நாளை மறுமையில் யார் யாருடன் இருப்பார்கள்?

in 2023 பிப்ரவரி

நாளை மறுமையில் யார் யாருடன் இருப்பார்கள்?

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

காத்தமன் நபிய்யீன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் மட்டுமே:

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் கிடையாது. வேறொரு வழிகாட்டியும் கிடையாது. (ஆதாரம்:அல்குர்ஆன் 33:40வது வசனம்)

நபி(ஸல்) அவர்களை விட்டுவிட்டு அவர்களுக்குப் பின் குலாம் அஹ்மது காதியானியை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட காதியானிகள் பெரும் பொய் யர்களும் மறுமை வாழ்வை கேள்விக் குறியாக்கிய ஏமாளிகளும் ஆவர்.

அதேபோன்று நபி(ஸல்) அவர்களை விட்டுவிட்டு அவர்களுக்குப் பின்வந்த நான்கு இமாம்களை அவர்களை தங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு 4 மத்ஹபுகள் ஏற்படுத்தி ஹனபி, ஷாஃபி, eமிஉ., தங்களை அழைத்துக்கொண்டோரும், காதியானிகளைப் போன்று பொய்யர்களும் மறுமை வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஏமாளிகளுமாவார்.

அதே போன்று நபி(ஸல்) அவர்களை தங்களின் வாயளவில் ஏற்றுக்கொண்டு புரோகிதர்களான இயக்கத் தலைவர்களை யும் அவர்கள் கூலிக்கு அமர்த்திய புரோகி தர்களையும் தங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்ட இயக்க பிரிவினை வாதிகளும் மறுமை வாழ்வை கேள்விக்குறி யாக்கிய ஏமாளிகளேயாவர்.
(ஆதாரம்: அல்குர்ஆன் 11:118,119)

உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவ ராக ஆக்கியிருப்பான். (அவன் அப்படி ஆக்க வில்லை) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 11:118)

(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர, இதற்கா கவே அவர்களைப் படைத்திருக்கிறான். நிச்சயமாக நான் ஜீன்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன் என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும். (அல்குர்ஆன் 11:119)

யார் தங்களை ரஹ்மத்தல்லில் ஆல மீனாகிய இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை மட்டுமே தங்களின் வழிகாட்டியாகவும், நபியாகவும், இமாமாகவும் ஏற்றுக்கொண்டு அவர்களை மட்டுமே பின்பற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ அவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்களும் மறுமையில் சுவனம் செல்ல வாய்ப்பு உள்ள புத்திசாலிகளும் ஆவார்கள்.

இந்தப் பதிவு ஓர் எச்சரிக்கைப் பதிவு மட்டுமே தீர்க்கமான தீர்ப்பல்ல!

இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (என்றும் கூறினார்) அல்குர்ஆன் 36:17

எனவே எனது அன்பின் சகோதரர்களே! அவரவர்களின் மரணத்திற்குள் மேற்கண்ட பிரிவினை இயக்கங்களை விட்டும் 100 சதவிகிதம் விலகி நபி(ஸல்) அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீன் (புகாரி 7084) என்ற ஜமாஅத்தில் ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக ஒன்றி ணைய தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ளும் அன்பர்களுக்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்!

அத்தகைய புத்திசாலிகள் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரை யும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!

Previous post:

Next post: