ஹிஜாப், பர்தா, புர்கா, அபாயா! 

in 2023 ஜுன்

ஹிஜாப், பர்தா, புர்கா, அபாயா! 

மீரான் 

ஹிஜாப், பர்தா, புர்கா மற்றும் அபாயா இந்த நான்கு பெயர்களும் முஸ்லிம் பெண்களுடன் தொடர்புப்படுத்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் வார்த் தைகள். இது தொடர்பாக முஸ்லிம்களிடையும் தெளிவு இல்லாத சூழ்நிலையில் சர்ச்சை தொடரத்தான் செய்கிறது. ஆகவே இது தொடர்பான புரிதல் பெறும் நோக்கில் மட்டுமே  இந்த  பதிவு.

முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அணியும் ஆடை யைத்தான் இந்த நான்கு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

இவற்றுள், ஹிஜாப் என்பது ஆடையே அல்ல.

ஆம்! ஹிஜாப் என்பது ஆடையல்ல. அது, முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஒழுக்க முறை.

இஸ்லாம் கூறும் ஆடை முறையை பேணிக்கொள்ளும் ஒரு பெண், ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஒழுக்க முறையை பின் பற்றுவதால் அவர் அணியும் அந்த ஆடை முறை ஹிஜாப் எனப்படுகிறது. இதுதான் ஹிஜாப் என்பது ஆடையாக கருதப்படு வதற்குக்  காரணம். 

பர்தா, புர்கா மற்றும் அபாயா என்பவை முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையின் வடிவமைப்பை பொறுத்து அழைக்கப்படும் ஆடைகளின் பெயர்கள். இஸ்லாம் கூறும் ஆடைமுறை என்பதுகிமார்மற்றும்ஜில்பாப்  ஆகிய  இரண்டும்தான்.

கிமார் என்பது தலைமறைவு ஆடை. இந்த ஆடை அரபுகள் அணிந்துவந்த ஆடை தான். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரும் இதை அணிவர். பாலைவன மணற் புயலில் இருந்து முகத்தை மறைப்பதற்காக இந்த கிமார் எனும் ஆடையைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ளவும் செய்வர். கிமார் எனும் ஆடையைக் கொண்டு தேவைப்பட்டால் முகத்தை மறைக்கவும் செய்யலாம். குர்ஆன் 24:31 வசனத்தில் இந்த ஆடையை முஸ்லிம் பெண்களுக்கு கட்டாயமாக்குகிறது இஸ்லாம்.

இந்த கிமார் எனும் ஆடை அணியாத நிலையில் முஸ்லிமான பெண் தொழுகையை நிறைவேற்றினால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்கிறது இஸ்லாம். பெண்களின் மேலாடை கீழாடை ஆகிய குறைந்தபட்ச ஆடைகளுடன் கிமார் எனும் ஆடையும் முஸ்லிம் பெண்ணின் குறைந்த பட்சம் ஆடைகளாகிறது.

வீட்டிலிருக்கும்போது மேலாடை கீழாடை மற்றும் கிமார் ஆகிய மூன்றும் முஸ்லிம் பெண் அணிந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச ஆடைகள் (வீட்டிலிருக்கும்போது மஹரமான ஆண்களிடம் இந்த கிமார் எனும் ஆடையை பேணுவது அவசியமல்ல)

இது வீட்டுக்குள் இருக்கும்போது உள்ள நிலை. ஏதாவது தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே வருவதானால் இந்த தலை மறைப்பு மட்டும் போதாது. உடையையும் மறைக்கும் விதத்தில் துணியணிய வேண்டும். உடையையும் மறைக்கும் விதத்தில்  அணியும்  ஆடைதான்  ஜில்பாப்.

33:59 வசனத்தில் இந்த ஆடையை நபிகளாரின் மனைவிமார்கள் உட்பட முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் கட்டாயமாக்குகிறது இஸ்லாம். இப்போது, முஸ்லிமான பெண் தமது தேவைக்காக வீட்டிலிருந்து வெளியில் வரும்போது அந்த பெண் அணிந்திருக்கும் ஜில்பாப் மற்றும் கிமார் ஆகிய இரண்டும்தான் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது. இது தவறு. ஏனென்றால், பெருநாள் தொழுகைக்காக வீட்டிலிருக்கும் பெண்களையும் திடலுக்கு அழைத்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த பெண்ணிடம் ஜில்பாப் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று கேட்கப்பட்டதற்கு, தோழியிட மிருந்து ஜில்பாபை இரவல் பெற்றாவது திடலுக்கு வரட்டும் என்கிறார்கள். பெண் தொழும்போது கிமார் அணிந்திருக்க வேண் டும் என்ற நிலையில் வீட்டிலிருக்கும் பெண் களிடம் நிச்சயம் கிமார் இருந்திருக்கும். கிமார் என்பதும் ஜில்பாப் என்பதும் ஒன்று தான் என்றால் தங்களிடம் இருக்கும் கிமார் அணிந்தவர்களாக திடலுக்கு வந்திருக்க முடியும். வெளியில் வரும்போது ஜில்பாப் எனும் கூடுதல் ஆடை தேவைப்பட்டிருப்ப தால்தான் அதை இரவல் பெற்றாவது திட லுக்கு செல்ல வேண்டும் என்ற தேவை ஏற் படுகிறது. கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டும்  ஒன்றல்ல.

கிமார் என்பது தலைமறைப்பு ஆடை தேவைப்படும்போது முகத்தையும் மறைக்கும் வகையில் இது இருக்கும்.

ஜில்பாப் என்பது உடை மறைப்பு ஆடை. இது எப்போதுமே உடையை மறைப்பதாக இருக்கும்.

முஸ்லிமான பெண் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டையும் அணிந்திருக் கிறார் என்று உறுதி செய்ய முடிந்தால் அவர் இஸ்லாம் கூறும் ஹிஜாபை பேணுபவராக ஆகிறார்.

அதை  எப்படி  உறுதி  செய்வது?

நமக்குத் தெரிந்த ஆடைகளை வைத்து இதை புரிந்து கொள்வோம்.

மேலாடை மற்றும் கீழாடை ஆகிய இரண்டும் பெண்களின் மானத்தை மறைப் பதற்கான குறைந்தபட்ச ஆடைகள். சட்டை (மேலாடை) மற்றும் பாவாடை (கீழாடை) அணிந்து வெளியில் வருவது கேரளா, இலங்கை மற்றும் மலேசிய பெண் களின் கலாச்சார ஆடை. இந்த ஆடையுடன் முஸ்லிம் பெண்கள் தொழ முடியாது. இவர்கள், தலையை மறைக்கும் விதமாக கிமார் எனும் ஆடை அணிய வேண்டும். வெளியில் வருவதற்கு உடையை மறைக்கும் விதத்தில் ஜில்பாப் எனும் ஆடையும் அணிய வேண்டும். ஆனால், தலைமறைப்பு மட்டும் அணிந்து ஜில்பாப் அணியாத நிலையில் வெளியில் வருகின்றனர். இது இஸ்லாம் கூறும் ஆடைமுறையா என்பதில் சர்ச்சை இருக்கிறது.

நமக்குத் தெரிந்த இரண்டு ஆடைகளை வைத்து கூடுதலாக புரிந்துகொள்ள முயல்வோம்.

தாவணி மற்றும் சேலை ஆகிய இரண்டும் தமிழ் பேசும் பெண்களிடம் உள்ள ஆடைகள்.

மேலாடை கீழாடை ஆகிய இரண்டும் அணிந்து அதற்கு மேலாக தாவணி அணிவது

மேலாடை கீழாடை ஆகிய இரண்டும் அணிந்து அதற்கு மேலாக சேலை அணிவது.

தாவணி முந்தானையை தலையில் அணிந்து அதையே தலைமறைப்பாக்கி தொழ முடியும். ஆனால், இது முழு உடையையும் மறைக்காது. இதை அணிந்த நிலையில் வீட்டில் தொழலாம். அதாவது, தாவணியில் இஸ்லாம் கூறும் கிமார் எனும் தலைமறைப்பு இருக்கிறது. ஆனால், ஜில்பாப் இல்லை. வெளியில் செல்வதற்கு இது இஸ்லாம் கூறும் ஆடைமுறை அல்ல. அடுத்தது சேலை.

சேலை முந்தானையை தலையில் அணிந்து தலைமறைப்பாக்கி தொழ முடி யும். மேலும், இதை முழு உடையையும் மறைக்கும் விதத்தில் அணியமுடியும். சேலையில் இஸ்லாம் கூறும் கிமார் எனும் தலைமறைப்பு இருக்கிறது. ஜில்பாபும் இருக்கிறது. இது இஸ்லாம் கூறும் ஆடை முறைக்கு மிகவும் நெருக்கமானது. அத னால் தான், இன்றளவும் சேலை அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் இஸ்லாம் கூறும் ஆடை முறையை பேணுவதாகவே கருதப்படுகிறது.

எனினும், இதை இஸ்லாம் கூறும் ஆடை முறையாக கருதமுடியாது என்ற கருத்தும் இருந்ததால் சேலைக்கும் மேலாக ஒரு துணியைப் போர்த்தும் முறை தோன்றியது. இதுதான்பர்தா‘ (துப்பட்டி) எனப்படுகிறது. கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டும் இணைந்திருக்கும் பர்தாவானது இஸ்லாம் கூறும் ஹிஜாபை பூர்த்தி செய்தது. எனினும், தைக்கப்படாத நீளமான இந்த துணியானது கையாளுவதற்கு எளிதானதாக இல்லை.

இந்நிலையில், ஆடை வடிவமைப்பில் பல புதுமை படைப்புகள் தோன்றிய கால கட்டத்தில் உருவானவைதான் புர்கா மற்றும் அபாயா.

புர்கா என்பது உடல் முழுவதும் மறைக்கப்பட்டு கண்கள் மட்டும் தெரியும் நிலையில் அணியும் தைக்கப்பட்ட ஆடை.

அபாயா என்பது உடல் முழுவதும் மறைக்கப்பட்டு முகம் முழுவதும் தெரியும் நிலையில் அணியும் தைக்கப்பட்ட ஆடை. எனினும், தேவைப்படும்போது முகத்தை மறைக்கும் வகையிலானது இந்த ஆடை.

இந்த இரண்டு ஆடைகளிலுமே இஸ்லாம் கூறும் கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டும் இணைந்திருக்கிறது. இஸ்லாம் கூறும் ஹிஜாப் முறைக்கு பொருத்தமானது. மேலும், இது கையாளு வதற்கு மிக எளிதானது.

இஸ்லாம் கூறும் கிமார் மற்றும் ஜில்பாப் ஆகிய இரண்டும் இணைந்த நிலையில் வடிவமைக்கப்படும் ஆடைகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தால் அது மார்க்க ரீதியாக சிக்கலை சந்திப்ப தில்லை. புர்கா மற்றும் அபாயா ஆகிய இரண்டும் இஸ்லாம் கூறும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஒழுக்கமுறையிலானது.

இதனால்தான், இஸ்லாம் விமர்சிக்கப் படும்போதெல்லாம் இஸ்லாத்தின் அடையாள மாகிவிட்ட புர்கா மற்றும் அபாயா ஆகிய இரண்டும் விமர்சிக்கப்படுகின்றன.

Previous post:

Next post: