ஹிஜ்ரிக் கமீட்டி காலண்டரில் உள்ள குறைபாடுகள்…

in 2023 ஜனவரி

ஹிஜ்ரிக் கமீட்டி காலண்டரில் உள்ள குறைபாடுகள்…

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

“ஹிஜ்ரிக் கமிட்டியினரின் வெளியீடாகிய’ ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும் எனும் நூலில், பாகம் நான்கில், “இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் எனும் உபதலைப்பில்; கிரிகோரியன் காலண்டரைக் குறித்து எழுதுகையில்;

“இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (னிசியூணூம்ணூபுஹி) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியையும், கிழமையையும், மாற்றி வருவதைப் பார்க்கலாம். அவர்கள் தங்களது நாட்டிலுள்ள கிரீன்விச் நகரை மையமாக (கிப்லாவாக)க் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியை தங்கள் ஆதிக்கத்திலுள்ள நாடுகளில் மிக எளிதாகத் திணித்து விட்டனர் என்று இடித்துரைத்து எழுதப்பட்டுள்ளது.

அதேநேரம்; ஹிஜ்ரிக் காலண்டர் குறித்து அதே நூலில் பிரஸ்தாபிக்கையில் “உண்மையில் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90 டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகிறோம். என்றும் எழுதியிருப்பதானது நாளின் ஆரம்பம் “ஃபஜ்ர்’ மிலி “ஃபஜ்ர்’ என்று ஊருக்கு உபதேசம் செய்தாலும் தமது ஹிஜ்ரிக் காலண்டரும் நஸராக்களின் கிரிகோரியன் காலண்டரைப் போலவே உலக நாளை உச்சியில் இருந்தே ஆரம்பிக்கிறது. இரவு பனிரெண்டு மணிக்கு நாள் மாறுகிறது என் பதற்கு மறைமுகமான சான்றாகும். அத்துடன்;

நாளின் ஆரம்பம் “ஃபஜ்ர்’ to “ஃபஜ்ர்’ என்பதை இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்த, இன்றுவரை செய்து கொண்டிருக்கின்ற ஹிஜ்ரிக் கமிட்டி சகோதரர்கள்.

நாட்களும், தேதிகளும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும், ஃபிஜியிலுள்ள சர்வதேசத் தேதிக்கோட்டிலிருந்தே ஆரம்ப மாகின்றன என்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கின்ற, இன்றுவரை பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்ற ஹிஜ்ரிக் கமிட்டி சகோதரர்கள்.

ஒட்டுமொத்த உலக நாளின் ஆரம்பத்தை மாத்திரம் ஃபிஜியில் சூரியன் உச்சியில் இருக்கும்போது நாளை ஆரம்பிப்பது எதன் அடிப்படையில்? ஊருக்கு உபதேசம் “ஃபஜ்ர்’ மிலி “ஃபஜ்ர்’; உலக நாளுக்கு ஆரம்பம் உச்சியா? அது என்ன உச்சி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வெறுத்த உச்சி; அந்நேரம் நபியவர்கள் “பாங்கு சொல்வதற்குக் கூட தடை செய்த உச்சி. நபியவர்கள் கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும் என்று சொன்ன உச்சிப்பொழுது’

(சூரியன் உச்சிக்கு வந்து) வெப்பம் கடுமையாக ஆனபோது முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்வதற்காக இரண்டு தடவைகள் முற்பட்டபோதும்; அந்த இரண்டு தட வையும் “கொஞ்சம் பொறு’ “கொஞ்சம் பொறு’ என்று கூறி பாங்கு சொல்ல விடாமலும், தொழவிடாமலும், சூரியன் நன்றாகச் சாய்ந்து மணல் திட்டுகளில் நிழலை காணும் வரை லுகரைத் தாமதப்படுத்துங்கள்! லுஹரை தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்ல விடாமலும், தொழவிடாமலும், தடுத்திருக்க (அறி விப்பவர்கள், அபூதர்(ரழி) மற்றும் அபூ ஹுரை ரா(ரழி), அபூ ஸயீத்(ரழி), இப்னு உமர்(ரழி) ஆகியோர் புகாரி: 5 33-543) உச்சிப் பொழுதான அந்நேரத்தில் பாங்கு சொல்வது, தொழுவது போன்ற சிறந்த வணக்கங்களையே செய்யக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்த, சூடு கூடிய;

“ஃபிஜி உச்சிப் பொழுதில் இருக்கும்போது உலக நாளை ஆரம்பிக்கும் விதமான கட்டமைப்பில் ஹிஜ்ரிக் காலண்டர் உருவாக்கப்பட்டது எதன் அடிப்படையில்?’

இவ்வாறே ஹிஜ்ரிக் காலண்டர் ஃபிஜி யின் ஃபஜ்ரிலிருந்து உலக நாளை ஆரம்பிக் காமல் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும் போது உலக நாளை ஆரம்பிப்பதால்;

உலகின் சில நாடுகளில் உள்ளவர்கள் புவிமைய சங்கம நிகழ்வான அமாவாசை நடைபெற்று புதிய மாதம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே நோன்பையும், பெருநாளை யும், எடுக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறது இது;

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; (அல்குர்ஆன் 2:185)

ரமழானை அடைதல் குறித்த இவ்வசனத்தில்… (2:185)

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ’ என்ற கருத்துப்படவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக; “ரமழான் மாதம் பிறந்துவிட்டால்’ என்று கூறாமல் “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ’ என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு முன்னரே நோன்பையும், ­  ஷவ்வால் ஆரம்பமாவதற்கு முன்னரே பெருநாளையும், எடுக்க வேண்டிய இழிநிலை ஏற்படுகிறது. இதனால்;

முப்பது நாட்களைக் கொண்ட சில மாதங்கள் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதாக எடுக்கப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்ததொரு உதாரணம் மிக அண்மையில் நம்மை விட்டும் கடந்துபோன “1443 ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதிநிலை படிப்பினையாகும். அதாவது;

ஹிஜ்ரிக் காலண்டரின் அடிப்படையில் புவிமைய சங்கம நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள; 23.11.2022, புதன்கிழமையாகிய அன்று நிரூபிக்கப்பட்ட அறிவியலின்படி அன்றைய பிறையானது இருபத்தொன்பதாவது நாளின் உர்ஜூனில் கதீமுடைய தோற்றமும், உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னாலும் உதித்தது. ஆக; வளமை போன்று அன்றைய பிறையும்:

உர்ஜூனில் கதீமுடைய நேரத்திலும்,
உர்ஜூனில் கதீமுடைய தோற்றத்திலும்,
உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னால் உதித்ததும்.
உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னால் மறைந்ததும்,

எமது நீண்ட நாள் ஆய்வின், அவதானத்தின், அறிவியலின் ஆதாரங்களின், புரிதலின் அடிப்படையில் அன்றுதான் ரபீவுல் அவ்வல் மாதத்தின் இருபத்தொன்பதாவது நாளுக்கான உர்ஜூனில் கதீம், காரணம்;

“ஹிஜ்ரிக் காலண்டரின் அடிப்படையில் புவிமைய சங்கம நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள; 23.11.2022, புதன்கிழமையாகிய அன்று; நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் எனும் அடிப்படையில் அன்று ஃபஜ்ர் நேரம் உதித்தது “1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் உர்ஜூனில் கதீம்தான்.

காரணம் அன்று அதிகாலை உர்ஜூனில் கதீமுடைய நேரத்தில் எமது பிரதேசத்தில் உதித்த 1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதித் தேய்பிறையானது.

அன்றைய இறுதி நேரம் வரை, சங்கமம் நடைபெறவில்லை தளத்தில் 29, 4, 10, 4, 10 என்றுள்ளது. அத்துடன் தேய்பிறையின் 0.2% படித்தரம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே அன்று; 29 நாட்களையும் நாலு மணித்தியாலங்களையும் தாண்டியே ஃபஜ்ருக்கு சற்று முன்னராகவே சங்கமம் நடைபெற்றது. எனவே, வளமையைப்போன்று அன்றைய பிறையும்:

உர்ஜூனில் கதீமுடைய நேரத்திலும்,
உர்ஜூனில் கதீமுடைய தோற்றத்திலும்,
உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னால் உதித்ததும்.
உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னால் மறைந்ததும் ஆகும்:
ஃபஜ்ருக்கு சற்று முன்னர் வரை சங்கமம் நடைபெறாது. தாமதமானதாலும்,

23.11.2022, புதன்கிழமையாகிய அன்று 1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதித் தேய்பிறையானதை உர்ஜூனில் கதீமாக எடுத்து; அதற்கு அடுத்த 29ஆவது நாளாகிய 24.11.2022, வியாழக்கிழமையை “கும்ம’வுடைய நாளாக எடுத்து 25.11.2022, வெள்ளிக்கிழமையை, ஜமாஅத்தில் அவ்வல் முதல் நாளாக எடுக்கப்பட்டுள்ளது. (ஹிஜ்ரிக் காலண்டரின் அளவுகோலின் பிரகாரம் ஜமாதுல் அவ்வல் முதலாவது நாளாகக் குறிப்பிட்ட 24.11.2022, வியாழக்கிழமையன்று உலகில் எங்குமே பிறை தென்படவில்லை என்பதனாலும், அன்றைய ஃபஜ்ருக்கு சற்றுமுன்னர்தான் சங்கமம் நடந்த காரணத்தினாலும் ரபீவுல் ஆகிர் மாதத்தின் பெரும் பகுதியும், ஜமாத்தில் அவ்வல் மாதத்தின் சிறு பகுதியும் அதில் இருந்தாலும் அது மறைக்கப்படும் கும்மவுடைய நாள்தான் என்பது தெளிவு)

இவ்வாறு ஹிஜ்ரிக் காலண்டரின் அளவுகோலின் பிரகாரம் முப்பது நாட்களைக் கொண்ட சில மாதங்களை இருபத்தொன்பதாக எடுப்பதாலும்; அதில் எஞ்சிய முப்பதாவது ஒரு நாளை புதிய மாதத்துடன் இணைப்பதாலும் ஹிஜ்ரிக் காலண்டரின் சில மாதங்களில் ஹதீதுக்கு முரணாக பிறை பதினாறிலும் முழு நிலவு நாள் வருகிறது.

“அய்யாமுல் ஃபீழ் எனும் நிலவு பிரகாசிக்கும் வெள்ளை நாட்கள்”

ஒவ்வொரு மாதமும், “”அய்யாமுல் ஃபீழ் எனும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்கள் என்று அழைக்கப்படும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பது போலானதாகும். (அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அபூஹுரைரா(ரழி), கதாதா இப்னு மில் ஹான்(ரழி), அபூதர்(ரழி), புகாரி: பாகம்.2, பக்கம் 648, பாடம் 60இல், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்;

“மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் நோன்பு நோற்றல்’ எனும் உபதலைப்பிட்டு;

“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், “ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என்று தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி) அவர்கள். (புகாரி :1981)

ரியாதுஸ்ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230இல். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது விரும்பத்தக்கதாகும் எனும் உபதலைப்பின் கீழ் (மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந்தது. “அய்யாமுல் ஃபீழ்’ நாட்களாகும். அது பிறை 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும்) நாட்களாகும். 12,13,14ஆம் நாட்கள் என்று கூறப்படுகிறது. (எனினும்) பிரபலமான சரியான கருத்து முதலாவது தான் என்று ஆரம்பித்தது. 1258 ஆவது ஹதீதாக:

ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், “ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் நெருங்கிய தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்! அறிவிப்ப வர்: அபூஹுரைரா(ரழி) அவர்கள், ரியாளுஸ்ஸாலிஹீன்: 1258, மேலும் ரியாளுஸ் ஸாலிஹீன் 1259,ஆவது ஹதீதாக;

என் நேசர் எனக்கு மூன்று காரியங்களை உபதேசித்தார்கள்; நான் வாழும் காலமெல்லாம் அவற்றை விடமாட்டேன். 1.ஒவ்வொரு மாதமும் (அய்யாமுல் யபீழ் என; (நிலவு பிரகாசிக்கும்) வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது. 2.லுஹாத் தொழுகை தொழுவது, 3.வித்ருத் தொழுதுவிட்டுத் தூங்குவது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரழி), ரியாளுஸ்ஸாலிஹீன்:1259, முஸ்லிம்: 722, நஸயீ:692.

மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால் 13,14,15 ஆகிய (“அய்யாமுல்யபீழ்’ எனும் நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைப்பீராக! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்(ரழி) ரியாளுஸ்ஸாலிஹீன் 1262, திர்மிதி:761)

“அய்யாமுல் யபீழ்’ எனும் 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு மில்ஹான்(ரழி) ரியாளுஸ் ஸாலிஹீன்:1263, அபூதாவூத்:2449) மேலும்;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தாலும் பயணத்தில் இல்லாவிட்டாலும் “அய்யாமுல் யபீழ்’ (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ரியாளுஸ் ஸாலிஹீன்:1264, நஸயீ:4:198-199) போன்ற ஆதாரபூர்வமான ஹதீத்களுக்கு முரணாக பிறை பதினாறிலும் முழு நிலவு நாள் வருகிறது. மேலும்;

“மாதங்களை முன்னும் பின்னுமாக (9:37) மாற்றுவது’

(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப்படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப்பட்ட தாகக் கொள்கிறார்கள்) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்) தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன்: 9:37) இவ்வாறு சில மாதங்களில் முன் பின்னாக ஆகுவதால் சரியான கணக்கில் துல்லியம் இழந்து; பின்னோக்கிக் கணக்கிடும்போது ஆதாரபூர்வமான ஹதீத்களுக்கு முரணாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அரஃபாவுடைய நாளில் வியாழக்கிழமை வருகிறது.

“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்க ளுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.” (5:3)

எனும் வசனம் அருளப்பெற்றது. அதாவது; ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின்போது “அரஃபா தினம்’ எனப்படும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் (வெள்ளிக்கிழமை) “அரஃபாப் பெருவெளியில் நபியவர்கள் தங்கியிருந்த வேளையில்தான் இத்திருவசனம் (5:3) அருளப்பெற்றது என்பதாகப் பலமான அறிவிப்புகள் பல வந்துள்ளன. (புகாரி: 4606இன் சிறு குறிப்பு: மூன்றாவது, ஃபத்ஹுல் பாரீ) மேலும், இது பற்றி

யூதர்களும் அறிந்த  பிரபல்யமான  விஷயம்தான்:

யூதர்களில் ஒருவர் உமர்(ரழி) அவர்களிடம் “அமீருல் மூமினின் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் ஒரு பெருநாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர்(ரழி) அவர்கள் “அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார். “இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங் கீகரித்துக்) கொண்டேன்’ (எனும் திருக்குர் ஆனின் 5:3 இந்தத் திருவசனம்தான் அது என்றார்) அதற்கு உமர்(ரழி) அவர்கள் “அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். “அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள் என தாரிக் இப்னு ´  ஷஹாப் (ரழி) அறிவித்தார். (புகாரி: 45)

மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது: கஃஅப்(ரழி) அவர்கள், ஒருமுறை “இந்த வச னம் மட்டும் வேறொரு சமுதாயத்தாருக்கு அருளப்பெற்றிருந்தால் எந்த நாளில் அது அருளப்பெற்றதோ அதைக் கவனத்தில் கொண்டு அதைக் கூடி மகிழும் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் “கஃஅபே! அது எந்த வசனம்?’ என்று கேட்டார்கள். உடனே அவர், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ எனும் வசனம் என்றார். அப்போது உமர்(ரழி) அவர்கள் “அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும், அது அருளப்பெற்ற இடத்தையும், நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். துல்ஹஜ் ஒன்பதாவது, அரஃபாவுடைய நாள் வெள்ளிக்கிழமை அருளப்பெற்றது. அல்லாஹ் புகழுக்குரியவன், அரஃபாவுடைய நாளும், வெள்ளிக்கிழமை நாளும் ஆகிய அவ்விரு நாட்களுமே நமக்குப் பண்டிகை நாட்கள் தான்’ என்றார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் 3:19-47)

தாரிக் பின் ´ஹாப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களுள் ஒருவர் (கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம் வந்து “இறைநம் பிக்கையாளர்களின் தலைவரே!’ உங்களது வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதுகின்றீர்கள். அந்த வசனம் யூதர்களாகிய எங்க ளுக்கு இறக்கியருளப்பட்டிருக்குமானால் (அது அருளப்பெற்ற) அந்த நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று கூறினார். (அப்போது உமர்(ரழி) அவர்கள் “அந்த வசனம் எது?’ என்று கேட்க அவர்; “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடை யையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ் லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ எனும் (5:3ஆவது) இறைவசனம் தான் அது, என்று கூறினார். அப்போது உமர்(ரழி) அவர்கள் “அல்லாஹ் வின் மீது ஆணையாக’ “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில், (எந்த இடத்தில்) அந்த வசனம் அருளப்பெற்றது என்பது எனக்குத் தெரியும். (அது விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்தபோது, (தான் இந்த வசனம் அருளப்பெற்றது) என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்:183, நஸாயீ:2952,4926) அந்நாளைக் கொண்டாடுவதற்கான;

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம், “இன்றைய நாள் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை நான் நிறைவு செய்து விட்டேன்’ எனும் (5:3) இந்த வசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் (அது அருளப்பட்ட) அந்த நாளை நாங்கள் பெருநாளாக ஏற்படுத்தியிருப்போம் என்று கூறினார். அதற்கு உமர்(ரழி) அவர்கள், “இந்த வசனம் அருளப்பட்ட “நாளும் இரவும்’ எனக்குத் தெரியும். இந்த வசனம் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நாங்கள் அரஃபா எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தபோது, வெள்ளிக்கிழமை இரவில் அருளப்பட்டது என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்:தாரிக்பின் ´ஹாப் (ரழி) நூல்: நஸாயீ:2952,4926, அஹ்மத்183)

“தீர்க்க ரேகை’

உலக முஸ்லிம்கள் தொழுகைக்காக புனித மக்காவிலுள்ள கஃஅபாவின் பக்கம் (கிப்லாவிற்காக) முகம் திருப்புங்கள். (2:149, 143,144,145, 10:87) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப மக்காவுக்குக் கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழுகின் றார்கள். அதேபோல மக்காவிற்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காகத் தங்களது கிப்லாவின் திசையாகக் கிழக்குத் திசையை நோக்கித் தொழுகின்றார்கள்.

கிப்லாவை இலக்காகக் கொண்டு அதனை மையப்படுத்தி இவ்வாறு முழு உலக முஸ் லிம்களும் அணி அணியாக வரிசையாக நிற்பதை உலக அமைப்பை கவனத்தில் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் மிகப் பொருத்தமான இடமாக இந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதியே சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லப்பட்டது. இன்றும் அவ்வாறே சொல்லப் பட்டு வருகிறது, ஆனால்,

புனித கஃஅபாவை மேற்கு நோக்கி மாத்திரமல்ல, கிழக்கு நோக்கி மாத்திரமல்ல, நாலு திசைகளிலிருந்து மாத்திரமல்ல, அனைத்து திசைகளிலிருந்தும் வளையமாக நின்று கஃஅபாவை முன்னோக்கித் தொழப்படுகிறது. புனித கஃஅபா அமைந்துள்ள ஹரம் ­ரீஃபில் இவ்வாறு சிறு வட்ட வளையமாகவே ஆரம்பிக்கப்பட்ட சஃப்பானது, படிப்படியாக விரிவடைந்து மறுபடியும் படிப்படியாக சுருங்கி வந்து சிறியதொரு வளையமாக மாறும் இடம் கிட்டத்தட்ட அலாஸ்கா பிரதேசம்தான். கஃஅபாவை முன்னோக்கியதாக ஆரம்பிக்கப்பட்ட சிறிய வட்ட வளையமானது இந்த இடத்தில் முதுகுப் பகுதிகள் முன்னோக்கிய மையப் புள்ளியாக அமைகிறது என்பதே நிதர்சனம். ஆகவே,

ஃபிஜியிலுள்ள சர்வதேசத் தேதிக் கோட்டில் முதுகும் முதுகும் இணைகிறது என்பதும், கஃஅபா வளாகத்தில் வட்ட வளையமாக ஆரம்பித்த சஃப்பானது இந்த இடத்தில் நேராக ஆனது என்பதும் தவறான புரிதல் ஆகும். இது எல்லோராலும் இலகு வாகப் புரிந்து கொள்ளக் கூடியதொரு வி­யமே. ஏன்! நீங்களே ஒரு உலக உருண்டையை (வடிவமான பொருளை) எடுத்து மக்காவை மையமாக வைத்து மேலே ஒரு புள்ளியை இடுங்கள். பின்னர் அந்த புள்ளியை மையப்படுத்தி வட்ட வளையம் வளையமாகக் கோடுகளைக் கீறி வாருங்கள். இறுதியிலும் அது சிறிய வட்ட வளையமாகவே முடிவடையும் என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். அதுவே மையப் புள்ளி ஆகும். அது அமைந்திருப்பது “அலாஸ்கா’வை அண்டிய பிரதேசமாகும் என்பதும் எனது புரிதல். இந்த புரிதல் தவறு என்று நீங்கள் கருதினால், கஃஅபாவின் வளாகத்தில் சிறு வட்ட வளையமாக ஆரம்பித்த தொழுகையின் சஃப்பானது உலகில் எந்த இடத்தில் வைத்து நேராக ஆனது? அது எந்த அடிப்படையில் சர்வதேசத் தேதிக் கோட்டில் நேர்கோடாக மையம் கொண்டது? என்பதை அவர்கள்தான் விளங்கிச் சொல்ல வேண்டும்.

Previous post:

Next post: