சோதனைகளின்  நோக்கங்கள்! 

in 2023 ஜுன்

சோதனைகளின்  நோக்கங்கள்! 

அபூ இஸ்ஸத், இலங்கை 

மே  மாத  தொடர்ச்சி….

இறை நம்பிக்கையோடு நன்றி செலுத்திக் கொண்டு  இருக்கவேண்டும்  என்பதற்காக:

நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது ஈமான் கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (4:147)

அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்  என்பதற்காகவே :

அல்லாஹ் தனது அடியார்களுக்கு உணவு (மற்றும் சொகுசான வசதிகளை) விரிவாக்கிவிட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தனது அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்றுநோக்குபவன். (42:27)

முஃமின்களைச்  சோதித்து  அறிவதற்காகவே:

மேலும், நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான்(ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின் களை சோதித்து அறிவதற்காகவேயாம். (3:166)

செயல்களால் மிகவும் அழகானவர் யார் என்பதை  சோதிப்பதற்காக :

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன், மிக மன்னிப்பவன். (67:2)

நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று பரிசோதிப்பதற்காக :

அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். அச்சமயம் அவனுடையஅர்ஷ்நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள் என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை என்று கூறுகின்றனர் (11:7)

சபிக்கப்பட்ட கள்ளிமரம் நரகவாசிகளின் உணவு என்பதாக குர்ஆனில் கூறியிருப்பதும் மனிதர்களை  சோதிப்பதற்காகத்தான் :

(நபியே!) உங்கள் இறைவன் அம்மனி தர்களைச் சூழ்ந்து கொண்டான். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது) என்று நாம் உங்களுக்குக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு நாம் மிஃராஜில் காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவேயன்றி வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே  அதிகரிக்கச் செய்கின்றது.  (17:60)

உடனுக்குடன் வேதனை செய்யாது விட்டு வைத்திருப்பதும்  சோதனைக்காகத்தான்:

அன்றி, இதுவரையில் வேதனை செய்யாது உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரையில் நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறியேன். (21:111)

சிலரை வேறு சிலரைக்கொண்டு சோதிப்பதற்காக :

எனவே, இறைநிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துகளை வெட்டுவதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கிவிட்டால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள். அதன்பிறகு (அவர்களின் மீது நீங்கள்) கருணை காட்டலாம். அல்லது ஈட்டுத் தொகை பெறலாம்; (உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது) போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் இந்த வழியை அவன் மேற்கொண்டது உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும் எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடமாட்டான். (47:4)

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே அவர்களைச்  சோதிப்பதற்காக :

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுப தேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர் களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாரளமாக கிடைத் துக் கொண்டிருந்தன) அவர்களுக்குக் கொடுக் கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் நமது வேதனையைக் கொண்டு நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம். (தண்டித்தோம்) அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை  இழந்து விட்டனர் (6:44)

அருட்கொடையின்  மூலம்  சோதிப்பதற்காக :

இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான். (72:17)

இறை நம்பிக்கை கொண்டோரை அறிவதற்கும், உயிர்த்தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் :

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என் றால், அதேபோன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சோதனைக் காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். இதற்குக் காரணம், இறை நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. (3:140)

இறைநம்பிக்கை கொண்டோரை பரி சுத்தமாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.  (3:141)

சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வேரறுக்கவும் :

(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்) அல்லாஹ் தனது திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே  நாடுகிறான். (8:7)

பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்டவே :

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கைஉண்மையைநிலைநாட்டவே நாடுகிறான்.  (8:8)

அறப்போர் புரிபவர்கள் யார், பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்பதை அறிவதற்காக :’

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு  இருக்கிறீர்களா? (3:142)

முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும், நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும்  நாம்  சோதிப்போம்.

அன்றியும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் உங்களிலிருந்துள்ள முஜாஹிது களையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம். அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக, (47:31)

உறுதியான இறை நம்பிக்கையுடையவராய் ஆகும்  பொருட்டு :

அவர் உறுதியான நம்பிக்கையுடைய வராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ் வாறு  காண்பித்தோம். (6:75)

வீரமுள்ள செயலுடையவராக ஆகும் பொருட்டு :

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்கு வாயாக; (சோதனைகளின் போது) உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (31:17)

ஆனால், எவரேனும் பிறர் செய்த சோதனைகளாகிய (தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்துவிட்டால், நிச்சயமாக அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (அல்குர்ஆன் : 42:43)

நன்றி செலுத்தினால் அருளை அதிகமாக்குவதற்கும் :

“”இதற்காக எனக்கு நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் நினைவு கூறுங்கள். (14:7)

பாவமீட்சி பெறுவதற்காகவும் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் :

ஒவ்வொர் ஆண்டிலும், ஒரு முறையோ, (அல்லது) இரு முறையோ அவர்கள் சோதிக் கப்படுகின்றார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை, அது பற்றிச் சிறிதேனும் நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி  பெறுவதுமில்லை. (9:126)

பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக. (7:130)

பிரார்த்தனை  செய்வதற்கும் :

மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர். (30:33)

நன்மையின்  பால்  திரும்புவதற்காகவும் :

அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கிவிட்டோம். அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மையின்பால் திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (7:168)

பாவத்திலிருந்து  மீள்வதற்காக :

ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது. எனினும் அவர்கள் பாவத்திலிருந்து மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே  பிடித்தோம். (43:48)

பாவங்களிலிருந்து  திரும்பி விடும்  பொருட்டு:

மேலும், அவர்கள் தமது பாவங்களி லிருந்து திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடை வதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீப மான ஒரு வேதனையை அவர்கள் அனுப விக்கும்படிச்  செய்வோம்.   (32:21)

நேர்வழிக்கு  மீளும்  பொருட்டு :

அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்தி ருக்கிறோம். அவர்கள் நேர்வழிக்கு மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத் தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித் தோம். (46:27)

Previous post:

Next post: