முஸ்லிம்களே ஒன்றுபடுவோம்….

in 2023 ஆகஸ்ட்

முஸ்லிம்களே ஒன்றுபடுவோம்….

அன்சர் ய­ரீப் பின் R.A. மாலிக்

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத் துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங் களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களைவசனங்களை உங்களுக்கு அறிவிக்கின்றான்.   (அல்குர்ஆன் 3:103)

இந்த பாசிச அரசு தொடர்ந்து முஸ்லிம் களை குறிவைத்து செயல்படுகிறது, எப்படியாவது முஸ்லிம்களை முடித்துக் கட்ட வேண்டும் என்பதே இந்த பாசிச அரசின் பிரதான  நோக்கம்.

முத்தலாக், ளீபுபுவைத் தொடர்ந்து தற்போது பொது சிவில் சட்டம் என்று தொடர்ந்து ஏதாவது ஒன்றை முஸ்லிம்களுக்கு எதிராக செய்துக்கொண்டுதான் இருக்கிறது. அனைத்து முஸ்லிம்களும் ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு இதனை முறியடிக்க வேண்டும். இன்னும் நம்மில் பலர் பிரிவுபட்டு இயக்க தலைவர்க ளின் சுயலாபத்திற்காக நாம் செயல்பட்டு வந்தால், அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வும் நம்மை மன்னிக்கமாட்டான். முஸ்லிம் சகோதர, சகோதரிகளே நாம் எத்தனை பிரிவுகளாக பிரித்துக் கிடக்கிறோம்.

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சிஎன இப்படி பல பிரிவுகளாக பிரிந்துக் கிடக் கின்றோம்.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி யின் தொடக்கம் என்பது 16 ஜூலை 1989ல் தொடங்கப் பட்டது. இவர்கள் அதிகமாக உள்ள பகுதிகள் தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் மட்டுமே. ஆனால் தமிழக அரசியலில் மூன்றாம் நிலையில் உள்ள ஒரு பெரிய கட்சியாக வளர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே இது எப்படி என்று சிறிது யோசித்துப் பார்க்கவும்.

இவர்கள் கட்சி தொடங்கியதிலிருந்து ஒரே ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் பல்வேறு கருத்துக்கள் இருந்தபோதிலும் இவர்கள் பிரிந்துவிடவில்லை. தம் இனத்தை மேம் படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்! முஸ்லிம்களே நாம் எப்போது அரசியலுக்கு வந்தோமென்று? 

மேற்கண்ட விசயங்களை கருத்தில் கொண்டு இனியாவது நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ்! மாற்றம் ஏற்படும்.

Previous post:

Next post: