பள்ளிவாசல்களில் இருக்க வேண்டிய பைத்துல்மால் என்னும் ஏழைகளின் கருவூலம்!

in 2023 மார்ச்

பள்ளிவாசல்களில் இருக்க வேண்டிய பைத்துல்மால் என்னும் ஏழைகளின் கருவூலம்!

S.H.  அப்துர் ரஹ்மான்

அன்புள்ள  சகோதர  சகோதரிகளே!

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் ஏற்படட்டும் என்று பிரார்த்தித்தவனாக துவங்குகின்றேன்.

இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் மனித குலத்திற்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் அதில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த ஒன்றை விட்டுவிடுவதும் தவறு. நபி(ஸல்) அவர்கள் காட்டி தராத ஒன்றை செய்வதும் தவறு, மரணத்திற்கு பின்  மறுமையில் இதற்காக அவசியம் விசாரணைக்கு உள் ளாக வேண்டி யிருக்கும்.

 பைத்துல்மால்  என்றால்  என்ன?

v பைத் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் = இருப்பிடம்.

v மால் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் =  செல்வம்.

இந்த இரண்டு வார்த்தையின் அர்த்தம் சேர்த்து செல்வத்தின் இருப்பிடம், கருவூலம் அல்லது  நிதியகம்  என்று  தமிழில் சொல்லலாம்.

கருவூலம் / நிதியகம்  என்றால்  என்ன?

பொருட்களை அல்லது நிதியை சேர்த்துவைத்து அதை தேவையுடைய ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பதும், எல்லா மும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுமார் 1440 வருடங் களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வழிகாட்டி சென்ற மிகப் பெரிய ஏற்பாடு தான் இது.

நாகரீகமும், மனிதமும் வளர்ந்து விட்ட இக்காலத்தில் கூட எந்த ஒரு அரசும் ஏற்படுத்தாத  வழிமுறை. மக்களின் வரிப் பணம் கொண்டு நாட்டை ஆள்பவர்கள் கூட இதுபற்றி  சிந்திப்பது  இல்லை.

வங்கிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மக்களை வட்டியில் தள்ளவே செய்வார்கள்.

பைத்துல்மாலின் தனி சிறப்பே அது ஏழைகளின் செல்வம் அதில் எந்த ஒரு தனி மனிதனும் அல்லது எந்த ஒரு அரசும் அந்தப் பணத்தில் அதிகாரம் செலுத்த முடியாது என்பதுதான். அது ஏழைகளின் செல்வம் அவர்களுக்கே உரியது. அதில் யாருக்கும் பங்கு  இல்லை.

பைத்துல்மால் இப்பொழுது ரொம்ப அவசியமா?

வட்டியை முழுவதுமாக துடைத்தெறிய வட்டி கணக்கெழுதுவது, அதற்கு சாட்சி சொல்வது அனைத்தும் ஹராம் என்று மட்டும் நாம் ஒருவரிடம் சொன்னால், அப்போ எங்க ளுக்கு வட்டி இன்றி கடன் நீங்க தருவீர்களா? என்ற எதிர் கேள்விகள் தவிர்க்க முடியாது. இது போன்றவர்களின் கேள்விக்கு  பதிலே  இந்த  பைத்துல்மால்.

இனி இதன் மூலம் உங்கள் பகுதி ஏழைகளின் படிப்புக்கோ, இன்னபிற அவசிய தேவைக்கோ வட்டி இல்லா கடன் பெறலாம் என்ற நிலை உண்டாகும். கல்வி பொருளா தார மயமாக்கப்பட்ட இந்த காலத்தில், அதனை கற்கவும் தொடரவும் பெரும் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

கல்விக்கு இதுவும் ஒரு முட்டுக்கட்டை என்றால் இதனை களையவும், கல்வி கற்க உதவவும் தான் பொது நிதி அமைப்பு அவசி யமாகிறது.

பைத்துல்மால் என்ற பொது நிதியை ஒவ்வொரு மஹல்லா பள்ளிகளிலும் அவர வர் சக்திக்கேற்ப ஏற்படுத்தினால் மஹல்லா வின் ஏழைகளின் பொருளாதாரத் தேவை களை  நிறைவேற்ற  அது உதவும்.

சிறு துளி பெருவெள்ளமாய் சிறியள வில் தொடங்கப்பட்ட பைத்துல் மால்கள் பல ஆண்டுகளில் இறைவனின் உதவியால் பொரு ளாதார பலம் பொருந்தியதாக பரிணமித்து அதன்மூலம் பலரது தேவைகளுக்கு உதவி செய்யும்  நிலையை  அடைய  முடியும்.

இது ஒவ்வொரு மஹல்லா பள்ளிகளி லும் தொடர வேண்டுமானால் நாம் அதைப் பற்றிய விழிப்புணர்வை மஹல்லா மக்களிடம் ஏற்படுத்தி, பைத்துல்மால் உரு வாக்க  உதவி புரிய வேண்டும்.

இதன்மூலம் நம் சமுதாயத்திற்கு விளையும் நன்மைகள் பல உண்டு. இந்த பைத்துல்மாலை நபிவழியில் நடைமுறைப் படுத்தினால் அதன் நன்மைகளை நாம் கண் கூடாக பார்க்கலாம்.  இன்ஷா அல்லாஹ்.

இத்தகைய சிறப்புமிக்க பைத்துல் மாலை திறம்பட சிறப்பாக நடத்துவதென் பது மிகச் சிரமம். ஏன் என்றால் இதற்கு பொருளாதாரம் மிகவும் அவசியம். கவன மாக  அதை  கையாள்வதும்  அவசியம்.

அத்தகைய பொருளாதாரத்தை நமது மஹல்லா செல்வந்தர்களிடமும், நமது மஹல்லாவில் இருந்து வெளிநாடு சென்ற சகோதரர்களிடமும், ஜகாத்தை வசூல் செய் வது போதுமானது. மஹல்லாவின் பள்ளி வாசல் தலைவர்களே உங்கள் மஹல்லாவில் இதை நடைமுறைப்படுத்துங்கள். இதற்கு அந்த மஹல்லாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களே உதவி செய்யுங்கள். இந்த ரமழான் மாதத்தில் உங்களுடைய ஜகாத், நன் கொடைகளை தாராளமாகக் இதற்கு தந்து உங்கள் மஹல்லா பைத்துல்மாலை பள்ளி வாசலில்  நிறுவ  உதவுங்கள்.

உங்கள் மஹல்லாவிலேயே வசூல் செய்து உங்கள் மஹல்லாவிலேயே அதை முறையாக வினியோகம் செய்யுங்கள். அது தான் சரியான செயல்முறையாக இருக்கும். சரியான  ஏழைகளுக்கு  கிடைக்கும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறை வேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச் செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு வி­ப் பற் களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, “நானே உன்னுடைய செல்வம்‘ “நானே உன்னுடைய புதையல்என்று கூறும்.

இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர் கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக் குத் தீங்குதான். அவர்கள் உலோபித்தனத் தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில்  அவர்கள் கழுத்தில் அரிகண்ட மாக போடப்படும்என்ற (குர்ஆன் 3:180) வசனத்தை ஓதினார்கள். அபூ ஹுரைரா(ரழி), அறிவித்தார்: புகாரி: 1403. அத்தியாயம் : 24, ஜகாத்தின் சட்டங்கள்.

செல்வந்தர்கள் தங்களின் ஜகாத்தை இதற்கு தந்து அல்லாஹ் ஹராமாக்கிய ஓர் பெரும் பாவத்தை (வட்டி) துடைத்தெறிய உதவுங்கள். 

மேலும், உங்கள் மஹல்லா பகுதி ஏழை முஸ்லிம் சகோதரர்களுக்கு தொழில் வைத்து தந்து பொருளாதாரத்தில் மேம்படுத்துங்கள். உங்கள் பகுதி ஏழை சகோதரிகளுக்கு திருமணம் முடித்து வைத்து வாழ வையுங்கள். உங்கள் பகுதியில் வாழும் கடனில் மூழ்கி தவிக்கும் ஏழைகளின் கடன் அடைக்க உத வுங்கள். இவையனைத்தும் ஒரு மனிதரை வாழவைத்தவர், மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போன்ற நன்மையைத் தரும். இதன்மூலம் உங்கள் மஹல்லாவில் வறுமை யில் வாழும் இளைஞன், திருமணம் ஆகாத முதிர் கன்னிகள், கடனால் தற்கொலை செய்து கொள்ளும் ஏழைகள் இருக்கமாட்டார்கள். முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் பலம் பெறு வார்கள். மஹல்லா முஸ்லிம்கள் ஒற்றுமை யான நிலை அடைவார்கள். இதன் மூலம் நீங் கள் இறைவனிடம் நன்மைகள் அடையலாம்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உதவ முன்வராவிட்டால் யார் தான் உதவி செய்வார்  என்று  சிந்தியுங்கள்.

நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க் கும் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்த்தும், நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். நபி(ஸல்) காட்டிய வழியை நடைமுறைப்படுத்திய நன்மையும்  கிடைக் கும். முஸ்லிம் சமுதாயம் பொருளாதாரத்தில் பலம் பெரும். நம்முடைய எண்ணங்களை செயல்படுத்த ஏக இறைவனிடம் பிரார்த் தனை  செய்தவனாக  நிறைவு  செய்கிறேன்.

Previous post:

Next post: