இஸ்லாமியர்கள் சாத்தானின் (ஷைத்தானின்) குழந்தைகளா?

in 2023 செப்டம்பர்

இஸ்லாமியர்கள் சாத்தானின் (ஷைத்தானின்) குழந்தைகளா?

A.N.

மிக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சீமான் என்பவர் பேசியபோது இஸ்லாமியர்களும், கிருஸ்த்தவர்களும் சாத்தானின் குழந்தைகள் இவர்கள் இருவரும் என  குறிப்பிட்டார்.

மேற்கண்ட பேச்சுக்கு கிருஸ்த்தவ சமுதாய தலைவர்களோ! அதை சார்ந்தவர்களோ பொங்கி எழவில்லை. ஆனால் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் என்று மக்கள் மத்தியில் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு முன்னிலைப்படுத்துகின்ற சிலர் பொங்கி எழுந்தனர். பல கண்டன குரல்கள், சீமானே! மன்னிப்பு கேள்! என் றெல்லாம்  முழங்கினர்.

சீமான்என்பவர் சொன்னதைப் போல இஸ்லாமியர்களும், கிருஸ்த்தவர்களும்  சாத்தானின்  குழந்தைகளா?

இல்லை!  இல்லவே  இல்லை!!

பின்பு  யார்  இவர்கள்?

சாத்தானின் கட்டளைகளை அப்படியே செயல்படுத்தும் சாத்தானின் தொண்டர் படையை சேர்ந்தவர்களே   பெரும்பாலோர்.

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள்கொடை களை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை, வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.    (அல்குர்ஆன் : 3:103)

ஆன்மீகம் முதல் அரசியல் வரை அனைத்திலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக பிரிந்து கிடக்கின்றார்கள். சுமார் 40க்கு மேற்பட்ட இயக்க தலைவர்களின் தொண்டர் படையாக இஸ்லாமியர்கள் பிரிந்து கிடப்பதை  காணலாம்.

எனவே தான் அரசியல்வாதிகள் இவர்களை (இஸ்லாமியர்களை) கருவேப்பிலையாக  பயன்படுத்துகின்றார்கள்.

ஆன்மீக ரீதியாக நடக்கும் பல அனாச்சாரங்களை ஆன்மீக தலைவர்கள் கண்டு கொள்வதில்லை. அதுபோல் அரசியலில் நடக்கும் அநியாயம், அட்டூழியங்கள்  இஸ்லாமிய அரசியல்  தலைவர்கள்  தைரியமாக  எதிர்ப்பதில்லை.  மாறாக  ஆதரவு  தருகிறார்கள்.

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ சென்றடையும் இடங்களில் மிகக்  கெட்டதாகும்.      (அல்குர்ஆன் 4:115)

Previous post:

Next post: