பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!

in 2023 பிப்ரவரி

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை

அல்லாஹ்விடம் வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் :

நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்தே அவனது பதிவேட்டில் இவ்வாறே இருந்தது. (அல்குர்ஆன் 9:36) அறியாமைக்கால அரபியர், இயற்கையாக இறைவன் ஏற்படுத்தியுள்ள சந்திர ஆண்டையே மதித்து வந்தார்கள். ஆனாலும் ஒரு ஆண்டுக்கு பன்னிரெண்டு மாதங் களும், பதினைந்து நாட்களும், எனக் கணக்கிட்டு வந்தார்கள். ஆனாலும் மாதங்களைத் தமது விருப்பத்திற்கு ஏற்ப தள்ளி வைப்பதாலும், முன்பின்னாக மாற்றி வந்ததாலும், சில சமயம் ஓராண்டு என்பது பதின்மூன்று, அல்லது பதினான்கு மாதங்களாகக் கூட அதிகரித்ததுண்டு. இந்தக் குளறுபடிகளுக் கெல்லாம் இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. (ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:261-269)

அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை:

அவற்றில் நான்கு (மாதங்கள்) புனித மானவை; இது தான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணைவைப்பாளர்கள் அனைவரும் (ஒன்று சேர்ந்து) உங்களுடன் போர் புரிவதைப் போன்று நீங்கள், அனை வரும் (ஒன்றுசேர்ந்து) அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என் பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36) மூர்க்க குணம் கொண்ட அறியாமைக் கால அரபியர், இயற்கையாக இறைவன் ஏற்படுத்தியுள்ள ஆண்டின் மாதங்களையும், போர் தடை செய்யப்பட்ட புனிதமான, துல்கஃஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களையும் போர் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாக ஏற்றி ருந்த அவர்கள் தமது சுய விருப்பத்துற் கேற்ப அவற்றை மாற்றி மாற்றிக் கடைப் பிடித்து வந்தார்கள். உதாரணமாகத் தொடர்ந்து சண்டையிலும், சச்சரவிலும் ஈடுபட்டுவந்த அக்கால அரபியர் புனித மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தில் போர் புரிதல் கூடாது எனும் விதியை அறிந்திருந்தார்கள். ஆனாலும் அம்மாதத்தில் போர் புரியவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் உடனே “இது முஹர்ரம் மாத மல்ல’; என்று கூறித் தாங்கள் விரும்பும் நாள் வரை முஹர்ரம் மாதத்தைத் தள்ளி வைத்து விடுவார்கள். இவ்வாறே ஹஜ்ஜுடைய மாதத்தைக்கூட தமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். (ஃபத்ஹுல் பாரீ, அல்மின்ஹாஜ், தஃப்சீர் இப்னு கஸீர் : 4:261-269) அதனைச் சீர் செய்வதற்காகவே! அன்றைய,

ஆதிநாளின் அசல் நிலைக்குத் திரும்பிய ஆண்டுக் கணக்கு :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜத்துல் விதாவின் போது (யவ்முன் நஹர்) அன்று மினாவில் வைத்து நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிகு உரையில், அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த ஆதி நாளில் எப்படி இருந்ததோ அந்த அசல் நிலைக்கே இன்று திரும்பி வந்துவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரெண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையா கும். அவை துல்கஃஅதா, துல்ஹஜ், முஹர்ரம், மற்றும் ஜமாதுல் ஆகிருக்கும், ஷஃஅபானுக்கும், இடையிலுள்ள முளர் குலத்தாரின் ரஜப் மாதமாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு உமர்(ரழி), புகாரி: 4406, 5550,4662,7447,3197, முஸ்லிம் : 3467, 3468, 4477, ஃபத்ஹுல் பாரீ, அல்மின் ஹாஜ், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம்: 261-269, 262 சிறு குறிப்பு : 87) அடுத்து பிறைக் கணக்கின்படி ஒரு மாதத்திற்கு :
கூடியபட்சம் முப்பது நாட்கள் என்றார்கள்:

ஒரு மாதம் என்பது கூடியபட்சம் முப்பது நாட்களும், குறைந்தபட்சம் இருபத்தொன்பது, நாட்களுமாகும் என்று அல் லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), உம்மு சலமா(ரழி), அனஸ்(ரழி) ஆகியோர். (புகாரி: 1907-1911,1913)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பிறை (களின் படித்தரங்க)ளை மனித சமுதாயத் திற்கு காலங்காட்டிகளாக அமைத்துள் ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப் பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப் பதைக் கொண்டு நோன்பை நிறைவு செய் யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக் கப்படும் போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். மாதம் என்பது முப்பதை விட அதிகமாவ தில்லை என்று (அறிவித்தவர் : இப்னு உமர் (ரழி) ஸஹீஹ் இப்னு ஹுஸைமா:1789) மேலும்,

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா, அதாவது, அவர்கள் அறியாதிருந்தது பல மாதங்கள், வருடங்களுக்கான துல்லியமான விண்ணியல் கணித கணக்கிட்டு முறையை மாத்திரமே) ஆவோம். எழுதுவதை நாம் அறியமாட்டோம். (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும், இப்படியும், இப்படி யும், (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும் என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும், இப்படி யும், இப்படியும், அதாவது முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று கூறினார்கள். இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர் களில் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், அதாவது முப்பது நாட்கள் எனும் விளக்கக் குறிப்பு இடம் பெறவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்: 1970) இதுகுறித்து புகாரியில் வரும் மற்றுமோர் அறிவிப்பில்;

நாம் துல்லியமான விண்ணியல் கலையை அறியாதவர்களாகவும் அதனை எழுதத் தெரியாதவர்களாகவும் உள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று. புகாரி: பாகம் 2, பக்கம் 587, பாடம்: 13.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமுதாயம் ஆவோம். விண்(ணியல்) கலையையும் அறியமாட்டோம். (அதை பல மாதங்களுக்கு வருடங்களுக்கு என வகுத்து) எழுதுவதை(யும்) அறியமாட்டோம். புகாரி : 1913) ஆனாலும் அந்த அந்த நடப்பு மாதங்களைக் கணக்கிடுவதையும், வரவிருக்கும் புதிய மாதத்தின் ஆரம்பத்தையும் சரியாக அறிந்திருந்தார்கள். அத்துடன் வாழ்வியலுக்குத் தேவையான சாதாரண மான கணக்குகளையும் நபியவர்கள் அறிந் திருந்தார்கள். யுத்த களத்தில்,

எத்தனை ஒட்டகம் அறுக்கப்படுகிறது என் பதை அறிந்து மக்கா நகர படையினரின் அளவு எவ்வளவு என்பதை சொல்கிறார்கள்:

மக்காபடை புறப்படும்போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும், 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவுசெய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒரு நாளைக்கு ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாளைக்கு பத்து ஒட்டகம் என அறுத்து படையினருக்கு உணவளித்தனர். (அர்ரஹீக் அல்மக்தூம் : 257) அப்போது:

பத்ருடைய நீர்நிலையில் மக்கா படைகளுக்காகத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், குறைஷகளைப் பற்றி நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். அவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டார்கள். மிக அதிகமாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினார்கள். அவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார் கள்? என்று நபியவர்கள் கேட்க அதற்கு அவர்கள் ஒரு நாளுக்கு ஒன்பது மறு நாளுக்கு பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள் என்று கூறினார்கள். அப்போது அல் லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள், மக்கா படையினர் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம் என்றார்கள். (அர்ரஹீக் அல்மக்தூம் : 262,263)

ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்பதை விரல்களால் எண்ணி சொல்கின்றார்கள்:

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம். எழுதுவதை நாம் அறியமாட்டோம், (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும், இப்படியும், இப்படியும், அதாவது முப்பது நாட்களாகவும் இருக்கும் என்று கூறினார்கள். இந்த ஹதீத் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மேற்கண்ட ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், அதாவது முப்பது நாட்கள் எனும் விளக்கக் குறிப்பு இடம் பெறவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்: 1970) அதுபோலவே, ஒரு மாதத்திற்கு,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரமழான் மாதம் குறித்துக் கூறுகையில், மாதம் என்பது இருபத்தொன்பது நாட் களா(கவும் இருக்)கும். மாதம் என்பது இவ் வளவு, இவ்வளவு, இவ்வளவுதான் என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) அவர்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 1960) மேலும்,

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஒரு மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும் என்று கூறினார்கள். இந்த ஹதீதின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷிஐபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டி, மூன்றாவது தடவையில் பெரு விரலை மடித்துக் கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 1969) மேலும் அறிவிப்பவர்கள்: உம்மு ஸலமா(ரழி), அனஸ்(ரழி), ஆயிஷா (ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: 1910, 1911, 2468, 2469, 378, 4785, 4786, 4788, 4789. 5262, 5263, நஸயீ: 2104) அடுத்ததாக:]

கத்ருடைய நாள் எப்போது என்பதை விரல்களால் கணக்கிட்டுச் சொன்னார்கள் :

நாம் கத்ருடைய நாளைப் பற்றி நபிய வர்களிடம் நினைவுபடுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன? என்று வினவினார்கள். அதற்கு 22 நாட்கள் முடிந்துவிட்டன. மேலும் எட்டு நாட்கள் மீதும் உள்ளன என்று நாம் கூறினோம். இல்லை மாறாக ஏழு நாட்களே மீதம் உள்ளன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இல்லை மாறாக எட்டு நாட்கள் மீதும் உள்ளன என அவர்கள் கூறினார்கள். இல்லை மாறாக ஏழு நாட்களே மீதம் உள்ளன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இல்லை மாறாக எட்டு நாட்கள் மீதம் உள்ளன. இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டது என்று நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன் கையில் இருபத்தொன்பது நாட்கள் வரை எண்ணினார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ருடைய நாளைத் தேடுங் கள் எனக் கூறினார்கள். (இப்னு குஸை மாஹ் : 2024) இதுபோன்ற அன்றாடம் தேவையான சாதாரண கணக்குகளை அறிந்திருந்தார்கள். மேலும்,

சிறு வயதிலும், வாலிபத்துக்கு முன்னரும் ஆடு மேய்த்த நபியவர்கள்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இறைத் தூதர்(ஸல்) அவர்களுடன் மர்ருழ் ழஹ்ரான் எனுமிடத்தில் (கபாஸ் எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்தைப் பறித்துக் கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், இதில் கறுப்பானதைப் பறியுங்கள், ஏனெனில், அதுதான் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். அப்போது தாங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா? என்று கேட்கப்பட்டது. அவர்கள், ஆம்! அதை மேய்க்காத இறைத் தூதரும் உண்டா? என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி: 5453, 3406, முஸ்லிம் : 4166, அர்ரஹீக் அல்மக்தூம் 77,81) எத்தனை ஆடுகளை ஓட்டிச் சென்றோம். இப்போது எத்தனை ஆடுகள் இருக் கின்றன என்ற எண்ணிக்கை விபரமில்லாத இடையர்கள் ஆடுகளை மேய்க்க இயலாது.

வெற்றிப் பொருட்களை நூறு நூறாக எண் ணிக் கொடுத்தார்கள்:

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார்: ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தாரும், கத்ஃபான் குலத்தாரும், மற்றவர்களும், தமது கால் நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க்களத்தில்) நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுப் (பிரிந்து) பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இறுதியில் நபி(ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள். அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்து விடாமல் (இடைவெளி இருக்குமாறு) பார்த்துக் கொண்டார்கள். தமது வலப்பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைக்க அவர்கள், இதோ வந்துவிட்டோம், இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம், (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள் என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் தமது இடப்பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்) இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம். இறைத்தூதர் அவர்களே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பைளா என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்று கூறினார்கள். பிறகு, இணைவைப்பவர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி(ஸல்) அவர்கள் பெற்றார்கள். அவற்றை உள்ளங்கள் இணக்க மாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களாகிய முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களுக்கிடையேயும் பங்கிட்டார்கள். அவற்றில்,

அபூ ஸுஃப்யான்(ரழி) அவர்களுக்கு நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள், அவர்களது அடுத்த மகன்;

எஜீது(ரழி) அவர்களுக்கும் நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள், அவர்களது அடுத்த மகன்:

முஆவியா(ரழி) அவர்களுக்கும், நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள்.

ஹக்கீம் இப்னு ஹிஸாம்(ரழி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள்.

ஸஃப்வான் இப்னு உமைய்யா(ரழி) அவர்களுக்கு மூன்று தடவை நூறு, நூறாக, முன்னூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.

அக்ர உபின் ஹாபிஸ்(ரழி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள்.

உயைனா பின் ஹஸன் ஃபஸாரீ(ரழி) அவர்களுக்கும் நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள்.

இன்னும் சிலருக்கும் அதேபோன்று நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். மற்றும் சிலருக்கு ஐம்பது, நாற்பது என வழங்கினார்கள். மற்றும் காலாட்படை வீரர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் அல்லது நாற்பது ஆடுகள், வழங்கப்பட்டன.

குதிரை வீரருக்கு பனிரெண்டு ஒட்டகங்கள், அல்லது நூற்றி இருபது ஆடுகள் வழங்கப்பட்டன. அவற்றில்,

அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே, அன்சாரிகள் (சிலர் கருத்து வேறுபட்டு) ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால், (பிரச்சனை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன என்று (மனக் குறையுடன்) பேசிக் கொண்டார்கள்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொள்ளும் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இச்செய்தி என்ன? (உண்மைதானா) என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மைதான் என்பது போல்) மெளனமாயிருந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டு செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சொந்தமாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள். அன்சாரிகள், ஆம்(நாங்கள் அதைத் தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வெறொரு பள்ளத்தாக்கில் செல்வார்களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு ஸைத் (ரஹ்) (இதைத் தமக்கு அறிவித்த தமது பாட்டனரான அனஸ் (ரழி) அவர்களிடம்) அபூ ஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? என்று கேட்க, அனஸ்(ரழி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களை விட்டு எங்கே போவேன் என்று பதிலளித்தார்கள். (புகாரி: 4330- 4337, 3778, 3779, 3793, 3150, அர்ரஹீக் அல்மக்தூம்: 513515) நூற்றி இருபது, நூறு, ஐம்பது, நாற்பது என எண்ணத் தெரியாதிருந்தால் இது எவ்வாறு சாத்தியமாகும்.

—————————————–

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்.

 1. நபியின் வீடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள் எதற்காக நுழையலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
  உணவிற்காக அனுமதி அளிக்கப்பட்டால். அல்குர்ஆன் 33:53
 2. தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் எங்கு இருக்காது?
  மதீனாவில். புகாரி : 1879
 3. மதீனாவாசிகளை சூழ்ச்சி செய்பவர்கள் நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
  தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து போவார்கள். புகாரி: 1877
 4. தேவைக்கு மேல் மக்களிடம் யாசிப்பவரின் நிலை எவ்வாறு இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  தன் முகத்தில் சிறிதளவு சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். புகாரி : 1474
 5. தீனத்துல் கபால் என்றால் என்ன என நபி(ஸல்) கூறினார்கள்?
  நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாசிகளின் சீழ். முஸ்லிம் : 4075
 6. சொர்க்கம் எதனால் சூழப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  சிரமங்களால். முஸ்லிம் : 5436
 7. அல்குர்ஆனை மலைமீது இறக்கியிருந்தால் அந்த மலையின் நிலை என்ன வாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
  பிளந்து போகும். அல்குர்ஆன் 59:21
 8. சொர்க்கத்தில் உள்ள ஒரு மரம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
  அதன் நிழலில் நூறு வருடம் பயணிக்க வல்லது. முஸ்லிம் 5441
 9. சொர்க்கவாசிகளின் குணம் எவ்வாறு இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அனைவரது குணமும் ஒரேமாதிரியாகும்.  முஸ்லிம் : 5450
 10. வலது கையில் பதிவேடு வாங்கியவர் என்ன கூறுவார்?
  எனது பதிவேட்டை வாசித்து பாருங்கள். அல்குர்ஆன் 69:19
 11. வாங்கும் நோக்கமின்றி அதிக விலை கேட்பதை நபி(ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?
  தடை செய்தார்கள். முஸ்லிம் 3042
 12. தானியங்களில் எந்த அளவு வரை ஜகாத் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  ஐந்து “வஸ்க்”குகளை விட குறைவானதற்கு.  முஸ்லிம் : 1780
 13. மதீனாவாசிகள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  துல்ஹுலைஃபா. புகாரி:133
 14. நல்ல கனவு யாரிடமிருந்து வரும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  அல்லாஹ்விடமிருந்து. புகாரி: 6984
 15. ஷைத்தானிய செயல்கள் எது என அல்லாஹ் கூறுகிறான்?
  மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள். அல்குர்ஆன் 5:90
 16. பயிற்சியளிக்கப்படாத குதிரைகளின் பந்தய தூரம் எவ்வளவு என நபி(ஸல்) அவர்கள் வரையறுத்தார்கள்?
  ஒரு மைல். புகாரி 2870
 17. நபி(ஸல்) அவர்களின் பந்தயத்தில் தோற்றுப்போன ஒட்டகத்தின் பெயர் என்ன?
  அஸ்பா. புகாரி : 2872
 18. மறுமை நாளின் அடையாளங்களில் சிலது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மது அருந்தப்படுவதும், வெளிப்படையாக விபச்சாரம் நடப்பதும், அறியாமை நிலைத்துவிடுவதும், கல்வி மறைந்து விடுவதும். புகாரி : 80
 19. குளிப்பு கடமையானவர் எதைச் செய்து விட்டு தூங்கலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  உளூச் செய்துவிட்டு. புகாரி : 288
 20. நரகம் எதனால் சூழப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  மன இச்சைகளால். முஸ்லிம் : 5436

Previous post:

Next post: