தனிமையும், தவறும்…

in 2023 செப்டம்பர்

தனிமையும், தவறும்

அபூ அஹமத்

எனது சமூகத்தில் சில மனிதர்களை நான் மறுமையில் அறிந்து கொள்வேன். அவர்கள் திஹாமா மலையைப் போன்று நன்மைகளை செய்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய நன்மைகளை ஒன்றும் இல்லாத புழுதிகளாக அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று  நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.

அப்போது நபி தோழர்கள் கேட்டார்கள்; அவர்கள் யார் என்பதைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்  என்பதாக.  ஏனெனில்  அவர்களைப்  போன்று  நாங்கள்  ஆகிவிடக் கூடாது.

நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள் :

அவர்கள் உங்களுடைய சகோதர, சகோதரிகள். நீங்கள் செய்யும் நன்மையான காரியங்களைப் போல் அவர்களும் செய்து இருப்பார்கள். ஆனால் தனிமை என்று வந்துவிட்டால் அல்லாஹ் தடுத்தவைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்வார்கள்.

பொதுவாக நன்மைகள் செய்வது இலகுவானது. ஆனால் அதைப் பாதுகாப்பது  என்பது  மிக  கடினம்.

முஸ்லிம்களில் பெரும்பாலோர் வெளிப்படையான வாழ்க்கையில் இறைவனுக்கு அஞ்சுவதை காணலாம். அதுவே தனிமையயன வந்துவிட்டால் ஷைத்தானுக்கு அடிபணிந்து வாழ்கின்றார்கள். குறிப்பாக இந்தச் செயல் தவ்ஹீதுவாதிகள் என சொல்லிக் கொள்ளும் பலரிடம் இருப்பதை  காணலாம்.

அதற்கு காரணம், தவ்ஹீத் பிரசாரத்தின் ஆரம்ப காலங்களில்சர்க்மட்டுமே மையப் பொருளாக இருந்தது. முதலில் ச´ர்க்கிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக, ஏனெனில் ´ர்க்கைத் தவிர ஏனைய அனைத்து பாவங்களையும் அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடுவான் என்ற  மைய  கருத்து  வேறூன்றி  இருந்தது.

இது பசுமரத்தில் அடித்த ஆணி போல் பலரிடம்  ஆழமாக  பதிந்தது.

அதாவது ´ர்க்கான காரியங்கள் செய்யக்கூடாது என்பதை ஏற்றுக் கொண்டார்கள்,  உறுதியாகவும்  இருந்தார்கள்.

நாளடைவில் தலைவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. பல பிரிவுகள் உண்டாயிற்று. ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த தலைவர்கள் சொல்வதே சரியயன கண்மூடித்தனமாக  நம்ப  ஆரம்பித்தார்கள்.  அதன்  விளைவு  சர்க்  கேலி  பொருளானது.

எப்போ அண்ணன் போவான், திண்ணை காலியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போன்று, நமது பரம எதிரியான இப்லீஸ், முஸ்லிம்களை (குறிப்பாக தவ்ஹீத்வாதிகள் என சொல்லிக் கொள்பவர்களை) தலைவர்களுக்கு தக்லீதுச் செய்ய அடிமையாக்கினான். எவ்வாறெனில், குர்ஆன், ஹதீத்களை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு மனோ இச்சைக்கு அடிமையானார்கள்.

ஒவ்வொரு தலைவரும் தனக்கு சாதகமாக எதுவெல்லாம் இருக்கின்றதோ அது மட்டுமே சரி, மற்றவை எல்லாம் ´சர்க் என ஃபத்வா வழங்க ஆரம்பித்தார்கள். அதன் பட்டியல் எண்ணில் அடங்காது. கட்டுரையின் சுருக்கத்தை கருதி ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட  விரும்புகிறேன்.

முதலில் சுன்னத் வல் ஜமாத் இமாமைப் பின்பற்றி அந்த பள்ளிகளில் தொழுவது ச´ர்க் என்று கூறியவர்கள், பின்பு மற்ற இயக்கத்தை சார்ந்த பள்ளிகளின் இமாமைப் பின்பற்றி தொழுவதும்´ர்க்என்று ஃபத்வா  கொடுத்தார்கள்.

அதன் விளைவாக பிரிவுகள் மேன்மேலும்  (இதுவரை சுமார் 40) பெருகியது. அதில் ஆன்மீக ரீதியாக  சில  பிரிவுகள்,  அரசியல்  ரீதியாக  சில பிரிவுகள் ஏற்பட்டன.

இப்லீஸ் எதை நாடினானோ அது நடந்துவிட்டது, நடந்தும் வருகின்றது (இன்னும் எத்தனைப் பிரிவுகள் உண்டாகும் என்பது  தெரியவில்லை)

ஒன்றை  தெரிந்து கொள்ளுங்கள்:

´சர்க் என்பது பெரும் பாவம்தான், இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் இதை செய்யாததால் மட்டும் சுவர்க்கம் சென்றுவிடலாம் என்பது இருக்குமானால் சுவர்க்கத்திற்கு செல்ல  இப்லீஸும்  தகுதி  பெற்றுவிடுவான்.

அவன் (இப்லீஸ்) ´ர்க் செய்யவில்லை சொல்லப்போனால் ச´ர்க் செய்யமாட்டேன் என்று மறுத்தான், ஆனாலும் அல் லாஹ்வின் சாபத்திற்கு ஆளானான். அவன் ச´ர்க் செய்யா விட்டாலும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

எனவே நம்மில் பலர் தான் ச´ர்க் செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பல கட்டளைகளை மீறுகிறார்கள். அதாவது பலர் முன்னிலையில் அல்லாஹ்விற்கு அஞ்சுவது போல் காட்டிக் கொண்டு தனிமையில் இப்லீஸுக்கு அஞ்சு கிறார்கள். இப்லீஸின் ஆசை வார்த்தையில் மயங்கி குறிப்பாக சமுதாயத்தின் ஒற்றுமையை குலைத்தார்கள். மேலும் இருப்பதை இல்லையயன்றும், இல்லாததை இருப்பது என்றும் நம்பி செயல்பட ஆரம்பித்தார்கள்.

சுருக்கமாக  சொல்லவேண்டும்  என்றால் :

சூழ்நிலையும், சந்தர்ப்பமும் சாதக மாக இருந்தும், யார் இறைவனுக்கு அஞ்சி தவறு செய்யாத வாழ்க்கையை வாழ்கின் றார்களோ அவர்களுக்கே மன்னிப்பும், மகத்தான  கூலியும்  உண்டு.

மார்க்கத்திலுள்ள கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி (அல்லாஹ்விற்கு அஞ்சி) சமுதாய ஒற்றுமையை மலரச் செய்வோம். இன்றைய சூழ்நிலையில் சமுதாய ஒற்றுமை  மிக  முக்கியம்.

எனவே குர்ஆனை மொழி பெயர்ப் புடன் படியுங்கள், நடுநிலையாக சிந்தியுங் கள், யாரையும் தக்லீத் செய்யாதீர்கள். சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களைக் காட்டி (மனோ இச்சைக்கு) இப்லீசுக்கு அடிமை ஆகாதீர்கள்.

எவர் இறைவனுக்கு தனிமையிலும் அஞ்சுகிறார்களோ அவர்களுக்கே மன்னிப் பும், பெரும் கூலியும் உண்டு    (அல்குர்ஆன் 67:12)

________________________

Previous post:

Next post: