மனிதகுலத்தின் ஒளிவிளக்கு திருகுர்ஆன்!

in 2023 ஏப்ரல்

மனிதகுலத்தின் ஒளிவிளக்கு திருகுர்ஆன்!

எம்.பி. ரபீக்  அஹ்மத்

உலகில்  மனிதர்களிடம் பிரபலமாக இருக்கும் மதங்கள் நான்கு, மார்க்கம் ஒன்று.

1. கிறிஸ்துவ மதம், 2. யூத மதம், 3.இந்து மதம், 4.புத்த மதம், 5. இஸ்லாமிய மார்க்கம்.

இன்னும் சில சிறிய மதங்கள் இருக் கின்றன. அவைகள் உலகில் பிரபலமான மதங்களாகவோ அதிக மக்கள் பின்பற்றக் கூடிய மதங்களாகவோ இல்லை. மேலே சொல்லப்பட்ட நான்கு மதங்களில் புத்தமதம் தன்னை ஒரு மதமாக சொல்லிக் கொள்ள வில்லை. அந்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று புத்தர்கள் சொல்லிக் கொள் கிறார்கள். கடவுள் நம்பிக்கையே இல்லாத பொழுது கடவுளால் அருளப்பட்ட வேதம் என்ற ஒன்று அவர்களிடம் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்களிடம் வேதம் இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொள்ளவு மில்லை. “தம்மம்என்ற ஒரு நூல் இருக்கின் றது. புத்தருடையதும், அவருடைய பிக்ஷி களுடையதுமான போதனைகள் அவற்றில் அடங்கியுள்ளன. கடவுள் நம்பிக்கையில் லாத ஒரு வழிமுறையை இந்த உலகம் மதம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆக மதங் களில் பட்டியலிலிருந்து அது தானாகவே விலகிக்  கொள்கின்றது. இப்பொழுது மீதியுள்ள நான்கு மதங்க ளுக்கும் கடவுள் நம்பிக்கையுண்டு. இந்த நான்கு மதங்களும் தங்களிடம் இறைவ னால் அருளப்பட்ட வேதங்கள் உண்டு என்று சொல்லிக் கொள்கின்றன.

ஆக இந்த நான்கு மதத்தவர்களும் வேதமுடையவர்கள் என்று அழைக்கப்படு கின்றனர். கிறிஸ்துவ மதத்தினர் பைபிளை தங்கள் வேதம் என்கின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திற்கு திருகுர்ஆன் நெறிநூலாக இருக்கின்றது. யூதர்கள் பழைய ஏற்பாட்டை தங்கள்  வேதம்  என்கின்றனர். இந்துகள் தங்களிடம் நான்கு வேதங்கள் உண்டு என்று கூறிக் கொள்கின்றனர். யஜுர் வேதம், சாம வேதம், ரிக்வேதம், அதர்வண வேதம், ஐந்தாவதாக பகவத் கீதையும்  வேதம்  என்கின்றனர்.

உலகில் பெரிய மதங்களாக கருதப் படும் இந்த நான்கு மதத்தவர்களின் நம்பிக் கைகளிலும் சில ஒற்றுமைகள் உண்டு. அவை என்ன?

இந்த நான்கு மதங்களும்,

1. கடவுள் உண்டு என்று நம்புகின்றன.

2.இறைநூல் என்ற ஒன்று உண்டு என்று  நம்புகின்றன.

3. மரணத்திற்குப் பிறகு மறு உலக வாழ்க்கை என்ற ஒன்று உண்டு என்று நம்பு கின்றனர்.

4. சொர்க்கமும் நரகமும் உண்டு என் றும் நம்பிக்கை கொள்கின்றன. ஆக இந்த நான்கு நம்பிக்கைகளிலும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களுடன் ஒன்று படுகின்றனர்.

நான்கு மதங்களும் நம்பும் இந்த பொதுவான நம்பிக்கைகள் எந்த வேதத்தில் விரிவாகவும், விளக்கமாகவும், தெளிவாக வும், குழப்பமில்லாமலும் எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையாக வும் இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த் தால் திருகுர்ஆனில் மட்டும்தான் அழகாக வும் ஆணித்தரமாகவும் அமைந்துள்ளது என்பது புலனாகும். இந்த உண்மையை, உண்மையான கடவுள் நம்பிக்கையாளன், கடவுளை நேசிக்கின்றவன் அவன் எந்த மதத்தில் இருந்தாலும் மறுக்க முடியாது.

மதங்களுக்கு அஸ்திவாரமாக, ஆணி வேராக அடிப்படையாக இருக்கின்ற இந்த நான்கு நம்பிக்கைகளை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அல்லது விளக் கிச் சொல்லவேண்டுமானால், தயவு தாட் சண்யமின்றி, விருப்பு வெறுப்பின்றி திரு குர்ஆனை மட்டும் தேர்ந்தெடுக்க வேண் டிய கட்டாயம் கடவுள் நம்பிக்கையாளர் களுக்கு  ஏற்படுகின்றது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் ஒரு வி­யத்தில் உறுதியாக இருப்பார்கள்.  அது  என்ன?

கடவுளே சத்தியம், சத்தியமே கடவுள். றூலிd ஷ்வி வீrற்மிஜு, வீrற்மிஜு ஷ்வி றூலிd. இவ்வி­யத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.

உண்மை, சத்தியம் எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் நாம் ஒப்புக் கொண்டுதான்  ஆகவேண்டும்.

நாம் ஒன்றை உண்மை சத்தியம் என்று சொல்வதனால் மட்டும் அது உண்மையாக முடியாது. உரைகல்லில் உரசிப் பார்த்த பிறகுதான் இந்த உலகம் உண்மையை ஏற்றுக்கொள்ளும்.

நாம் வாழும் காலத்தில் இந்த நான்கு மத வேதங்களும் நாம் பேசும் மொழிகளில் கிடைக்கின்றன. காழ்ப்பின்றி பாகு பாடின்றி, நாங்களே அலசிப் பார்ப்போம். பிறகு முடிவை நம் மனச்சாட்சிகளுக்கே விட்டு விடுவோம்.

கடவுள் நம்பிக்கையாளர்கள் அனை வரும் ஒரு வி­யத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.

கடவுளை அறிந்துக் கொள்வதற்கும், தெரிந்துக் கொள்வதற்கும், கடவுளை வணங்குவதற்கும் வழிப்படுவதற்கும், ஈடேற்றம் அடைவதற்கும் மதங்கள் கருவி களாக பயன்படுகின்றன.

ஆக நம்முடைய நோக்கம் எல்லாம் கடவுளே தவிர மதங்களல்ல.

எந்த மதம் கடவுளை பெருமைப் படுத்துகின்றது. கடவுளை பற்றியான சரி யான உறுதியான நம்பிக்கையை தருகின்றது என்பதை ஆராய வேண்டியது நமது கடமை யல்லவா?

நான் மேலே சொன்ன இந்த நான்கு அடிப்படை நம்பிக்கைகள் சரியாக இருந் தால்தானே நம்முடைய கடவுள் நம்பிக்கை யும்  சரியாக  இருக்கும்.

இதில் சிறிய தவறு நேர்ந்தாலும் கடவுள் நம்பிக்கையில் குழப்பம் வரும். நாம் எதில் தெளிவாக இல்லாவிட்டாலும் கடவுள் நம்பிக்கையிலாவது தெளிவாக இருக்க வேண்டாமா?

துக்ளக்ஆசிரியர் சோ ராமசாமி அவர்கள் ஒரு மீலாது விழாவில் ஒரு அழகான கருத்தைச் சொன்னார்கள்.

எல்லா மதத்தவர்களிடமும் நான் நாத்திகர்களை பார்க்கின்றேன். ஆனால் முஸ்லிம்களிடையே நாத்திகர்களை பார்ப் பது அரிதாக இருக்கின்றது. ஏனெனில் அவர் களுடைய கடவுள் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கின்றதுஎன்றார் அவர்.

இந்த உறுதியை முஸ்லிம்களிடம் தந்தது எது? திருகுர்ஆன்தான். நாத்திக வாதம் என்ற நோய் புணூம்றீநோயைவிட பயங் கரமாக பரவி வருகின்றது.

கடவுள் நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள திருகுர்ஆனை ஒரு முறையாவது ஜாதி மத பேதங்களை எல்லாம் பார்க்காமல் படிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

நாத்திகர்கள் முன் வைக்கும் வாதங் களின் முன்னால் பல மாற்றுமத சகோதரர் கள் தங்களை கடவுள் நம்பிக்கையாளர்கள் என சொல்லிக் கொள்வதற்கே வெட்கப் படுகின்ற, தலைகுனிகின்ற பரிதாப நிலையை நான் பலமுறை நேரில் பார்த்தி ருக்கின்றேன். இந்த கேவலங்களுக்கும் ஏள னங்களுக்கும் கடவுள் நம்பிக்கையாளர்கள் ஆளாகத்தான் வேண்டுமா? இது தேவையா? இந்து என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா என்று சுவர்களில் எழுதி வைக்கின்றோம். நாத்திகர்களின் முன்னால் தலை நிமிர முடிகின்றதா?

என் நெஞ்சுக்கினிய மாற்று மத சகோதரர்களே! நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கவும் நாத்திகர்களின் சவால்களை தீரமுடன் சமாளிக்கவும் தயவு செய்து திருகுர்ஆனை உங்கள் மொழியில் ஒரு முறையாவது படியுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையாளர் என்பதற்காக பெருமை படுவீர்கள். பெருமிதம் கொள்வீர்கள். நிம்மதி  அடைவீர்கள்.

ஒருமுறை ஒரே ஒரு முறை திருகுர் ஆனை படியுங்கள். எந்த வேதத்தையும் குறை காணுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

இந்த வேதங்களை வைத்துக் கொண்டு உங்களால் தலைநிமிர்ந்து நிற்க முடியவில் லையே. இதற்கான காரணத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களா? இந்த நிலமை களுக்கு சரியான காரணத்தை திருகுர்ஆன் சுட்டிக் காட்டுகின்றது; கேளுங்கள்: திருகுர்ஆன்  பேசுகின்றது.

“(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில் லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பி, காஃபிர்களை (அவ நம்பிக்கையாளர்களை) குறித்து இவர் கள்தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட  நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.’

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின் றான். எவர்களை அல்லாஹ் சபிக்கின் றானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும்  நீர்  காணமாட்டீர்.  (அத்.4, வசனம் 51,52)

திருகுர்ஆன் எவ்வளவு பெரிய உண் மையை சொல்கின்றது. நான் கிறிஸ்துவர் களின் புதிய ஏற்பாட்டை படித்திருக்கின் றேன். யூதர்களின் பழைய ஏற்பாட்டையும் படித்திருக்கின்றேன். இந்துக்களின் பகவத் கீதையையும் படித்திருக்கின்றேன். சிலை வணக்கம் செய்யுமாறு எந்த வேதமும் சொல்லவில்லை. பிறகு எங்கிருந்து வந்தது இந்த  சிலை  வணக்கம்?

திருகுர்ஆனை தவிர மற்ற எந்த வேதமும் முழுக்க முழுக்க இறைவசனம் கொண்டவைகள் என்று அந்த வேதத்தை நம்புபவர்களே இதுவரை சொல்லவில்லை.

முழுக்க முழுக்க இறைவசனங்களைக் கொண்டே ஒரே நெறிநூல் திருகுர்ஆன் மட்டும்தான். அதில் இறைவன் மட்டுமே பேசுகின்றான். இறைவனைத் தவிர வேறு யாரும்  பேசவில்லை. நான் சொன்ன இந்த வி­யத்தில் யாருக்கும் கருத்து வேறு பாடில்லை.

முஸ்லிம்களை தவிர மற்ற அனைத்து வேதக்கார மதத்தவர்களும் சிலை வணக்கம் ய்கின்றனர். முஸ்லிம்களிடம் மட்டும் சிலை வணக்கம் இல்லை. இது எதனால்,

மற்ற வேதங்களில் இறைவனைத் தவிர மற்றவர்களும் பேசுவதால் வந்த விளைவு. இறை வசனங்களுடன் மனித வசனங்களை யும்  கலந்ததினால்  ஏற்பட்ட  விபத்து.

வேதங்கள் வரிசையில் இறுதியாக வந்த வேதம் திருகுர்ஆனே என்பது அனை வரும்  அறிந்த  ஒன்றாகும்.

மற்ற வேதங்களில் ஒவ்வொரு பாக மாக அளிக்கப்பட்ட இறைவனின் தெளி வுரைகள், திருகுர்ஆன் இறுதி நெறிநூலாக வந்ததால் முழுமையான தகவல்களைப் பரி பூரணமாக தரப்பட்ட சம்பூரண நெறி நூலாக அருளப்பட்டுள்ளது. மற்று வேதங் களையும்  படித்துப்  பாருங்கள்.

திருகுர்ஆனையும் படித்துப் பாருங்கள். வித்தியாசம் தானாகத் தெரியும். மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும் முழு மையான வழிகாட்டுதலைத் தருகின்றது.

அரை வைத்தியனிடம் சிகிச்சைப் பெற்றால் அரைக் கிணற்றை தாண்டினால் பேராபத்தில்  தானே  முடியும்.

இறை நம்பிக்கையாளர்களே முழுமை யான, நேர்மையான, பரிபூரணமான வழி காட்டுதலின் பக்கம் திருகுர்ஆன் உங்களை அழைக்கின்றது.

நான் கிறிஸ்துவ வேதத்தை படித்துள் ளேன். கிறிஸ்துவ மதம் என்று ஒன்று இருப் பதாக அது ஒரு இடத்திலும் சொல்ல வில்லை.

யூத வேதத்தை படித்துள்ளேன் யூத, மதம் என்று ஒன்றிருப்பதாக அது ஒரு இடத் திலும்  சொல்லவில்லை.

இந்து மத வேதங்களை படித்திருக்கின் றேன். அவற்றில் ஒரு இடத்திலாவது இந்து மதம் என்ற ஒன்றிருப்பதாகச் சொல்ல வில்லை.

திருகுர்ஆன் மட்டும்தான் சொல்கின் றது: ஆரம்பம் முதல் இறுதி வரை மனித குலத்திற்கு ஒரே மார்க்கம்தான், அது இஸ்லாம்தான் என்று.

இஸ்லாத்தை தவிர எந்த மார்க்கத்தை யும் எந்த வேதத்திலும் இறைவன் சொல்ல வில்லை.

மற்ற மதங்கள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, இறைவனால் அல்ல என்பதற்கு எல்லா வேதங்களும் சாட்சியாக இருக்கின்றன.

திருகுர்ஆனையும் படியுங்கள். திருகுர் ஆனின் ஒளியில் மற்ற வேதங்களையும் படி யுங்கள். உண்மை உங்களுக்கு தானாக விளங்கும். கீழ்வரும் குர்ஆன் வசனங்களை யும் படித்துப் பாருங்கள். மேலும் தெளிவு கிடைக்கும்.

வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்று பவர் அல்லர், இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர் களும் அல்லர். எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின்னர் அவர் களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப் பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர் களில்  ஒருவராக  இருப்பீர்.    (அல்குர்ஆன் 2:145)

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர், அல்லாஹ் (நல் லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய் வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத் தான், அத்துடன் மனிதர்களிடையே  ஏற் படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு அவர்களுடன் உண்மை யுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர் கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்ன ரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக் கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லு மாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அரு ளினால் நேர்வழி காட்டினான், இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியரை நேர்வழியில் செலுத்துகின்றான்.       (அல்குர்ஆன் 2:213)

நிச்சயமாக  (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப் பட்ட) மார்க்கமாகும், வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.    (அல்குர்ஆன் 3:19)

(நபியே! அவர்களிடம்) வேதத்தையு டையோரே! நமக்கும் உங்களுக்கு மிடையே (இசைவான) ஒரு பொது வி­ யத்தின் பக்கம் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம், அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம் எனக் கூறும், (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்! என்று நீங்கள் கூறிவிடுங்கள்.    (அல்குர்ஆன் 3:64)

அல்லாஹ்வின்மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகி றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன, மேலும் (அவை எல்லாம்) அவனி டமே மீண்டும் கொண்டு வரப்படும்.  (அல்குர்ஆன் 3:83)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது, மேலும் அ(த் தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந் தோரில்தான் இருப்பார்.     (அல்குர்ஆன் 3:85)

எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத் தாலும் (அதனை) அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. அத்தகையோ ருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும்  இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 3:90)

Previous post:

Next post: