அறிந்து கொள்வோம்!

in 2023 ஆகஸ்ட்

 அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

ஜூலை  மாத  தொடர்ச்சி….

1. அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார் கள் எத்தனை பேர்?

இரண்டு. யஹ்யா(அலை), ஈஸா (அலை). அல்குர்ஆன் 19:7, 3:45

2. வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் எத்தனை பேர்?

இரண்டு. இப்றாஹிம்(அலை), ஸக்கரியா (அலை).  அல்குர்ஆன்  11:72, 19:8,9

3. நபி நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளில் எத்தனை சிலை களின் பெயர்களை  அல்லாஹ்  கூறுகிறான்?

ஐந்து. வத்து, ஸுவாஉ, யகூதி, யஊக், நஸ்ர்.   அல்குர்ஆன்  71:23.

4. ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு உதவி செய்வேன் என்று எந்த போரின் போது அல்லாஹ் கூறினான்?

பத்ர் போர்.   அல்குர்ஆன்  3:125

5. பேராசை உடைய காரூனை அல்லாஹ் எப்படி அழித்தான்?

பூமிக்குள்  புதைத்து  அழித்தான்.   அல்குர்ஆன்  28:81

6. பாறைகளை குடைந்து குகைகள் அமைத்து எந்த கூட்டம் வாழ்ந்தது?

ஸமூத்கூட்டத்தார்.   அல்குர்ஆன்  89:9

7. மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபி(ஸல்) அவர்கள் பயணித்த பயணத்தின் பெயர் என்ன?

மிஹ்ராஜ்இஸ்ரா.   அல்குர்ஆன்  17:1

8. நபி(ஸல்) அவர்கள் மனைவியரில் அதிகம் தர்மம் செய்யக்கூடியவர் யார்?

ஜைனப் (ரழி)  அவர்கள்.   புகாரி  1420

9. போர்க்களத்தில் ஏற்படும் துன்பங் களின்போது எப்படி இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பொறுமையாக.   அபூஹுரைரா(ரழி) புகாரி : 3026

10. நபிகளார் காலத்தில் யார் இறந்த போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது?

நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிம்(ரழி) இறந்த நாளில் புகாரி : 1043

11. கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபி(ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்?

அலி(ரழி) அவர்களிடம்.  புகாரி : 3009

12. பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் யாருடைய சட்டையை   அணிய   கொடுத்தார்கள்?

அப்துல்லாஹ்.  புகாரி: 3008

13. அடிமை பெண்ணுக்கு கல்வி, ஒழுக்கம் கற்பித்து அவளையே திருமணம் சய்து கொண்டவருக்கு எத்தனை மடங்கு கூலி?

இரண்டுமடங்கு.  புகாரி:  3011

14. யூதனின் தலைவன் அபூராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

இப்னுஅதீக்.   புகாரி : 3023

15. ­ஹீதுடைய எந்த பாவம் மன்னிக்கப்படாது?

கடன்.   முஸ்லிம்

16. நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?

அல்லாஹ். புகாரி: 3016

17. ஏமன் நாட்டின் கஅபா என்றழைக்கப் பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்த வர் யார்?

ஜரீர்(ரழி) அவர்கள்.  புகாரி : 3020

18. மார்பில் அதிக முடியுடையவர்களாக இருந்த நபி யார்?

நபி(ஸல்) அவர்கள்.  புகாரி : 3034

19. கொடியவன் கஅப்பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?

முஹம்மத்பின்மஸ்ஸலமா(ரழி).  புகாரி : 3031

20. முஆத்(ரழி) அவர்களை எந்த நாட்டு ஆளுனராக நபி(ஸல்) அவர்கள் நியமித் தார்கள்?

யமன்.   புகாரி : 3038

Previous post:

Next post: