சாலை மறியல்

in 2023 ஏப்ரல்

சாலை மறியல்:

ஓர் பெரும் பாவம் மற்றும் அல்லாஹ்வின் சாபம்!

அஹமது  இப்ராஹிம்

கும்பலாகக் கூடி சாலையில் அமர்ந்து மனி தர்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதை எல்லாம் வல்ல அல் லாஹ் தடை செய்கின்றான். ஆதாரம்: அல்குர் ஆன் 29வது அத்தியாயம் 29வது வசனம், 7வது அத்தியாயம் 86வது வசனம் மற்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அழகிய நற்போதனைகள் அடங்கிய நபிமொழிகளின் தொகுப்பு நூலான புகாரீ என்ற நூலில் 2465வது நபிமொழியாக இடம்பெற்றுள்ள நபிமொழி அடிப்படையில் சாலைப் போக்குவரத் திற்கு இடையூறு செய்வது மிகப் பெரிய பாவமாக எடுத்துக்கூறி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களும் போராட்டம் என்ற பெயரில் சாலையில் அமர்ந்து மனிதர்களுக்கும் வாகனப் போக்கு வரத்திற்கும் இடையூறு செய்வதை தடை செய் கின்றனர்.

ஆனால் மேற்கண்ட எல்லாம் வல்ல அல் லாஹ்வின் கட்டளைகள் அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவைகள் பெரும்பான்மை முஸ்லிம்களாலும் அவர்களை வழிநடத்தும் பிரிவினைகளை உண்டாக்கிய வழிகெடுக்கும் இயக்கத் தலைவர்களாலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதுதான் வேதனை யான வி­யம்.

நபி லூத்(அலை) அவர்களின் சமூகத்தினர் செய்த மூன்று இழிச் செயல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்டவாறு பட்டியலிடு கின்றான். இவைகளை செய்ததால்தான் அந்த மக்களை நரகத்தின் எரிகற்களைக்கொண்டு அழித்தான். இந்த இழிச்செயல்களில் ஒன்றான சாலை மறியலை செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரியவையே  அவை  வருமாறு:

நீங்கள் ஆண்களிடம் வருகிறீர்களா? வழி மறிக்கவும் செய்கின்றீர்கள்: உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின் றீர்கள் என்று கூறினார். அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒரு வராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்பது தவிர வேறு எதுவுமில்லை.  (அல்குர்ஆன் 29:29)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களின் அழகிய நற்போதனைகளை பார்வை யிடுங்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவித்தார்:

நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங் கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வ தைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக்கொள்கிற எங்கள் சபைகள்என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “அப் படியயன்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்துஅம)ரும்போது, பாதைக்கு அதன் உரி மையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார் கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “(அந்நியப்  பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல் வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன் பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப் பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமை யிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள். புகாரி:2465, அத்.46, அநீதிகளும் அபகரித்தலும்.

எனது இனிய அன்பின் சொந்தங்களே!

இப்போது சொல்லுங்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் நேரடியாகத் தடுத்த இந்த கேடுகெட்ட ஆர்ப்பாட்டங்கள் ஷாயின்பாக் போராட்டங்கள் என்ற பெயரில் சாலைகளில் கூட்டமாக அமர்ந்து பொதுமக் கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்வது கொண்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு நாம் அனைவரும்  ஆளாவது  நிச்சயம்தானே!

அன்றி யார் (நமது வசனங்களை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற் படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர் கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (அல்குர்ஆன் 2:39)

Previous post:

Next post: