை ஓதி வருகின்றனர். இன்னும் குர்ஆனுக்கு கொடுக்கும் அந்தஸ்தை இதற்கும் கொடுக்கிறார்கள். மேலும் தொழுகையைக் கூட இவர்கள் அலட்சியம் செய்யும் அளவிற்கு இந்த மெளலூது பாடலை அளவு கடந்து ஓதி வருகின்றனர்.

மஸ்ஜிதையும் விட்டுவைக்கவில்லை :

மஸ்ஜிதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும். அவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். ஆனால் இதற்கு எதிர்மாறானது மெளலூது. வருடத்திற்கு ஒரு முறை பெருநாள் தொழுகைக்கு வருபவன் முதல் வெள்ளி ஜும்ஆவிற்கு மட்டும் வருபவர் வரை எல்லோரும் இந்த மங்களகர(?) நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வர். சிறப் பாக அனைவரும் புதிதாக வந்த ஒரு படத்தின் பாடல் மெட்டுகளைப் போட்டு பாடி முடிப்பர். அல்லாஹுதாலா இறையில்லத்தின் வரம்பை கூறும்போது:

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18

இவ்வாறு இரத்தினச்சுருக்கமாய் இறைவன் தனது அருள்மறையில் கூறிவிட்டான். ஆனால் இந்த மெளலூது பிரியர்கள் இவ்வசனத்தை கவனிக்கவில்லை போலும்! இந்த செயலுடன் நின்றுவிடாமல் இவர்கள் குர்ஆனையும் தாக்கும் அளவிற்குச் செயல்படுகின்றனர்.

இவர்கள் இழிவுபடுத்த குர்ஆன் தான் கிடைத்ததா?

மஸ்ஜிதை இழிபடுத்துவது மட்டுமல்லாமல் குர்ஆனிலும் இவர்களின் கைவரிசையைக் காண்பித்து விட்டனர். குர்ஆன் ஓதினால் எவ்வாறு ஒரு எழுத்திற்கு 10 நன்மை யுண்டோ அதைப்போல் இதற்கும் நன்மையுண்டு என்று சில இடங்களில் கூறி ஓதி வருகின்றனர். நோய் நிவாரணமாகவும் இதனை இவர்கள் ஓதி வருகின்றார்கள். இறைவசனம் ஓதினால் தான் நோய்க்கு நிவாரணம் என்று நாம் கூறினால் மெளலூதுக்கும் நோய் நிவாரணத் தன்மை உள்ளதென எண்ணுகின்றனர். மெளலூது பாடல்கள் அரபியில் இருப்பதால் இவ்வாறு பொருள் புரியாமல் ஏதாவது ஓதினால் நன்மையுண்டு என்றும் குர்ஆனுக்கு ஒரு பட்டுத்துணியைச் சுற்றி கைப்படாத இடத்தில் வையுங்கள் என்று கூறுகிறார்கள். மெளலூதுகளை நல்ல காரியங்களுக்கும் கெட்ட காரியங்களுக்கும் இதனையே ஓதி வருகின்றனர். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து இவர்கள் குர்ஆனை கண்படாத இடத்தில் வையுங்கள் என்று கூறும் நிலைமை வந்துவிடும் போலும்! இத்துடன் மட்டும் நின்றுவிடாமல் மெளலூது ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் தொழுகைக்கு பாங்கு கூறப்பட்டாலோ அதில் கலந்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விடு கின்றனர். இந்த அளவிற்கு மெளலூதில் ஊறிவிட்டனர்; வழிகெட்டுவிட்டனர்.

எனவே மேற்காணும் விளக்கங்களின் மூலமாக மெளலூதுகள் என்பது ஒரு வழிகேடாகவே கருதப்படுகிறது; மற்றும் நாம் காட்டியுள்ள மெளலூது பாடலின் உதார ணங்கள் அவற்றின் ஆரம்ப பக்கங்களிலே சேகரிக்கப்பட்டது. முதலே கோணல் என்றால் முற்றிலும் கோணலாகத்தான் இருக் கும். உண்மையும் அதுதான். ஆகவே இப்படிப்பட்ட தீய செயலை விட்டு விலகி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய சீரிய வழியில் நம் பயணத்தை தொடர் வோமாக!

Previous post:

Next post: