பெருநாள்  ஜகாத்  ஃபித்ரா!

in 2023 மார்ச்

பெருநாள்  ஜகாத்  ஃபித்ரா!

நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை ஃபித்ரு என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதுஜகாத்என்ற பதத்தையே  பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு :

எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க ஜகாத் ஆகும். எவர் தொழு கைக்கு பின்னர் அதைக் கொடுக்கின்றாரோ, ஸதகாவாக நிறைவேறும்‘. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), ஆதார நூல்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ.

யார்  மீது  கடமை?

பெருநாள் தினத்தின் செலவுகள் போக எவரிடமாவது எஞ்சி இருக்குமானால் அவர் மீது இந்த தர்மமும் கடமையாகும். அவர் தனக்காக மட்டுமின்றி தன் பொறுப்பில் இருக்கின்ற சிறு குழந்தை, பெரியவர், ஆண், பெண் அத்தனை பேர் சார்பாகவும் இந்த தர்மத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு தொகையை வைத்திருப்பவர்கள்தான் ஃபித்ரு கொடுக்க வேண்டும்  என்று  நிர்ணயிக்கவில்லை.

முஸ்லிமான அடிமை, அடிமையல்லாத ஆண், பெண், சிறியவர், பெரியவர் அத்தனை பேர் மீதும் இதனை நபி(ஸல்) கடமை யாக்கினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி),  ஆதார நூல்கள்:  புகாரி, முஸ்லிம்.

எவ்வளவு   கொடுப்பது?

பேரீத்தம் பழத்திலிருந்து ஒருசாஉஎன்றும் அல்லது கோதுமையிலிருந்து ஒருசாஉஎன்றும் அந்த தர்மத்திற்கு நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேற்கூறிய ஹதீதில் இடம் பெற்றுள்ளசாஉஎன்ற சொல் அன்றைய காலத்தில் அரபு பகுதியில் வழக்கிலிருந்த ஒரு அளவாகும். இரண்டு கைகளாலும் ஒரு பொருளை அள்ளும் போது அதன் கொள்ளளவு எவ்வளவோ, அதுபோன்ற நான்கு மடங்காகும். தெளிவாக சொல்வதென்றால், இரணடு கைகள் நிறைய ஒரு தானியத்தை அள்ளினால் அது ¼”சாஉஆகும். இதுபோல் நான்கு முறை அள்ளினால் அது ஒருசாஉஆகும்.

இது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களுக்கு இடம் தந்து விடாமல் இரண்டு கைகளால் நான்கு முறை அள்ளி வழங்கு வதே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஒருவருடைய பொறுப்பில் ஐந்து பேர் இருந்தால், அந்த ஐந்து பேர் சார்பாக ஐந்துசாஉதானியம் கொடுக்கவேண்டும். ஒரு நபரின் சார்பாக கொடுக்க வேண்டிய அளவு  ஒரு  சாஉ  ஆகும்.

எதனைக்  கொடுக்க வேண்டும்?

எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குறிப்பிட்ட ஒரு தானியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற  கட்டாயம்  எதுவுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உண வுப் பொருட்களிலிருந்து நாங்கள் ஒருசாஉகொடுத்துக் கொண்டிருந்தோம். அறி விப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் நஸயீ, இப்னுமாஜா,  திர்மிதி.

உணவுப் பொருள் என்ற வார்த்தை இந்த ஹதீதில் பொதுவாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் எந்த உணவுப் பொருளையும்  வழங்கலாம்.

எது  சிறந்தது?

நீங்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்ற (மனப் பக்குவம் பெறாத) வரை நீங்கள் நன்மையை அடைந்து  விடவே  முடியாது.      

இந்த வசனத்தின் அடிப்படையில் நமது நாட்டிலுள்ளோர் உணவாக உட் கொள்ளும் அரிசியையே விரும்புகின்றனர். எனவே அதனையே பெருநாள் தர்மமாக வழங்குதலே  சிறப்புடையது.

எப்போது  கொடுப்பது:

மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல் வதற்கு முன்னால் இந்த தர்மத்தைக் கொடுத்துவிடும்படி எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

யார் தொழுகைக்கு முன்னால் இதனை நிறைவேற்றுகின்றாரோ அதுதான் பெருநாள் தர்மமாகும். யார் தொழுதபின் நிறைவேற்றுகின்றாரோ, அது சாதாரண நாட்களில் செய்கின்ற சாதாரண தர்மத் தைப் போன்றதேயாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), ஆதார நூல்கள்: அபூதாவூது, இப்னுமாஜா.

மேற்கூறிய ஹதீத்களிலிருந்து பெரு நாள் தொழுகைக்கு முன் இதனைக் கொடுத் தாக வேண்டும்  என்பது  தெளிவாகின்றது.

தேடிச்  சென்று  கொடுப்போம் :

இந்த தர்மத்தை வாங்குவதற்காக எந்த  முஸாஃபிர் வீடு தேடி வருவார் என்று எதிர் பார்க்கக் கூடாது. மாறாக நாமே வலிய தேடிச் சென்று அதனைக் கொடுத்தாக வேண்டும். இந்த தர்மத்தின் நோக்கமும் அதுதான்.

அந்த ஏழைகள் இன்று (அதாவது பெருநாள் தினத்தில்) வீடு வீடாக சுற்றி வருவதை தேவையற்றதாக்குங்கள்என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), ஆதார நூல்கள்: பைஹகீ,  தாரகுத்னீ.

யாருக்குக்  கொடுக்கக்  கூடாது:

இஸ்லாம் தான தர்மங்கள் செய்வதை வலியுறுத்தும்போது இனத்தின் அடிப் படையில் அதனைச் செய்யும்படிக் கூற வில்லை. நாம் விரும்பிச் செய்கின்ற தர்மங் களை முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாத வர்களுக்கும் கொடுப்பதை அனுமதிக்கின் றது. எனினும் பெருநாள் தர்மத்தையும், ஜகாத்தையும் முஸ்லிமுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். ஏனெனில்பெரு நாள் மற்றவர்களும் கொண்டாட வேண் டும்என்ற உயர்ந்த நோக்கில் தான் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத வர்கள் பெருநாள் கொண்டாடும் பிரச் சனை இல்லாததால், முஸ்லிமுக்கு மட்டும் இந்த  தர்மத்தைக்  கொடுக்க வேண்டும்.

ஒருவன் தான் கொடுக்க வேண்டிய ஃபித்ராவை, ஜகாத்தை பெருநாள் தர் மத்தை தனது தந்தை, பாட்டன், பாட்டி, மகன், பேரன், மகள், பேத்தி ஆகியோருக் கும், தன் மனைவிக்கும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் இந்த வகை உறவினர் களை கவனிப்பது அவர் மீது கடமையான ஒன்றாகும். ஜகாத் பணத்திலிருந்து இவர்க ளுக்காக செலவு செய்யக்கூடாது. இவர்க ளைத் தவிர மற்ற உறவுகளில் ஏழைகள் இருந்தால் இதுபோன்ற தர்மங்கள் செய்வ தில் அவர்களுக்கே  முக்கியத்துவம்  தரப் பட வேண்டும்.

ஜகாத்தை முறையாக வழங்கி இறை வனின் பொருத்தத்தை பெற்ற நல்லடியார் களாக  அல்லாஹ்  நம்மை  ஆக்குவானாக!

Previous post:

Next post: