இறுதி சமுதாயமான நமக்கு பஜ்ர் தொழுகை ஏன் முக்கியம் என்று பலருக்கு தெரியாது…

in 2023 ஆகஸ்ட்

இறுதி சமுதாயமான நமக்கு பஜ்ர் தொழுகை

ஏன் முக்கியம் என்று பலருக்கு தெரியாது

ஜூலை  மாத  தொடர்ச்சி….

மறுமையின்  அடையாளங்களின் ஒன்று :

சூரியன் மேற்கே உதிப்பது. மேற்கே உதித்து விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்பட்டு விடும். சூரிய உதயத்திற்கு முன்பு உள்ள தொழுகை பஜ்ர் ஆகும். அந்த தொழுகையில் பாவமன்னிப்பு கேட்டு இருந்தால்  அல்லாஹ்  மன்னிக்க கூடும்.

மேலும் இந்த அதிகாலை தொழுகையான பஜ்ரை பற்றி

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதி காலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்று பவர்களை இஸ்லாம் வாழ்த்து கின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ் வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர் களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக! (அபூதாவூத்)

அண்ணலார்(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல் லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.

ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந் நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பி விட்டு இவ்வாறு கூறினார்கள்.

அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத் திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே, அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன்(ரிஸ்க் எனும்) வாழ் வாதாரத்தை வழங்குகிறான்‘ (பைஹகீ) ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறி களும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப் படுகின்றார்கள்.

உபை இப்னு கஅப(ரழி) அறிவிக்கின் றார். ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள். “இன்னமனிதர் தொழுகைக்கு வந்தாரா?’ மக்கள்இல்லைஎன்று கூறினார். மீண்டும், “இன்னவர் வந்தாரா?’ என்று கேட்க, மக்களும்இல்லைஎன்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்.

நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழு கைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமான çவாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.   (புகாரி, முஸ்லிம்)

ஆம்! நபித்தோழர்களின் காலத்தில் இறை நம்பிக்கையாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழு கைகள்தான் இருந்தன. இப்னு உமர் (ரழி) கூறுகின்றார். “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்  (அதாவது நயவஞ்சகர்கள் என்று) மறுமை யில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தி யாக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார் கள்.

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்‘ (பைஹகீ)

சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ். இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழையமாட்டார்‘ (முஸ்லிம்)

யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றனர்.   (தபரானி)

மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள்  எல்லாம்  அதிகாலை  நேரத்தில் தான்  அழித்து  ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத்(அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான். “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.  (46:25)

ஸாலிஹ் நபி(ஸல்) அவர்களின் சமூகக் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறுப்பிடுகின்றான். “திடுக்கிடச் செய்கின்ற ஒரு நில நடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக)வீழ்ந்து கிடந்தார்கள். (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்)

லூத்(அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத் தெளிவாகவே அல்லாஹ் கூறுகின்றான். “எந்த வேதனை இம்மக்களைப் பிடிக்கப் போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப் போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?    (11:81)

ஷிஐப்(அலை) அவர்களின் கூட்டத் தைக் குறித்துக் கூறுகின்றான். “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்.     (29:37)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாக இருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போது அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்  அதிகாலை  நேரத்திலேயேதான்   வருகின்றன.

2004இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது. துருக்கி, பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம்  அனைத்தும்  அதிகாலை  நேரத்திலேயே  நடைபெற்றன.

2009இல் ஆப்ரிக்கா யஹய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான்  ஏற்பட்டது.

ஒவ்வொரு தனி மனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை  என்றோ  எப்படி  வேண்டுமென்றாலும்  நாம்  எடுத்துக் கொள்ளலாம்.

Previous post:

Next post: