உறவுகளை பேணிக்கொள்ளுங்கள்…

in 2023 மே

உறவுகளை பேணிக்கொள்ளுங்கள்

அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமை களைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்  மீது கண்காணிப்பவனா கவே இருக்கிறான.          (அல்குர்ஆன் 4:1)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால் களில் ஒன்றைப் பற்றிக்கொண்டு மன்றாடியது. அப்போது அல்லாஹ்என்ன?’ என்று கேட்டான். அதற்கு உறவு, “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்என்று கூறியது. “உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும், நல்ல முறையில் நடந்துக் கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா? என்று கேட் டான். அதற்கு உறவுஆம்! திருப்தியே என் இறைவாஎன்று கூறியது. அல்லாஹ்இது அவ்வாறுதான் நடக்கும்என்று கூறினான். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரழி)  நீங்கள் விரும்பினால் நயவஞ்சகர்களே! நீங்கள் போருக்கு வராமல் பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் திருக்குர்ஆன் 47:22வது வச னத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று  கூறி னார்கள். (புகாரி: 4830)

இன்றைய காலகட்டத்தில் நாம் உறவு களை எப்படி பேணி வாழ்கின்றோம் என் பதை  சிறிது  சிந்தித்துப்  பார்ப்போம்.

இரத்த உறவுகளையே நாம் எப்போது சந்தித்துக் கொள்கிறோம் என்றால், ஏதா வது உறவினர்களின் திருமணத்திலோ, அல்லது மவுத் வீட்டிலோதான் சந்தித்துக் கொள்கிறோம். அதுவும் நல்ல நிலையில் உள்ள உறவுகள் சலாம் சொல்லிப் பேசிக் கொள்கிறார்கள். மனக்கசப்பு உள்ள சில உறவுகளோ முகத்தை திருப்பிக் கொண்டு மற்ற உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாமாகவும் முன் வந்து அவர்களுக்கு சலாம் சொல்வதில்லை அவர்களும் சலாம் சொல்வதில்லை. இருவருக்கும் உள்ள ஆணவம் (ஈகோ) தடுத்துவிடுகிறது.

இரத்த கலப்புடைய சகோதர, சகோதரி களிடையே பேச்சுவார்த்தை கிடையாது. இதில் அவர்களிடம் பேசியே ஒன்றை ஆண்டுகள் ஆகிறது என்று பெருமை வேறு அடித்துக்  கொள்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே கூட்டுப் குடும்பங்களாகத் தான் வாழ்ந்து வந்தோம். வருமானம் குறை வாகத்தான் இருந்தது. ஆனாலும் சந்தோசமாக வாழ்ந்தோம். சிறு சிறு சண்டைகள், வரும் பின் அதுவே சரியாகிவிடும். பள்ளி ஆண்டு விடுமுறைகளுக்கு உறவினர்களின் வீட்டிற்கு நம் பிள்ளைகளோடு சென்று வந்தோம். அவர்களும் நம் வீட்டிற்கு வந்தார் கள். பிள்ளைகள் விடுமுறை முடியும் வரை உறவினர்களின் வீட்டில் விடுமுறைகளை கழித்தார்கள்.

திருமணமோ அல்லது மவுத்தோ என்றால் அனைத்து உறவினர்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டார்கள். நாமும் அவ்வாறே கலந்து கொண்டு உறவு களையும்  பேணி  காத்து  வந்தோம்.

அன்றோ கடிதம், தந்தி பெரும்பாலும் பணக்காரர்களின் வீட்டில் மட்டும் தொலைபேசி இவைகள்தான் தொடர்பு சாதனங்களாக இருந்தன. ஆனாலும் உறவு களிடம் அன்பும், பாசமும் இருந்தது. ஆனால் இன்றோ விதவிதமான தொடுதிரை கைப்பேசிகள் உள்ளன. நேரில்  பார்த்தே பேசிக்கொள்ளும் அளவிற்கு வசதிகள் இருந்தும் உறவுகள் எட்டி நிற்கின்றன. இதற்கு இந்த கைப்பேசிகளும் ஒரு முக்கிய காரணம், தேவையற்ற பேச்சுக்கள், ஒரு உறவின் செயலை உடனுக்குடன் மற்ற உறவினரிடம் அவ்வப்போது கைபேசி மூலம் கருத்து பரிமாறறம் செய்து கொள் வதம், சண்டைகளை உறவுகளிடம் உடனுக்குடன் பேசி கோபத்தை வெளிப் படுத்தவும் இந்த கைப்பேசிகள் பயன்படு கின்றன. ஆம்! இன்று பல உறவுகள் விலகி நிற்க இந்த கைப்பேசிகள் முதன்மை வகிக் கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாத  உண்மை.

அல்லாஹ்வும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும் கூறியது போல உறவை பேணி வாழ இனியாவது நாம் அனைவரும் இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்வோம்.

Previous post:

Next post: