வெற்றி வேண்டுமா?  ஒரே ஒரு நிபந்தனை!

in 2023 மார்ச்

வெற்றி வேண்டுமா?  ஒரே ஒரு நிபந்தனை!

அப்துந் நாஸர்

அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.

முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும் அடிதான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி கிடைப்பது போல் முஸ்லிம்களுக்கு எங்கு சென்றாலும் அடிதான். பிற சமூகத்தவரிடம் முஸ்லிம்களைப் பற்றியுள்ள பயம் இல்லாமல் போய்விட்டது. எந்த பிரச்சினைகள் நடந்தாலும் பாதிப்பு முஸ்லிம்களின் சொத்துக்கும், உயிருக்கும்தான். ஒவ்வொரு பிற சமூகத்தினரும் தம்மால் இயன்றளவு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றனர். இது எதனால் ஏற்பட்டது என்றால் முஸ்லிம்கள் உலகத்தின் பின்னால் ஓடியதால்தான். மறுமையை விரும்புவதற்குப் பதிலாக உலகத்தை விரும்பியதால்தான்.

நபிதோழர்களை முன்னிலைப்படுத்தி நபி(ஸல்) கூறினார்கள். என்னைப் பின்பற்றும் குழுவினர் (உம்மத்தினர்) மீது ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது பசியோடு இருப்பவர்கள் எவ்வாறு உணவு பாத்திரத்தின் மீது பாய்கிறார்களோ, அவ்வாறு மற்ற சமுதாயத்தினர் என் உம்மத்தினர் மீது பாய்வார்கள். இதனைச் செவியுற்ற ஒருவர் வினவினார் தாங்கள் குறிப்பிடுகின்ற அந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் எங்களை விழுங்கி விடுவதற்காகப் பல சமுதாயங்கள் ஒன்றுசேர்ந்து பாய்கின்ற அளவுக்கு மிகக் குறைந்த  எண்ணிக்கையிலா  இருப்போம்?

நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: இல்லை! அந்தக் காலக்கட்டத்தில் உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இராது. மாறாக  நீங்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் வெள்ளத்தின் நுரை போன்று ஆகிவிடுவீர்கள்! உங்கள் எதிரிகளின் உள்ளத்திலிருந்து உங்களைப் பற்றிய அச்சம் அகன்று விடும். உங்கள் உள்ளங்களில் கோழைத்தனம் குடிகொண்டு விடும். உடனே ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! இந்தக் கோழைத்தனம் எதனால் வரும்? என்று வினவினார். நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். “”நீங்கள் (மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக) உலகை நேசிக்கத் தொடங்குவீர்கள். இறைவழியில் உயிரைக் கொடுப்பதற்குப் பதிலாக மரணத்தை விட்டு அஞ்சி ஓடவும், அதனை வெறுக்கவும்  தொடங்குவீர்கள்.”

இன்னும் காரணம் உண்டு. மனிதர்கள் அல்லாஹ்வின் மீது உள்ள (தவக்குல்) நம்பிக் கையை விட்டது. மனிதர்களையும், கப்ரு களையும், நம்பி இருக்கும் முஸ்லிம்கள், அல் லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையை விட்டுவிட்டார்கள். அதனால்தான் பிற சமூகத்தவ ரின் சோதனைக்கு நாம் ஆளாகிவிட்டோம். அல்லாஹ்வின் உதவி கிடைக்காமல் போய் விட்டது.

மூஸா(அலை) தம் சமூகத்தாரிடம் கூறியதைப் பாருங்கள்: மூஸா(தம் சமூகத்தாரி டம்) என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாக (முஸ்லிம்களாக) இருந் தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள் என்று  கூறினார்.

(அதற்கு) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங் கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! என்று பிரார்த் தித்தார்கள். (எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அரு ளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (என்று  பிரார்த்தித்தார்கள்)   அல்குர்ஆன் 10:84,85,86

ஓர் உண்மையான இறைவிசுவாசி “”அல்லாஹ் நம்முடன்இருக்கின்றான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். எந்நேரமும் மரணத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

தற்போதைய போராட்டங்களும், அடிதடிகளும், ஜிஹாத், என்ற பெயரால் எதனால் ஏற்படுகின்றன என்றால் மதுக்கடையில் தகராறு தொடங்கும்; பின்பு இரு சமூக கலவரமாக மாறும்; இல்லையயன்றால் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத மீலாது ஊர்வலங்கள். கந்தூரிச்சடங்குகள், கபுருச் சடங்குகள் போன்ற முறைகேடான கூட்டங்களால், நியாயமற்ற முறையில் தொடங்கும்; இதில் எங்கே வெற்றி கிடைக் கப் போகின்றது?

பத்ருபோரில் உங்களுக்கு ஒரு அத் தாட்சி உண்டு என்று அல்லாஹ் கூறுகின் றான். நபி(ஸல்) அவர்களின் நபித்தோழர் களின் ஆயுத வலிமை அல்ல அத்தாட்சி. எண்ணிக்கையல்ல அத்தாட்சி; அவர்களின் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையும், ஈமானிய வலிமையும்தான் அத்தாட்சி. அத னால்பத்ருபோரில் எல்லா உதவியும் கிடைத்தது;  வெற்றியும்  கிடைத்தது.

பத்ரு போரில் சந்தித்த இரு சேனைகளி லும், உங்களுக்கு ஓர் அத்தாட்சி, நிச்சயமாக உள்ளது. அல்குர்ஆன் 3:13

இங்கே பள்ளிகளையும், உரிமைகளை யும் மீட்க முஸ்லிம்கள் முதலில் ஆரம்பிக் கும் இடம் தர்ஹா பிரார்த்தனையிலிருந்து. எங்கே முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கப் போகின்றது? அல்லாஹ்வின் உதவி எங்கே கிடைக்கப்போகின்றது? பாபர் மசூதி பிரச்சனையால் எத்தனை உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தாச்சு? என்று தீரும் இந்த சோகம்.

இன உணர்வைத் தூண்டி மனிதர்களை வழிகெடுத்தது போதும்; ஈமானிய உணர் வைத் தூண்டுங்கள். ஒரே இறைவனை மட் டும் வணங்கக் கூறுங்கள். அல்லாஹ் கூறு கின்றான். “மனிதர்களே! உங்களுக்கு வெற்றி வேண்டுமா? பயமில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமா? ஒரே ஒரு நிபந்தனை! என்னை மட்டுமே வணங்க வேண்டும். இம்மை யிலும், மறுமையிலும் பயமில்லாத வாழ்க்கை வாழலாம். சூரத்துல் நூரில் அல்லாஹ்  கூறுவதைப்  பாருங்கள்:

உங்களின் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நற்செயல் புரிகிறார்களோ, அவர்களை அவருக்கு முன்னிருந்தோரை (ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாள ராக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப் படுத்துவதாகவும்; அவர்களுடைய அச்சத் தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அவர்கள் என்னோடு (எதை யும் எவரையும்) இணை வைக்காது என் னையே வணங்குவார்கள். இதன் பின்னர் உங்களில் எவர் மாறு செய்து நிராகரிக்கிறாரோ  அவர்கள்  பாவிகள்தான். அல்குர்ஆன் 24:55

Previous post:

Next post: