பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!

in 2023 மார்ச்

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2023  பிப்ரவரி  தொடர்ச்சி…..

குமுஸ் எனும் ஐந்தில் ஒரு பாகத்தைக் கச்சிதமாகக்  கையாண்டார்கள் :

ஜுபைர் இப்னு முத்யிம்(ரழி) அவர் கள் அறிவிப்பதாவது: நானும், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (இறைத்தூதர் அவர்களே) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) குமுஸ் (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனூ முத்தலிப் கிளை யினருக்குக் கொடுத்தீர்கள். எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள். நாங் களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரி யான உறவுமுறை உடையவர்கள் தாமே? என்று கேட்டோம். அப்போது (இறைத் தூதர் நபி(ஸல்) அவர்கள், பனூ முத்தலிபும் பனூ ஹா´மும் ஒருவர் தாம் என்று கூறி னார்கள். (மற்றோர் அறிவிப்பில்) பனூ அப் தி­ம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி(ஸல்) அவர்கள் (குமுஸில்) சிறிதும் பங்கு தரவில்லை என்று ஜுபைர்(ரழி) தெரிவித்துள்ளார்கள். (புகாரி : 4211, 4220, 4229, 4350, 4035, 3144, 3156, 3711, 6175)  மேலும்,

வணிகம் செய்வதற்கு போதுமான கணக்கு களை  அறிந்திருந்தார்கள் :

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர் கள் வாலிபமடைந்தவுடன் ஸாயிப் இப்னு அபூ ஸாயிப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கி னார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி(ஸல்) அவர் கள் திகழ்ந்தார்கள். (ஸுனன் அபூதாவூத், இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், அர்ரஹீக் அல்மக்தூம் : 81) அத்துடன் நபி(ஸல்) அவர் களின் நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச் சில் உண்மை, வாய்மை, நம்பகத்தன்மை, வெற்றிகரமான வியாபாரத் திறமை, போன்ற நற்பண்புகளால் கவரப்பட்ட தனால்தான் கதீஜா பின்த் குவைலித்(ரழி) அவர்கள் நபியவர்களைக் கணவராகத் தேர்ந்தெடுத்தார்கள். (அர்ரஹீக் அல்மக்தூம் :81) கணக்கு வழக்குத் தெரியாமல் வியா பாரம் செய்ய முடியாது என்பது பொது நியதியாகும். அவர்கள் அறியாதிருந்தது பல மாதங்கள், வருடங்களுக்குத் தேவையான காலக்கணக்கினை முற்கூட்டியே கணக்கீடு செய்துகொள்ளும் முறையை மாத்திரமே;  ஆனாலும்,

தமக்குப் பிறகு வரவிருக்கும் சந்திர ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிடவும் அதனை எழுதவும் தெரிந்த சமுதாயம் இது வி­யத்தில் சரியான தீர்வை எட்டும் என் பதை மறைமுகமாகக் குறிப்பிட்டு இப் போது நமக்குள்ள வசதிக்கேற்ப கணக்கிட் டும் செயற்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பிறை பார்த்தல் சம்பந்தமாக வரும் வசனங்களிலெல்லாம் கண்ணால் மாத்திரமே பார்ப்பதற்குண்டானரஃயல் ஐன்‘ 3:13 என்ற வார்த்தையைப் போடாமல், “ருஃயத்‘ “ரஅய்து  அரா தரா  ரஆ என்றகண்ணால், கனவால், கணக்கீட்டால், கவனித் தலால், கவனத்தால், தகவலால், ஆய்வால், உள்ளத்தால், உணர்வால், சிந்தனையால் அறிவால்என மறைமுகமாகப் பல பொரு ளையுடையருஃயத்என்ற வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் பாவித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அதுபோலவே,  ஒரு  மாதத்திற்கு,

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு மாதம் என்பது இருபத் தொன்பது நாட்களாகும். எனவே பிறை யைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்கா தீர்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்படு மானால் முப்பது நாள்களாக எண்ணிக் கையை முழுமைப்படுத்துங்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித் தார். புகாரி: 1907, அத்தியாயம் : 30, நோன்பு.

அவற்றின் காட்சியை அடிப்படை யாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள் எனவே உங்கள் மீது புலப்படாத போது நீங் கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) அவர்கள். (அஹ்மத் : 9641)

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேகமூட்டம் தென் பட்டால் ­ஃபான் மாதத்தை முப்பது நாட் களாக முழுமைப்படுத்துங்கள் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி: 1909, அத்தியாயம் : 30. நோன்பு.

குறைந்தபட்சம் இருபத்தொன்பது நாட்கள் என்றார்கள் :

ஒரு மாதம் என்பது குறைந்தபட்சம் இருபத்தொன்பது, நாட்களும் கூடிய பட்சம் முப்பது நாட்களுமாகும் என்று அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள் : (அப்துல் லாஹ் பின் உமர்(ரழி) அபூ ஹுரைரா(ரழி), உம்மு சலமா(ரழி), அனஸ்(ரழி), புகாரி: 1907, 1911, 1913, 5191, 5201, 5203) மேலும்,

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறியமாட்டோம், விண் கலை யையும் அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும். அதா வது சில வேளை இருபத்தொன்பது நாள் களாகவும் சில வேளை முப்பது நாள்களாக வும் இருக்கும்! என இப்னு உமர்(ரழி) அறிவித்தார். புகாரி:1913, அத்தியாயம்:30, நோன்பு)

உம்மு ஸலமா(ரழி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள்ஒரு மாதம் தம் மனைவிய ருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தி ருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாட்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர் களிடம் நீங்கள் ஒரு மாதம் (வீட்டிற்கு) வர மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர் களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு மாதம் என்பது இருபத் தொன்பது நாட்களாகவும் அமையும் என் றார்கள்.  புகாரி : 1910.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென் படுமானால் முப்பது நாள்களாக அதைக் கணித்துக் கொள்ளுங்கள் என (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவித்தார். புகாரி:1906,  அத்தியாயம் : 30. நோன்பு)

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: இந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதே! அதை நீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள். மேலும் நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பு விடாதீர்கள். உங்கள் மீது அது மறைக்கப் பட்டு இருந்தாலே தவிர, எனவே உங்கள் மீது அது மறைக்கப்படும்போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) அவர்கள். (இப்னு குஜைமாஹ் : 1790)

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர் கள் ரமழான் மாதம் குறித்துக் கூறுகையில், “மாதம் என்பது இருபத்தொன்பது நாட் களா(கவும் இருக்)கும். மாதம் என்பது இவ் வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) அவர்கள், (முஸ்லிம்:1960) மேலும்,

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “ஒரு மாதம் என்பது (குறைந்தபட்சம்) இரு பத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்என்று கூறினார்கள். இந்த ஹதீதின் அறிவிப் பாளர்களில் ஒருவரான ஷிஅபா(ரஹ்) அவர் கள் இதைக் கூறுகையில், இரு கைகளையும் மூன்று முறை கோர்த்துக்காட்டி, மூன்றா வது தடவையில் பெருவிரலை மடித்துக் கொண்டார்கள். (முஸ்லிம் : 1969. மேலும் அறிவிப்பவர்கள், உம்மு ஸலமா(ரழி), அனஸ் (ரழி), ஆயிஷா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி:1910,1911,2468,2469,4378,4785,4786, 4788,4789,5262,5263, நஸயீ:2014)அடுத்ததாக;

மாதத்தின் முதலாவது நாளில் பிறை சூரிய னைப்  பின்தொடர்ந்து  உதித்துவரும்:

சூரியனின்மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!

மேலும் சந்திரனின் மீது(ம்) அது சூரிய னைப் பின்தொடரும் பொழுது சத்தியமாக!  91:1,2)

அதாவது: சூரியனைச் சந்திரன் பின் தொடர்வது என்றால் சந்திரன் பகலைப் பின்தொடர்வது என்று பொருள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியிருக் கிறார்கள்.

சூரியனைச் சந்திரன் பின்தொடர்ந் தால் என்பது தலைப்பிறையின் இரவில் நிகழ்வதாகும். இதன் கருத்து மாலை நேரத் தில் சூரியன் மறைந்தால் சந்திரன் பார்வைக்கு வருகிறது என்பதுதான் என்று கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சூரியன் மறைந்தவுடன் அதைச் சந்தி ரன் பின்தொடர்ந்தால் என்பது மாதத்தின் முற்பகுதியில் ஆகும். மாதத்தின் பிற்பகுதி யிலோ சூரியனைச் சந்திரன் முந்திவிடுகிறது என்று இப்னு ஜைத்(ரஹ்) அவர்கள் கூறி யிருக்கிறார்கள்.

மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரி யனைப் பின்தொடர்ந்து வரும் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், சந்திர மாதத்தின் முதல் நாளில் பிறையானது சூரி யன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக் கில் உதிக்கும் அந்த முதல் நாளில் சூரியன் மறைந்ததற்குப் பின்னரே அந்தப் பிறை நமது புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும் என்று கத்தாதா(ரஹ்) அவர்களும் விளக்க மளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 91,1,2, குர்ஆன் வசனங்களின் விரிவுரையில் பாகம் 10:268-279) அடுத்து;

இஷாத் தொழுகை நேரம் மறைவது அம் மாதத்தின்  மூன்றாவது  நாளின்  பிறையாகும்:

நான்தான் இந்த இஷாத் தொழுகை யின் நேரத்தைப் பற்றி மக்களுக்குள் மிக அறிந்தவனாவேன். அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மாதத்தின் மூன்றாம் பிறை மறையும்போது இஷாத் தொழுபவர் களாக இருந்தார்கள். நுஃமான் பின் பUர் (ரழி), திர்மிதி: 151, நஸயீ: 526, அபூதாவூத்: 355) அடுத்து,

அய்யாமுல் யபீழ் எனும் நிலவு பிரகாசிக்கும் வெள்ளை நாட்கள் :

ஒவ்வொரு மாதமும், அய்யாமுல் யபீழ் எனும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட் கள் என்று அழைக்கப்படும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பது போலானதாகும். (அப் துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அபூ ஹுரைரா(ரழி), கத்தாதா இப்னு மில்ஹான்(ரழி), அபூதர்(ரழி), புகாரி, பாகம் 2, பக்கம் 648.

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், “ளுஹர்நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங் குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று வி­யங் களை என் தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), அவர்கள். (புகாரி:1981) புகாரி: பாகம் 2, பக்கம் 645, பாடம் 59இல் தாவூத் நபியின் நோன்பு எனும் தலைப்பில் கொண்டு வரும்  ஹதீதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அவர் கள் கூறியதாவது : அல்லாஹ்வின் மீதாணை யாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல் லாம் நின்று வணங்குவேன் என்று நான் கூறிய செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டி யது. (இதுபற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) என் தந்தையும் தாயும் தங்க ளுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே! என்றேன். நபி(ஸல்) அவர்கள், “இது உம்மால் முடியாது! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ் வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப் படும்! எனவே இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்! என்றார்கள். நான், என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும் என்று கூறினேன். அப்படி யனால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்! என்றார்கள். நான் என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்! என்று கூறினேன். நபி(ஸல்) அவர் கள் இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை! என்றார்கள். புகாரி: 1976,1978,1979,1980, 1981, முஸ்லிம்: 1159, அபூதாவூத்:2449, திர்மிதி: 761) மற்றும்

ரியாதுஸ் ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230இல், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது விரும்பத்தக்கதாகும் எனும் உப தலைப்பின் கீழ் (மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந் ததுஅய்யாமுல் யபீழ் நாட்களாகும் அது பிறை 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும்) நாட்களாகும். 12,13,14ஆம் நாட்கள் என் றும் கூறப்படுகிறது. (எனினும்) பிரபலமான சரியான கருத்து முதலாவதுதான்) என்று ஆரம்பித்தது; 1258ஆவது ஹதீதாக;

ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக் கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், “ளுஹர்நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங் குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று வி­யங் களை என் நெருங்கிய தோழர்(ஸல்) அவர் கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்! அறிவிப் பவர்: அபூஹுரைரா(ரழி), அவர்கள். ரியா ளுஸ்ஸாலிஹீன்: 1258, 1259ஆவது ஹதீதாக;

என் நேசர் எனக்கு மூன்று காரியங் களை உபதேசித்தார்கள்; நான் வாழும் கால மெல்லாம் அவற்றை விடமாட்டேன். 1.ஒவ்வொரு மாதமும் (அய்யாமுல் யபீழ் என, (நிலவு பிரகாசிக்கும்) வெள்ளை நாட் கள் என்றழைக்கப்படும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, 2.லுஹாத் தொழுகை தொழுவது, 3.வித்ருத் தொழுதுவிட்டுத் தூங்குவது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளை யிட்டார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரழி), ரியாளுஸ்ஸாலிஹீன்: 1259, முஸ்லிம்:722, நஸயீ:692, மேலும் ரியாளுஸ்ஸாலிஹீன் 1260 ஆவது  ஹதீதாக;

ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக் கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு வைப்பது காலம் முழுவதும் நோன்பு வைப்பது போலாகும் என்று அல் லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்கள் ரியா ளுஸ்ஸாலிஹீன் 1260, புகாரி1979, முஸ்லிம்: 1150) மேலும்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய) மூன்று  நாட்கள் நோன்பு வைப்பார்களா? என்று ஆயிஷா(ரழி) அவர் களிடம் கேட்டேன்ஆம்என்று கூறினார் கள். அறிவிப்பவர் : முஆதா அல் அதவிய்யா (ரழி) அவர்கள், ரியாளுஸ்ஸாலிஹீன்:1261, முஸ்லிம் : 1160)

மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால் 13,14,15 ஆகிய (அய்யாமுல் யபீழ் எனும் நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைப்பீராக! என்று அல் லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பவர் : அபூதர்(ரழி), ரியாளுஸ் ஸாலிஹீன் : 1262,  திர்மிதி : 761)

———————

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநூலை!

­ரஹ் அலி

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்.

 (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு  அருள்புரியட்டும்.

அந்த  ஒரே  இறைவனின்  பெயரால்….

மேலோட்டமான அறிவு உண்டு!

மக்கள் உலக வாழ்வின் புறத்தோற் றத்தை மட்டுமே அறிகின்றனர். மறு மையை (இறுதி விசாரணை நாளை)ப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக்கின் றார்கள். என்ன, அவர்கள் தங்களைப் பற்றி என்றைக்கேனும் சிந்தித்ததில் லையா? (இறைநெறி நூல் 30:7,8)

மக்களில் பெரும்பாலோர் தங்கள் அதிபதியின் சந்திப்பை நிராகரிப்பவர் களாய் இருக்கின்றனர். மேலும், இவர் கள் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்த தில்லையா?  (இறைநெறி நூல் 30:8,9)

எல்லா எடுத்துக்காட்டுதல்களும் அல்குர் ஆனில்  உண்டு:

நாம் இந்தக் அல்குர்ஆனில் மக்க ளுக்கு விதவிதமாக புரிய வைத்து இருக் கின்றோம். நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்து விட்டவர் கள்நீர் அசத்தியத்தில் இருக்கின்றீர்என்று கூறுவார்கள். இவ்வாறு அறிவில் லாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரை  இட்டுவிடுகின்றான்.   (இறைநெறி நூல் 30:58,59)

(மக்களாகிய) அவர்கள் சிந்தித்து உணர்வதற்காக இந்த அல்குர்ஆனில் பல வடிவங்களில் வி­யங்களை நாம் விளக்கியுள்ளோம். ஆனால், அது வெறுப் பைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தவில்லை. ஆனால், மனிதனோ அதிகமாக விதண்டாவாதம் புரிபவனாக இருக்கின்றான். (இறைநெறி நூல் 17:41)

இன்னும், நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும், மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாகவே  இருக்கின்றான்.  (இறைநெறி நூல்  18:54)

அடிபணிந்தவரே  செவியேற்பர் :

நிச்சயமாக நாம், இந்த அல்குர்ஆனை (மக்கள்) அறிவுரை பெறுவதற்கு எளிமைப்படுத்தி உள்ளோம். எனவே, அறிவுரை பெறுபவர் உண்டா? (இறைநெறிநூல் 54:17,22,32,40) எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.      (இறைநெறி நூல் 30:53)

Previous post:

Next post: