பெற்றோர்களின் கவனத்திற்கு…

in 2023 மார்ச்

பெற்றோர்களின் கவனத்திற்கு

அன்சர் ய­ரீப் பின்  R.A. மாலிக்

மூஃமின்கள் (தங்களைப் போன்ற) மூஃமின்களையன்றி இறை மறுப்பாளர்களை தம் உற்ற துணைவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்வி­யத்திலும் சம்பந்தம் இல்லை. இன் னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும், அல்லாஹ் விடமே (நீங்கள்)  மீள  வேண்டியதிருக் கிறது.   (அல்குர்ஆன் 3:28)

இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை கண்டிக்க ஆளில்லாமல் இந்த உலக வாழ்வில் சிக்கி சீரழிந்து வருகிறார் கள். இதற்கு நாம் செல்லமாக வளர்த்து அவர்கள் கேட்பதெல்லாம் கேட்கும்போது உடனே நாம் வாங்கி கொடுத்தோம். பெரிய வர்கள் இதைப் பற்றி நம்மிடம் கேட்டா லும், நாம்தான் அனுபவிக்கவில்லையே நம் குழந்தைகளாவது அனுபவிக்கட்டும் என் றோமே அதன் விளைவே இந்த அவலநிலை.

பெண் பிள்ளை ஆனாலும், ஆண் பிள்ளை ஆனாலும் அவர்களுக்கென்று படிக்க தனி அறையை அவர்களுக்கு அனு மதிக்காதீர்கள். நாம் படிக்கும்போது வீட் டின் பொது அறையில் (ஹாலில்) தான் அமர்ந்து படித்தோம். நம் பெற்றோர்கள் படிக்கவில்லையயன்றாலும் நம்மை அவர் கள் கண்காணித்தார்கள். ஆனால் இப்போது நாம் நம் பிள்ளைகள் படிக்க அவர்களுக் கென்று தனி அறையை ஒதுக்கி கொடுத்துள்ளோம். அவர்கள் படிக்கிறார்களா என்று நமக்கு எப்படித் தெரியும்? படிக்கும் பிள்ளை களுக்கு எதற்காக தனியாக ஸ்மார்ட் செல் போன்? நாம்தான் அவர்களுக்கு விலை உயர்ந்த ஸ்மார்ட் செல்போன்களை வாங்கி கொடுத்துள்ளோம். அதன் கடவு சொல் (Pழிவிவிழலிrd) எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும்? என்றாவது அதை வாங்கி நாம் சோதித்துள்ளோமா?

நாம் சாலைகளில் பயணிக்கும்போது பெண் பிள்ளைகள் ஹிஜாப் அணிந்து மாற்று மத பையனோடு இருசக்கர வாகனத் தில் பயணிப்பதையும், பொது இடங்களில் (பூங்கா, சுற்றுலா தலங்கள்) ஜோடி சேர்ந்து சுற்றுவதையும் பார்த்துவிட்டு  நாம் கடந்து செல்கிறோம். என்றாவது அவர்களை நிறுத்தி நாம் அவர்களை விசாரித்துள் ளோமா? இல்லை. காரணம்! அது நம் பிள்ளை இல்லை என்றும், நமக்கு ஏன் என் றும் கடந்து சென்றுவிடுகிறோம். இனி அப்படி வேண்டாம். நீங்கள் விசாரியுங்கள். அந்த பெண் பிள்ளையிடம் உன் பெற்றோ ரின் தொலைபேசி எண்ணை கொடு! நான் அவர்களிடம் பேசுகிறேன் என்று கூறி அவர் களை எச்சரிக்கை செய்யுங்கள். இந்த நிலை மையை மாற்ற வேண்டும். இதுவும்  நம் பொறுப்புதான்.

இந்த சூழலில் பெண் பிள்ளைகளுக்கு தந்தையின் செல்லம் மிகவும் அதிகம். தாய் கண்டித்தாலும் தந்தை அந்த பெண் பிள்ளைகளுக்கு சிபாரிசு செய்கிறார். இதுவும் தவறுதான். கண்டிக்கும்போது பிள்ளைகளை கண்டியுங்கள். அது பெண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளையானா லும் சரி! கண்டியுங்கள்!.

யோசியுங்கள் பெற்றோர்களே! நம் பிள்ளைகள் கெட்டுப்போகவும், மாற்றுப் பாதையில் செல்லவும் நாமும் ஒரு காரணமே! இதற்கு நாமும் மறுமையில் ஏக இறைவனிடம் பதில் கூறியாக வேண்டும். சிந்தியுங்கள்! சிந்தித்து செயல்படுங்கள்! பிள்ளைகளை சரியாக வழிநடத்துவதும் நம் கடமையாகும்.

Previous post:

Next post: