முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்!

in 2023 ஜூலை

முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்!

அப்துல் நாஸர் 

அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின் பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின் றேன்.

முஸ்லிம்களாகவே மரணமடைய நம் முடைய முயற்சி இருக்கிறது. அல்லாஹ் முஸ்லிம்களாகவே நம்மை மரணம் அடையச்  செய்வானாக.

ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு மணித்துளிகளும் செல்லச் செல்ல காலங் களும் நாட்களும் மட்டுமல்ல நம்முடைய ஆயுள் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாட்கள் தான் எத்தனை வேகமாக செல்கின்றன. நேற்று என்ன உடை உடுத்தினோம். என்ன உணவு உண்டோம் என்பது கூட நமக்கு ஞாபகம் இருப்பதில்லை. அவ்வளவு வேகமாக காலங்களும், நாட்களும் சென்று கொண்டே இருக்கின்றன. இதில்தான் நாம் அதிகம் அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளோம். நம்முடைய அந்திம நாட்களைப் பற்றித்தான் சிந்திக்க வேண் டும். நம்முடைய அந்திம நாட்கள் எப்படி இருக்கும்? மரணம் வருவதற்கு முன்னால் நம்முடைய வாழ்க்கையை சீர்படுத்தி விட் டோமா? முஸ்லிம்களாகவே மரணம் அடைய நம்முடைய முயற்சிகள் இருக் கிறதா? இல்லை அல்லாஹ்வின் ஏவல்களை யும், விலக்கல்களையும் ஏற்காமல் ஏனோ, தானோ என்று வாழ்ந்து மரணம் அடைந்து பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோமா? பெரும்பாலானவர்களின் நிலை பிறகு பார்க்கலாம் என்றுதான் இருக்கிறது. எங்கள் இறைவா! இந்த மக்களுக்கு நாங்கள் எப்படி புரிய வைப்போம். அல்லாஹ்வின் ஏவல்களையும், விலக்கல்களையும் ஏற்காமல் வரக்கூடிய வேதனைகளைப் பற்றி அச்சம் இல்லாதவர்களாக வெகு  சாதாரணமாக  இருக்கிறார்களே.

ஈமான் கொண்டவர்ளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப் படி அஞ்சுங்கள். மேலும் முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணமடைய வேண்டாம்.    அல்குர்ஆன் 3:102

இந்த வசனத்திலிருந்து உங்களுக்குப் புரியவில்லையா? அல்லாஹ் கூறுவது விசு வாசிகளே! இவ்வுலகத்தில் அல்லாஹ்வை பயப்படுகின்ற முறைப்படி வாழ்ந்து கொள் ளுங்கள். முஸ்லிம்களாகவே மரணமடை யுங்கள். அப்படி இல்லாமல் ஏனோ, தானோ என்று வாழ்ந்து என் முன்னால் வந்து நிற்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

நம்முடைய வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள். இவ்வுலக வாழ்க்கைக்காக வேண்டி நீண்ட நெடும் திட்டங்களை அல் லவா உருவாக்குகின்றோம். நம் வாழ்க்கைப் பயணம் எப்படி செல்கின்றது? நாம் செய்த பாக்கியம் என்னவென்றால் நாம் முஸ்லிம் களாக உள்ள தாய், தந்தையர்களுக்குப் பிறந்து விட்டோம்; அதனால் முஸ்லிம் களாகிவிட்டோம்; முஸ்லிம்களாக பிறந்த நாம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப் பட்ட முஸ்லிம்களாகவே மரணமடைய வேண்டும்.  இதுதான் மகத்தான வெற்றி.

நம்முடைய வாழ்க்கை உத்திரவாதம் உள்ள வாழ்க்கையா? இன்று இப்படி இருப் போம்; நாளை எப்படி இருப்போம் என்று கூறமுடியும்? நம்முடைய மரணம் எப்படி நிகழும் என்று கூறமுடியுமா? இன்று இரவு, தூங்கினால் காலையில் உயிரோடு இருப் போம் என்று கூறமுடியுமா? ஒரு கடையில் ஏதாவது பொருள் வாங்கினால் கூட எத்தனை வருடங்கள் உத்திரவாதம் கொடுக் கிறார்கள். ஆனால் நீண்ட நெடும் திட்டங் கல் தீட்டும் நமக்கு கியாரண்டி இல்லையே.

ஆனால் நாம் எல்லாம் ஈடு கொடுக் கின்ற ஒரு நாள் வரவிருக்கிறது. அந்த நாள் வருவதற்கு முன்னால் நாம் ஒவ்வொருத் தரும் தயாராக வேண்டாமா? அந்த நாளில் யாருக்கும் யாரும் உதவி இல்லையே. நாம் தப்புவது எப்படி என்பதே நம் எண்ணமாயி ருக்கும்.

(அந்நாளின்) வேதனையைக் காணும் போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மா வும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தை யுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும். தன் கைசேதத்தை யும், கழிவிரக் கத்தையும் வெளிப்படுத்தும், ஆனால் அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். (ஒரு சிறிதும்) அவற் றுக்கு அநியாயம் செய்யப்படமாட்டாது.    அல்குர்ஆன் 10:54

அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டி எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் நம் மரணத்திற்குப் பின்னால் வரும் நிரந்தர வாழ்க்கைக்கு வேண்டி நாம் ஒவ் வொருவரும் கஷ்டப்படவும், எதை இழக் கவும் தயாராக இல்லையே. இரவு தஹஜ்ஜத் தொழ எழும்புவது கூட முடியவில்லையே. ஆனால் இரவில் வியாபார காரியமாக இருந் தால் எழும்புகிறோமே? ஏன்? சிந்திப்போமா!

இவ்வுலக வாழ்க்கையில் கஷ்டப்படு பவர்கள் கூறுவார்கள்; வாழ்க்கையில் வெறுப்பு அடைந்தவர்கள் கூறுவார்கள்; நான் இறந்துவிட்டால் எனக்கு இவ்வுலக கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அனுப விக்க வேண்டாமே? என் உயிரை எடுத்து விடமாட்டாயா? என்றெல்லாம் கூறுவார். தன் வாழ்க்கையை முடித்துகொள்ள விரும் புவர். தன் மரணத்தால் இந்த பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணுவர். ஆனால் மரணத்திற்குப் பின்னால் வரும் கஷ்டத்தை யும், கைசேதத்தையும், இந்த முஸ்லிம் சமூகம் எண்ணிப் பார்க்கவில்லையே! மறுமை வாழ்க்கையை சாதாரணமாக எண்ணிவிட்டார்களே.

எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்ட நபிமார்களின் பிரார்த்தனையும் முஸ்லிம் களாகவே மரணமடைய செய் என்று தானே  இருந்தது.

இதையே இப்ராஹீம் தம் குமாரர் களுக்கு வஸிய்யத்து செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்) அவர் கூறினார்; என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்கு சன் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத் துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள். அல்குர்ஆன் 2:132

..யூசுப்(அலை) பிரார்த்தனையும் இதுவே,

முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை  நீ  கைப்பற்றிக்  கொள்வாயாக.    அல்குர்ஆன் 12:101

சூனியக்காரர்களின் பிரார்த்தனையும் முஸ்லிம்களாகவே எங்களை கைப்பற்றிக் கொள்வாயாக  என்று தானே  இருந்தது.

முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!   அல்குர்ஆன் 7:126

எங்கள் இறைவா! எங்களையும் முஸ் லிம்களாக உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு இருக்கும் நிலையில் எங்கள் ஆத்மாக்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக.  ஆமீன்.

Previous post:

Next post: