பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! 

in 2023 ஆகஸ்ட்

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! 

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

ஜூலை  மாத  தொடர்ச்சி….

சுவனபதிக்கு  உரியவர்கள் :

பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள்  என்றென்றும்  தங்கி யிருப்பார்கள்.  (10:26)

ஸைனுல் ஆபிதீன் அலீபின அல்ஹுஸைன்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: மறுமையில் அல்லாஹ் முன்னோர்களையும், பின்னோர்களையும் ஒன்று திரட்டும்போது ஓர் அறிவிப்பாளர் “”பொறுமையாளர்கள் எங்கே?” அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதற்கு முன்பே சொர்க்கத் தில் நுழையலாம் என்று அழைப்பு விடுப்பார். அப்போது மக்களில் ஆரம்பத்திலுள்ள ஒரு குழுவினர் எழுந்து நிற்பார்கள். அவர்களை வானவர்கள் சந்தித்துஆதமின் மக்களே! எங்கே செல்லப்போகின்றீர்கள்? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள்சொர்க்கத்திற்குஎன்று கூறுவார்கள். “கேள்வி கணக்கிற்கு முன்பேவா செல்லப்போகிறீர்கள்? என்று வானவர்கள் கேட்க  அவர்கள்  ஆம்‘’  என்பார்கள்.

அப்போது வானவர்கள் நீங்கள் யார்? என்று கேட்பார்கள். அதற்கு நாங்கள்பொறுமையாளர்கள்என்று அவர்கள் பதில் கூறுவார்கள். நீங்கள் எந்தவிதமான பொறுமையைக் கடைப்பிடித்தீர்கள்? எனறு வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ் எங்களது உயிரைக் கைப்பற்றும் வரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் சிரமத்தினை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டும் பொறுமை காத்தோம் என்பார்கள். அப் போது வானவர்கள் நீங்கள் சொன்னதைப் போன்றே பொறுமையுடன் வாழ்ந்துள்ளீர்கள். எனவே சொர்க்கத்தில் நுழையுங்கள், நற்செயலாற்றியவர்களின் பிரதிபலன் நல்லதாகவே அமைந்துள்ளது என்பார்கள். இதற்குப் பின்வரும் இறைவசனம் சான்றாக அமைந்துள்ளது. பொறுமையாளர்கள் தமக்குரிய நற்பலன்களைக் கணக்கின்றி நிறைவாக வழங்கப் பெறுவார்கள். (39:10, தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்1, பக். 496-500)

அப்பால், அவன் கர்வத்துடனும், உலக அலங்காரத்துடன் தனது சமூகத்தாரிடையே  சென்றான். அப்போது இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக் கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன் என்று கூறினார்கள். எனினும் அவர்களில் கல்வி ஞானம் பெற்றவர்களோ உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது, எனினும், அதைப் பொறுமை யாளரைத் தவிர (வேறு) எவரும் அடையமாட் டார்கள்  என்று  கூறினார்கள். (28:79, 80)

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடையமாட்டார்கள், மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை  அடைய மாட்டார்கள்.   (41:35)

வானவர்களின் வரவேற்புடன் சுவனபதியின் உன்னதமான மாளிகை நற்கூலியாகக்  கொடுக்கப்படும். 

நீங்கள் பொறுமையைக் கடைபிடித்த தற்காகஸலாமுன் அலைக்கும்உங்கள் மீது சாந்தி உண்டாவதாக உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று என்று கூறுவார்கள். (13:24)

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்குச் சுவனபதியில் உன்னதமானமாளிகைநற்கூலியாக அளிக்கப்படும். வானவர்களால் வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக்கப்படுவார்கள். (25:75) இங்கு மாளிகை என்பதைக் குறிக்க மூலத்தில்ஃகுர்ஃபத்எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது சொர்க்கத்தைக் குறிக்கும் அது மிகவும் உயரமானது என்பதால் மாளிகைகுர்ஃபத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அவர்கள் சொர்க்கத்தில் வாழ்த்துடனும், மரியாதையுடனும் வானவர்களால் வர வேற்கப்படுவார்கள், கண்ணியத்தை யும் கெளரவத்தையும் பெறுவார்கள். அவர்களிடம் நிரந்தர அமைதி குடிகொண்டிருக்கும் அவர்கள்  மீது  சாந்தி  நிலவும்,  எனவே;

அவர்களிடம் வானவர்கள் ஒவ்வொரு தலைவாயில் வழியாகவும் வருவார்கள். வந்த அந்த  வானவர்கள் நீங்கள்பொறுமைகாத்ததன் பலனாக உங்கள்மீது நிரந்தர சாந்தி நிலவட்டுமாக! மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகவே ஆகிவிட்டது என்று வாழ்த்துவார்கள்.(13:23,24) அதாவது அவர்கள் சொர்க்கத்தில் நுழைவதற்காகப் பல திசைகளிலிருந்தும் வானவர்கள் வந்து வாழ்த்துத் தெரிவிப்பார்கள் அவர்கள் சொர்க்கம் செல்லும்போது அவர்களுக்கு முகமன் கூறி வாழ்த்துத் தெரிவித்து வான வர்கள் வரவேற்பார்கள். அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நெருக்கம், அருட்கொடை, அமைதி இல்லத்தில் இறைத் தூதர்கள் மற்றும் வாய்மையாளர்களுடன் தங்கும் வாய்ப்பு ஆகியவற்றுக்காக இவ்வாறு அவர்களை வானவர்கள் வாழ்த்துவார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம்: 883-889)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்பில் முதன் முதலாகச் சொர்க்கம் செல்பவர்கள் யார்? என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார் கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் படைப்பில் முதன் முதலாகச் சொர்க்கத்தில் நுழைபவர்கள் பொறுமையாளர்களான ஏழை முஹாஜிர்கள் ஆவார்கள். உலகில் அவர்களுக்கு  எல்லைகள் மூடப் படும், பிரச்சனைகளில் கேடயமாகப் படுவார்கள். அவர்களில் ஒருவர் தனது ஆசைகளை நெஞ்சில் புதைத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்ற இயலாமலேயே பொறுமையாளர்களாக இறந்து போகிறார்.

உயர்ந்தோன் அல்லாஹ் தான் விரும்பிய வானவர்களிடம் நீங்கள் அம்மக்களி டம் சென்று முகமன் கூறுங்கள் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் உன்னால் தேர்ந் தெடுக்கப்பட்டு உனது வானத்தில் வசிப்ப வர்கள் நாங்கள்தான் இரவு பகலாக உன் னைப் போற்றிப் புகழ்ந்து துதித்துக் கொண்டும், உனது தூய்மையைப் போற்றிக் கொண்டும் இருக்கிறோமே! நாங்கள் இம் மக்களிடம் சென்று அவர்களுக்கு முகமன் கூற வேண்டும் என்று எங்களுக்குக் கட்ட ளையிடுகிறாயே! எங்களை விட மேலாக நீ தேர்ந்தெடுத்துள்ள இவர்கள் யார்? என்று வினவுவார்கள்.

அதற்கு அல்லாஹ் அவர்கள் எனக்கு இணையாக்காமல், எனது வழியில் போராடிய, எனது வழியில் துன்புறுத்தப்பட்ட போதிலும் பொறுத்துக்கொண்டு என்னை மட்டுமே வழிபட்ட, நல்லடியார்கள் ஆவர். அவர்களுக்கு உலகில் எல்லைகள் மூடப்பட்டன, பிரச்சனைகளில் கேடயமாக்கப் பட்டனர் பொறுமையாளர்களான அவர் களில் ஒருவர் தமது ஆசைகள் எதையும் நிறைவேற்ற இயலாமல் நெஞ்சில் புதைத்துக் கொண்டே பொறுமையுடன் இறந்து போனார்  என்று  கூறுவான்.

அப்போது வானவர்கள் ஒவ்வொரு வாசல்களின் வழியாகவும் அவர்களிடம் வந்து உலகில் பலவீனமானவர்களாக இருந்த நிலையில் நீங்கள் பொறுமை காத்ததன் பலனாக உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக! மறுமையின் முடிவு உங்களுக்கு நல்லதாகிவிட்டது என்று கூறுவார்கள். (அப் துல்லாஹ் பின் அமர்(ரழி) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) முஸ்னது அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம், பக்கம் 4, பக்கம் 887-889) அடுத்து, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட சர்வாதி காரியான ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் முஸ்லிம்களின் பொறுமைக்கு எடுத்துக்காட்டாகப் போற்றுகின்றான். (28:38, 79:24, 10:83, 28:4, 43:51) அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ் ஃபிர்அவ்னுடைய மனைவியை இறை நம்பிக்கையாளர்களுக்கான சிறந்த உதாரணமாகக் கூறுகின்றான். ஒருமுறை அவர் ஃபிர்அவ்னின் அடியாட்களால்  கொடுமைப் படுத்தப்பட்டபோது எனது அதிபதியே! எனக்குரிய கூலியாக உன்னிடம் சுவர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத் துக் கொடுப்பாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது தீய சோதனை களிலிருந்தும், செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனக்கு அழகிய பொறுமையைத் தருவாயாக என்று அவர் பிரார்த்தித்தார். (66:11) என்பதாக அடக்குமுறையாளர்களுக்கிடையில் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் எவ்வாறுபொறுமையுடன்நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரண மாக அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின்றான். காரணம்;

ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர் களுடைய இரண்டு கைகளையும், கால்களையும், கயிற்றால் இறுகக் கட்டி அவனின் முன்னிலையிலேயே முளைகளில் பிணைக்கப்பட்டும் வெயிலில் கிடத்தப்பட்டும் கொடுமையான வேதனைக்கு உள் ளாக்கப்படுபவராக இருந்தார். அப்போதும் அவர்பொறுமையாகவேஇருந்தார். இவ் வாறாக கொடுமைப்படுத்தப்பட்ட நிலை யில் சுவனத்தில் அவருக்காகக் கட்டப்பட வுள்ள இல்லத்தைப் பார்த்தார். அவர் அதைப் பார்த்த நேரத்தில் சிரித்தார். அப்போது ஃபிர்அவ்ன் கேட்டான்; இவளுடைய பைத்தியத்தினால் உங்களுக்கு வியப்பு ஏற்படவில்லையா? நாமோ அவனை வெயிலில் கிடத்தித் துன்புறுத்து கின்றோம். அவளோ சிரிக்கிறாள் என்று, ஆசியா அவர்கள் அவ்வாறே  சுவனத்தில் மாளிகையைச் சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவனது கண் முன்னாலேயே அவருடைய உயிர் கைப்பற்றப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். (ஸல்மான் ஃபார்ஸி (ரழி), இப்னு ஜரீர் தபரீ(ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 9, பக்கம் 530-534) அதனை நபி(ஸல்) அவர்களும் குறிப்பிட்டுப் போற்றியவர்களாக;

ஆண்களில் நிறைய பேர் முழுமை யடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ மூசா அஷ்அரி(ரழி), புகாரி: 3411, 3433, 3769, 3770, 5418, 5419, முஸ்லிம்: 4816, திர்மிதி: 1757). ஆனாலும் மர்யம்(அலை) அவர்களும் வசைபாடுபவர்களால் கடுமையாகச்  சோதிக்கப்பட்டார்கள்.

சுவனச் சோலைகளும்,  பட்டாடைகளும்,  நற்கூலியாகக்   கொடுக்கப்படும் :

மேலும், அவர்கள்பொறுமையுடன்இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும் சுவர்க்கத்தின் பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுப்பான். (76:12) அதாவது பொறுமைக்குக் கைமாறாக அன்று அவர்கள் மேற்கொண்டி ருந்த பொறுமையின் காரணமாக அவர்களுக்கு வழங்கினான். அவர்களுக்குக் கொடையளித்தான், அவர்களைக் குடிய மர்த்தினான் என்பது பொருளாகும் என்பதை அடுத்த சொற்றொடர் கூறுவதைப் போன்று சுவனத்தையும், பட்டாடைகளையும் வழங்கினான். அதாவது பரந்து விரிந்த இல்லத்தை, தாராளமான வாழ்க்கையை அழகான ஆடையை வழங்குவான் என்று பொருள். மேலும் பார்க்க (76:13-22) தஃப் ஸீர் இப்னு கஸீர் பாகம் 9, பக்கம் 809-818)   (இன்ஷாஅல்லாஹ்தொடரும்)

Previous post:

Next post: