முஸ்லிம்களே! ஒரே அமீரின் கீழ் ஒன்றுகூடுங்கள்! 

in 2023 ஜுன்

முஸ்லிம்களே! ஒரே அமீரின் கீழ் ஒன்றுகூடுங்கள்! 

அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக் 

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறிய வில்லையா? (அல்குர்ஆன் 2:107)

(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகின்றாய்; நீ நாடியோரை கண்ணியப் படுத்துகின்றாய்; நீ நாடியோரை இழிவு படுத்தவும் செய்கின்றாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடைய வனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன் 3:26)

இந்தியாவில் பாசிச ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எப்படியாவது இஸ்லாத்தை இந்தியாவில் ஒழித்துகட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மீடியா, சினிமா, நீதிதுறை என அனைத்தையும் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக முடுக்கி விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இஸ் லாத்திற்கு எதிராக தொடர்ந்து சினிமாக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் மூலம் மக்களுக்கு இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட சினிமாக்களை இந்த பாசிச அரசு ஆதரிக்கத்தானே செய்யும்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சினிமாவை திரையிட தடை செய்வதாக அந்த மாநில முதல்வர் அறிவித்தார். தமிழ்நாட்டில் எதிர்ப்பின் காரணமாக இந்த படத்தை திரையிடப்படமாட்டாது என திரையரங்குகளின் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனை எதிர்த்து அதாவது மேற்கு வங்கத்தின் தடையை எதிர்த்தும் தமிழ்நாட்டில் திரையிட பாதுகாப்பு வழங்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதித்த மேற்கு வங்க அரசைக் கண்டித்தும், மேலும், தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகள் மே 15ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உச்சநீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. இஸ்லாமியர் களுக்கு நீதி கிடைக்கவில்லையே என்று புலம்புகின்றோம்.

ஒவ்வொரு முஸ்லிம் இதற்காக ஒவ் வொரு தொழுகையிலும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் இந்த நிலை மாறக் கூடும். அதை விட்டுவிட்டு போராட்டம் என்று ஒவ்வொரு இயக்க பிரிவுகளும் தங்கள் சுய விளம்பரத்திற்காக போராட்டங்கள் செய்து இந்த மாதிரியான படங்களை அனைவரும் பார்க்கும்படி இவர்களே விளம்பரம் செய்வது போலாகிவிடுகிறது. இந்த உலகமே சேர்ந்து இஸ்லாத்தை ஒழிக்க சதி செய்தாலும் அல்லாஹ் ஒருவன் போதுமானவன் என்பதை இவர்கள் அறியவில்லையா? இந்தமாதிரியான நேரத்தில் அல்லாஹ்விடமே பொறுப்பேற்படுத்துங்கள். அப்படி இந்த பாசிச அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் இஸ்லாமிய அனைத்து இயக்கப் பிரிவுகளும் ஒன்று சேர்ந்து ஒரே அமீரின் தலைமையின் கீழ் நின்றால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறலாம். இன்ஷா அல்லாஹ்!  

நாம் முஸ்லிம்கள் என்பதில் மட்டும் ஒன்றுபடுவோம்! 

இயற்கை பேரிடர்களில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக உதவி செய்வதாக இருந்தால் எந்த ஒரு அமைப்பின் பெயரை T.சர்ட்டில் போடாமல் முஸ்லிம் என்று மட்டும் போட்டிருந்தால் அந்தப் புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே சென்றடையும். மறுமையில் நன்மையும் கிடைக்கும்.

மாறாக இயக்க வெறி பிடித்து, இயக்க பெயர்களை T.சர்ட்டில் போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவி செய்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்?

அவரவர்களின் இயக்கங்களுக்கே பெயர் புகழ் அனைத்தும் கிடைக்கும்!

மறுமையில் என்ன கிடைக்கும்?

இது பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்டவாறு மிகத் தெளிவாக கூறு கின்றான். எவர் தாம் செய்த சொற்பமானதைப் பற்றி மகிழ்ச்சி கொண்டும், தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒருபோதும் எண்ணாதீர்! அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.     (அல்குர்ஆன் 3:188)

எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?  (இருக்கின்றார்?)  (அல்குர்ஆன் 41:33)

எனவே தன்னுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டச் செல்லும். எனது இஸ்லாமிய அன்புச் செல்வங்களே! இதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் பாழாய்ப் போன இயக்கங் களின் பெயரில் செயல்படுவதை விட்டுவிட்டு எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குச் சூட்டிய பெயரான முஸ்லிம் (ஆதாரம்: அல்குர்ஆன் 22:78) என்ற பெயரில் T.சர்ட் அணிந்து கொண்டு பணியாற்றுங்கள். இயக்கங்களை கை கழுவுங்கள். ஒரே முஸ்லிம் சமுதாயமாக மாறுங்கள். இன்ஷா அல்லாஹ். அகில உலக அளவில் இஸ்லாம் வெற்றி பெறும். இது உறுதி!

Previous post:

Next post: