இந்திய முஸ்லிம்களின் இம்மை மறுமை வெற்றியை பாழாக்கிய முல்லாக்கள்

in 2023 பிப்ரவரி

இந்திய முஸ்லிம்களின் இம்மை மறுமை வெற்றியை பாழாக்கிய முல்லாக்கள்

ஒரு முஸ்லிமான ஆணாக இருந்தா லும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! அவர்கள் செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அது எல்லாம் வல்ல அல்லாஹ் வின் வழிகாட்டும் நெறிநூலான அல்குர் ஆன் கட்டளையின்படியும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அமைத்துக் கொள்வதில் தான் இம்மை மறுமை வெற்றி அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன், ஹதீஃத் இந்த இரண்டு அல்லாத அனைத்தும் வழிகேடு. அதோடு முழு இஸ்லாமிய மார்க்கமே இடைத்தரகர் களான புரோகிதர்களின் தலையீட்டை வேரோடும் வேரடி மண்ணோடும் துடைத் தெறியும் இலட்சியத்தைக் கொண்ட மார்க்கமாகும். இவ்வாறு பாதுகாக்கப் பட்ட மார்க்கத்தில் எப்படியோ நுழைந்து விட்ட நமது புரோகித மவ்லவிகள் இந்திய முஸ்லிம்களை கல்வியிலும், பொருளாதா ரத்திலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளை பின் னோக்கி ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விட்டு பெரும் துரோகம் செய்துவிட்டனர்.

முதலில் கல்வியை எடுத்துக் கொள் வோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலேயர் களுக்கெதிராக அதி தீவிரமாக போராட்டக் களத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பித் துப் பிடித்துப் போன நமது மூட முல்லாக் கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் ஆங்கில மொழியை படிப் பதே ஹராம் என்ற மூடத்தனமான ஃபத்வா (தீர்ப்பு) வழங்கினர். இதைக் கேட்ட நமது அப்பாவி முஸ்லிம்கள் மவ்லவிகளை கடவு ளாக்கிக் கொண்டிருந்த காரணத்தால் அவர் களின் முட்டாள்தனமான இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளிலும் மற்ற கல்வி ஸ்தாபனங்களிலும் ஆங்கிலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த தத்தமது சமுதாயப் பிள்ளை களை அப்படியே ஆங்கிலக் கல்வி கற்பதை விட்டுத் தடுத்துவிட்டனர். இது முற்றிலும் அல்குர்ஆன் கட்டளைக்கு எதிரான அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளான ஒரு முட்டாள்தனமான செயலாகும்.

அல்குர்ஆனில் கல்வியின் சிறப்பைப் பற்றி பல இடங்களில் அல்லாஹ் கூறுகின் றான். (யாவற்றையும்) படைத்த உம்மு டைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படிப்பீராக. (அல்குர்ஆன் 96:1)

முதன்முதலாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய நாற்பதா வது வயதில் நபி ஆகின்றனர். அப்போது அவர்க ளுக்கு முதன்முதலாக அல்குர்ஆன் அருளப் படுகின்றது. அவ்வாறு இறங்கிய அல்குர் ஆனின் முதல் வசனமே படியுங்கள் என்கிற வார்த்தையைக் கொண்டுதான் ஆரம்பமாகி றது. கல்வி சம்பந்தமான வசனத்தை எல் லாம் வல்ல அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி(ஸல்) அவர்க ளுக்கு கல்வியை கற்றுக் கொடுக்க அதை அப்படியே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) திரும்பப் படிக்க ஆக மொத்தத்தில் கல்வி கற்பது என்பதை வலியுறுத்தக்கூடிய வித மாக இஸ்லாமிய மார்க்கம் அமைந்துள் ளதை நாம் அனைவரும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

“அலக்” என்ற நிலையிலிருந்து மனி தனை படைத்தான். (அல்குர்ஆன் 96:2)

படிப்பீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (அல்குர்ஆன் 96:3)

அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன்:96:4)

மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யயல்லாம் கற்றுக் கொடுத்தான். (அல்குர் ஆன் 96:5)

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன் 96:6)

அவனே மனிதனுக்கு (மொழிப் பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத் தான். (அல்குர்ஆன் 55:4)

(கல்வியை) அறிந்தோரும் அறியா தோரும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்க ளின் மூலம் கல்வி கற்பதை ஊக்குவித்தும் அதே நேரத்தில் மொழிகள் அனைத்தும் எல் லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே சொந் தம். அதனால் மொழிகள் அனைத்தும் சமம் இதில் எதுவும் தெய்வீக மொழி இது என்றோ அல்லது இது தாழ்த்தப்பட்ட மொழி என்றோ உயர்வு தாழ்வு கிடையாது. அனைத்தும் இறைவனின் மொழி என்பதை யும் இதன்மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்து கின்றான். எனவே அவனே மனிதர்கள் அனைவருக்கும் கல்வியை கற்றுக் கொடுத் தான். பல மொழிகள் மூலம் பேசவும் கற்றுக் கொடுத்தான். கல்வி கற்பதை கற்றுக் கொடுப்பதையும் தூண்டுகின்றான். இதையே நம்முடைய தாய்த் தமிழ் முது மொழியில் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற சொல் அதாவது அகில உலகி லுள்ள அனைத்து மொழிகளும் அல்லாஹ் வுக்கே உரியது என்ற உண்மையான முது மொழி மிகப் பிரபல்யமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இப்படிப்பட்ட அல்லாஹ்வின் மொழிகளில் ஒரு மொழியான ஆங்கில மொழியை கற்கக் கூடாது என முட்டாள் தனமாக தீர்ப்பளித்ததன் விளைவு நமது சமுதாயம் கல்வியில் ஓராயிரம் ஆண்டுகள் பின்தங்கி விட்டதை இன்று நாம் கண் கூடா கக் காண்கின்றோம். அதேசமயம் நமது சகோதர சமுதாயமான பிராமண சமுதாயம் இதே ஆங்கிலக் கல்வியை புறக்கணிக்காமல் கருத்தூன்றிக் கற்றதன் விளைவு இன்று அவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி உடைய வர்களாகவும் இவர்களல்லாத எந்த உயர் பதவியும் இந்தியாவில் மட்டுமன்றி உலகள விலும் கிடையாது என்ற நிலையை உரு வாக்கிவிட்டார்கள் என்பதையும் நாம் காண்கிறோம். எனவே எனது அன்பான சமுதாயமே!

ஒன்றை அல்லாஹ் ஆகுமாக்கியிருக்க இந்த மூடமுல்லாக்கள் அதை ஹராமாக் கும் திமிரும் தெம்பும் எங்கிருந்து வந்தது.

அல்லது: அல்லாஹ் அனுமதிக்கா ததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணைத் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்ற னவா? மேலும், (மறுமையில் விசாரணைக் குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என் னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்ச யமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 42:21)

இந்தப் புரோகிதர்களுக்கு மறுமை யில்தான் தண்டனை என்ற வாக்கு அல் லாஹ்விடம் முன்னமே உள்ளதால் இவ்வுல கில் இவர்கள் உல்லாசமாக வாழ்கின்றனர். தண்டனையிலிருந்தும் தப்பித்து விட்டனர்.

இந்த புரோகிதர்களான முல்லாக்களை கண்மூடிப் பின்பற்றியதன் விளைவை அதாவது தண்டனையை மறுமையில் காண் பதற்கு முன்பே இவ்வுலகில் இந்தியாவில் நாம் நமது இஸ்லாமிய சமுதாயம் படும் பாட்டை கண்ணெதிரே காண்கின்றோம் அனுபவித்தும் வருகின்றோம். அடுத்ததாக இந்திய முஸ்லிம்களுக்கு இந்த புரோகிதர் களால் பொருளாதாரத்திலும் என்ன பின்ன டைவு ஏற்பட்டுள்ளது என்பதையும் காண்போம்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்லீக் கட்சியும் பாகிஸ்தான் முஸ்லிம்லீக் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்றும் பிரிந்துவிட்டது. இவ் வாறு பிரிந்த கட்சியில் பாகிஸ்தான் முஸ் லிம்லீக் தலைவராக காயிதேமில்லத் அவர் களும் பொறுப்பேற்றப் பிறகு கட்சியின் பொது நிதியும் பிரிக்கப்பட்டு நமது இ.யூ. முஸ்லீம்லீக் பங்காக ஏறக்குறைய 18 இலட்ச ரூபாய் வந்தது. அந்தப் பணம் 18 இலட்சத்தை இ.யூ.முஸ்லிம்லீக் கட்சிக்கு வழங்கும்போது அதன் பொறுப்பாளர்கள் பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடாகி விட் டது. எனவே எதிரி நாட்டின் அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம் என அதிதீவிர நாட் டுப் பற்றின் காரணமாக முட்டாள்தனமாக நேர்மையாக வந்த அந்த பங்கு பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். பாகம் பிரிக்கும் போது ஒரு பொதுச் சொத்தை எப்படிப் பிரிக்க வேண்டும் என எல்லாம் வல்ல அல் லாஹ் அல்குர்ஆனில் தெளிவாக்கி அதை ஆகுமாக்கி இருக்க இந்த மூடமுல்லாக்கள் இவர்கள் மீது கண்மூடித்தனமாக நம் பிக்கை வைத்திருந்த அப்பாவியான காயி தேமில்லத் அவர்களை தூண்டிவிட்டு நியா யமான பங்குத் தொகையை வாங்குவது ஹராம் எனக் கூறி தடுத்துவிட்டனர்.

அந்த நாளில் ரூ.18 இலட்சம் என்ற அந் தப் பணத்தைக் கொண்டு சமுதாயத்தின் சார்பாக எத்தனையோ நல்ல காரியங்களான சமுதாயக் கல்லூரிகள் பல நிறுவி இருக்கலாம். எண்ணற்ற வியாபார வளா கங்களையும் அநேக சமுதாய பொது நிறு வனங்களையும், சொத்துக்களையும் உரு வாக்கி இருக்கலாம். இன்றைக்கு இந்தியா வில் நமது சமுதாயம் கல்வியிலும், பொரு ளாதாரத்திலும் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம். அத்தனையும் அல்குர்ஆனுக்கு முரணான இந்த மூடமுல்லாக்களின் குருட் டுத்தனமான வழிகாட்டுதலால் தீர்ப்பால் சீரழிந்துவிட்டது. இப்போதும் இந்த முல் லாக்கள் தவ்ஹீதின் பெயராலும் சுன்னத் ஜமாஅத் என்ற பெயராலும் சமுதாய இளைஞர்களை பல இயக்கங்களாகப் பிரித்து வழிகெடுத்ததோடு மட்டுமல்லாமல் தாங்கள் சுகபோகமாக வாழ்வதற்கு தூய இஸ்லாம் அல்லாத மத்ஹபு மற்றும் தவ்ஹீத் என்ற போலி மார்க்கத்தின் பெயரால் எதை யும் செய்வார்கள். இனியும் இவர்களை புறக்கணிக்காவிட்டால் இம்மையில் பயங் கரவாத பாஜகவினராலும் சங்கிகளாலும் நமது சமுதாயம் மிகப்பெரிய துன்பத்திற் குள்ளாகும் நிலை ஏற்படத்தான் செய்யும். அது போக மறுமையில் நரகத்திலும் இந்தப் புரோகிதர்களோடு நாமும் சேர்ந்து எரிய நேரிடும் என சமுதாயத்தை மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம்.

இதோ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை :

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறு வார்கள். (அல்குர்ஆன் 33:66)

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரிய வர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்’ என் றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்33:67)

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர் களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப் பாயாக!’ என்பர். (அல்குர்ஆன் 33:68)

அன்பானவர்களே!

நாம் நேரான வழியைப் பெறுவதற்கு அல்குர்ஆனையும் புகாரீ முஸ்லிம் போன்ற நபிமொழி நூல்களையும் நமது தாய் மொழி யான அழகுத் தமிழில் நேரடியாகப் படித் துணர்வோம்.

பிரிவுகளற்ற ஒன்றுபட்ட நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய ஜமாஅத்தான ஜமா அத்துல் முஸ்லிமீன் (ஆதாரம்: அல்குர்ஆன் 22:78, புகாரி 3606,7084 நபிமொழி) என்ற ஜமாஅத்தில் ஒரே அமீரின் கீழ் நாம் அனை வரும் ஒன்றிணைவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

வஸ்ஸலாம்.

புரோகிதர்கள் என நாம் கூறக் காரணம். பாதிக்கப்பட்டவர்கள் தீய வார்த்தைகள் கூறலாம் என்ற அல்குர்ஆன் தீர்ப்பேயாகும்.

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர(வேறு யாரும்) வார்த்தைகளில் தீய வற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அல்லாஹ் நன்கு செவியுறு வோனாகவும் யாவற்றையும் அறிபவனாக வும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:148)

Previous post:

Next post: