அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகிய அல்குர்ஆன்!

in 2023 மே

அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகிய அல்குர்ஆன்!
N.
அலி, கல்லிடைக்குறிச்சி

ஏக  இறைத்தன்மை!

முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் அல் லாஹ்வின் அருளையும், கிருபையும் மன தார விரும்புகிறோம். அதேசமயம் அதை பெறுவதற்கு நம்முடைய செயல்பாடுகளில் முறையான முயற்சி இல்லை நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் அல்லாஹ்வின் அருளையும், கிருபையையும் மிக தூரமாக வைத்து அழகு பார்க்கின்றோம். அல்லாஹ் வின் அருளும், கிருபையும் முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்! முஸ்லிம் களின் வீடுகளில் பாதுகாப்பு பெட்டகங் களில் பொக்கி­மாக பூட்டி வைக்கப்பட்டி ருக்கும் அல்குர்ஆன்தான் அது. 

அல்லாஹ்  கூறுவதைப்  பாருங்கள் :

மனிதர்களே! உங்கள் இறைவனிட மிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்தி ருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய் களை குணப்படுத்தக் கூடியதாகவும் நம் பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழி காட் டியாகவும்  ஓர்  அருளாகவும்  இருக்கிறது.

(அல்குர்ஆன்) அல்லாஹ்வின் அருளும், கிருபையும்  ஆகும்.

இதனைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் அனைத்தையும் விட மிக்க மேலானதாகும் என்று நபியே நீங்கள் கூறுங் கள். (10:57,58) (மேலும் பார்க்க 17:87, 4:113) மனிதர்களே என்று அழைத்து அல்லாஹ் வின் அருளும், கிருபையுமாகிய அல்குர் ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். ஆனால் பெருங்கொண்ட மனித சமூகத்தை ஷைத் தான் அல்குர்ஆனை விட்டும் சாதுர்யமாக திசை திருப்பி இவ்வுலகத்தைக் கொண்டு ஏமாற்றி இவ்வுலகத்தைக் கொண்டே மகிழ்ச்சி அடைய செய்கிறான். (பார்க்க: 13:26, 7:51, 35:5) அதனால் மனித சமூகம் அல்குர்ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடை யாமல் இருக்கிறது. ஆனால் அல்லாஹ்வை நம்புகிறோம், அவனுடைய அருளாகிய அல்குர்ஆனை நம்புகிறோம் என்று கூறும் முஸ்லிம்களுக்கு என்ன நேர்ந்தது? முஸ்லிம் கள் அல்குர்ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்களா? இல்லையே ஏன்? ஆம்! அதற்கு காரணம் இருக்கிறது. முஸ்லிம்கள் அல்குர்ஆனை மந்திர வார்த்தைகளாகவும், மூடு மந்திரமாகவும், ஓதி வருகின்றார்களே யல்லாமல் அல்குர்ஆன் பொருள் அறிந்து படித்து தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி யாக அல்குர்ஆனை எடுத்துக் கொள்ள வில்லை. இதனால் முஸ்லிம்களும் அல்குர் ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடைய வில்லை. அதுமட்டுமல்ல முஸ்லிம்களும் மிகப் பெரும்பான்மையான மக்களைப் பின்பற்றி இவ்வுலகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மை  என்ன  தெரியுமா?

அல்குர்ஆனின் 62:36 வசனங்களில் மனிதர்களையும், முஸ்லிம்களையும் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூறும் ஒரே வசனம் இந்த ஒரு வசனம்தான் அதற்கான காரணத்தையும் அந்த வசனத்தின் இறுதி யில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். இந்த உலகில் நீங்கள் சேகரிக்கும் அனைத் தையும் விட ஆகச் சிறந்தது அல்குர்ஆன். ஆகவே அதனைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள் என்கிறான் ஏகன் அல்லாஹ். இதை முஸ்லிம்கள்  உணர்ந்திருந்தால் நிச்ச யமாக அல்குர்ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். முஸ்லிம்களின் மீது அல் லாஹ்வின் அருளும் கிருபையும் மிகப் பெரி தாகவே இருக்கிறது என்பதை அல்குர் ஆனின் 43 அத்தியாயம் வசனம் 31-35 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். அல்குர்ஆனை நிராகரிக்கும் மக்களுக்கு அவர்களின் வீடுகளின் படிகளையும், வாசல் களையும், முகடுகளையும், அவர்களின் கட் டில்களையும் வெள்ளியாகவும், தங்கமாக வும் ஆக்கியிருப்போம் அவ்வாறு செய்யாத தற்கு காரணம் முஸ்லிம்களும் நிராகரிக்கும் சமுதாயமாக ஆகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே அவ்வாறு செய்ய வில்லை என்கிறான். 

அல்லாஹ் அதுமட்டு மல்ல நிராகரிக்கும் மக்களுக்கு அவர்களின் வீடுகளையும், கட்டில்களையும் வெள்ளி யாகவும், தங்கமாகவும் ஆக்கி இருந்தாலும் அது அல்குர்ஆனுக்கு முன்னால் இவ்வுலகத் தின் அற்ப அலங்காரமே என்கிறான். அல் லாஹ் அல்குர்ஆனின் இந்த மேன்மையை முஸ்லிம்கள் அறிந்து உணர்ந்திருந்தால் நிச்ச யமாக அல்குர்ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அல்குர்ஆன் முஸ்லிம்களை அதிபுத்திசாலிகளாக செயல்பட சொல்கி றது. 4:143ல் இரண்டு வாழ்க்கை இருக்கும் போது ஒன்றை மட்டும் எவன் விரும்பு வான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை, மறுமை இரண்டு வாழ்க்கை இருக்கும் போது ஒன்றை மட்டும் எவன் விரும்பு வான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை, மறுமை இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லி அதற்கான வழியையும் காட்டுகிறது. அதாவது எவர் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். 

எனினும் மறுமை வாழ்க்கையில் அவருக்கு யாதொரு பங்குமில்லை. அதேசமயம் மறுமை விரும்பு கிறவருக்கு இவ்வுலக்தில் எந்த பங்குமில்லை என்று சொல்லவில்லை மாறாக, அவருக்கு இரண்டு வாழ்க்கையும் உண்டு என்கிறது அல்குர்ஆன் (பார்க்க: 42:20, 11:15,16, 17:18,19,20) அதாவது மறுமையை விரும்பு கிறவருக்கு இம்மை+ப்ளஸ் ஆகிவிடும். ஆனால் இம்மையை மட்டும் விரும்புகிற வருக்கு மறுமை மைனஸ் ஆகிவிடும் இந்த எளிய கணக்கை முஸ்லிம்களுக்கு அல்குர் ஆன் கற்றுத் தருகிறது; அவர்களை புத்தி சாலிகளாக மாற்றுகிறது; அது மட்டுமல்ல இவ்வுலக வாழ்க்கையிலும் முஸ்லிம்க ளுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அல்குர் ஆன் அள்ளித் தருகிறது; அவர்களுக்கு உறு துணையாக இருக்கிறது; அதையும் பாருங்கள்.

முஸ்லிம்களுக்கு இவ்வுலகம் சோத னைக்கூடம்தான் (67:2). எனினும் அவர் களின் சக்திகுட்பட்டே சோதிக்கப்படுவார் கள் (2:286, 7:42). சோதனைகளை கடந்து போவதற்கு அல்குர்ஆன் வழிகாட்டுகிறது (2:155, 3:186). சோதனைகளின் போது தளர்ந்து விடாமல் இருக்க தைரியமூட்டு கிறது (3:139). துன்பங்களை எளிதாக எடுத் துக்கொள்ள வழிகாட்டுகிறது (2:156,157). மன்னிப்பின் வாசல் முஸ்லிம்களுக்கு எப் பொழுதும் திறந்தே இருக்கிறது (39:53, 2:268, 3:133). அல்லாஹ் அவனது அடியார் களுக்கு மிக அருகில் இருக்கிறான் (2:186, 50:16). அவனது அடியார்களுடைய வாழ்க் கையை எளிதாக்கவே விரும்புகிறான் (4:28, 65:2,3,4,7, 92:3,4, 29:69, 64:11, 20:124, 2:185, 16:97, 2:201, 16:30) இவையயல்லாம் மறுமையை விரும்பும் முஸ்லிம்களுக்கு அல் குர்ஆன் தரும் வாக்குறுதிகளும் வழிகாட்டு தலுமாகும். ஆனால் இம்மையை விரும்புகி றவருக்கு அல்குர்ஆன் எத்தகைய வாக்குறு தியையும் தரவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும். இங்கு எடுத்து எழுதியிருப்பது சில குர்ஆன் வசனங்கள் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகும். இதை முஸ்லிம்கள் அறிந்து உணர்ந்தால் நிச்சயமாக அல்குர் ஆனைக் கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். 

ஆனால் முஸ்லிம்கள் அல்குர்ஆனை சரி யாக உணரவில்லை என்பதே உண்மை யாகும். முஸ்லிம்கள் அல்குர்ஆனை கையி லெடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டு கண் மூடித்தனமாக, மந்திர வார்த்தைகளாக, ஓதி வருகின்றார்கள். இதை அல்குர்ஆன் கண் டிக்கின்றது (பார்க்க: 25:73, 25:29,30, 17:72, 20:124). இதன்மூலம் முஸ்லிம்களை வழி கெடுக்கும் வேலை ஷைத்தானுக்கு மிக எளி தாகி விடுகின்றது (பார்க்க: 25:29,30, 43:36,37, 35:5,6) இதிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனைப் பற்றி பிடிக்கவேண்டும்.  (3:102,103)

அரபி  மொழியில்  அல்குர்ஆன் :

அல்குர்ஆன் அரபி மொழியில் உள்ள தால் அந்த அரபி மொழியை கற்றுக் கொண்டு அதன் அர்த்தம் புரியாமல் வாசிப் பதையே ஓதுவது என்று முஸ்லிம்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இல்லை அவ்வாறு புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம்! அல்குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அதற்கு அரபி இலக்கண, மொழியறிவு வேண்டும் இல்லையயன்றால் அல்குர்ஆன் விளங்காது தாய்மொழியில் படித்தாலும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது என்று முஸ்லிம் மதப் புரோகிதர்கள், காலம் காலமாக முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் களும் அதை நம்பி அல்குர்ஆனை மூடு மந்தி ரமாக ஓதி வருகின்றார்கள். மொழி என்பது விளங்கி கொள்வதற்காகத்தான் என்று அல் குர்ஆன் சொல்கிறது (பார்க்க 14:2) அரபி மொழியில் அல்குர்ஆன் அருளப்பட்டதும் விளங்கி கொள்வதற்காகவே (12:2) உலகின் மொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் அத்  தாட்சியே (பார்க்க : 20:22) ஓதுதல் என்ற தமிழ் வார்த்தைக்கு படித்தல் வாசித்தல் என்றே பொருள் அதேபோன்று அல்குர் ஆன் என்ற அரபி வார்த்தைக்குபடிக்க வேண்டியது‘ (ஓதக்கூடியது) என்று பொருள் (பார்க்க : 16:98, 7:201, 17:45, 96:2) படிக்க வேண்டியது என்ற பெயருடைய அல்குர்ஆனை அவரவர் தாய்மொழியில் படித்தாலும் விளங்காது என்று கூறுவது அறி வுடையோர் வாதமாக இருக்க முடியுமா? ஒருபோதும்  இருக்க முடியாது. 

அல்குர்ஆனின் 6:90,92 வசனங்கள் உலகமக்கள் யாவருக்கும் அல்குர்ஆன் நல்லு பதேசம் என்று சொல்கிறது. தேறாத இந்த உலகத்தில் அரபி மொழி பேசாத, பல்வேறு மொழி பேசக்கூடிய மனிதர்களுக்கும் சேர்த்தே அல்குர்ஆனை நல்லுபதேசம் என்கிறான். அல்லாஹ் அப்படியயன்றால் அல்குர்ஆன் அரபி மொழியில் இருந்தாலும் மனிதர்கள் அவரவர் தாய் மொழியில் அல் குர்ஆனை எளிதாக புரிந்து கொள்ள முடி யும். தங்கள் வாழ்க்கையில் விளங்கி பின் பற்ற முடியும் என்பதே அல்குர்ஆன் கூறும் உண்மையாகும். இதைக் கூட உணர முடி யாதவர்கள் ஆலிம்களா? ஜாஹில்களா? நிச்சயமாக  ஆலிம்களாக  இருக்கமுடியாது. 

ஆகவே முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள். இனியும் மடமையான வாதங்களை நம்பி இம்மை, மறுமை வாழ்க் கையை பாழாக்கி விடாதீர்கள். விளங்கி கொள்வதற்காக அரபி மொழியில் அரு ளப்பட்ட அல்குர்ஆனை (பார்க்க 39:21, 20:113, 54:17, 22,32,40, 12:2) அந்த அரபி மொழியை வைத்தே விளங்காது, விளங் காது என்று சொல்லி அல்லாஹ்வின் அரு ளும் கிருபையுமாகிய அல்குர்ஆனை விட்டே நம்மை தூரமாக்கிவிட்டார்கள். முஸ்லிம் மதப் புரோகிதர்கள் (பார்க்க 25:29,30)

 இப்புரோகிதர்களை புறக்கணி யுங்கள் அல்லாஹ்வின் அருளும், கிருபை யுமாகிய அல்குர்ஆனை அரபு மொழியிலும், அவரவர் தாய்மொழியிலும் பொருள் உணர்ந்து வாசிக்க பழகுங்கள் எஜமானனாகிய அல்லாஹ் அவனது அடிமையாகிய நம்மிடம் என்ன பேசுகிறான், எதை விரும்பு கிறான், எதை வெறுக்கிறான், எதை ஏவு கிறான், எதை விலக்குகிறான் என்பதை அறிந்து அதன்படி வாழ்ந்து நல்ல முஸ்லி மாக மரணிக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை அல்குர் ஆனை அரபி மொழியிலும் அவரவர் தாய் மொழியிலும் வாசிப்பதை, படிப்பதை தொடருவோம். இதை ஒரு வைராக்கிய மாக எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வின் அருளும், கிருபையுமாகிய அல்குர் ஆனைக் கொண்டு இம்மை, மறுமையில் வெற்றி பெறுவோம். இன்ஸா அல்லாஹ். அலலாஹ்  அருள் புரிவானாக.

(நபியே!) வஹ்யின் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இரட்சகனின் நெறிநூலை (அல்குர்ஆனை) தொடர்ந்து ஓதிக்கொண்டே இருங்கள் (படித்துக் கொண்டே இருங்கள்) அவனுடைய வார்த் தைகளை எவராலும் மாற்றிவிடமுடியாது அவனையன்றி உங்களுக்கு எந்த  புகலிடத் தையும் நீங்கள் காணமாட்டீர்கள். அல்குர் ஆன் (18:27) (மேலும் பார்க்க : 35:24, 29:45, 27:92, 28:86, 37:3, 33:34, 39:23)

27:82ல் வசனத்தில் மனிதர்கள் அல் லாஹ்வுடைய வசனங்களில் உறுதி கொள் ளாதவர்களாக இருந்தார்கள் என்பது பற்றி தாப்பத்துல் அர்ள் பேசும் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுடைய வசனங் களில் உறுதி ஏற்பட வேண்டுமானால் அல் குர்ஆனை சரியான முறையில் அறிந்திருக்க வேண்டும். அதாவது அல்குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அதன் அர்த்தம் புரியாமல் ஓதினால் அல்லாஹ்வுடைய வச னங்களில் உறுதி ஏற்படுமா? ஏற்படாது இங் கேயும் அல்லாஹ் அரபி பேசாத மக்களை யும் சேர்த்துமனிதர்கள்என்று பொதுவாக குறிப்பிடுகிறான். இதன்மூலம் அவரவர் தாய் மொழியில் அல்குர்ஆனை அறிந்து உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதே அல்குர்ஆன் உணர்த்தும் உண்மை யாகும்.  முஸ்லிம்களும் அல்குர்ஆனை அரபி மொழியில் அர்த்தம் புரியாமல் ஓதி வருவதால் அவர்களுக்கும் அல்லாஹ் வுடைய வசனங்களில் உறுதி ஏற்பட வாய்ப் பில்லை முஸ்லிம்களும் நாளை தாப்பத்துல் அர்ளுவிடமிருந்து தப்ப முடியாது. இதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதுமட்டு மல்ல 27:84ல் அல்குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ளாமல் என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி கேட் போம் என்று அல்லாஹ் சொல்கிறான். இதன்மூலம் அல்குர்ஆனை அறிந்து கொள் வது என்பது மிகமிக அவசியம். இதை முஸ் லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Previous post:

Next post: