மதகுருமார்களின் ஆதிக்கம்!

in 2023 ஜனவரி

தலையங்கம்!

மதகுருமார்களின் ஆதிக்கம்!

ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்றுவரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின், மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள்.

இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். ஆம்! இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட தங்களைச் சிறந்த பாதுகாவலர்களாகச் சொல்லி மக்களை நம்பவைத்து ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பாப்பானுக்குக் கட்டுப்பட்டது. எனவே உலகு பாப்பானுக்குக் கட்டுப்பட்டது என்ற இந்து மதகுருமார்களின் கற்பனை இதை உண்மைப்படுத்தும்.

மதகுருமார்கள் வணங்கப்படுகிறார்கள்:

இறைவனை வணங்குவது போல் அவர்களது காலடியில் விழுந்து வணங்குவது, கால்களைத் தொட்டு வணங்குவது, அவர்கள் காலால் இட்ட பணிகளைத் தலையால் சுமந்து நிறைவேற்றுவது, அவர்கள் எச்சில்படுத்திக் கொடுத்த பொருள்களை பிரசாதமாக எண்ணிச் சாப்பிடுவது இவையும் இந்தக் கருத்தை நிலைநாட்டப் போதுமானதாகும்.

இறைவனிடம் நேரடியாகத் தனது குற்றங்களை முறையிட்டு அவனிடமே பாவமன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக கிறித்தவ மதகுருமார்களிடமே தனது குற்றங்கள் பாவங்களை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால் இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூடநம்பிக்கை கிறித்தவர்களிடம் காணப்படுகிறது.

அதற்கும் மேலாக தான் மணமுடிக்கும் பெண்ணை தனது மதகுரு முதலில் அனுபவித்த பின்னரே தான் அனுபவிக்க வேண்டும் என மூடநம்பிக்கை உடையவர்களும் இருப்பதாக அறிகிறோம். இப்படி மதகுருமார்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவர்கள் உதிர்க்கும் பகுத்தறிவுக்கே ஒவ்வாத மூடநம்பிக்கைகளை, அனாச்சாரங்களை, அவலங்களை அப்படியே கண்மூடி ஏற்றுச் செயல்படும் மக்களே மனித குலத்தில் மிகமிக அதிகம்.

முஸ்லிம் மதகுருமார்களிடம் மேலே சொல்லப்பட்ட இழிகுணங்களில் சில காணப்படாவிட்டாலும், அவர்கள் கூறும் கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொண்டு பொதுமக்கள் அதன்படி நடக்க வேண்டும் என்ற இறுமாப்பு அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த மதகுருமார்கள் எப்படிப்பட்ட இழிவான கேவலமான ஆறறிவு மனிதன் செய்யக்கூடாத செயல்களைச் செய்தாலும், அதைக் குறையாகவோ, இழிவாகவோ அவர்களின் பக்தர்கள் நினைப்பதாக இல்லை.

கேலிக்காக பொதுவழக்கில் சொல்வது போல, இந்த மதகுருமார்கள் சாமானிய பகுத்தறிவு கொண்டு சிந்திக்காத மக்களின் சாமான்களை மட்டுமல்ல, அவர்களின் ஈமானையும் சேர்த்தே திருடிக்கொண்டு, தாமும் வழிகெட்டு, தம்மை நம்புபவர்களை வழிகெடுத்து மறுமையில் நரகத்தை நிரப்பும் ஷைத்தானை நேரடி ஏஜண்டுகளாக இருக்கின்றனர். இதற்கு ஹிந்து மதகுருமார்களும், பல கிறித்தவ மதகுருமார்களும், முஸ்லிம் மதகுருமார்களும் செய்யும் இழிசெயல்களை அவர்களின் பக்தர்கள் குறையாக எண்ணுவதே இல்லை.

முஸ்லிம்களாகிய நாம் மதகுருமார்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு நேரடியாக குர்ஆன், ஹதீதுகளை படித்து உள்வாங்கி அதன்படி செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாக!

Previous post:

Next post: