அறியாதவற்றை கற்றுக் கொடுத்த படைத்த இறைவனும்! பொய்யாக்கி வரம்பு மீறும் மனிதனும்!! 

in 2023 ஜுன்

அறியாதவற்றை கற்றுக் கொடுத்த படைத்த இறைவனும்!

பொய்யாக்கி வரம்பு மீறும் மனிதனும்!! 

S.H. அப்துர் ரஹ்மான் 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால்  துவங்குகிறேன்.

யாவற்றையும் படைத்த உம்முடைய இரட்சகனின் பெயரைக் கொண்டு வாசிப் பீராக!  அட்டை போல் ஒட்டிக்கொள்ளும் நிலையிலிருந்து  மனிதனை  படைத்தான்.

வாசிப்பீராக! உம் இரட்சகன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையயல்லாம் கற்றுக் கொடுத்தான். எனினும் நிச்சயமாக மனிதன்  வரம்பு  மீறுகிறான்.

அவன் தன்னை இறைவனிடமிருந்து தேவையற்றவன் என்று காணும்போது, நிச்ச யமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. தடை செய் கிறானே  அவனை  நீர்  பார்த்தீரா?

ஓர் அடியாரை அவர் அடிபணியும்போது நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், அவரை அவன் பொய்யாக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த் தீரா?

நிச்சயமாக அந்த இறைவன் அவனைப் பார்க்கிறான் என்பதை அவன் அறிய வில்லையா? 

அப்படியல்ல; அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் அவனுடைய முன் நெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை  இழுப்போம்.

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன் நெற்றி ரோமத்தை, ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை  அழைப்போம்.

அவன் கூறுவது போலல்ல! அவனுக்கு நீர் வழிபடாதீர்; உம் இறைவனுக்கு அடி பணிந்து நெருங்குவீராக.  (அல்குர்ஆன் 96:1-19)

In the name of The God, the Entirely Merciful, the Especially Merciful:

Recite in the Name of your Lord who Created man from a clinging substance. 

Recite, and your Lord is the most Generous.

Who taught by the pen. 

Taught man that which he knew not. 

No! 

(But) indeed, man transgresses Because he sees himself self-sufficient. Indeed, to your Lord is the return.

Have you seen the one who forbids.

A servant when he prays.

Have you seen if he is upon guidance or enjoins righteousness.

Have you seen if he denies and turns away.

Does he not know that The God sees.

No! If he does not desist, We will surely drag him by the forelock.

A lying, sinning forelock.

Then let his call his associates; 

We will call the angles of Hell. 

No!

Do not obey him. But prostrate and draw near to the God. (96:1-19)

Previous post:

Next post: