சுதந்திர நாள்!

in 2023 செப்டம்பர்

தலையங்கம் :

சுதந்திர நாள்!

உலக நாடுகளில் சுதந்திரம் வழங்கப்பட்ட நாடுகளை விட வாங்கப்பட்ட நாடுகளே  அதிகம்.

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்றால்  வாங்கப் பட்டது.

வழங்கப்பட்டதற்கும், வாங்கப்பட்டதற்கும்  என்ன  வித்தியாசம்?

ஒரு பொருளோ, இடமோ எதுவாக இருந்தாலும் விலை பேசாது கொடுக்கப்படுவதற்கு வழங்கப்பட்டது என்று பொருள். அதுவே விலைபேசி கொடுக்கப்பட்டிருந்தால் வாங்கப்பட்டது என்று  பொருள்.

இந்தியாவின் சுதந்திரம் வாங்குவதற்காக கொடுக்கப்பட்டது பல நூற்றுக்கணக்கான தலைவர் களின் உயிர், பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர், உடமை, மானம், மரியாதை இவை அனைத்தையும்  ஈடாக (விலையாக) கொடுத்து வாங்கப்பட்டதுதான் இந்திய சுதந்திரம்.

பொதுவாக வேறு ஒருவரின் பொரு ளையோ, இடத்தையோ மற்றொருவர் பெறுவதற்கு பெயர் தான் வாங்கியது அல்லது விற்கப்பட்டது என்று பொருள். ஆனால் நம் பொருளையே, நமது இடத்தையே நாமே வாங்கியது இந்தியாவில் நடந்தது.  அதன்  பெயர்  விடுதலை”.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் பிறந்தவர்களோ அல்லது உரிமைக்குரியவர்களோ இல்லை. ஆனால் அவர்களிடமிருந்து இந்தியாவை நாம் வாங்கினோம். இது எவ்வளவு பெரிய அவமானம்? இதற்கு காரணம் நம் பண்பாட்டையும், வரலாற்றையும்  மறந்ததே!

எந்த சமுதாயம் தன்னுடைய பண்பாட்டையும் வரலாற்றையும் மறக்கிறதோ அல்லது மறந்ததோ அது அழிவுக்குள்ளாகும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தியா சுதந்திரம் வாங்கப் பட்டதற்கு  முக்கிய  காரணம்.

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நியதிக்கு கட்டுப்பட்டுதான் வாழமுடியும், வாழவேண்டும். அந்த நியதியை மீறும்போது தவறுகளுக்கும், தண்டனைக்கும் காரணமாகிறது. அவ்வாறு மீறிய போதுதான் (காட்டி கொடுத்தபோது) பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை கைப்பற்றிக் கொண்டார்கள். அவ்வாறு பறிபோனதுதான் இந்தியாவின் சுதந்திரம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை கடந்து 77ம் ஆண்டில் அடி யயடுத்து வைக்கிறது. ஆனாலும் இன்னும் பலர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல்  வாழ்கின்றார்கள்.  

எப்படி  என்றால்?

ஜோசியகாரனின் கூண்டிலிருந்து சிறிது நேரத்திற்கு வெளியில் வந்து சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு மீண் டும் கூண்டுக்குள்ளேயே வாழ்கின்ற கிளியைப்  போல்  வாழ்கின்றார்கள்.

அதாவது மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பிரிந்து போய் சுதந்திரமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு கிளி கூண்டுக்குள்ளேயே வாழ்வது போல வாழ்கின்றார்கள்.

எனவேவேற்றுமையில் ஒற்றுமைகாணாதவரை நாம் சுதந்திரத்தை அனுபவிக்க  முடியாது.

இது மாறுமா? நிச்சயமாக மாறும், மாற்றலாம், மக்கள் நினைத்தால் முடியாதது  ஒன்றுமில்லை.

Previous post:

Next post: