அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

in 2023 செப்டம்பர்

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்

நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

K.S.H. அபூ அப்துர்ரஹ்மான்

மறு பதிப்பு : 

அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமை யாதது தண்ணீர். எனவேதான்நீரின்றி அமையாது உலகம்என்றான் வள்ளுவன். ஒரு ஊரில் ஆறு ஓடாவிட்டால் அந்த ஊரில் வளமில்லை என்பதைக் குறிக்கஆறில்லா ஊர் பாழ்என்ற பழமொழியும் நாமறிந்ததே. இதை இன்னும் விரிவாகக் கூறினால், “நீரில்லா கோள் பாழ்இது உண்மை! விண்வெளியில் எத்தனையோ கோள்கள் சுழல்கின்றன. இவை அனைத்தையும் விட உயிருள்ள உலகமாக உலவி வரும் நீர்க்கோளம் நாம் வாழும் பூமி மட்டுமே. இப்பூவுலகின் உயிர்களுக்கு ஆதாரமான நீர் எங்கிருந்து வந்தது?  இதோ அறிவியல்  கூறுகிறது.

ஒவ்வொரு உருமண்டலமும் (றூழியிழிமுதீ) வெடித்துச் சிதறி பல கோடிக்கான நட்சத்திரங்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் நேரத்தில் விண்வெளியில் நிறைந்திருக்கும் ஹைட்ரஜனும் நட்சத்திரங்களிலிருந்து வரும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்து விண்வெளியில் மிகப் பிரமாண்டமான நீர்ப் பரப்பாகின்றன. சூரியன் என்ற நமது நட்சத்திரத்திலிருந்து பூமியும் பிற கோள்களும் பிரிந்து வந்தபொழுது இவ்விண் வெளிக் கடல் நீர் இவைகளில் வீழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நமது பூமியின் குறைந்தபட்சம் மைனஸ் 89OC, உயர்ந்தபட்ச வெப்பம் 58OC சராசரி வெப்பம் 14OC. எனவே, ஆரம்பத்தில் விண்வெளியில் இருந்து வந்த புதுவெள்ளம் ஆவியாகிவிடாமல் பூமியில் தங்கி ஆழி சூழ் உலகமாக, மூன்று  பாகம்  கடலாக  உள்ளது.

நவகிரகங்களிலும் நீர் :

பூமிக்கு மாத்திரம் நீர் வரவில்லை; எல்லா கோள்களுக்கும் நீர் வந்து உள்ளது. ஆனாலும் அக்கோள்களின் உயர் வெப்பத்தால் அவை ஆவியாகியிருக்கலாம். அல்லது கடுங் குளிரால் பனிக்கட்டியாகி இருக்கலாம். உதாரணமாக, பகல் பொழுதில் சந்திரனின் வெப்பநிலை 180OC, இரவில் 100OC, ஆக கடும் வெப்பம் நிலவு கிறது. ஆனால் சூரிய ஒளி படாத துருவப் பகுதி களில் மைனஸ் 230OC மிகக் கடும் குளிர் நிலவுகிறது. எனவே  சந்திரனின் பரப்பில் வீழ்ந்த நீர் கடும் வெப்பத்தால் ஆவியாகியிருக்கலாம். ஆனால் சூரிய ஒளி படாத துருவப் பிரதேசங்களில் விழுந்த நீரானது பனிப்பாறையாக இன்றும் உள்ளது. நிலவில் சுமார் 10 முதல் 200 மில்லியன் மெட்ரிக் டன் பனிக்கட்டியிருப்பதாக அமெரிக்கா நாசா (ஹிழிவிழி) விண்வெளிக் கழகம் தெரிவிக்கிறது.

இதுபோலவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டமார்ஸ் குளோபல் சர்வேயர்(Mars Global Surveyor) என்ற செயற்கைக் கோள் எடுத்தனுப்பிய படங்கள் இக்கருத்தை உறுதி செய்கின்றன. செவ்வாய் கிரகத்தில் பெரு வெள்ளம் பாய்ந்தோடிய நீரோடைகள், கால்வாய்கள், நீரால் அரிக்கப்பட்ட மலைப்பாறைகள், ஆற்று நீர் ஓடியதால் ஏற்பட்ட மணல் அரிப்புகள் எல்லாம் மிகத் தெளிவாக அப்படங்களில்  பார்க்க முடிகிறது.

செவ்வாயில் ஓடிய ஆற்று நீரானது கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம்; அல்லது சமீபத்தில் கூட நடந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் செவ்வாய் தரைக்கடியில் 300-1300 அடி ஆழத்தில் பாறைகளுக்கிடையில் பெரும் நீர்த்தேக்கம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதுபோல் பிற கிரகங்களான வியாழனிலும் (Jupiter) அதன் துணை கோள்களான கனி மேட்டிலும் (Ganymede) மிகப் பெருமளவு உப்பு நீர் அதன் உறைபனிக்கு கீழே இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சனிக்கிரகத்தின் (Saturn) துணைக்கோளான டைட்டானில் (Titan) நீரும் உயிரினங்கள் உருவாக்கத்திற்குரிய நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள் நிறைந்த வளிமண்டலம் உள்ளது. நெப்டியூன் (Neptune) மற்றும் புளூட்டோ (Pluto) கிரகங்கள் தண்ணீரும், மீத்தேனும் கனிமமும் ஒன்று திரண்ட பனிப்பந்து போன்றிருக்கிறது. இதுபோல் தாழ்வான வானத்திலிருக்கும் நட்சத்திரங்களுக் கிடையில் பெரும் கடலளவு நீர் இருப்பதாக  ISO ஆய்வு  கூறுகிறது.

பிற கோள்களில் நீர் இருப்பது உண்மையானால் அங்கு ஏதேனும் உயிரினம் வாழ்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வீழ்ந்த ஒரு விண்கல்லை (Meteorite) அமெரிக்காவின் நாஸா (Nasa) விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்தனர். வான் உயிரியல் (Austro biology) துறைத்தலைவர் பேராசிரியர் ரிச்சர்டு ஹுவர் இதுபற்றி கூறும்போதுஅந்த விண்கல்லில் நுண்ணுயிர் படிமங்கள் (Fossilized Micro Organisms) இருக்கின்றன. இந்த நுண்ணுயிர்களானது விண்வெளியில் நிலவும் அசாதாரண கடுமையான சூழலிலும் உயிர் வாழும் தன்மையுடையது. மேலும் இந்த நுண்ணுயிர்கள் முதலில் சூரிய மண்டலங்களில் உருவாகி  இருக்கவேண்டும்  என்று  கருதுகிறார்.

நீராதாரம்நீராகாரம்

மனிதன் தன் தாகத்தை தணிப்பதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான பானங் களை, பால், தேன், பழச்சாறு போன்றவை களையும் மன இச்சையை தணிக்க மதுவையும் குடிக்கின்றான். இவ்வனைத்து பானங்களுக்கும் ஆதாரமாக இருப்பது நீர்தான். பசுமையான புல் தழைகள் வளர்வதற்கு நீர் தேவை. இவைகளை உண்டும், நீர் அருந்தியும் கால்நடைகள் பால் தருகின்றன. இதுபோல் மலர்கள் பூத்துக் குலுங்க மழை தேவை. இம்மலர்களின் மகரந்தத்தை தேனீக்கள் உண்டு தேன் கொடுக்கின்றன. இதுபோல பழரசம், மது போன்றவைகள் தரும் தாவரங்களுக்கு நீர் தேவை. இதனால்தானோ அல்லாஹ், சுவனத்து நல்லடியார்களுக்கு அளிக்கும் பானங்களை வரிசைப்படுத் தும்போது நீருக்கு முதலிடம் தருகின்றான். ஏனெனில் நீர்தான் அனைத்துக்கும் ஆதாரமாக  உள்ளது.

“(சுவனத்தில்) அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மதுரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும்  இருக்கின்றன.” அல்குர்ஆன் 47:15

அல்லாஹ்வின்  ஆரம்பப்  படைப்பு  – “தண்ணீர்

(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான்; அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இல்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ச´ தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களை யும் எழுதினான். பின்னர் வானங்கள் பூமியைப் படைத்தான் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன்(ரழி),  நூல்: புகாரி.

நபி(ஸல்) அவர்களிடம்வஸிய்ய குர்ஸிய் யுஹுஎன்பதன் பொருள் பற்றிக் கேட்கப்பட் டதற்கு அவனுடைய குர்ஸி என்பது அவனின் பாதத்தின் தலமாகும்அர்ஷ்என்பதன் பெறுமதி பற்றி அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் எனக் கூறினார் கள். ஆதாரம்: தாரகுத்னீ, தாரீகில் கத்தீப், ஸஹீஹ் ஹாக்கிம்.

ஆரம்பமாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டது தண்ணீர், அடுத்து அர்ஷ்; பின்னர் லவ் ஹுல் மஹ்ஃபூல் எனும் விதிகள் எழுதப்பட்ட பலகை; பின்னர் எழுதுகோல்; பின்னர் வானங்கள், பூமி என்று அறியமுடிகிறது.’ ஆதாரம்:ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல்காரீ, புகாரி

அல்லாஹ்வின் முதல் படைப்பாகிய தண்ணீரிலிருந்தே முதல் உயிரினங்களும் படைக்கப்பட்டன.  இதோ  அல்லாஹ்  கூறுகிறான்.

உயிர்கள் ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்தே படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா?’  அல்குர்ஆன் 21:30

அல்லாஹ்வின் தூதரே! படைப்புகளை எதிலிருந்து படைக்கப்பட்டது? என்று நான் வினவினேன். தண்ணீரிலிருந்துஎன்று நபி(ஸல்) அவர்கள்  கூறினர்கள்.  அறிவிப்பாளர்:  அபூ ஹுரைரா  (ரழி), நூல்: திர்மிதி

நீர்க்கோளம்  தந்த  உயிர்க்கோளம் :

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த எட்வர்டு சூயஸ் எனும் ஆஸ்திரியா நாட்டு புவியியல் நிபுணர்உயிர்க்கோளம்‘ (உயிரின மண்டலம்) பற்றிய சிந்தனையை வெளியிட்டார். “ஆரம்பத்தில் கடலிலிருந்து ஆல்கே (Algae) வகை நுண்ணிகள், காளான் வகை பூசனங்கள்  (Fungi) நீர்ப்பாசிகள் (Mosses) உருவாயின. பின்பு உயர்ந்த செடி, கொடி, மரங்கள் உட்பட மூன்றரை இலட்சம் தாவரங்கள் உருவாயின. ஒரு செல் முகிலினம் தொட்டு மனிதன் வரையிலான 110 விலங்கினங்களுக்கும் ஆதாரமான நீர்க்கோளமாகிய பூமி இன்று  உயிர்க்கோளமாகியுள்ளது‘.

உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்து தோன்றியதால் உலக உயிரினங்கள் அனைத்திலும் நீரின் கூறு உள்ளது. உதாரணமாக மனித உடலில் 65 சதவீதம், யானையின் உடலில் 75 சதவிகிதம் உருளைக்கிழங்கில் 80 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அருந்தும் நீரின் அளவு சுமார் 60,600 லிட்டர் என்று  கணக்கிட்டுள்ளனர்.

உப்பு  நீரும்  சொற்ப  நீரும் :

நமது பூமியின் முழுப்பரப்பில் அதாவது நான்கில் மூன்று பாகம் 70.8% கடல் நீர் சூழ்ந்துள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நீரில், மனிதன் மற்றும் விலங்கினம் தாவரங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் 97.3% சதவிகிதம் உப்புக்கடல் நீராக உள்ளது. உலக உயிரினங்கள் பயன்படுத்தும் நன்னீர் நிலைகளான, ஆறுகள், ஏரிகள், குளம் மற்றும் நிலத்தடி நீர், மேலும் வட, தென் துருவப் பிரதேசங்களில் உறைந்துள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் சேர்ந்து மொத்தத்தில் 2.7% சதவிகித அளவிலேயே உள்ளது. அதாவது பூமியில் உள்ள மொத்த நீரில் 2.7 சதவிகித நீரே சுத்தமான நன்னீர். இந்த 2.7 சதவிகித நீரிலும் நான்கில் மூன்று பாகம் 2.01 சதவிகிதம் நீரானது பனிப்பாறையாக வட, தென்  துருவங்களில்  உறைந்து  கிடக்கின்றன.

மீதி உள்ள 0.67% அதாவது முக்கால் சதவிகி தத்திற்கும் குறைவான நன்னீர் நிலைகளான ஆறு, ஏரி, குளம், நிலத்தடி நீர் போன்றவைகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் தாவ ரங்களுக்கும் பயன்படுகின்றன.

ஆக உலகில் உள்ள மொத்த நீரில் 97.32% உப்பு நீராக கடலில் உள்ளது. 2.01% நன்னீர்கள் மனிதன் பயன்படுத்த முடியாத நிலையில் பனிப்பாறையாக துருவப் பிரதேசங்களில் உறைந்துள்ளன. மீதி உள்ள மிக மிக குறைவான அளவான 0.67% நன்னீரை நம்பியே இவ்வுலகம் உருண்டு கொண்டிருக்கிறது. உலக மொத்த நீரில் 99.33% சதவிகித நீரை, மனிதன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். மிக அற்பமான 0.67% நீரையும் அல்லாஹ் கடல் நீராக மாற்றிவிட்டால் நம் நிலைமை என்னவாகும்! சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

99.33% சதவிகித நீரை மனிதன் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றிய அல்லாஹ் வால் 0.67% சதவிகித நீரை மாற்ற முடியாதா? இதோ அல்லாஹ் கேட்கிறான்.

நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி இருப்போம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?  (அல்குர்ஆன் 56:68-70)

அறிவுள்ள, சிந்திக்கக் கூடிய மனிதனுக்கு இந்த ஒரு வசனம் மாத்திரம், அவனைப் படைத்த இறைவனை அறிந்து கொள்ள போதுமானது.

இன்று மனிதன் பயன்படுத்தும் நன்னீரின் மொத்த அளவு மிக குறைவானது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ் தன் அருள்மறையில் பதிந்துவிட்டான். இதில் வியக்கத்தக்க செய்தி என்னென்றால்உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை உலகின் மொத்த நீரின் அளவு கூடுதல் குறைவு இல்லாமல் எப்போதும் ஒரே அளவாக இருக்கிறதுஎன்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள். இதனையே அல்லாஹ்.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை நாம் இறக்கி வைக்கின்றோம். அதனைப் பூமியில் தங்குமாறு செய்கின்றோம்என்று கூறுகிறான். அல்குர்ஆன் 23:18…

Previous post:

Next post: