அந்த கால ஃபிர்அவ்னும் இந்த கால ஃபிர்அவ்னும் இறைவனுடைய ஒரு பெரும் சோதனையே!

in 2023 ஆகஸ்ட்

தலையங்கம் :

அந்த கால ஃபிர்அவ்னும் இந்த கால ஃபிர்அவ்னும் இறைவனுடைய ஒரு பெரும் சோதனையே!

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப்  பாருங்கள்.

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) எந்த ஆத்மா வும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்காது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.

அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி லிருந்து  நாம் உங்களை விடு வித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழ விட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட் டிருந்தது.

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களைப் காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மூழ்கடித்தோம்.  (2:47-50)

இந்த சம்பவத்தில் சோதனை இறைவனிட மிருந்து வந்ததுதான், ஃபிர்அவ்னிடம் இருந்து வந்தது அல்ல என்று எப்போது முஸ்லிம்கள் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரிய வில்லை.

(அன்றி) “எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை‘ (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் அருள்வாயாக! (உனக்கு)முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!’ (என்று அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) “மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் வி­மம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயாக?’ என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை கொன்றுவிட்டு(அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழ விடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கின்றோம். (ஆகவே நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்) என்று கூறினான்.

(அதற்கு)மூஸா தன் இனத்தாரை நோக்கிநீங்கள் இறைவனிடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்துருங்கள். நிச்சயமாக இந்த பூமி இறைவனுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (இறைவனுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்என்று  கூறினார்.

(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) “உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்என்று கூறினார்.  (7:126-129)

முஸ்லிம்களே! இறைவன் உங்களை கவனித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை உணர்ந்து உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்த்து அதை சீராக்குங்கள். அவ்வாறு செய்தால் இறைவன் பூமிக்கு முஸ்லிம்களை அதிபதியாக்கி வைக்கக் கூடும்.    இன்ஷா  அல்லாஹ்.

Previous post:

Next post: