தடுக்கப்பட்டது மீடியா வருமானமா? புரோகித வருமானமா? 

in 2023 ஜுன்

தடுக்கப்பட்டது மீடியா வருமானமா? புரோகித வருமானமா? 

அன்புள்ள  சகோதரர்களே!

உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும்!

இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே மீடியா வருமானம் ஹராமாக பார்க்கப்படு கிறது. ஆனால் அதைவிட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் முஸ்லிம்கள் குர்ஆனை சுயமாக படித்து புரிந்துகொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். ஹராமும், ஹலாலும் 1444 வருடத்திற்கு முன்னரே நபி(ஸல்) அவர்களால்  வரையறுக்கப்பட்டுவிட்டது.

மவ்லவிகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான உண்மைகளை கூறமாட்டார்கள். காரணம் மக்கள் சொத்துக்களை தவறாக உண்பதுதான், இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் பெரும்பாலோர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்…’ (அல்குர்ஆன் 9:34)

ஆனால் குர்ஆன் சொல்ல சொல்வது என்ன? “நாங்கள் செய்ய ஏவப்பட்டிருக்கும் இந்த இறைப்பணிக்கு மக்களாகிய உங்களிடம் கூலிசம்பளம்ஊதியம் கேட்கவில்லை. அது எங்கள் இறைவனிடமே இருக்கிறதுஎன்று பகிரங்கமாகப் பிரகட னப்படுத்த இறைவன் கட்டளையிட்டிருக் கிறான். (பார்க்க : 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:83) முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளிலிருந்து, கடமையான மார்க்கப் பணியை ஒருபோதும் கூலிசம்பளத்திற்குச் செய்யக் கூடாது.

அது நேரடி வருமானமான  சம்பளமாக இருந்தாலும் சரி! வீடியோக்கள் மூலம் கிடைக்கும் மீடியா வருமானமாக இருந்தாலும் சரி! குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத் களையும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரனுக்கு அவனது தாய்மொழியில் எடுத்துச் சொன்னால் அவற்றைக் காது கொடுத்துக் கேட்டு மனதில் இருத்திக் கொண்டால், கடமையான மார்க்கப் பணிக்கு கூலிசம்பளம் அறவே கூடாது. கொடிய ஹராம் என்பது தெளிவாக  விளங்கும்.

மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய் மையானவன், அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அன்றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்‘, “தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்‘ (23:51) என்று இறைவன் கட்டளையிடுகிறான். (அதேபோல்) “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்த வற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்‘ (2:172). இவ்வாறு இறைவன் புரோகிதத்தை கொடிய குற்றமாக கூறி இருக்க அதனை சிறு குற்றமாக கூட பார்க்க முஸ்லிம்கள் தயாராக இல்லை. மாறாக வேறு வழி இல்லை என்று கூறி அதனை ஆதரிக்க வேறு செய்கிறார்கள். கொடிய குற்றமான புரோகிதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் அனைவரும் பாடுபடுவோம். புரோகி தம் ஒழிந்தால்தான் முஸ்லிம்கள் வெற்றிபெற முடியும். இன்ஷா அல்லாஹ்! முயற்சி செய்வோம். அல்லாஹ் தடுத்த அனைத்து பாவங்களை விட்டும் முஸ்லிம்களை பாதுகாப்பானாக.

Previous post:

Next post: