இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

in 2023 ஏப்ரல்

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

K.M.H. .அபூ அப்தில்லாஹ்

இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர்தக்லீத்என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணானவற் றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரண்பட் டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

பரீட்சையில்காப்பிஅடிப்பதேதக்லீத்‘!

அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியது இத்தகை யோரைத்தான். இவர்களே அறிவுடையவர்கள்.  (அல்குர்ஆன் 39:18)

என்ற இந்த இறைக் கட்டளைப்படி ஒருவரின் சொல்லைக் கேட்டு அல்லது எழுத்தைப் பார்த்து, அதில் அழகானதைஅதாவது குர்ஆன், ஹதீதுக்கு ஒத்ததை எடுத்துப்  பின்பற்றுவது  தக்லீத்  ஆகாது.

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்திக்ரைஉடையவர்களிடம் கேளுங்கள்‘. (அல்குர்ஆன் 16:43) என்ற வசனத்தில் ஃபஸ்அலூ அஹ்லத்திக்ரீகேட்டு விளங்கிச் செயல்படச் சொல்கிறானே அல்லாமல், “கல் லிதூ அஹ்லத்திகீரி?’ என்று திக்ரை உடைய வர்களைத்தக்லீத்செய்யுங்கள் என்று அல்லாஹ்  சொல்லவில்லை.

கேட்டு விளங்குவதற்கும், கண்மூடிப் பின்பற்றுவதற்கும் (தக்லீத்) மலைக்கும் மடு வுக்கும்  உள்ள  வித்தியாசம்  உண்டு.

கணக்குத் தெரியாத மாணவன் ஆசிரியரிடம் கேட்பது என்றால், அந்தக் கணக் கின் ஆரம்பம் முதல் இறுதி விடை வரை எப்படிப் போடுவது என்பதைத் தெரிந்து, தனது மூளையில் ஏற்றிக் கொள்வதைத்தான் குறிக்கும். போடும் முறை அறியாமல் இறுதி யில் வரும் விடையை மட்டும் தெரிந்து கொள்வது, கணக்கை அறிந்து கொண்டது ஆகாது. கண்ணை மூடிக்கொண்டு கடைசி யில் உள்ள விடையை மட்டும் அறிந்து கொள்வது போன்றதுதான்தக்லீத்ஆகும். இது தடை செய்யப்பட்டது என்பதை எந்தப்  புத்திசாலியும்  மறுக்கமாட்டான்.

பரீட்சை எழுதும் மாணவர்களில் திறமை மிக்கவனிடம், மந்த புத்திக்காரன், பரீட்சைக்கு முன் கேட்டு, கேள்விகளை யும், விடைகளையும் புரிந்து மனதில் இருத் திக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுது வதே அவனுக்கு உண்மையான நன்மை யைத் தரும். அவன் அந்த மாணவனைப் பார்த்து காப்பி அடிப்பது. உண்மையில் பரீட்சை எழுதியது ஆகாது. பிடிபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவான். “காப்பிஅடித்து பாஸாகி விட்டாலும் ஆற்றல் மிக்க வனாக  ஆகமுடியாது.

மனிதர்களால் நடத்தப்படும் பரீட்சை களில் அவர்களை ஏமாற்றிகாப்பிஅடிக்க வாய்ப்பாவது கிடைக்கும். ஆனால் அல்லாஹ்(ஜல்) நடத்தும் இந்த வாழ்க்கைப் பரீட்சையில் அல்லாஹ்வை ஏமாற்றிகாப்பி  அடிக்கவும் முடியாது என்பதை முஸ்லிம் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். “தக்லீத்என்பது வாழ்க்கைப் பரீட்சையில்காப்பிஅடிப்பதுதான். ஆகவேமுகல்லிதுகள்எப்படி வெற்றி பெற முடி யும்  என்பதை  அவர்களே  சிந்திக்கட்டும்.

வெள்ளைத் தாளில் கருப்பு மையில் எழுதுவது மட்டும்தான் பரீட்சை என்று பரீட்சையைப் பற்றி விளங்காமல் சொல்ப வர்கள் மட்டுமே இந்தக் கண்மூடிப் பின்பற் றலை (தக்லீதை) சரிகாண முடியும். அதல் லாமல் மாணவனுடைய திறமையை அறிந்து கொள்வதற்காகத்தான் பரீட்சை நடத்தப்படுகிறது என்பதை அறிந்த நடுத்தர அறிவு படைத்தவனும் இதை ஒப்புக் கொள்ளமாட்டான். “தக்லீதின்நிலை குறித்து மேலும் விளக்க அவசியப்படாது என்றே  கருதுகிறோம்.

விளங்கிச் செயல்படுவதுதக்லீத்  அல்ல!

இந்த அடிப்படையில் பிக்ஹு சட்டங் களைத் தந்த இமாம்கள், ஹதீத் நூல்களைத் தந்த இமாம்கள் அதற்குப் பின்னால் வந்த பல நூறு இமாம்கள், ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீத்படி இருக்கின்றதா? என்று பார்த்து விளங்கி ஏற்று நடப்பதை அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கிறான். அதேபோல யாருடைய கூற்றாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீ துக்கு முரணாக இருந்தால் அதைப் புறக் கணித்தலே அல்லாஹ்(ஜல்)வுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருக்கும். இவை களுக்கான பல ஆதாரங்களை நமது இதழில் பல ஆயத்துக்கள் ஹதீத்களின் அடிப்படை யில் காட்டியுள்ளோம். அல்லாஹ் (ஜல்) விளங்க  அருள்  புரிவானாக!

குர்ஆனை அனைவரும் விளங்கிக் கொள்வதே கட்டாயக்  கடமை:

தக்லீதைநியாயப்படுத்துவோர் கூறக் கூடிய அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

அதாவது குர்ஆனையும், ஹதீதையும் உங்களைப் போன்ற பாமர மக்களால் விளங்க முடியாது. எங்களைப் போன்ற மெளலவிகளின் கூட்டம்தான் விளங்க முடியும். நாங்கள் விளங்கி எதைச் சொல்கி றோமோ அதை நீங்கள் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் அவர்கள்தக்லீதை  நியாயப் படுத்த எடுத்து வைக்கின்ற அடுத்த ஆதாரம். இது சரிதானா? என்பதைக் குர்ஆன், ஹதீத் வழியில்  ஆராய்வோம்.

இப்படி அல்லாஹ்(ஜல்)வோ அவனது ரசூல்(ஸல்) அவர்களோ சொல்லி இருந்தால் எவ்வித மறுப்பும் இன்றி ஒவ்வொரு முஸ்லி மும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஆனால் குர்ஆனில் எந்தப் பக்கத்திலும் அப் படிப்பட்ட அறிவிப்பைப் பார்க்க முடிய வில்லை. ஹதீதிலும் பார்க்க முடியவில்லை. குர்ஆனிலும், ஹதீதிலும் இல்லாத இந்த விதியை விதித்தது யார்? அதுவும் தெரியாது. அதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதே முஸ்லிம்களின் தலை எழுத்துப் போலும்,

ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத் தையும் என்னை வணங்குவதற்காக அன் றிப் படைக்கவில்லை‘.  (அல்குர்ஆன் 51:56)

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற் காகவே, அவன் மரணத்தையும் வாழ்வை யும் படைத்தான். (அல்குர்ஆன் 67:2)

இந்த இரு வசனங்களின்படி அனை வரும் அல்லாஹ்வை வணங்கக் கடமைப் பட்டுள்ளனர். அனைவரும் சோதனைக்கு உட்பட்டவர்கள், யாருக்கும் விதிவிலக் கில்லை என்பது  தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை என்றால் அனைவரும் விளங்கித் தான் ஆகவேண்டும். யாரும் யாரையும் காப்பி அடிக்கக் கூடாது. இந்த அடிப்படை யில் முயற்சி செய்தால் குர்ஆனையும், ஹதீ தையும் அனைவரும் விளங்கிக் கொள்ள முடியும் என்பதே உண்மையான பேச்சாகும்.

நம்முடைய வி­யத்தில் யார் முயற் சிக்கிறார்களோ அவர்களுக்கு நம் வழி களை எளிதாக்குவோம். (அல்குர்ஆன்29:69)

இதற்கு மாற்றமாகச் சொல்கிறவர்கள் ஏதோ சுயநலத்திற்காகவே இதை மறைத்துச் சொல்கிறார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும்.

குர்ஆன் விளங்கிக் கொள்ள எளிதா னது, தெளிவானது, சந்தேகத்திற்கு இடமில் லாதது என்பதற்கு குர்ஆனில் பல வசனங் களே சான்றுகளாக இருக்கின்றன. (அல்குர் ஆன் 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2, 54:17-22, 32,40)

குர்ஆனை நம்புவதா? மனிதக் கூற்றுக் களை நம்புவதா? பொதுமக்களாகிய நீங் களே  சிந்தித்து  முடிவு  செய்யுங்கள்.

உண்மை என்னவென்றால் மார்க்கத் தைக் கற்றுக்கொள்ள நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையை விட்டு, மனித அபிப்பிராயங்களின்படி கல்வித் திட் டத்தை அமைத்துக் கொண்டதால் இந்த சமுதாயத்திற்கு இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறை, முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண் ணும் அவர்கள் பத்து வயதினர்களான இளஞ்சிரார்களாக இருந்தாலும் எண்பது வயது கிழடுகளாக இருந்தாலும் கொஞ்சங் கொஞ்சமாக மூன்று அல்லது நான்கு ஆயத் துக்களாக நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் நின்றும் மூன்று அல் லது நான்கு ஹதீத்களாகப் படிப்படியாக அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு குர்ஆனையும், ஹதீதையும் எளிதான முறை யில் கற்றுக்கொள்வதாகும். இந்த மிக அழ கான முறையை விட்டு, சமுதாயத்தில் வலு வில்லாத ஏழைகளான ஒரு சாராரின் குழந் தைகளை (சமுதாயத்தில் 5% கூட இருக் காது) ஆரம்பத்திலிருந்தே தன்நம்பிக்கை அற்றவர்களாகவும், மார்க்கம் தெரியாதவர் களை சார்ந்திருப்பவர்களாகவும் ஆக்கும் சூழ்நிலையில் மார்க்கக் கல்வி என்ற பெய ரால் சமுதாயத்தில் 5% கூட இல்லாத ஏழைச் சிரார்களுக்கு குர்ஆன்,  ஹதீதோடு மனித அபிப்பிராயங்களையு ம் கலந்து எழு தப்பட்டபிக்ஹுநூல்களைக் கற்றுக் கொடுக்கும் முறையை நாடு முழுவதும் உண்டாக்கி வைத்திருக்கிறோம். இந்த முறை மாறி சமுதாயத்தில் உள்ள ஒவ் வொரு ஆணும், பெண்ணும், குர்ஆனையும், ஹதீதையும் கற்றுக் கொள்ளும் நபி(ஸல்) அவர்களது காலத்து கல்வித் திட்டம் அமுல் படுத்தப்படாதவரை, இந்த சமுதாயத்திற்கு விடிவே  இல்லை.

குர்ஆன் இறங்கியது பாமர மக்களுக்காகவே!

உண்மையில் குர்ஆன் எழுதப் படிக்கத் தெரியாத, அறியாமையிலும், பகிரங்க வழிகேட்டிலும் மூழ்கி இருந்த மக்களுக்கா கத்தான்  குறிப்பாக  இறங்கியது.

எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர், பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும் அவர், அவனுடைய வசனங் களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர் களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.    (அல்குர்ஆன் 62:2)

இந்த இறைவசனத்தின்படி நபி(ஸல்) அவர்களது காலத்தில், எழுதப் படிக்கத் தெரியாத 98% சஹாபாக்கள் குர்ஆனை நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணை யோடு தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் நாங்கள்தான் கற்ற வர்கள், அரபி இலக்கண இலக்கிய விற்பன் னர்கள், கவிஞர்கள் என்று மார்தட்டியதாருன் நத்வாவைச்சார்ந்த அன்றைய காலத்து அறி ஞர்களுக்கு, மத விற்பன்னர்கள் என்று மக்க ளால் போற்றப்பட்டவர்களுக்கு குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தலை சிறந்த அறிஞர்கள் என்று போற்றப்பட்ட வர்களை வடிகட்டிய ஜாஹில்கள் (மடை யர்கள்) என்றும், வடிகட்டிய ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலைசிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது. உண்மையில் இது ஒரு  பெரும் அதிசயம்தான்.

அகந்தை   ஆகாது!

ஆம்! நாங்கள்தான் கற்றவர்கள். அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டும் அறிஞர்கள் குர்ஆனை விளங்கவே முடியாது. அரபி மொழியைச் சரிவர உச்சரிக்கத் தெரியாத வர்களாக இருந்தாலும் பயபக்தியுடையவர் களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறை வானவற்றை நம்பியவர்களாகவும்ஐங் காலத்தொழுகையை அதனதன் நேரத்தில்  தவறாமல் நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து அல்லாஹ் வின் பாதையில் செலவு செய்பவர்களாக வும், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வற்றையும் நம்பியவர்களாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி விளங்க முற்பட் டால் நிச்சயமாக குர்ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் (ஜல்)  கொடுக்கும்  உத்திரவாதமாகும்.

(அல்குர்ஆன் 22:5 திருவசனங்களின் கருத்து) இதை மறுப்பவர்கள் முஸ்லிம் களாக  இருக்கவே  முடியாது.

இன்றைய  தேவை  என்ன?

இந்தச்  சமுதாயத்திற்கு இன்று மிக மிகத் தேவைதக்வா(பயபக்தி)யுடைய வாழ்வும், குர்ஆனிலும், ஹதீதிலும் பாடு படும் முயற்சியும் மட்டுமே. அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கிய ஞானம் இருந் தால் அதை நாம் வரவேற்கிறோம், மறுக்க வில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சில ருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்து விடலாம். இது அல்லாஹ் அவருக்குக்  கொடுத்த  சிறப்பு  ஆகும்.

(அல்லாஹ்) தான் விரும்பியவர்க ளுக்கே ஞானத்தைக் கொடுக்கின்றான். ஆத லால் எவர் ஞானம் கொடுக்கப் பெறுகின் றாரோ அவர் நிச்சயமாக அநேக நன்மை களைப் பெற்றுக்கொள்கிறார். ஆயினும் அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்ச்சி பெறமாட்டார்கள்.   (அல்குர்ஆன் 2:269)

இந்த வசனப்படி இந்தச் சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத் திக் கொண்டு, அந்த ஞானத்தைக் கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆனை, ஹதீதை (மனித அபிப்பிராயங்களை அல்ல) விளங்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்க ளாக்கி, நாங்கள் தான் மார்க்கத்தைப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆலிம் கள், நாங்கள் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதாரங்கள் கேட்காமல் நீங்கள் ஏற்று நடக்க வேண்டிய அவாம்கள் என்று சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உண்டாக்க ஒருபோதும் முனையக்கூடாது. அல்லாஹ் வுக்கும், அடியார்களுக்குமிடையில் தரகர் களை உண்டாக்க முனையக் கூடாது. இத னால்தான்தக்லீத்என்னும் கண்மூடிப் பின் பற்றலும், மதப் பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும்,  வீழ்ச்சிகளும்  ஏற்படுகின்றன.

வஹிவந்து கொண்டிருந்த நபிமார் களைத் தவிர வேறு மனிதர்களில் மார்க்க வி­யத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து, அல்லது ஒருவரை ஒருவர் பாதுகாவலராக் கிப் பின்பற்றி நடப்பதை அல்லாஹ்(ஜல்) மிக  வன்மையாகக்  கண்டிக்கிறான்.

உங்களுக்காக உங்கள் இறைவனால் அருளப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்க ளுக்கு)ப்  பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றா தீர்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே!’  (அல்குர்ஆன் 7:3)

இந்த வசனத்தில் இப்போது நாம்எங் களுக்கு குர்ஆனைத் தெரியாது, ஹதீதைத் தெரியாது, அவற்றை அறிந்து கொள்ள அரபி மொழியும் தெரியாது. அதற்கு அவ காசமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மார்க்கத் திற்காக அர்ப்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள், குர்ஆனையும், ஹதீதையும் கரைத்துக் குடித்த வர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில தேர்ந்தவர்கள், பதினாரு கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னர்கள், குர்ஆனைப் பற்றி யும், ஹதீதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள் ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்க ளது பாதுகாவலர்களாக்கி, எங்கள் இமா மாக ஆக்கி அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோமே இதைத் தான் மிக வன்மையாக அல்லாஹ்(ஜல்) இந்த வசனத் தில் கண்டித்துக் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம் என்றால் நாமாகப் பின்பற்றவில்லை. அல்லாஹ்(ஜல்) தன் வேதத்தில் அவர்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று பல வசனங்களில் கட்டளை இட்டதை வைத்தே பின்பற்றுகி றோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ் (ஜல்) வசனம் எதையும் இறக்கி வைக்க வில்லை. அதனால் நபி(ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும் சரி! பலராக இருந்தாலும் சரி! நல்லவர்களாக இருந்தாலும் சரி! கெட்டவர்களாக இருந்தாலும் சரி! பாதுகாவலர்களாக் கிப் பின்பற்றவே கூடாது. அல்லாஹ் வன்மையாக  தடை  செய்துள்ளான்.

இதைத்தான் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களைதக்லீத்செய்யாதீர்கள். ஆதாரங்களை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடக்காதீர்கள்என்று தெளிவாகக் கட்டளையிட்டுச் சென்றிருக்கி றார்கள்.

அப்படி இருந்தும் அல்லாஹ்(ஜல்) சொல்வதுபோல் மக்களில் வெகு சிலரே இந்த உண்மையை உணரக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் (யுத கிறித்துவர்கள்) தங்கள் மத குருக்களையும், பாதிரிகளையும், அல் லாஹ்வை விட்டு ரப்புகளாக ஆக்கிவிட்ட னர்‘. (அல்குர்ஆன் 9:31) என்ற திருவசனம் இறங்கியபோது, கிறித்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்தஅதீ இப்னு ஹாதம்(ரழி) என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும் அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா?

அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற எவருக்கும் அனுமதி இல்லை என்பது தெரிகிறது. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குரிய ஆதாரங்களை அறிய முற்படாமல் பின்பற்றுவது மிகப் பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத்  தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர் களின் பாதுகாவலன்(ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிரா கரிப்பவர்களுக்கோ (வழிகெடுக்கும்) ஷைத் தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள், அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன, அவர்களே நரகவாசிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.  (அல்குர்ஆன் : 2:257)

அல்லாஹ்(ஜல்) நம் அனைவருக்கும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து அவனது நேர்வழியில் நடக்க  அருள் புரிவானாக!  ஆமீன்!

Previous post:

Next post: