மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை’

in 2023 செப்டம்பர்

மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும்பிறை

எம். சையத் முபாரக், நாகை

ஆகஸ்ட்  மாத  தொடர்ச்சி…..

முதலில் மக்கள் சிறுசிறு குழுக்களாக, குடும்பங்களாக வெவ்வேறு பகுதிகளில் வசித்தனர். அப்போது ஒரு செய்தி உடனுக் குடன் எல்லோரையும் சென்றடையும் வாய்ப்பு இல்லை. அதனால் அங்கங்கு பிறை பார்த்து நோன்பு பிடித்தனர். இரு பெரு நாள்களையும் கொண்டாடினர். இதற்கு உதாரணமாக, டெலிபோன் (தொலைபேசி)  கூட இல்லாத காலத்தில் வெளிநாடு சென்ற ஒருவர் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு ஒரு செய்தியைக் கேட்டு அறிய குறைந்த பட்சம் 15 நாட்களாவது ஆகிவிடும். தொடர்புகொள்ள கடிதம் மட்டுமே இருந்த காலகட்டம் அது. வெளிநாட்டிற்கு அல்லது ஹஜ்ஜிற்குச் சென்ற ஒருவர் இறந்து விட்டால் அவரது மரணச் செய்தி அவரது மனைவிக்கோ, அவரது குடும்பத்தின ருக்கோ தெரிய குறைந்தது  ஒரு வாரம் ஆகி விடும். அதனால், அங்கங்கு பிறைப் பார்த்து நோன்பு பிடித்தனர்; பெருநாள் கொண்டா டினர். அதனால் குழப்பம் எதுவும் ஏற்பட வில்லை.

பிறகு, மக்கள் பரவலாக எல்லா இடத்தி லும் வசிக்க ஆரம்பித்தபோது, செல்பேசி கள் எல்லாம் வந்தபோது, நம்மூரில் ஒருவர் இறந்திருக்க, அந்தச் செய்தியை நம்மூரில் இருப்பவர் அறிவதற்கு முன், வெளிநாட்டி லுள்ள உறவினர் அறிந்து நமக்கு அந்தச் செய்தியைத் தெரிவிக்கும் இந்த காலத்தில், பிறைச் செய்தி மட்டும் எப்படி வராதிருக்கும்? 

மக்கள் சிறுசிறு குழுக்களாக இருந்த போது, செய்திகள் பரவலாக எட்டாத போது மக்கள் தத்தமது பிறையைக் கடை பிடித்தனர். மக்கள் பரவலான பிறகு, ஊட கத்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பிறகு, பிறைப் பார்த்தச் செய்தி ஓரிடத்திலி ருந்து 1 நிமிடத்தில் உலகம் முழுவதும் பரவி விடும்போது, பிறைப் பார்த்தத் தகவலும் சாட்சியும் ஆதரமாக இருக்கும்போது சர்வ தேசப் பிறையைப் பின்பற்றுவதிலும், அதனைச் செயல்படுத்துவதிலும் இந்த மவ்லவிகள்  ஏன்  முரண்படுகிறார்கள்?

பிறைப் பார்ப்பதை இத்தனை மைல் இத்தனை ஃபர்ஸக் தூரம் எல்லைகளாக அமைத்துக் கொள்ளுங்கள் என்று எந்த உத்தரவையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் போடாதபோது நாமாக ஒரு எல்லையை ஊர், மாவட்டம், மண்டலம், மாநிலம், தேதியும், சவுதி என்று பிரித்தாள் வது ஷைத்தானின் சூழ்ச்சியில்லாமல் வேறு என்ன? நாம் வாழும் பூமி ஒரே பூமியாக இருக்கும்போது, நமக்குப் பிறைகளைக் காண்பிக்கும் சந்திரனும் ஒரே சந்திரனாக இருக்கும்போது, நோன்பு பிடிப்பதோ, பெருநாள் கொண்டாடுவதோ ஒரே நாளில் அல்லாமல் வெவ்வேறு நாட்களில் எவ்வாறு இருக்க முடியும்?

பிறையைக் கண்ணால் பார்க்க வேண் டும் என்பதில் பிடிவாதமாக, கண்டிப்பாக இருந்த மவ்லவிகள் இன்று ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகக் கீழ்க்கண்ட ஹதீதை முன்னிறுத்துகின்றனர்.

நீங்கள் நோன்பு என்று முடிவு செய்யும்நாள்தான் நோன்பு ஆகும். நோன்புப் பெரு நாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெரு நாள் என்று நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்என்று நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.      (திர்மிதீ) 

ஊரோடு ஒத்துவாழ் என்பதற்கு மேற்கண்ட ஹதீதுடன் மற்றொரு ஹதீதை யும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

நாங்கள் உம்ராவிற்காக(மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் பத்னுல் நக்லா எனுமிடத்தில் தங்கி யிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்று கூடினோம். அப்போது மக்களில் சிலர்அது மூன்றாம் பிறைஎன்று கூறினர். வேறு சிலர்அது இரண்டாவது பிறைஎன்றனர். பின் னர் நாங்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர் களைச் சந்தித்தபோது, “நாங்கள் பிறை பார்த்தோம். 

சிலர் இரண்டாம் பிறை என்ற னர். வேறு சிலர்மூன்றாம் பிறைஎன்றனர் என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்எந்த இரவில் நீங்கள் பிறை யைக் காண்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்குஇன்ன(மாதத் தின்) இன்ன இரவில்என்று பதிலளித்தோம். அப்போது, “பார்ப் பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிது நேரம் தென்படச் செய்கிறான்.’ ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.  (முஸ்லிம் : 1984)

அந்த இரவுக்குரியதே அந்தப் பிறை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை மாற்றி இந்த மவ்லவிகள் நாம் பார்க்கும்போது தெரிகின்ற பிறையை (2வது அல்லது 3வது பிறையாக இருந்தா லும்) முதல் பிறை என்று விளங்கி ஹாஜி சொல்லும் நாளில் நோன்பு பிடிக்கலாம். பெருநாள் கொண்டாடலாம் என்கின்றனர்.

சர்வதேசப் பிறை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு பெருநாள் கொண்டாடிய ஆரம்ப காலத்திலாவது குடும்பத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். ஒரே குடும்பத்தில் இரண்டு பெருநாளா? என்ற கேள்விகள் எழுந்தன. இப்போது இது சர்வசாதாரன மாக ஆகிவிட்டது. முதல் நாள் உங்களுக் குப் பெருநாள்,  அடுத்த நாள் எங்களுக்கு பெருநாள் என்று மக்கள் சர்வசாதாரண மாக எடுத்துக்கொண்டு விட்டனர். இன்று பெருநாள் தொழுகை தொழுத ஒருவர், தன் னுடன் அன்று தொழுத உறவினர்களை தன் னுடன் காலை உணவுச் சாப்பிடச் சொல் கிறார். அடுத்த நாள் அவர் பெருநாள் உடையை அணிந்து கொண்டு அன்று பெரு நாள் கொண்டாடும் உறவினர் வீடுகளுக்குச் சென்று காலை உணவு சாப்பிடுவதுடன், பிள்ளைகளுக்குப் பணமும் கொடுப்பார். உங்களுக்கு இரண்டு பெருநாளா? என்று கேலியாகக் கேட்பவர்களுக்குப் பதிலாகப் புன்னகை புரிவார். இப்போது இது பிரச்சனையாக மாறாமல் ஏற்றுக்கொண்ட ஒன்றாக  மாறிவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் சர்வ தேசப் பிறை என்ற கருத்தின் பக்கம் வரும் போது, நோன்பிற்கும், பெருநாளுக்கும் மட்டும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண் டும் என்ற கருத்தினைத் திணிக்க சில மவ்லவிகள் களத்தில் குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். நமது மக்கள் எல்லாம் சேர்ந்து கொண்டாடும் திருவிழாதான் பெருநாள். அதனால், எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம். அது தத்தமது பிறையா கவோ, ஹாஜி பிறையாகவோ, சவுதி பிறை யாகவோ, சர்வதேச பிறையாகவோ, கணக் கீட்டுப் பிறையாகவோ இருக்கலாம். அதில் தவறு இல்லை. இதில் எல்லோரும் ஒன்றா கக் கொண்டாடவேண்டும் என்பதுதான் கான்செப்ட்.

ஆனால், தத்தம் பிறை, ஹாஜி பிறை என்பதை எடுத்துக் கொண்டால், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி, வளைகுடா நாடுகளில் இன்று பெருநாள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நாளை பெருநாள் என்று எடுத்துக் கொள்வோம். இன்று மலேசியா, சிங்கப்பூரில் தெரியும் பிறை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதே´ல் தெரியாமல் பாய்ந்து இலங்கை, சவுதி, வளைகுடா நாடு களுக்கு சென்றுவிடுமா? நாளை இந்த பிறை வேறு நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுக்கு மட்டும் வருமா? இப்படி மக்கள் சிந்திக்கும் போது சர்வதேசப் பிறைக்கும் இன்னும் சிந்திக்கும்போது கணக்கீட்டுப் பிறைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். இன்ஷா  அல்லாஹ்.

ரோமக் கடவுளர்களின் பெயர்களை மாதங்களாகக் கொண்ட, மாதம் 28 நாட் கள், 31 நாட்கள் வருகின்ற கிரிகோரியன் (தற்போதைய கிறிஸ்துவ) காலண்டரை முஸ்லிம் மக்களாகிய நாம் தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ் நமக்குத் தந்த சந்திரக் கணக்கை, முஹர்ரம் போன்ற 12 மாதங் களைக் கொண்ட, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபடி மாதம் என்று 29 நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண் டது என்பதற்கிணங்க, பஸ், இரயில், விமான டிக்கட் ரிசர்வே­ன் செய்யத்தக்க ஹிஜ்ரி காலண்டரைக் கடைபிடிக்க வேண் டும். அப்போதுதான் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். இனியும் நமது பாச்சா பலிக் காது என்று மவ்லவிகள் எண்ணி, ஹிஜ்ரி காலண்டருக்கான ஆதாரங்களைத் தந்து, ஹிஜ்ரி காலண்டருக்கான பிரச்சாரத்தை யும்  இந்த  மவ்லவிகள்  கும்பல்  செய்யும்.

இப்போது ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கூப்பாடு போடும் இந்த மவ்லவிகள்தான் தனிப் பிரிவு, தனிப் பள்ளிவாசல் என்று மக்களைக் கூறு போட்டு பிரித்தார்கள். மக்களைப் பிரித்த  இந்த மவ்லவிகள்தான் இன்று அது வும் நோன்பிற்காக, பெருநாளுக்காக மட் டும் ஒற்றுமையைப் பேசுவது கேலிக் கூத் தாக இல்லை? இந்த மவ்லவிகளின் கூற்றுப் படி, தவறான நாளில் பெருநாளை வேண்டு மானால் மக்கள் ஒற்றுமைக்காகச் சேர்ந்து கொண்டாடலாம். ஆனால், நோன்பு பிடிப் பதற்கோ, நோன்பை விடுவதற்கோ இந்த அறிவற்ற மவ்லவிகளின் கூற்றை ஏற்க முடி யாது; அக்கருத்துக்கு உடன்படவும் முடியாது.

மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழி மற்றும் சத்தியத்தின் ஆதாரமாகிய அல்குர்ஆன் அருளப்பெற்றது ரமழான் மாதம் ஆகும். உங்களில் அம்மாதம் வரப் பெற்றோர் அதில் நோன்பு நோற்க வேண்டும்.  (அல்குர்ஆன் 2:185)

அல்லாஹ் அனுமதித்த சலுகைளின் அடிப்படையில் அல்லாமல் எவராவது ரமழானில் ஒருநாள் நோன்பைப் புறக் கணித்தால், பகரமாக காலம் எல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி)

இந்த இரு நாட்களில் நோன்பு நோற் பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள் ளார்கள். ஈதுல் ஃபித்ர் என்பது ரமழான் நோன்பை நீங்கள் முடித்ததன் அடையாள மாகும். ஈதுல் அல்ஹாவில் உங்கள் குர்பானி யிலிருந்து நீங்கள் உண்ணுங்கள். (புகாரி:1990)

ரமழான் ஆரம்பித்துவிட்டால் நோன்பு பிடிப்பது கடமையாகிவிடுகிறது. ­வ்வால் ஆரம்பித்து விட்டால் முதல் நாள் நோன்பு பிடிப்பது தடை (ஹராம்) ஆகிவிடுகிறது. மவ்லவிகளின் பேச்சைக் கேட்டு (தத்தம் பிறை, ஹாஜி பிறை என்று) நாம் தேதிகளை, நாளை மாற்றினால் அல்லாஹ்விடம் குற்ற வாளியாகி விடுவோம். ஆகையால், இந்த மவ்லவிகளின் கூற்றுப்படி மக்களின் ஒற்று மைக்காக பெருநாளைச் சேர்ந்து கொண்டாடலாமே தவிர நோன்பை விடவோ, நோன்பை பிடிக்கவோ முடியாது. இதற்கு உதாரணமாக, மாதவிடாய்ப் பெண்கள் பெருநாள் திடலில் ஒன்று கூடுவதையும், தொழுகை, நோன்பு போன்றவைகளை விடுவதையும்  எடுத்துக் கொள்ளலாம்.

நோன்புடன் தொடர்புடைய, மவ்லவி களால் வலியுறுத்தப்படும் தராவீஹ் (தஹஜ் ஜத்இரவு) தொழுகையைப் பற்றி சிறிது பார்ப்போம்.  

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: