இமாம்களின் நிலையில் மாற்றம் வருமா?

in 2023 ஏப்ரல்

இமாம்களின் நிலையில் மாற்றம் வருமா?

அன்சர் சரீப் பின் R.A. மாலிக்

(ஆகவே மூஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்க மாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்ப தில்லை   (அல்குர்ஆன் 7:55)

மேற்கூறிய வசனத்தில் இறைவனிடம் பிரார்த்தனையை பணிவாகவும், அந்தரங்க மாகவும் (அதாவது நம் உள்ளமும் அல்லாஹ்வும் மட்டும் அறிவது போல்) தான் செய்ய வேண் டும் என்று அல்லாஹ் மிக தெள்ளத் தெளிவாக கூறிவிட்டான். இதில் நாம் வரம்பை மீறக் கூடாது. ஆனால் இங்குள்ள நம் இமாம்கள் தொன்றுத்தொட்டு பிரார்த்தனையை தொழுகைக்கு பயன்படுத்தும் ஒளிப்பெருக்கி (மைக்)கிலே சப்தமாக செய்கிறார்கள். அதற்கு இந்த ஜமாத்தார்கள் சப்தமாக ஆமீன் கூறுகிறார்கள். இது வரம்பு மீறுதலே ஆகும். நிச்சயமாக வரம்பு மீறிய வர்களை  அல்லாஹ்  நேசிப்பதில்லை.

இங்குள்ள இமாம்கள் இதுபோல பிரார்த் தனைகளை சப்தமாக செய்வதற்கு நாம்தான் வழிவகுத்துக் கொடுத்தோம். ஆம்! அவர் எல் லாம் அறிந்தவர். அரபியில் நன்கு கற்று அறிந் தவர் அவர் பிரார்த்தனை செய்தால்தான் அல் லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற மூட நம்பிக் கையும், அறிவிலித்தனமும்தான் இதற்கு கார ணம். இதை இந்த இமாம்கள் வலுவாக பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். நாம் அவர்களை செம்மறி ஆட்டு மந்தையைப் போல் பின் தொடருகிறோம். அவர்களும் இதை பயன் படுத்தி ஃபாத்தியா ஓதியும், பள்ளியில் மந்திரித் தும், தாயத்தைக் கட்டியும் கஃப்ருஸ்தானில் ஓதியும், பின் இறந்தவர் வீட்டு வாசலில் நின்று ஃபாத்தியா (பிரார்த்தனையை) சப்தமாக ஓதி யும், பின் இறந்தவரின் வீட்டில் அவர்களின் மூதாதையர்கள் பின்பற்றிய (3ஆம் நாள், 10ஆம் நாள், 20 மற்றும் 40ஆம் நாள், வருட ஃபாத்தியா) ஓதியும் காசு பார்க்கிறார்கள். இவை அனைத்துமே வரம்பு மீறுதலும் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதும்  ஆகும்.

மேலும் “”அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைப் பின்பற்றுங்கள்என்று அவர் களிடம் கூறப்பட்டால் அவர்கள் “”அப்படி யல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில்(நடக்க) கண்டோமோ, அந்த வழி யையே நாங்களும் பின்பற்றுகிறோம்என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதை யர்கள் எதையும் விளங்காதவர் களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?   (அல்குர்ஆன் 2:170)

இன்னும் நான் இறக்கிய (வேதத்)தை நம்புங்கள். இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது. நீங்கள் அதை (ஏற்க) மறுப் பவர்களில் முதன்மையானவர்களாக வேண் டாம். மேலும் என் திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகி) வருவீர்களாக.    (அல்குர்ஆன் 2:41)

இமாம்கள் தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வருங்காலங்களில் இந்த இமாம்களின் நிலை மாறவேண்டும் என்றால் நாம் மதரசா கல்வி முறையில் மாற்றம் கொண்டு  வரவேண்டும். இந்த நிலை மாற மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் மார்க்கக் கல்வி கற்கும் போதே “”தொழிற்கல்வியை ஒரு பாட மாக வைத்து பல தொழில்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றும் வியா பாரம் செய்வது (வணிக மேலாண்மை யற்விஷ்ஐeவிவி னிழிஐழிஆeதுeஐமி) பற்றியும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும்.

இவ்வாறாக நாம் அவர்களை வழிநடத்தினால் இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் அவர்கள் இந்த செயல்களில் இருந்து விடுபட ஏதுவாக இருக்கும். மேலும் நம் சமுதாயமும் முன்னேற்றம் காணவும் இது ஏதுவாக இருக்கும். சிந்திப்போம்! இன்ஷா அல்லாஹ். ஒன்றுபட்டு செயல்படுத்துவோம்.

Previous post:

Next post: